SLMC வெளிச்சம்

  • Home
  • SLMC வெளிச்சம்

SLMC வெளிச்சம் சமுகத்தின் உரிமை குரலின் குரல் ! சமுகத்தின் உரிமை குரலின் குரல் !!
(30)

கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் இடம் பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது..
27/11/2024

கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் இடம் பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது..

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி; கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு.நாட்டில் நிலவும் சீரற்ற கால...
27/11/2024

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி; கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்பதுடன், அவர்களுக்கான நிவாரணங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உயரதிகாரிகளுடனும், வெளித் தரப்புகளுடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் நினைத்துப் பார்க்க முடியாதளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இருப்பிடங்களை இழந்த மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு, வடக்கு, வடமேல், தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணம் என்பன சீரற்ற காலநிலையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் பாரிய சேதங்களை சந்தித்துள்ளன. அத்துடன் அக்குறணையிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மாவடிப்பள்ளியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மத்ரஸா மாணவர்கள் சிலரும், சாரதியும் காணாமல் போயுள்ளனர். இதில் மாணவர்கள் சிலரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் தேடுதல் நடவடிக்கையும் தொடர்கின்றன. இதனால் சம்மாந்துறையும், நிந்தவூரும் அவற்றை அண்டிய பிரதேசங்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளன.

காணாமல்போனோரை உடனடியாக மீட்பதற்காக நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசப்பட்டு வருகின்றன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பங்களுக்கு மனவலிமையையும் ஆறுதலையும் எல்லாம் வல்ல இறைவன் கொடுக்க வேண்டுமென இத்தருணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேண்டிக் கொள்கின்றது.

அனர்த்த பாதிப்புகளிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்தும்கொள்ளும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ நிலையம், பாதுகாப்புத் தரப்பினர், பிரதேச செயலகங்கள் விடுக்கின்ற அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்படுமாறும் கட்சி கேட்டுக்கொள்கிறது.

27/11/2024

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளா அவசர சந்திப்பு.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிடுவதற்கு வட - கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள்  செல்வதற்கு அனுமதி வழ...
26/11/2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிடுவதற்கு வட - கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்ற விவகார அமைச்சர் விமால் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை.

பத்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 162 புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசை முகப்படுத்தல் செயலமர்வு (25, 26, 27 திகதிகளில்) பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ கலாநிதி அசோக்க ரன்வல தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

2வது நாளான இன்று நடைபெற்ற செயலமர்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில் 162 புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு 2வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் வட - கிழக்கு மாகாணங்களில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்ல வேண்டியுள்ளது. எனவே வட - கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்ற விவகார அமைச்சர் விமால் ரத்நாயக்க அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் நியாயமான வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதாகவும். வட - கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை 27ம் திகதி நடைபெறும் செயலமர்வில் கலந்து கொள்ளத் தேவையில்லை எனவும் வேறு ஒரு தினத்தில் வட - கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்றை பாராளுமன்ற செயலாளர் ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் விமால் ரத்நாயக்க பணிப்புரை வழங்கினார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr. அர்சுனா ஆகியோரும். வட - கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டி, பனங்காடு,, சம்புக்களப்பு, ஆலையடிவேம்பு, சின்ன முகத்துவாரம் ஆகிய பிரதேசங்களில் வெள்ள அனர...
24/11/2024

அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டி, பனங்காடு,, சம்புக்களப்பு, ஆலையடிவேம்பு, சின்ன முகத்துவாரம் ஆகிய பிரதேசங்களில் வெள்ள அனர்த்த அபாய நிலைமையை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை உயர் அதிகாரிகளுடன் சென்று நேரடியாக பார்வையிட்டனர்.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வெள்ள அனர்த்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலில் அக்கறைபற்று பிரதேச செயலாளர் T.M. அன்சார், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் M.A.C. ரியாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் தமீம், அக்கறைப்பற்று மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் சலீத், அக்கைப்பற்று நீர்ப்பாசன துறை தொழில்நுட்ப உதவியாளர் பரக்கத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தில்லை ஆறு, சம்புக்களப்பு, கோணாவத்தை பிரதேசங்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான தடைகளை நீக்கி சுத்தப்படுத்தும் வேலைத்திட்...
23/11/2024

