Voiceof chilaw

Voiceof chilaw Chilaw Number One News Portal

05/06/2023
புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி மீது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் தாக்குதல்.................................................
27/03/2023

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி மீது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் தாக்குதல்..................................................

புத்தளம்- புத்தளம் காதி நீதிமன்றத்திற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட கலாநிதி மொஹமட் ரஹ்மத்துல்லா மொஹமட், பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு டைம்ஸிடம் பேசிய மொஹமட், புத்தளம் சட்டமன்ற உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26 அன்று இரவு தனது வீட்டிற்கு வருமாறு கூறியதாகவும், அவர் தனது வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​​​எம்.பி மற்றும் அவரது மருமகனும் தன்னை வேலையை விட்டுவிடுமாறு வலியுறுத்தி அடித்ததாகக் கூறினார்.

"அவர்கள் என்னை அடிக்க ஆரம்பித்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், நான் அவர்களுக்கு என்ன தவறு செய்தேன் என்று அவர்களிடம் கேட்டேன்" என்று காதி நீதிபதி மேலும் கூறினார். நீதிபதி தற்போதைய பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அதுவே புத்தளம் ஜும்மா பள்ளிவாசலின் விருப்பம் என்றும் அவர்கள் பதிலளித்தனர்.

இதனையடுத்து, புத்தளம் வைத்தியசாலையில் வார்டு எண் ஏழில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

அண்மையில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் காசி நீதிபதியாக நியமிக்கப்பட்ட மொஹமட், மார்ச் 1ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Colombo Times

சிலாபம் நகரை  ஒரு வாரகாலம்  மூடுவதற்கு நகர சபையினால் தீர்மாணிக்கப்பட்டுள்ளதுநகரசபையில் இடம்பெற்ற விசேட கலந்துறையாடளில் இ...
17/08/2021

சிலாபம் நகரை ஒரு வாரகாலம் மூடுவதற்கு நகர சபையினால் தீர்மாணிக்கப்பட்டுள்ளது

நகரசபையில் இடம்பெற்ற விசேட கலந்துறையாடளில் இந்த தீரம்மாணம் மேற்கொள்ளப்பட்டதாக நகர சபை தலைவர் துசான் அபேசேகர தெரிவித்துள்ளார்

சிலாபம் மருத்துவ அதிகார பிரிவிற்குள் 700 கொரோனா நோயாளர்கள் இணங்காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் இம்மாதம் 22ம் திகதியிலிருந்து ஒருவார காலம் நகரை மூட தீர்மாணிக்கப்பட்டுள்ளது

மேளும் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுவதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் இடம்பெறாது.

பிரதான மரக்கறி மற்றும் மீன் சந்தை மூடப்படும் இதற்கு சிலாபம் வரத்தக சங்கம் மற்றும் சிலாபம் முச்சக்கர வண்டி சங்கம் என்பன தமது உடன்பாட்டை தெரிவித்துள்ளன

சிலாபம் மறக்கறி சந்தைக்கு முன்னால் இருந்த ஆலமரம் சந்தைக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிழல் கொடுத்ததுஇந்த மரம் ஆயிரக...
03/08/2021

சிலாபம் மறக்கறி சந்தைக்கு முன்னால் இருந்த ஆலமரம் சந்தைக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிழல் கொடுத்தது

இந்த மரம் ஆயிரக்கணக்கான பறவைகளின் புகலிடமாக இருந்தது

சூழல் வெப்பத்தை கட்டுப்படுத்த சிறந்த சேவையை வழங்கியது

மரங்ககள் நகரங்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசடைவதையும் தடுக்கிறது

கடும் வெயிலில் சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு இந்த ஆலமரத்தடியில் சற்று நிழலை பெற்று வரும் சிலாபம் மக்கள் ஏராளமானோர் உண்டு

இன்று அந்த ஆலமரம் சந்தைக்கு முன்னால் இல்லை

நகர சபையின் ஒப்புதலுடன் இடம்பெற்ற இந்த செயளுக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம்

சிலாபம் நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது ............................................பிரதமரின் என்...
16/07/2021

சிலாபம் நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது ............................................

