![*பொறுமையின் சிகரம்* •┈•✿❁ ﷽ ❁✿•┈•ஹஜ்ரத் அய்யூப் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு கடுமையான சோதனைகள் ஏற்பட்ட பொழுது அவர்க...](https://img3.medioq.com/711/920/357650707119204.jpg)
02/02/2024
*பொறுமையின் சிகரம்*
•┈•✿❁ ﷽ ❁✿•┈•
ஹஜ்ரத் அய்யூப் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு கடுமையான சோதனைகள் ஏற்பட்ட பொழுது அவர்களுடைய துணைவியார் ரஹ்மத் பீவி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபியவர்களிடம் கூறினார்கள் : நீங்கள் ஏக இறைவனிடம் பிரார்த்தித்தால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்குமல்லவா..? என்றார்கள்.
இதை கேட்ட ஹஜ்ரத் அய்யூப் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மனைவியிடம், நாம் எத்தனை ஆண்டுகள் சுகமாக வாழ்ந்தோம் எனக் கேட்டார்கள் :
அதற்கு மனைவி "எண்பது வருடம்" என பதிலளித்தார்கள்.
இதை கேட்ட ஹஜ்ரத் அய்யூப் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நான் இன்பத்தில் வாழ்ந்ததைப் போன்றே துன்பத்திலும் வாழ்ந்தது கழிக்காமல் இந்த துயரங்களிலிருந்து விடுதலை கிடைப்பதற்கு இறைவனிடம் பிரார்த்திக்க வெட்கப்படுகிறேன் என பதிலளித்தார்கள்.
(நூல் : ரூஹுல் பயான்)
மௌலானா ஷைக் முஹம்மத் ஆதில் அர்- ரப்பானி
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
📤 படிக்கவும், உங்களைப்போல் பிறரும் பயனடைய பரப்பவும் (جزاك الله خيرا كثيرا )
☝ (மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. முஸ்லிம்- (5194)
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
✍அகில இலங்கை நக்ஷிபந்தியதுல் அலீய்யா ஆன்மீக இளைஞர் இயக்கம்
🌹🌹خادم النقشبندية 🌹🌹