K Cake Studio

K Cake Studio தூங்கும் உலகில் விழித்திருக்கும் நா?

03/06/2020
ஆறுமுகன் தொண்டமான்

மறைந்த கௌரவ அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Source: Jevan

02/06/2020
Kumar Sangakara with Ashwin Ravi

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இவர் மட்டும் ஆடியிருந்தா நாங்கதான் ஜெயிச்சிருப்போம் – #சங்கக்காரா பேட்டி.

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி இந்திய அணியின் வீரரான அஸ்வினுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய சங்ககாரா இது குறித்து கூறுகையில்.

Source: Ravichandran Ashwin

01/06/2020

*முகமூடியின் பக்க விளைவுகள் !!*

மாஸ்க் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் அதை நீண்ட நேரம் அணிந்தால், கவனம் செலுத்துங்கள்

1 = இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைகிறது.
2 = மூளையில் ஆக்ஸிஜன் குறைகிறது.
3 = நீங்கள் பலவீனமாக உணர ஆரம்பிக்கிறீர்கள்.
4 = மரணத்திற்கு வழிவகுக்கும்.

30/05/2020

இன்று 300 இற்கு அதிகமானோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவுஸ்திறேலியா மற்றும் இந்தியாவிலிருந்து 303 இலங்கையர்கள் இன்று ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இலங்கைக்குஅழைத்து வரப்பட்டுள்ளனர்.

அழைத்து வரப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

29/05/2020

அமரர் தொண்டமானின் மகன் ஜீவன், தேர்தல் சட்டம் மற்றும் கோவிட்19 சுகாதார ஒழுங்கு சட்டத்தை மீறினார்?

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தோண்டமனுக்குப் பதிலாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரஎலிய மாவட்டத்தில் அவரது மகன் ஜீவன் தோண்டமான் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவரது தந்தையின் மரணத்துடன், ஜீவன் தோண்டமான் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கும் வகையிலான புகைப்படம் ஒன்று சிங்கள செய்தி ஊடகம் ஒன்று வாயிலாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும், திரு. ஜீவன் தொண்டமான் கோவிட் 19 சுகாதார ஒழுங்கு சட்டத்தை மீறியிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பாதுகாக்க இரண்டு நபர்களிடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என சுகாதார ஒழுங்கில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்த புகைப்படத்தில் எவரும் அந்த சட்டத்தை பின்பற்றியவாறு தெரியவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

29/05/2020

Channel22

தொண்டமான் இறப்புடன் மகளிற்கு ஏற்பட்ட மற்றுமொரு பெரும் சோகம்!



மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள அவரது மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்களாக முயன்று வந்தார்.

இந்த நிலையில் அவர் அரச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளால் இறுதியாக இந்தியா ஊடாக அவர் இன்று அதிகாலை கொழும்பு வந்தடைந்தார்.

எனினும் கொழும்பு வந்தாலும் அவர் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா சுகாதார கட்டுப்பாடு வழிமுறைகளின் கீழ் அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சோகமான நிலைமையை கருத்திற்கொண்டு அவரை தூர இருந்து தந்தையாரின் பூதவுடலை பார்க்க அனுமதிக்கலாமா என சுகாதார அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தந்தையின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி தந்தையாரின் பூதவுடலை நேரடியாக காண கொரோனா நிலைமையால் ஏற்பட்டுள்ள தடை குறித்து குடும்ப உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அறியமுடிந்தது.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தலின் மத்தியில் வெளிநாட்டில் இருந்து தந்தையை இறுதியாக காண்பதற்கு ஓடோடி வந்த மகளுக்கு இப்படி ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளமை பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

28/05/2020

Channel22

காலம்சென்ற கௌரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு பாராளுமன்ற வளாகத்தில் வைத்து, இலங்கையின் மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்கள் இறுதி மரியாதையை செலுத்திய போது.

📷rights:

28/05/2020

Channel22

26 வயதான ஜீவன் தொண்டமான் தனது மறைந்த தந்தைக்கு பதிலாக தேர்தல் களத்தில்!

27/05/2020

Channel22

ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு அரசுக்கும் மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் பிரதமர் மகிந்த தெரிவிப்பு !