தில்லை ஆறு, சம்புக்களப்பு, கோணாவத்தை பிரதேசங்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான தடைகளை நீக்கி சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தினை பார்வையிடுவதற்காக அப்பகுதிகளுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கள விஜயமொன்றை இன்று (23) மேற்கொண்டார்.

இக்கள விஜயத்தின் போது அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.ராஜ்குமார் மற்றும் கல்முனை நீர்ப்பாசன பொறியியலாளர் ஏ.எம்.அஸ்கி உட்பட உயர் அதிகாரிகளும், அட்டாளைச்சேனை பிரதேச விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

21/11/2024

No Muslims in new Sri Lanka Cabinet

🛑அமானிதத்தை நிறைவேற்றிய செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர்.!தனது பெயர் தேசியப் பட்டியலில் இன்னும் நிச்சயிக்கப்டாத நிலையில...
21/11/2024

🛑அமானிதத்தை நிறைவேற்றிய செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர்.!

தனது பெயர் தேசியப் பட்டியலில் இன்னும் நிச்சயிக்கப்டாத நிலையில் மற்றொரு நபரின் பெயரை கட்சியின் தேசியப் பட்டியலுக்கு பரிந்துரை செய்திருப்பதன் மூலம் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்கள் கட்சியின் அமானிதத்தை பேணிப்பாதுகாத்து தனது அரசியல் நேர்மையையும் கட்சிக்கான உண்மையான விசுவாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக கட்சியின் ஏறாவூர் அமைப்பாளரும் வேட்பாளருமான நளீம் அவர்களை பரிந்துரை செய்து கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி அவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிசாம் காரியப்பரின் பெயர் இன்னும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அக்கட்சியினால் பரித்துரை செய்யப்படாத நிலையில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முற்படாமல் தமது கட்சிக்குரிய தேசியப் பட்டியல் உறுப்பினராக மற்றொருவரின் பெயரை அவர் பரிந்துரை செய்திருக்கிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் யார் என்பதை உறுதியாக தீர்மானிக்க முன்னரே அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதில் ஓர் உறுப்பினர் பதவிக்கு தனது பெயரை தன்னைத் தானே பரிந்துரை செய்து இன்று நாடாளுமன்றமும் சென்று விட்டார்.

அவ்வாறே ரணில் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அக்கட்சியின் பொறுப்புதாரி என்ற வகையில் எவருக்கும் தெரியாமல் அதன் செயலாளரை வைத்து ரவி கருணாநாயக்க பெற்றுக் கொண்டார்.

ஆனால் நிசாம் காரியப்பர் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் உச்ச பதவியை பெறுவதற்கு தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை பாவித்துக் கொள்ளாமல் கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டு மற்றொரு நபரை நியமித்து தனது அரசியல் நேர்மையையும் பக்குவத்தையும் வெளிப்படுத்தியிருப்பதுடன் அமானிதம் எனும் பாரிய பொறுப்பை நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.

இதன் மூலம் கட்சிப் போராளிகளினதும் பொது மக்களினதும் மனங்களை நிசாம் காரியப்பர் அவர்கள் வென்றிருக்கிறார். இதனால் போராளிகள் அக மகிழ்கின்றனர்.

