Dawah Group

Dawah Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dawah Group, News & Media Website, .
(2)

🌙Eid Mubarak, everyone! We wish you a blessed Eid! May it bring joy and peace to you and your loved ones!💖உலகெங்கிலும் ப...
09/04/2024

🌙Eid Mubarak, everyone! We wish you a blessed Eid! May it bring joy and peace to you and your loved ones!💖

உலகெங்கிலும் புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நல் உள்ளங்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

08/04/2024

#பூனைக்கு செலவளிப்பதை விட அனாதைக்கு செலவழியுங்கள் பூனையின்

02/11/2023
இது கதையல்ல நிஜம்.நேரம் சுமார் இரவு 9:00 மணி இருக்கும் வைத்தியசாலையில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. ‘ஒரு பிள்ளை மதம் மாறி...
17/08/2023

இது கதையல்ல நிஜம்.

நேரம் சுமார் இரவு 9:00 மணி இருக்கும் வைத்தியசாலையில் இருந்து ஓர் அழைப்பு வந்தது.

‘ஒரு பிள்ளை மதம் மாறிவிட்டதாக சொல்லுகிறாள்.
திடீரென்று நெற்றியில் திருநீறும் கையில் கலர் நூலும் கட்டியிருக்கிறாள். வைத்தியசாலைக்கு கொஞ்சம் வர முடியுமா? என்றனர்.

நியாஸ் ஹாஜியாரும் நானும் அவசரமாக வைத்தியாலைக்கு செல்லுகிறோம்.

எங்களை கண்டதும் அன்றைய நாள் கடமையில் இருந்த எமது பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரி ஒருவர் ‘வாங்க மெளலவி’ என்று அழைத்து அமரச் செய்துவிட்டு அந்த பிள்ளையையும் அழைத்து உட்காரச் சொல்கிறாள்.

முதலில் நான் அவளுக்கு ஸலாம் சொல்கிறேன். அவள் பதில் சொல்லவில்லை. ‘ஸலாத்துக்கு பதில் சொல்வதில்லையா?’ என்று கேட்கிறேன்.

‘இல்லை நான் இப்போது தமிழ் மதத்துக்கு போய்விட்டேன்’. அதனால்தான் பதில் சொல்லவில்லை என்கிறாள் அவள்.

கையில் கட்டியிருந்த நூலை கழட்டச் சொன்னேன்.

‘இல்லை அதை கழட்ட மாட்டேன்’.
‘இது பவி கட்டிவிட்டது’.
‘நான் மதம் மாறிவிட்டேன்’.
‘ஐயோ! கடவுளே! என்னை சும்மா விடுங்கள்’.
‘எனக்கு யாரும் தேவை இல்லை’.
‘நான் பவியோடு வாழப் போகிறேன்‘. என்றாள்
அந்த பதினேழு வயது தங்கை.

‘யாரோ ஒரு பவிக்காக நீ ஏன் பாவியாக வேண்டும்’? என்று கேட்டவாறே
‘சரி முதலில் இப்படி உட்காருமா பிரச்சினையை பேசுவோம். என்று எழுந்த அவளை மீண்டும் அமர வைத்து..

‘உனக்கு என்ன நடந்தது? ‘உனது தாய் தந்தை எங்கே? ‘ஏன் இரண்டு கைகளையும் கீறி கிழித்திருக்கிறாய்’? ‘எதுவானாலும் சொல். உனக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்’. என்று பேசத் தொடங்கியதும் அவள் சற்று மெளனமானாள்.

அவளது முகத்தில், பார்வையில் ஒரு ஏக்கம், எதிர்பார்ப்பு, தவிப்பு தெரிந்தது.

‘ முதலில் நல்ல பிள்ளையைப் போல கையில் கட்டியிருக்கும் நூலை கழட்டு’ என்றேன்.

சரி நூலை அறுத்துவிடுங்கள் என்று கையை நீட்டினாள்.
மெதுவாக மிஸ்ஸிடம் கத்தரிக் கோலை வாங்கி நூலை வெட்டிவிட்டு,
நீ நன்றாகத்தானே இருக்கிறாய் அப்புறம் ஏன் மனநல பிரிவில் இருக்க வேண்டும்? என்றேன்.
‘என்னை ஒருவன் காதலித்தான் இப்போது விட்டுவிட்டான்’.
‘எனது தாயும் தந்தையும் பிரிந்துவிட்டார்கள்’.
‘அவர்கள் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்து கொண்டார்கள்’.
‘நான் வாப்பம்மாவோடு இருந்தேன்.
வாழ்க்கை வெறுத்துவிட்டது’. என்றாள்.

அவளது வலி புரிந்தது. அவளது ஒவ்வொரு வார்த்தையிலும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் தெரிந்தது.

