Thakshi Kumaran's big moment
Thakshi Kumaran's big moment.
நல்லூர் ஸ்ரீ சண்முக தீர்த்தப் பிரதிஷ்டை 2017
நல்லூர் ஸ்ரீ சண்முக தீர்த்தப் பிரதிஷ்டை 2017
#NallurKandaswamyKovil
1917 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் அப்போதைய கோயில் அதிகாரியான 4 ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் சிந்தையில் பெருமானுக்கான தீர்த்தக் கேணியைத் திருப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் பலனால் 1922 – 1923 ஆம் ஆண்டுப் பகுதியில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்த கேணி சற்சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் அமைக்கப்பட்டது. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கேணித் தீர்த்தத் திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்ளதுடன், சண்முக தீர்த்தக்கேணி பிரதிஷ்டா கும்பாபிஷேகம் எதிர்வரும் கார்த்திகை உற்சவ தினத்தன்று (15.08.2017 செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி பெருங்கோயிலுக்கான ஷண்முக தீர்த்தகேணியை உருவாக்கும் எண்ணம் 4 ஆவது இரகுநாத மாப்பாண முதலியாருக்கு 1917 ஆம் ஆண்டு ஏற்பட்டதுடன், தற்போது அச்சிந்தனையின் நூறாவது (100 ஆவது) வருடத்தில் புதிய திருக்கேணித் திருப்பணி நிறைவு பெற்று தீர்த்த பிரதிஷ்டை இடம்பெறவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்துக்கே உரித்தானது. இவ்வருடத் திருவிழாவானது (2017 ஆம் ஆண்டு) மாப்பாண முதலியார் குடும்பத்தினரின் 283 ஆவது நிர்வாக வருடமாகும். தற்போது மாப்பாண முதலியார் குடும்பத்தின் பரம்பரையில் வந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார் கோயில் 10 ஆவது அதிகாரியாக நல்லூர் கந்தனுக்கு தன் சேவைகளை செய்து வருகிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்பவர்களுடைய வழிகாட்டலின் கீழ் அடுத்த சந்ததியைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருவது வழமையாகும். தந்தை, மகன் மற்றும் பேரன் என வழி வழியாக முருகனுக்கான சேவையை வழங்கும் பொருட்டு, அவர்கள் சிறுவயது முதலே பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.
சிறு வயது முதல் கிடைத்த தந்தையின் வழிகாட்டல் வளர்ந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார், வெளியாட்களுடான தொடர்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காது தெய்வப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனக்கும் முருகனுக்கும் இடையிலான உறவை பிரபலப்படுத்தத் தேவையில்லை என்