Lanka Tamil Net

Lanka Tamil Net Lanka Tamil Net அனைத்து விதமான தகவல்களும் இவ் இலங்கை தமிழ் தகவல் Pageஇல் இடம் பெறும் - ஆதரவு தருபவர்களுக்கு நன்றி

திருமணத்திற்கு பிறகு போட்டோஷூட்டில் கலக்கும் GOODNIGHT பட நாயகி
23/11/2024

திருமணத்திற்கு பிறகு போட்டோஷூட்டில் கலக்கும் GOODNIGHT பட நாயகி

70 வயதை பூர்த்தி செய்த முதியோர்களுக்கு இம் மாதம் முதல் கொடுப்பனவு!அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70...
22/11/2024

70 வயதை பூர்த்தி செய்த முதியோர்களுக்கு இம் மாதம் முதல் கொடுப்பனவு!

அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவான 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த உதவித்தொகை இந்த மாதம் முதல் அஸ்வெசும பெறும் முதியவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

⭐️ 𝙇𝙖𝙣𝙠𝙖 𝙏𝙖𝙢𝙞𝙡 𝙉𝙚𝙩
https://chat.whatsapp.com/DYuGI11j824Ir3ZgXkig8u

வெளிவிவகார அமைச்சர் கடும் பிசியாக இருப்பார்.. வேறு அமைச்சுகளையும் கையாள வேண்டியுள்ளதால்..அதனால் ஜெனீவா மனித உரிமைகள் பேர...
21/11/2024

வெளிவிவகார அமைச்சர் கடும் பிசியாக இருப்பார்.. வேறு அமைச்சுகளையும் கையாள வேண்டியுள்ளதால்..
அதனால் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கெல்லாம் போகநேரமிருக்காது.. பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவே அவற்றுக்கு செல்லவேண்டி வரும்..
அங்கே போர்க்குற்ற விசாரணை , சர்வதேச நீதிமன்றம் என்றெல்லாம் விவாதம் வரும்போது அதற்கெதிராக அருண் லொபி செய்யவேண்டி வரும்..
தமிழரை வைத்தே தமிழருக்கு ஆப்பா?
இடதுசாரித் தோழர் அனுரகுமார, இப்போது பக்கா அரசியல்வாதியாகி விட்டார்ல..
Post by - sivaramasamy

21/11/2024

இஸ்ரேலிய பிரதமரை கைதுசெய்ய, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு !

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்!புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாந...
21/11/2024

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (21) பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு..

01. பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் - அனில் ஜயந்த பெர்னாண்டோ

02. விவசாயம் மற்றும் கால்நடைவளங்கள் பிரதி அமைச்சர் - நாமல் கருணாரத்ன

03. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் - வசந்த பியதிஸ்ஸ

04. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் - அருண் ஹேமசந்திரா

05. தொழிற்கல்வி பிரதி அமைச்சர் - நளின் ஹேவகே

06. வர்த்தக, வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி அமைச்சர் - ஆர்.எம் ஜயவர்த்தன

07. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் - கமகெதர திசாநாயக்க

08. வீடமைப்பு பிரதி அமைச்சர் - டி.பி சரத்

09. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் - ரத்ன கமகே

10 தொழில் பிரதி அமைச்சர் - மகிந்த ஜயசிங்க

11. பாதுகாப்பு பிரதி அமைச்சர் - அருண ஜயசேகர

12. சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் - எண்டன் ஜயகொடி

13. தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் - மொஹமட் முனீர்

14. டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் - பொறியிலாளர் எரங்க வீரரத்ன

15. இளைஞர் விவகார பிரதி அமைச்சர் - எரங்க குணசேகர

16. கைத் தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் - சத்துரங்க அபேசிங்ஹ

17. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் - பொறியிலாளர் ஜனித் ருவன் கொடித்துவக்கு

18. மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் - வைத்தியர் நாமல் சுதர்ஷன

19. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் பிரதி அமைச்சர் - ருவன் செனரத்

20. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் - வைத்தியர் பிரசன்ன குமார குணசேன

21.சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் - வைத்தியர் ஹங்சக்க விஜேமுனி

22. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் - சுந்தரலிங்கம் பிரதீப்

23. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் - உபாலி சமரசிங்க

24. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் - சுகத் திலகரத்ன

25. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் - ருவன் சமிந்த ரணசிங்க

26. பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் - சட்டத்தரணி சுனில் வட்டகல

27. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் - கலாநிதி மதுர செனவிரத்ன

28. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் - கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும

29. காணி மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் - கலாநிதி சுசில் ரணசிங்க

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் பேசப்பட்டவை!
21/11/2024

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் பேசப்பட்டவை!