கடந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளராக இருந்த ஹஸன் அலி அவர்களும் தன்னிச்சையாக தனது பெயரை தேசியப் பட்டியலுக்கு பரிந்துரை செய்த வரலாறு இருக்கிறது. பஷீர் சேகுதாவூத் அவர்களும் தவிசாளர் எனும் பதவியை ஆயுதமாக பயன்படுத்தி தேசியப் பட்டியலை பெற்றிருக்கிறார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

ஏ.சி.சமால்டீன் (Ex MMC),
மாவட்ட செயற்குழு செயலாளர்,
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
அம்பாறை.
21.11.2024

இந்த கட்சியை, அதன் ஆரம்ப காலம் முதலே எனது சிறு பராயத்தில் இருந்தே நேசிப்பவன் நான், எனது சாதாரண தர பரீட்சை காலத்திலேயே இந...
21/11/2024

இந்த கட்சியை, அதன் ஆரம்ப காலம் முதலே எனது சிறு பராயத்தில் இருந்தே நேசிப்பவன் நான், எனது சாதாரண தர பரீட்சை காலத்திலேயே இந்த கட்சிக்காக கள வேலை செய்து ஊரை விட்டு தலைமறைவாக சென்று இன்னுமொரு ஊரில் கல்வி கற்க வேண்டிய அளவெல்லாம் அப்போதே கடந்து வரும் அளவு இந்தக் கட்சி மீதும் அதன் அன்றைய பெருந்தலைமை மற்றும் இன்றைய தலைமை மீதும் நேசம் கொண்டவன்.

நாளை கூட கட்சி தலைவர் என்னை பதவியை விட்டு விலக சொன்னாலும் அதனை அவர் சொல்லும் நொடியிலேயே விலகி கட்சியும் தலைமையும் என் மீது கொண்ட நம்பிக்கையை காப்பாற்றும் விசுவாசமும் பக்குவமும் எனக்கு என்றும் உள்ளது, அதை துளியும் மீறி விட மாட்டேன், கட்சியை, தலைமையை நேசிக்கும் எனக்கு தற்போது கிடைத்த அமானிதமான இந்த கௌரவத்தை அணுவளவு களங்கமும் இல்லாமல் காப்பாற்றி செல்வேன். இன்ஷா அல்லாஹ்.

அரசியல் அடையாளத்தை விட இந்த கட்சி சமூகத்தின் அடையாளமாக மிளிர வேண்டும் என்ற என் எண்ணம் என்றும் எனக்குள் இருக்கும் ..

முஹம்மது சாலி நளீம்

'முஸ்லிம் அமைச்சர்கள் இதுவரை என்ன கிழித்தார்கள்?' என்று 'புத்திசாலித்தனமாக' விவாத மேடையை திருப்பி போடுகிறார்கள் என். பீ....
21/11/2024

'முஸ்லிம் அமைச்சர்கள் இதுவரை என்ன கிழித்தார்கள்?' என்று 'புத்திசாலித்தனமாக' விவாத மேடையை திருப்பி போடுகிறார்கள் என். பீ. பீ ஆதரவாளர்கள்.

முதலில், இதுவரைக்கும் அமைச்சர்களாக இருந்த சிங்கள பெரும்பான்மையினர் என்ன கிழித்தார்கள்? நாடு இவ்வளவு காலமும் சீரழிந்து போய் இருக்கிறது என்று கூக்குரலிடுகிறோமே, அந்த சீரழிவுக்கு யார் காரணம்? முஸ்லிம் அமைச்சர்களா.... இல்லை, பெரும்பான்மை சமூக அரசியல் வாதிகள் தான் அதற்கு காரணம்..

ஆக 'என்ன கிழித்தார்கள்?' என்பதை அமைச்சர் பதவிக்கான Criteria ஆக முன் வைப்பது எனில் பெரும்பான்மை சமூகத்தினர் இவ்வளவு காலமும் என்ன கிழித்தார்கள் என்பதையும் நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