27/05/2020

Channel22

2 மாதங்களின் பின் வழமைக்கு திரும்பியுள்ள கொழும்பு மக்கள்.

22/05/2020
Channel22

Channel22

பாகிஸ்தான் விமான விபத்தின் இறுதி நேர வீடியோ காட்சிகள்

22/05/2020
விமானம் விபத்துக்குள்ளான பகுதி

விமானம் விபத்துக்குள்ளான பகுதியை மற்றுமொரு விமானத்தில் இருந்து பதிவு செய்த காட்சி

கராச்சியில் 107 பயணிகளுடன் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது முன்னரே தெரிய வந்தது குறிப்பிட தக்கது.

🎥rights: WC Pakistan

22/05/2020
Channel22

Channel22

கராச்சியில் 107 பயணிகளுடன் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது, விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

🎥rights: UAE updates

21/05/2020
Channel22

Channel22

ஏழைகளை வைத்து இப்படியா விளையாடுவது?

21/05/2020

Channel22

கொழும்பு, மாளிகாவத்தையில் 03 பெண்கள் உயிரிழந்த பரிதாப நிலை;

தெஹிவளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் களஞ்சியசாலை ஒன்று மாளிகாவத்தை, ஜும் ஆ மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த வர்த்தகர் ஒவ்வொரு வருடமும் புதித ரமழான் 27 ஆம் தினத்தன்று அப்பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு பண உதவி செய்து வருவதை வழக்காக கொண்டிருந்துள்ளார்.

இந் நிலையிலேயே நேற்றும், குறித்த வர்த்தகர் பண உதவி வழங்குவதாக பிரதேசத்தில் அரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள மக்கள் அவரது களஞ்சிய வளாகத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

சுமார் 300 முதல் 400 பேர் வரை இவ்வாறு அங்கு ஒன்று கூடியுள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கூறினார்.

நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் எந்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் அவர்கள் கையாண்டிருக்கவில்லை எனவும், சமூக இடைவெளி இல்லாமல் அவர்கள் அனைவரும் அந்த களஞ்சிய வளாகத்தில் ஒன்று கூடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாளிகாவத்தை தாருஸ் சலாம் பாடசாலையிக்கு எதிர் திசையில் அமைந்துள்ள மூடப்பட்ட முற்றிலும் மதில்களால் மூடப்பட்டு கருப்பு நிற வாயில் போடப்பட்டுள்ள இந்த களஞ்சியசாலையில் ஒன்று கூடியவர்களில் பலருக்கு பண உதவி வழங்கப்ப்ட்டுள்ள நிலையில், அதனை பெற்றவர்கள் வெளியே செல்லாமல், அரிவித்தல் ஒன்றுக்கு அமைவாக மீளவும் இரண்டாவது தடவையாகவும் பணம் பெறும் நோக்கில் அங்கு அந்த வளாகத்துக்குள்ளேயே இருந்துள்ளனர். இடஹ்னால் அங்கு சன நெரிசல் ஏர்பட்டு நிலைமை பாரதூரமாக மாறியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பிராந்தியத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

"குறித்த வர்த்தகர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் தனது வர்த்தக நிலையத்துக்கு செல்வதாக கூறி ஊரடங்கு அனுமதி பத்திரம் பெற்றுள்ளார். எனினும் மக்களை ஒன்று திரட்டி இவ்வாறு உதவித் தொகை வழங்குவது குறித்து பொலிஸாருக்கோ அல்லது பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகருக்கோ அறிவிக்கவில்லை.

இதனை அவர் வீதியில் வைத்து செய்திருந்தால் பொலிஸாரின் கண்களிலாவது சிக்கியிருக்கும். எனினும் சுமார் 300 இற்கும் அதிகமானோரை மதில்களால் மூடப்பட்ட தனது வர்த்தக களஞ்சிய வளாகத்தில் வர்த்தகர் ஒன்று சேர்த்திருக்கின்றார்.

தற்போதைய சூழ் நிலையில் இது எவ்வளவு ஆபத்தான விடயம். சமூக இடைவெளி, கொரோனா பாதுகாப்பு வழி முறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை." என சம்பவம் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை, சம்பவ இடத்துக்கு கொழும்பு மேலதிக நீதிவான் கஞ்சனா நெரஞ்சலா டி சில்வா நேரில் சென்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை நடாத்தினார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகலுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் கைதான 06 பேரையும் நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.

