Shoora News Srilanka

Shoora News Srilanka உண்மை செய்திகளை விரைவில் தெரிந்து கொள்ள Shoora News Srilanka ( page) பக்கத்தை Like செய்யுங்கள்.
(49)

23/09/2024

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்றார்

𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚

23/09/2024

வென்றவனையும் தோல்வியுற்றவனையும் அரவணைத்துச் செல்லும் சமுதாயத்தை உருவாக்குவோம்.

"புது அரசியல் கலாச்சாரம்"

22/09/2024

பலர் இன்று கவலையாக இருக்கலாம்..பலர் சந்தோஷமாக இருக்கலாம்..
எது எப்படி என்றாலும் ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறலாம்.

நாம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாலும் மறைவானவற்றை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! எனவே
அல்லாஹ்வின் நாட்டம் எதுவோ அதுதான் நல்லதாகவே நடந்திருக்கிறது.

எமக்கு எது நல்லதாக இருக்குமோ அதைத்தான் நிச்சயமாக அல்லாஹ் நாடி இருப்பான்.

எனவே அடுத்த கட்ட நகர்வு எமக்கு மகிழ்ச்சியையும், சுபிட்சத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

Swt Fazira

21/09/2024

*வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டால் மீண்டும் வாக்களிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு!*

வாக்களிப்பு நிலையங்களில் வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெற்று வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையம் முற்றாக செயலிழக்கப்பட்டு மீண்டும் வாக்களிப்பு நடத்தப்படும். அதுவரை தேர்தல் பெறுபேறு வெளியிடப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இரண்டு பேருக்கு அங்கு தங்கி இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாக்களிப்பு இடம்பெற்று முடியும் வரை அந்த இடத்திலிருந்து வெளியில் வரமுடியாது. அதேபோன்று வேறு பிரதிநிதிகளுக்கு அந்த நிலையங்களுக்கு செல்லவும் முடியாது. வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் யாரும் கூடி இருக்கவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன். வாக்களிப்பு நிலையத்தில் ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் அல்லது வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நாசகார நடவடிக்கை ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையத்தை முற்றாக செயலிழக்கச்செய்ய நடவடிக்கை எடுப்போம்.

அவ்வாறு பல வாக்களிப்பு நிலையங்கள் செயலிழக்கச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, அதனால் மொத்த தேர்தல் பெறுபேற்றை வெளியிடுவதற்குப் பாதிப்பு ஏற்பட்டால், அந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு மீண்டும் வாக்களிப்பு நடத்திய பின்னரே தேர்தல் பெறுபேறு வெளியிட வேண்டிவரும். அதுவரை தேர்தல் பெறுபேற்றை வெளியிட எமக்கு முடியாமல் போகும்.

அதனால் வன்முறை, நாசகார சம்பவங்களுக்கு இடமளிக்காமல் அமைதியான தேர்தல் ஒன்றை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளோம். கிராமங்களின் வாக்குப்பெட்டியை பாதுகாப்பது அந்த கிராம மக்களின் பொறுப்பாகும்.

அதனால் வெளிநபர்கள் கிராமங்களுக்குள் வந்து அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் கிராம மக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

*WhatsApp Channel...*
https://whatsapp.com/channel/0029Vaph1sk2ZjCiB7kuTM2x

🚨🔥🚨தேர்தல் முடிவுகள்🔥🚨🔥       🛑முக்கிய அறிவித்தல்🛑அன்பின் வாசகர்களே!எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல...
20/09/2024

🚨🔥🚨தேர்தல் முடிவுகள்🔥🚨🔥
🛑முக்கிய அறிவித்தல்🛑

அன்பின் வாசகர்களே!

எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற இருப்பதனை நாங்கள் அனைவரும் அறிவோம்!

அந்த வகையில் அவ் ஜனாதிபதி தேர்தலினுடைய வாக்கு முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

அத்தோடு உங்களது உறவினர் நண்பர்கள் என ஏனையோரும் வாக்கு விபரங்களை தெரிந்து கொள்ள விரும்பின் அவர்களுக்கும் கீழுள்ள இணைப்பினை வழங்கி உதவிடுங்கள். `Share செய்யுங்கள்`

`WhatsApp Channel Link...`
❇️Join for More Updates ❇️ 👇🏻

https://whatsapp.com/channel/0029Vaph1sk2ZjCiB7kuTM2x

19/09/2024

என்ன அழகான முறையில் எமது தாயை கவிதை வரிகளால் அழகு படுத்துகிறார்....