10வருஷம் காத்திருந்து 10 மாதம் சுமந்து..பல கனவுகளுடன் மன்னார் வைத்தியசாலை நோக்கி சென்ற தாய் இவள்.இன்று....💔🥺🙏
21/11/2024

10வருஷம் காத்திருந்து 10 மாதம் சுமந்து..
பல கனவுகளுடன் மன்னார் வைத்தியசாலை நோக்கி சென்ற தாய் இவள்.இன்று....💔🥺🙏

இலங்கை கல்வி பற்றிய பொது அறிவு தகவல்கள் 👇👇👇👇👇👇👇👇
20/11/2024

இலங்கை கல்வி பற்றிய பொது அறிவு தகவல்கள்
👇👇👇👇👇👇👇👇

Tamil, Jobs, tamil blogs, tamil books, tamil stories, tamil news, history in Tamil, tourist places in tamil, local news tamil, Sports, Cinema,

இலங்கையில் பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால்பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இலங்...
20/11/2024

இலங்கையில் பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால்

பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை வந்த நடிகர் மோகன்லாலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

மோகன் லால், மம்மூட்டி, பஹத் பாசில் மற்றும் மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள மல்டி ஸ்டாரர் படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தை மாலிக் புகழ் மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.

இந்த படத்தின் மூலம் மம்மூட்டி மற்றும் மோகன் லால் ஆகியோர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இணையவுள்ளனர். கடைசியாக 2008 ஆம் ஆண்டு 20-20 என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்துக்காக மம்மூட்டி 100 நாட்களும் மோகன்லால் 30 நாட்களும் திகதிகளை ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் இளவயது டி ஏஜிங் காட்சிகள் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மம்மூட்டி, மோகன்லால் மற்றும் குஞ்சக்கா போபன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகிவருகிறது. இந்த படத்துக்குத் தற்காலிகமாக #மெகாஸ்டார்429 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய், சிசு உயிரிழப்பு : சுகாதார அமைச்சின் விசேட குழு மன்னார் வைத்தியசாலைக்கு விஜயம் ; விசாரணைகள் ஆரம்பம்மத்திய சுகாதார அ...
20/11/2024

தாய், சிசு உயிரிழப்பு : சுகாதார அமைச்சின் விசேட குழு மன்னார் வைத்தியசாலைக்கு விஜயம் ; விசாரணைகள் ஆரம்பம்

மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழுவொன்று இன்று புதன்கிழமை (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அவ்வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்தார்.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என்றழைக்கப்படும் ஜெகன் ராஜசிறி திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்துக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின்போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சம்பவ இடத்துக்கு வருகை தந்த மன்னார் நீதவான் இறந்த தாய் மற்றும் சேயின் உடல்களை பிரேத பரி சோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காக வும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், மாவட்ட ரீதியாக இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு வட மாகாண சுகாதார அமைச்சிடமும் விசாரணைகளை முன்னெடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த விசாரணையின் முடிவில் தவறிழைத்தமை கண்டுபிடிக்கப்பட்டால் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

News by - virakesari

20/11/2024

மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - சுகாதார அமைச்சர்

பதுளை நகரில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.  சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக பதுளை காவல...
20/11/2024

பதுளை நகரில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக பதுளை காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முடிவுக்கு வந்தது 29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை.. பிரிவதாக அறிவித்த மனைவி சாயிரா பானுஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிர...
19/11/2024

முடிவுக்கு வந்தது 29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை.. பிரிவதாக அறிவித்த மனைவி சாயிரா பானு

ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

பிரபல இசையமைப்பாளரும் ‛ஆஸ்கர்' விருது வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். இவரது மனைவிக்கு பெயர் சாயிரா பானு. இவர்கள் 2 பேரும் கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு கதிஷா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் - உண்மை கதை இதோ!பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல க...
19/11/2024

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் - உண்மை கதை இதோ!

பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

அத தெரண BIG FOCUS நிகழ்ச்சியில் இணைந்துகொண்ட அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
இது தவிர, வருகை கொடுப்பனவாக பாராளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் 2,500 ரூபாவும் மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாவும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், அது சூத்திரத்தின்படி கணக்கிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், பாராளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீட்டருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து மாதிவெலயில் அமைந்துள்ள எம்பி குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மாதிவெலயில் இவ்வாறான 108 வீடுகள் இருப்பதாகவும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும் என்றும் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

மேலும், வீட்டு வாடகையாக 2,000 ரூபாய் செலுத்தப்படும் என்றும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு இணைந்து வசதியளித்துள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளையும் குறித்த அமைச்சு ஏற்கும் எனவும் குறிப்பிட்டார்.

19/11/2024
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சுஅரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை...
18/11/2024

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமாகி ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

📲 செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள் ⬇️
https://chat.whatsapp.com/GaP9X7c5wk6D17IJBNgJKf

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
18/11/2024

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

Happy Birthday Presenting to you all, the MASSive title teaser Starring Lady Superstar Nayanthara!Movie Credits:Starring: ...

✅40 வயதும் இரண்டாம் இன்னிங்கஸ்தான்.இப்போதெல்லாம் 40 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும்...
18/11/2024

✅40 வயதும் இரண்டாம் இன்னிங்கஸ்தான்.
இப்போதெல்லாம் 40 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பிதம் செய்து கொள்கிறார்கள்.

40 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது.

40 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம்.

10,000 கி.மீ பதவுசா வண்டியை ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்..... 40 வயதும் அப்படிதான்..... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்!!!

40 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.

1. புதியதை தேடுங்கள்: சிலர் “பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூனாக” இருக்கலாம்..... 40களில் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகியிருந்தால் இந்த உந்துசக்தி குறைந்து போகும்..... சோம்பேறித்தனம் சொம்போடு உட்கார்ந்து மொக்கை போடும்...... எனவே புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள்...... உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தோதாக ஒன்றைச் செய்யுங்கள்.

2. இளைஞர்களோடு பழகுங்கள்: 40 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து அங்கிள் அசோசியஷனை உருவாக்காதீர்கள்...... உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள்!!!!! உங்களுக்கு 25 வயதில் இருந்த, அவர்களிடம் இருக்கும், அந்த எனர்ஜி உங்களுக்கும் கிடைக்கும்..... அங்கிள் அசோஷியனில் உட்கார்ந்தால் இன்னும் வயசாகும்!!!

3. அழகாக உடை உடுத்துங்கள்: அழகான உடைகளை தேர்வு செய்யுங்கள்..... காமா சோமா என்று ஒரு காம்பினேஷனில் உடை போட்டுக் கொண்டு திரியாதிர்கள்!!!!! 40 வயதில் நரையும் வழுக்கையும் அழகுதான்!!!!! உலகின் அழகான நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 40+கார்கள்தான் அதிகம்!!!!

4. பயணம் செல்லுங்கள்: உடனே 40+ ஆட்கள் பத்துபேரை கூட்டிக் கொண்டு கோயில் கோயிலாக கிளம்பிவிடாதீர்கள்!!!!! இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...... வித்தியாசமான இடங்களுக்கு செல்லுங்கள்!!!!! வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா பயணங்கள் செல்லுங்கள்..... இல்லையென்றால், 40 வயதில் அங்கிள் ஆன நீங்கள், 50 வயதில் கிழவனாகி விடுவீர்கள்!!!

5. நிறைய படியுங்கள்: மூளைக்கு தீனிபோட, நிறைய படியுங்கள்..... தேர்வு செய்து படியுங்கள்!!! புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள்..... அவர்கள் பேச்சை கேளுங்கள்.

அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்!!!

மேற்சொன்ன விஷயங்களை செய்தால் 40+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை!!!!!

மூளையும் மனசும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வரப் போகிறது?????

எப்போதுமே முதல் இன்னிங்கசை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கறது..... நீங்கள் 40+ இருந்தால் தாமதிக்காதீர்கள்!!!!

இது உங்கள் ஆட்டம்..... துவங்குங்கள்!!!!!

அனைவருக்கும் பகிருங்கள். 👉

📲 செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள் ⬇️
https://chat.whatsapp.com/GaP9X7c5wk6D17IJBNgJKf

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Lanka Tamil Net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share