20/05/2020

Channel22

புத்தளம் அனுராதபுர வீதி சாந்த மரியாள் கிறிஸ்தவ தேவாலயத்தின் சொரூபத்தின் மீது கற்களால் தாக்குதல்..!!

20/05/2020
Channel22

Channel22

கொழும்பில் கோவிட்19 தொற்று என எரிக்கப்பட்ட முதலாவது இஸ்லாமியரின் உடல் கோவிட்19 தொற்று உச்சக்கட்ட சந்தேக்கம் எனும் நாமத்திலேயே எரிக்கப்பட்டது. இன்னும் உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை; எறிக்கப்பட்டவரின் குடும்பம் சொல்லும் கதை!

Video Courtesy- UTV HD

19/05/2020

வெறுப்பு பேச்சு ஒளிபரப்பு செய்ததாக ஸாகிர் நாய்க்கின் Peace TV க்கு பிரிட்டனில் 3 இலட்சம் பவுண்ட்ஸ் அபராதம்.

19/05/2020

பலாங்கொடை, இரத்தினபுரி, நாவலப்பிட்டி, உட்பட நாட்டின் பல பாகங்களிலும் வெள்ள அனர்த்தம். இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

18/05/2020
K Food

இந்த link ஜ கிளிக் செய்து சனலை Subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி 😘

www.youtube.com/channel/UCgV0vlV9xR_TnPpnaCf88Mg?sub_confirmation=1

Welcome to the official YouTube channel of the K Food. K Food explore the world of food in a fresh variety of ways while also giving viewers the technique-ba...

18/05/2020

ஹிரு நியுஸ் உட்பட இணைய தளங்கலுக்கு 'தமிழீழம் சைபர் அணி' யால் சைபர் தாக்குதல்.

தமிழ் ஈழம் சைபர் ஆர்ம் என்ற பெயரில் ஹிரு
நியுஸ் உட்பட இலங்கையின் 5 இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் அணி சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சீனாவிலுள்ள இலங்கைத் தூதரக இணையதளம் ஆகியவையும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.

மே 18 யுத்த இறுதி தினமான இன்று, பல இணையத் தளங்கலுக்குள் ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இதனை இலங்கை விமானப்படை சைபர் கட்டளை மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது.

17/05/2020

Channel22

இன்றைய தினம் வெளியான இலங்கையிலேயே மிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான செய்தி தொடர்பில், முன்னால் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன தனது ட்வீட்டர் பகக்த்தில் தெரிவித்த கருத்து!

“நமக்கு இருக்கும் மைதானங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் விளையாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைக்காத போது, நமக்கு இன்னுமோர் மைதானம் அவசியமா?“

17/05/2020

Channel22

NewYork, டோமினோ பூங்காவில் தூரத்தை பேனுவற்க்காக வட்டங்கள் போடப்படிருப்பதை காணமுடிகின்றது.

📷copyrights

13/05/2020

Channel22

இன்று முதல் Airport மீழ் இயங்கும்,

லண்டன், டோக்கியோ, மெல்போர்ன் மற்றும் ஹொங்காங் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் பயணிகள் விமான போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் நேற்று (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது சுகாதார மற்றும் சுற்றுலா நிபந்தனைகளுக்கு அமைய பயணிக்க தகுதியுடைய பயணிகளுக்கு மாத்திரம் இந்த விமானப் பயண சேவை வழங்கப்படவுள்ளது,

அத்துடன் இந்த பயண இடங்களுக்கு பயணிக்க விரும்புவோர் அருகிலுள்ள சுற்றுலா பிரதிநிதியூடாக விமான டிக்கெட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

11/05/2020

Channel22

இலங்கையில் திருமணம் செய்வதற்கு காத்திருப்போருக்கு சுகாதார அமைச்சு சுகாதார பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய திருமண தம்பதிகள் மற்றும் உறவினர் ஒருவரை கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கைகுலுக்கி கொள்வதனை தவிர்த்து வேறு முறையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பிப்பதற்கு முன்னர் திருமண ஏற்பாடுகள் செய்து தடைப்பட்டவர்கள் மீண்டும் திருமணங்களை நடத்த முடியும்.