பார்க்கத் தவறாதீர்கள்.

இலங்கையில் சம்மாந்துரை பகுதியை சேர்ந்த கட்டாரில் வசித்து வந்த மொஹிதீன் முஹம்மத் ஸஜாத் (27 வயது) அவர்களின் ஜனாஸா நலடக்கத்...
17/09/2024

இலங்கையில் சம்மாந்துரை பகுதியை சேர்ந்த கட்டாரில் வசித்து வந்த மொஹிதீன் முஹம்மத் ஸஜாத் (27 வயது) அவர்களின் ஜனாஸா நலடக்கத்தின் போது....

𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚

14/09/2024

நமது ரிஸ்க்
இங்கு எவர் கையிலும் இல்லை என்பதற்கு கொரோனா காலம் எங்களுக்கு பெரும் அத்தாட்சியாகும்.

08/09/2024

புதிய பக்கம்
👇
Like Page
𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚

ஜனாஸா அறிவித்தல்இலங்கையில் கொழும்பை சேர்ந்த முகம்மது ரியாஸ் (43) அவர்கள் 07/09/2024 இன்று சனிக்கிழமை கட்டாரில் காலமானார்...
08/09/2024

ஜனாஸா அறிவித்தல்

இலங்கையில் கொழும்பை சேர்ந்த முகம்மது ரியாஸ் (43) அவர்கள் 07/09/2024 இன்று சனிக்கிழமை கட்டாரில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚

https://chat.whatsapp.com/DHzBwY2fyLOKIspjLwVvq6

🌙 பிறை தென்பட்டது:🌙 නව සද දිස්විය:🌙 HILAAL SIGHTED:
04/09/2024

🌙 பிறை தென்பட்டது:
🌙 නව සද දිස්විය:
🌙 HILAAL SIGHTED:

02/09/2024

தபால் வாக்களிப்பை கருத்தில் கொண்டு வெளியிடப்படும் சாத்தியமற்ற சம்பள அதிகரிப்பு வீதங்களை வைத்து குழம்பிக் கொள்ளாதீர்கள்

02/09/2024

ஹாஷிமிய்யாவின் முன்னால் உஸ்தாதாக கடமைபுரிந்த (أستاذ الاساتذة)

ஹபுகஸ்தலாவயை சேர்ந்த, Usthaz Fazy Hazrath அவர்கள் வபாதாகிவிட்டார்கள்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிஞராஜிஊன்

*ஜனாஸா நல்லடக்கம்*
இன்ஷா அல்லாஹ் இன்று
02-09-2024ஆம் திகதி, திங்கட்கிழமை,
அஸர் தொழுகையுடன்,

தெஹிவல ஜும்மா மஸ்ஜிதில் தொழுவிக்கப்பட்டு,

தெஹிவல ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنة واعذه من عذاب القبر ومن عذاب النار اللهم اجعل قبره روضة من رياض الجنان ولا تجعل قبره حفرة من حفر النيران

Shoora News ((WhatsApp))
https://chat.whatsapp.com/JpH6NadTAbh4VBsRHZmRrX

30/08/2024

ஆரோக்கியம் என்பது இறைவன் நமக்களித்த மாபெரும் அருட் கொடையாகும்.

𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚

 #அன்புச்சகோதரன்   #ஷஹ்மி_ஷஹீதே  உன்னோடு  சில  வரிகள்:-உங்களுடைய  இந்த அழகான சாதனைப்  பயணத்தை   நாங்கள் நாட்டுக்கு வெளிய...
26/08/2024

#அன்புச்சகோதரன் #ஷஹ்மி_ஷஹீதே உன்னோடு சில வரிகள்:-

உங்களுடைய இந்த அழகான சாதனைப் பயணத்தை நாங்கள் நாட்டுக்கு வெளியே இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் மூலமாக சந்தோஷமாகக் கண்டு அக மகிழ்ந்தோம். குறிப்பாக உன்னுடைய பாதுகாப்பிற்காகவும், உடல்உள ஆரோக்கியத்திற்காகவும் ...உன்னுடைய இந்த பயணத்தின் மூலமாக பல மக்களும் ஏதோ ஒரு பாடத்தை, படிப்பினைகளைப் படித்துக் கொள்ள வேண்டும் எனவும் நிறைய துஆக்கள் செய்தோம்.