அடுத்தது அமைச்சர் பதவி கேட்பது எதையாவது 'கிழிப்பதற்கு' அல்ல. அது இறையாண்மையில் நாம் கேட்கும் பங்கு. தவிரவும் ஒடுக்கப்பட்ட இனம் என்ற ரீதியில் முஸ்லிம்களுக்கு இறையாண்மையில் பங்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை தேர்தலில் வாக்களித்தமைக்கு 'கைமாறாக' கேட்பது என்கிற அளவுக்கு எம்மை தாழ்த்திக்கொள்ளவோ, அமைச்சுப்பதவி வழங்கப்பட்டால் நன்றி செலுத்தும் அளவுக்கு இறங்கி இரண்டாம் தர பிரஜைகளாகவோ நடந்துகொள்ள தேவையில்லை.
முஸ்லிம்களும் இந்நாட்டில் வாழும் இன்னொரு சமூகம். அவர்கள் சார்பான பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தில், இறையாண்மையில் பங்கு வழங்கப்படவேண்டியது இயல்பானது. குறிப்பாக மாற்றம், சமத்துவம் என்றெல்லாம் பேசும் என். பி. பீயில், இனப்பரம்பல் விகிதத்திற்கு ஏற்ப அந்த பங்கு அமைவதுதான் சரி.

அமைச்சர்கள் இல்லை, அமைச்சு செயலாளர்களாக இல்லை, 74 அரச நிறுவனங்களிலும் தலைவர்களாக இல்லை. ஆனால் 'நாம் இலங்கையர்கள்' ஆக நடந்து கொள்ள வேண்டும் என்று என். பீ. பீ ஆதரவாளர்கள் கூவுகிறார்கள். 'நாம் இலங்கையர்கள்' என்றால் முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதில் என்ன சிக்கல். நாம் என்ன பிரிட்டிஷ் காலனித்துவதின் கீழா வாழ்ந்து வருகிறோம்?

நியாயமாக System change என்று
பார்த்தாலும் கூட இரண்டு அமைச்சுகளாவது முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். முஸ்லிம் சமூகம் சட்டியிலிருந்து அடுப்புக்குள் பாய்ந்துள்ளது என்பது தான் கசப்பான உண்மை.

'நாம் இலங்கையர்கள்' என்கிற தேச பக்தி கோஷம் இன, மத தனித்துவங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. இந்தியாவில் சமஷ்டி முறையில் மாநிலங்களை பிரித்து இன, மத, மொழி தனித்துவங்களை பேணி வருகிறார்கள். 'நாம் இந்தியர்கள்' என்றா பேசிக் கொண்டு இருக்கிறார்கள்?

சிங்களவர்கள், தமிழர்களை திருமணம் முடிப்பதன் மூலம் இன முரண்பாட்டை தீர்த்துவிடலாம் என சொல்லும் சிறுசுகளைப் போலவே NPP காரர்கள் நடந்து கொள்கிறார்கள்.

நாம் இலங்கையர்களாக யோசிப்பதால் தான் இறையாண்மையில் எமக்கான பங்கை கோருகிறோம். முதலில் நாம் எம்மை பிச்சை கேட்பவர்களாக நினைத்துக் கொள்ளக் கூடாது. மாறாக இந்நாட்டின் சம உரிமை உள்ள குடிமக்களாக யோசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 'இஸ்லாம் என்பது ஒரு சுயமரியாதை இறையியல்' என்பார், உஸ்தாத் காலித் அபுல்ஃபழ்ல். நாம் ஏந்த வேண்டிய இஸ்லாமிய மதிப்பீடு இதுதான்!

Lafees Shaheed

🔷 பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல அவர்கள் தெரிவு🔸 பிரதிச் சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் ...
21/11/2024

🔷 பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல அவர்கள் தெரிவு

🔸 பிரதிச் சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி தெரிவு

🔸 குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹேமாலி வீரசேகர தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களினால் அசோக ரன்வலவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பெயரை முன்மொழிந்த பிரதமர் மற்றும் வழிமொழிந்த அமைச்சர் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக புதிய சபாநாயகரை அக்கிராசனத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பதவிச்சத்தியமும், பின்னர் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியமும் இடம்பெற்றது.

புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சபாநாயகர் பதவிக்குத் தன்னைத் தெரிவுசெய்தமை குறித்து நன்றி தெரிவித்த அவர் குறிப்பிடுகையில், நாட்டின் அதியுயர் ஸ்தாபனம் என்ற ரீதியில் பாராளுமன்றம் தனது சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான கருமங்களை ஆற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகளின்படி, முன்னுதாரணமான பாராளுமன்றத்தை உருவாக்குதற்குத் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும், இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் கூடிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மிகவும் திறம்பட அமுல்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றக் குழுப் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துவதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற விவகாரங்களில் முன்மாதிரியாகவும் ஒழுக்கமாகவும் பங்களிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட அசோக ரன்வல அவர்கள், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கம்பஹா மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் பியகம யதிஹேன ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கம்பஹா ஹேனேகம மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்டார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் பட்டதாரியான சபாநாயகர், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் இரசாயன கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். பியகம பிரதேச சபை மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு மக்கள் பணியை ஆரம்பித்திருந்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் பதவிக்கு கௌரவ வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரை ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்ததுடன் அமைச்சர் கௌரவ சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.

வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராவார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வைத்தியத்துறையில் சேவையாற்றிவரும் இவர், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு கௌரவ ஹேமாலி வீரசேகர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரை அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்மலி குணசிங்க அதனை வழிமொழிந்தார். கௌரவ ஹேமாலி வீரசேகர தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். இவர் கொழும்பு யசோதரா மகளிர் கல்லூரி மற்றும் தேவிபாளிகா கல்லூரி ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியைப் பெற்றதுடன், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக தொழில் ரீதியாக பணியாற்றியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தின் மகளிர் நிறைவேற்று உறுப்பினராகவும் கடமையாற்றிய இவர், முன்னாள் மஹர பிரதேச சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

🔷

கண்டியில் ரவுப் ஹக்கீமை தோல்வியடைய செய்வதில் தோல்விகண்டவர்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவு...
21/11/2024

கண்டியில் ரவுப் ஹக்கீமை தோல்வியடைய செய்வதில் தோல்விகண்டவர்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் கண்டி மாவட்டத்தில் தோல்வியடைவார் என்ற பிரச்சாரம் மேலோங்கியிருந்தது. அவருக்கு எதிராக சமூகவலைத் தளங்களில் பரவலான பிரச்சாரம் மேலோங்கியிருந்ததனால் அது தேர்தல் களத்தில் பாரிய தாக்கம் செலுத்தியது.

2001 இல் தலைமைத்துவ போராட்டத்தில் எனக்கும் பங்கு இருந்ததனால் அவர் தோல்வியடைவதில் பங்காளியாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக மு.கா தலைவரை விமர்சனம் செய்வதிலிருந்து நான் முற்றாக விலகியிருந்தேன்.

நாட்டில் ஏற்பட்ட அனுரவுக்கு ஆதரவான பாரிய அலை கண்டி மாவட்டத்திலும் மேலோங்கி இருந்தது. இந்த அலையை தாண்டி வெற்றிபெறுவதென்பது பாரியதொரு சவாலாகும்.

களத்தில் NPP யினர் எதிரிகளாக இருந்த நிலையில், சுற்றிவர துரோகிகளை சமாளிப்பதில்தான் பாரிய சிக்கலை ரவுப் ஹக்கீம் எதிர்கொண்டார்.

அவர் போட்டியிட்ட SJP அணியில் தங்களை ரவுப் ஹக்கீம் முந்திவிடக்கூடாது என்பதில் சக வேட்பாளர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்து காய் நகர்த்தி குழிபறித்தனர்.

இதற்கிடையில் ரவுப் ஹக்கீமை தோற்கடிக்கும் நோக்கில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், முன்னாள் அக்குரணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திகார் இனாமுதீன் ஆயயோர்களின் தலைமையில் பலமான சுயற்சை குழு களமிறக்கப்பட்டு இவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது.