நீ என்னம்மா படிக்கிறாய்? என்றேன்.
‘A/L படிக்கிறேன்’. என்றாள்.
‘A/L படிக்கிற பிள்ளையா இப்படி ஒரு முடிவை எடுத்தது’?
‘நீ படித்த பிள்ளை’.
‘நல்ல பிள்ளை’.
‘உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை’.
‘முதலில் உன்னை நீ நேசிக்க வேண்டும்’.
‘உன் மீது உனக்கு நம்பிக்கை வர வேண்டும்’.
‘உனது எதிர்காலம் உனது கையில்தான் இருக்கிறது’.
‘எதிலும் எதிர் நீச்சல் போட்டு லட்சியத்தோடு பயணிக்க வேண்டும்’.
‘காதலில் தோற்றுப்போனால் வாழ்க்கையில் தோற்றுப்போனதாக அர்த்தமில்லை’.
‘நீ அவனை ஏமாற்றவில்லை’.
‘அவன்தான் உன்னை ஏமாற்றியிருக்கிறான்’.
‘அதற்காக உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது’.
‘தன்னை ஏமாற்றியவனின் முகத்தில் கரி பூசும் வகையில் நான் வாழ்ந்து காட்டுவேன்’ என்ற வைராக்கியத்தை ஊண்டு கோலாக கொண்டு,
நீ வாழ்ந்து காட்ட வேண்டும். என்று நீண்ட நேரம் பேசிய பிறகு….

‘சத்தியமாக இனி நான் மதம் மாற மாட்டேன். லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுன் றசூலுல்லாஹ்’ என்றாள்.

அல்ஹம்து லில்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த தங்கைக்கு மன நிம்மதியையும் ஆறுதலையும் கொடுக்க வேண்டும்.

அதே நேரம் இங்கு காதலின் பெயரால் ஏமாற்றும் இளைஞர்களும்,
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி எண்ணிப்பார்க்காமல் வாழ்க்கையை அறுத்துக் கொள்ளும் பெற்றோர்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

அன்பு செலுத்தவும் ஆதரவு தரவும் யாருமில்லையே என்று எண்ணும் போது,காதலில் வீழ்ந்து காணாமல் போகும் பிள்ளைகளும் உண்டு என்பதே இந்த நிகழ்வின் நிஜம்.

*தப்லீக் பணி பற்றி தவறாகத்தான் புரிந்து வைத்திருந்தேன்.*  *ஆனால் இன்று காலை எனது கல்புக்குல் ஆத்மார்த்தமான உணர்வை உண்டாக...
17/06/2023

*தப்லீக் பணி பற்றி தவறாகத்தான் புரிந்து வைத்திருந்தேன்.*

*ஆனால் இன்று காலை எனது கல்புக்குல் ஆத்மார்த்தமான உணர்வை உண்டாக்கியது........*

சுப்ஹ் தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு சென்றேன். முன் சப்பிலே 17,18 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள், அவர்களில் சிலர் அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் திக்ர் செய்து கொண்டும் இரு கரமேந்தி ரப்பிடத்தில் இறைஞ்சிக் கொண்டும் இருந்தனர்.

சத்தியமாகச் சொல்கிறேன். ஓர் இன்பமான இங்கிதமான காட்சி அது.

தொழுகை முடிந்த பின் முஅஸ்ஸின் லாபீர் நானாவிடம் கேட்டேன். "யாரு அந்தப் புள்ளகள்?"

நைஸர் ஹாஜி! அது இந்த முற O/L எழுதின புள்ளகள் 40 நாள் ஜமாத்ல வந்தீக்கி" என்று முஅஸ்ஸின் கூறினார்.

நான் சிந்தித்தேன்; என்னுடைய மகனும் O/L பரீட்சை எழுதியவன் தானே!

சுப்ஹ் தொழுகையே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கின்றானே!
இரவு முழுக்க முழுக்க Phone ல் இருந்து லேட் ஆகி தூங்கினான்; எதைப் பார்த்தானோ, அல்லாஹ் அறிவான்.

மஸ்ஜிதிலே நான் திக்ர் செய்து கொண்டிருந்தேன்.......
சூரியனும் சற்று வெளுக்கின்றது.

அமைதியாகவும் நிதானமாகவும் தேனீர் அருந்தினார்கள்;அந்த வாலிபர்கள்.

எனக்கும் ஒரு தேனீர் கப் கொண்டு வந்து தர, நானும் அதை மறுக்க "இல்ல Uncle எடுங்களேன்" என்று கூற நானும் புன்னகையோடு எடுத்து அருந்தினேன்.

பின்பு அந்த ஜமாதை வழிநடாத்தும் ஒருவர் 3 குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு Ledar ஐ நியமித்தார். அந்த 3 பேரும் ஆலிம்கள் போலவே இருந்தனர்.

ஒருவர் அவர்களுக்கு சூறா பாதிஹாவை தஜ்வீத் முறைப்படி மனனம் செய்ய வைத்துக் கொண்டிருந்தார்.

அடுத்தவர், அத்தஹிய்யாத் மனனம் கேட்டுக் கொண்டிந்தார்.

மற்றவர்,
அல்குர்ஆனை ஓதத் தெரியாத 4 வாலிபர்களுக்கு தஃலீம் குர்ஆனில் "அலிப், பா" கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இக்காட்சிகள் தான் என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது.

எத்தனை எத்தனை வாலிபர்கள் போதைக்கு அடிமை, பாலியல் தொடர்பு என பட்டியல் நீள்கிறது.....

ஆனால் எப்படியோ இவர்கள் மஸ்ஜிதுக்குள் ஈமானிய உணர்வோடு சமைக்கப்படுகிறார்களே!

இந்த தப்லீக் பணி மகத்தானது என்பதை எனது கண்களால் பார்த்து விளங்கிக் கொண்டேன்.

அல்லாஹ் எங்களுடைய குழந்தைகளையும் நல்லோர்களாக ஆக்குவானாக!

17/06/2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share