நிச்சயமாக நான் நாட்டிலே இருந்திருந்தால் உன்னுடைய இந்த அழகான சந்தோஷத்தில் நானும் பங்கெடுத்திருப்பேன்.

குறிப்பாக :- உன்னுடைய இந்தப் பயணத்தில் இனம், மதம், மொழிகளைக் கடந்த இலங்கைத் தாய் நாட்டிலே அழகான அருமையான மனித நேயம் உள்ள மக்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் சாக வில்லை என்கிற ஓர் அழகான உண்மையை இந்த உலகிற்கு எடுத்துச் சொன்னாய்.

இன்னும் உன்னுடைய இந்த பயணத்திலே நான் பார்த்த, பல அதிசயமான உண்மைகள் ஏராளம், தாராளம்.

சகோதரனே..உன்னுடைய இந்த இளமைக் கால துடிதுடிப்பு, பயிற்சிகள், விடா முயற்சிகள் குறிப்பாக இஸ்லாத்தின் மீது நீ வைத்துள்ள அன்பு ,பற்று, உன்னுடைய ஏழ்மையான வாழ்க்கையிலும் அணைவரையும் கவர்கின்ற அழகான நற்குணத்தின் மூலமாக....

இன்று இலங்கையில் அணைத்து மக்களாலும் கொண்டாடப் பட இருக்கிறாய் என்பதை மிகவுமே சந்தோஷமாக மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

( இன்ஷா அல்லாஹ்...உன்னுடைய இந்த பயணத்திலே நான் பார்த்தவைகளை நிச்சயமாக ஒரு நாள் என்னுடைய இந்த முகநூல் பக்கத்திலே பேச இருக்கின்றேன். வஸ்ஸலாம்)

மெளலவி இல்ஹாம் நுழாரி.
(வியாங்கல்லை)

26/08/2024.

குவைத்.

https://chat.whatsapp.com/KOTl8gHJoBc2vy8EQt78EC

https://chat.whatsapp.com/JpH6NadTAbh4VBsRHZmRrX

https://chat.whatsapp.com/DHzBwY2fyLOKIspjLwVvq6

ஜனாஸா அறிவித்தல்இலங்கையில் கெலிஓயவைச் சேர்ந்த முஹம்மது அப்துல்லாஹ் முஹம்மது நியாஸ் (43 வயது) அவர்கள் 23/08/2024 இன்று வெ...
23/08/2024

ஜனாஸா அறிவித்தல்

இலங்கையில் கெலிஓயவைச் சேர்ந்த முஹம்மது அப்துல்லாஹ் முஹம்மது நியாஸ் (43 வயது) அவர்கள் 23/08/2024 இன்று வெள்ளிக்கிழமை கட்டாரில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚
🇱🇰🤝CWF-QATAR Janaza Announcement🤝 🇶🇦

WhatsApp Group Link...
https://chat.whatsapp.com/JpH6NadTAbh4VBsRHZmRrX

23/08/2024

பள்ளயிலே கடமை புரிகின்ற ஓர் மெளலவியின் திருமண வைபவத்தை அலங்கரித்து, அழகு பார்த்த குளியாப்பிட்டி , யாயவத்தை எனும் ஓர் வறிய கிராம மக்களுடைய ஓர் அழகான முன்மாதிரிமிக்க செயல்)

( அன்பான சமூகமே, நிர்வாகிகளே, நாங்கள் படிக்க வேண்டிய பாடம் என்ன ???)

மெளலவி இல்ஹாம் நுழாரி.

குவைத்.

23/08/2024.

புதிய பக்கத்தை Follow & Like செய்து இணைந்துக் கொள்ளுங்கள்.

👇👇👇
𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚

Address


Alerts

Be the first to know and let us send you an email when Shoora News Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shoora News Srilanka:

Videos

Share