நீண்டகாலமாக இருந்துவருகின்ற அக்குரணை வெள்ள அனர்த்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு முழுப் பழியும் இவர்மீது சுமத்தப்பட்டதனால், அது அக்குரணை வாக்கு வங்கியில் பின்னடைவு ஏற்பட்டது.

அத்துடன் இவர் கண்டி மாவட்டத்தில் ஒன்றும் செய்யவில்லை மாறாக கிழக்கு மக்களுக்குத்தான் அபிவிருத்தி செய்தார் என்ற பிரச்சாரம் மேலோங்கியது.

மேலும், ரவுப் ஹக்கீமை தோல்வியடையச் செய்யும் நோக்கில் தௌஹீத் ஜமாஅத்தை சேர்ந்த றஸ்மின் மௌலவியின் பிரச்சாரம் நாடுதழுவிய ரீதியில் சூடுபிடித்திருந்தது.

அவைகள் ஒருபுறமிருக்க, தலைவரை தோல்வியடைய செய்வதற்காக முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்து ஒரு குழு செயற்பட்டு வந்தது.

எத்தனையோ சிங்கள, தமிழ் பெருந்தலைவர்கள் அனுரவின் அலையில் அடித்துச் செல்லப்பட்டு தோல்வியடைந்த நிலையில், மு.கா தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு எதிரான அத்தனை சூழ்ச்சிகளுக்கு மத்தியில் SJP அணியின் முதன்மை வெற்றியானது அவரது எதிரிகளுக்கு ஏற்பட்ட பாரிய தோல்வியாகும்.

அது மட்டுமல்லாது, எத்தனை சூழ்சிகளை மேற்கொண்டாலும் கண்டி மாவட்ட மக்கள் மனதிலிருந்து அவரை பிரிக்க முடியாதென்பதனை தேர்தல் பெறுபேறுகள் காண்பித்துள்ளது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

21/11/2024

10வது பாராளுமன்றத்தின் முதல் உரையில் பெருந்தலைவர் அஷ்ரபை ஞாபகப்படுத்திய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.

🔷 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்காக நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் ஏற்பாடு செய்யப்ப...
20/11/2024

🔷 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்காக நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற தகவல் கருமபீடம் வெற்றிகரமாகப் பூர்த்தி

🔸 ஒன்லைன் முறைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்கள் பெறப்பட்டன

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதல் அமர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எளிதாக்குவதற்காக 2024 நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, “பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் கருமபீடம்” வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யப்பட்டது.

இதில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உறுப்பினர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கான புகைப்படங்களை எடுத்தல் மற்றும் இலத்திரனியல் வாக்களிப்பு நோக்கத்திற்காக கைரேகைகளை பெறுதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை நடத்துவதற்காக, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் பெறுவதற்கு பாராளுமன்ற இணையதளம் வழியாக உரிய தகவல்களை உள்ளிடும் வசதி (Online) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

18/11/2024
18/11/2024

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் MLAM. Hizbullah  ஏறாவூர், ஓட்டமாவடி பகுதிகளில் தனக்கு வாக்களித்த மக்க...
16/11/2024

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் MLAM. Hizbullah ஏறாவூர், ஓட்டமாவடி பகுதிகளில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று (15) மாவட்ட வேற்பாளர்களான சட்டத்தரனி. ஹபீப் றிபான் மற்றும் SM.நளீம் ஆகியோருடன் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பிரதேச மக்கள், உலமாக்கள், முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றுக் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உறுதியான குரலை ஊமையாக்கவோ, ஓரம் கட்டவோ விடமாட்டோம் என நெஞ்சுரத்தோடு ரவூப் ஹக்கீமை வெற்றிபெற வைத்த அனைத்து நல் உள்ளங்களுக...
15/11/2024

உறுதியான குரலை ஊமையாக்கவோ, ஓரம் கட்டவோ விடமாட்டோம் என நெஞ்சுரத்தோடு ரவூப் ஹக்கீமை வெற்றிபெற வைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