எனினும் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பாதி பேர் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சின் பிரதி இயக்குனர் நாயகம் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

மண்டபத்திற்குள் வருபவர்கள் முக கவசங்களை அணிய வேண்டும். ஒரு மீற்றர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மண்டபத்திற்குள் நுழைவற்கு முன்னர் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்.

மண்டபத்திற்குள் நுழையும் இடத்தில் நீர் வழங்குவதற்கான கருவிகளை பொருத்த வேண்டும். மண்டபத்திற்கு வருவதற்கு முன்னரும், மண்டபத்தில் இருந்து வெளியேரும் போதும் அனைத்து உபகரணங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

நீர் பருகும் மற்றும் உணவு உண்ணும் தட்டுகள் விருந்தினர்களும் குடும்பத்தினரும் பயன்படுத்த கூடாது. உணவு பகிர்வதற்காக தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும்.

அதன் மூலம் பலர் ஒரு தட்டுகள் பயன்படுத்துவதனை தவிர்க்க முடியும். ஒரு குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் தடை விதித்தல் ஆகிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

09/05/2020

வீட்டு அலுமாரிக்குள் "ப்ரவுண் சுகர்"
போதைப் பொருள் - 7 பேர் கைது

- புத்தளத்தில் சம்பவம்

புத்தளத்தில் விற்பனைக்காக வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஹெராயின் போதைப் பொருளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை (08) புத்தளம் கடுமையான் குளம் பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 3 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 4 கிலோ 368 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இவ்வாறு ஹெராயின் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ். ஜெயமஹாவின் ஆலோசனையில் புத்தளம் பிராந்திய போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எச்.எம்.திசாநாயக்க தலைமையிலான ஐவர் அடங்கிய பொலிஸ் குழு குறித்த வீட்டில் சோதனை நடத்தியது.

இதன்போது அலுமாரி ஒன்றுக்குள் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெராயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது அத்தியாவசிய சேவைக்காக பொலிஸாரால் வழங்கப்படும் போக்குவரத்து அனுமதி ( பாஸ்) பெற்று குடிநீர் விநியோகம் செய்யும் டிமோ பட்டா லொறி ஒன்றின் மூலமே புத்தளத்திற்கு ஹெரோயின போதைப்பொருள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எச்.எம்.திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் வியாபாரிகள் மூவருடன், அதற்கு உதவிபுரிந்த மூவரும், அலுமாரி தயாரித்துக்கொடுத்த ஒருவருமாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 9 கைத்தொலைபேசிகளும், ஹெராயின் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்த அலுமாரி ஒன்றும் புத்தளம் பிராந்திய போதை ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ். ஜெயமஹாவின் விஷேட ஆலோசனையில் , புத்தளம் பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எச்.எம்.திசாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

09/05/2020

Channel22

இந்த Green Face 11ஆம் திகதிக்கு பிறகும் இப்படியே இருக்குமா?

📷giritharan

08/05/2020

Iyanar Kovil Nayakkarchenai

மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலயம் சார்பாக அனைத்து குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

08/05/2020

Channel22

ரயில் மோதியதில் 17 பேர் ஸ்தலத்தில் பலி.

மகாராஷ்டிராத்தில் வீடு திரும்பமுடியாமல் தவித்துவந்த மத்திய பிரதேசம் மாநிலத்தினை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் ஜல்னா பகுதியில் இருந்தது தங்களது சொந்த இடமான புஷாவால் பிரதேசம் நோக்கி நடந்து சென்ற வேளை களைப்பு ஏற்பட்டிருக்கின்து. இதனால் அருகில் காணப்பட்ட ரயில் தண்டவாளத்தில் ஊரடங்கு என்பதால் ரயில் வராது என நினைத்து துாங்கிவிட்டனர்.

இதன் போது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு குறித்த பகுதியில் சரக்கு ரயில் பயணித்துள்ளது. ரயில் வருகின்றதை அறிந்து அவர்கள் எழுவதங்கு முன்னர் ரயில் அவர்கள் மேல் மோதிச் சென்றது.

இந்த கோர விபத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் 17 பேர

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when K Cake Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category