கண்டி மக்களுக்கு மனநிறைந்த நன்றிகள்…

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ)

பல சாவால்களுக்கும்,சதிகளுக்கும் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் கௌரவ தலைவர் ரவூப் ஹக்கீமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் முதன்மையானவராக இன,மத வேறு பாடு கடந்து தெரிவு வாக்களித்து தெரிவு செய்திருக்கிறீர்கள் என்பதையிட்டு மனநிறைவோடு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் கருதி உறுதியான குரலை மீண்டும் ஒலிக்கச் செய்வதில் பல சூழ்ச்சிகளைக் கடந்து வாக்களித்த என் மனதுக்கு நெருக்கமான கண்டி வாழ் முஸ்லிம்களுக்கு விசேடமாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரவூப் ஹக்கீமின் உறுதியான குரலை ஊமையாக்கப் போகிறோம் என கங்கணம் கட்டிக் கொண்டு வீண் விமர்சனங்களை உலமா என்ற போர்வையில் சிலர் செய்த போதும், ரவூப் ஹக்கீமை தோற்கடிக்கனும் என்ற நோக்கோடு ஒவ்வொரு தேர்தலிலும் சுயற்சையாக வைர சின்னம்,பந்து சின்னம் என அவதாதரம் எடுத்து ஆடும் நாகங்களுக்கு தடியடி கொடுத்து, உறுதியான குரலை ஊமையாக்கவோ, ஓரம் கட்டவோ விடமாட்டோம் என நெஞ்சுரத்தோடு டெலிபோன் சின்னத்திற்கும் , 2 ஆம் இலக்கத்திற்கும் வாக்களித்து வெற்றுபெறச் செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அநுர அலையில் நாடு அள்ளுண்டு போகும் போது முக்கியமான சிறுபாண்மைத் தலைவர்களும் தோற்கடிக்கப்பட்ட நிலையில், கண்டி வாழ் முஸ்லிம் சமூகம் சமயோசிதமான தீர்மானத்தை மேற்கொண்டது ,தாங்கள் விவேகமானவர்கள் என்பதை மீண்டும் தேசத்திற்கு சொல்லியிருக்கிறது.

நீண்ட கால அரசியல் அனுபவமிக்க தலைவர்களை ஒதுக்கிவிட்டு அனுபவமில்லாதவர்களைக் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்பும் நடவடிக்கை சிலவேளை ஆபத்துகளை நாட்டுக்கு,முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்ததன் விளைவாக 30 து வருட அரசியல் அனுபவம் கொண்ட,சர்வதேசம் வரை அறியப்பட்ட ஒரு சிறந்த ஆளுமையை கண்டி மக்கள் தெரிவு செய்து கொண்டது பாராட்டத்தக்கது.

கண்டி மக்களும்,முஸ்லிம் சமூகம் தவறானவர்களின் மோசமான விமர்சனங்களுக்குள் சிக்கி, இருப்பதை இழந்துவிடப்போகிறார்கள் என்ற ஆதங்கத்தோடு கண்டி மக்களுக்காக,முஸ்லிம் சமூகத்திற்காக என்னால் எழுதப்பட்ட விழிப்புணர்வு கட்டுரைகளை எனது தூய நோக்கம் அறிந்து கண்டி மக்களை சென்றடையச் செய்த நண்பர்கள், கட்சி ஆதரவாளர்கள், மனிதநேயமிக்க சகோதரர்கள் மற்றும் மடவளை செய்தி தளத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

கடந்த காலங்களில் நாட்டின் நலனிற்காக,சமூக உரிமைக்காக. ஒலித்த உறுதியான குரல் மீண்டும் பலமாக ஒலித்திடவும், அபிவிருத்திகளை செய்திடவும், மக்களின் நம்பிக்கைக்கு உரித்தான தேசிய தலைவராக மீண்டும் மிளிரவும் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Address


Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when SLMC வெளிச்சம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SLMC வெளிச்சம்:

Videos

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share