பிரதமரின் என்னக்கருவிற்கு அமைய நடாளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கோள்ளப்படவுள்ளது

இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தலைமையில் சிலாபம் நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது

30வருட காலமாக சிலாபம் நகரத்திற்கான அபிவிருத்திகள் இடம்பெறவில்லை, நகரில் உள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இங்கு கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது

இம்மாத இறுதிக்குள் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நகர சபை தலைவர் துசான் அபேசேகர மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்

பாத்திமா விதாத் (1 வயது) குருதி அழிவுச் சோகை (தலசீமியா  என்றநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.இதுவரை தற்காலிக தீர்வாக...
15/07/2021

பாத்திமா விதாத் (1 வயது) குருதி அழிவுச் சோகை (தலசீமியா என்ற
நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை தற்காலிக தீர்வாக
மாதாமாதம் குருநாகல் வைத்தியசாலையில் இரத்தமாற்றி வருகின்றார்கள்.

திடீர் என்று இனம்தெரியா நோயால் பாதிக்கப்பட்ட இக்குழந்தையினை கொழும்பு ஆசிரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வைத்தியர் Prof.
Lallindra Gooneratne ( Consultant Hematologist) ஊடாக பார்வையிட்டு எழும்பு மஜ்ஜை
மாற்று சிகிச்சை (Bone marrow Transplant) மேற்கொள்ளும் கீழந்தையின் உயிரை ப்பாற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது...

குறித்த சிகிச்சை 04.07.2021 ஆம் திகதியில் இருந்து மூன்று மாதத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதற்கு வைத்திய செலவுகள் மாத்திரம் 7,000,000 (7 மில்லியன்) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்து வந்த குறித்த குழந்தையின் தந்தை நோயின் காரணமாக
வேளையை விட்டு குழந்தையின் சிகிச்சைக்காக நாடு வந்துவிட்டார்

இவர்களின் பொருளாதார நிலையில் குறுகிய காலத்துக்குள் இப்பெரும் தொகையை திரட்டுவது சாத்தியமற்றது.
எனவே, சிகிச்சைக்கான செலவை அன்புள்ளம் கொண்ட உறவுகளிடம் எதிர்பார்க்கின்றார்கள்.

எனவே இவ்விடயத்தை முகநூலில் பதிவேற்றம் செய்து உதவும் உள்ளங்களுக்கு தெரியப்படுத்தி எனது குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிடுங்கள் என்று குழந்தையின் உறவுகள் கேட்டுக்கொண்டதுக்கினங்க இப்பதிவை இடுகின்றேன்...

சிகிச்சைக்கு பெரியதோர் தொகை தேவைப்பட உள்ளதால் முடியுமான சகோதரர்கள் உதவிட முன்வாருங்கள்
முடிந்தால் இப்பதிவை உதவும் உறவுகளின் பார்வைக்கு செல்லும் வரை share பன்னுங்கள்

நீங்கள் செய்கின்ற உதவிகள் உங்களையும்
உங்கள் குடும்பத்தையும் ஈருலகிலும் காக்கும் இன்ஷா அல்லாஹ்.

தொடர்பு கொள்ள
மற்றும் உதவிட முன் வருபவர்கள் ..

RM.seedh
Account no.87645861
Bank of ceylon.

சிலாபம் நகர சபை தலைவர் கைதுசிலாபம் நகர சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நபர் ஒருவரை தாக்கிய குற்...
12/07/2021

சிலாபம் நகர சபை தலைவர் கைது

சிலாபம் நகர சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிலாபத்தில் உள்ள அழகிய குடிசை வீடு (Video)https://www.youtube.com/watch?v=nKvKOXErJyo
10/07/2021

சிலாபத்தில் உள்ள அழகிய குடிசை வீடு (Video)
https://www.youtube.com/watch?v=nKvKOXErJyo

சிலபம் நகரில் கடற்கரை சூழலில் அமைந்து இருக்கும் இயற்கை ஓவியம்

29/06/2021

41 ஆயிரம் அடி உயர நடுவானில் பெற்றோல் காலி
உலகை உலுக்கிய உண்மை சம்பவம்

முழு வீடியோவுக்கு 👇 Click link
https://www.youtube.com/watch?v=hFfscp62jnw

சிலாபம் கொழும்பு பிரதான பாதையை பயன்படுத்துவோர் அவதானம் ( Drone Video)https://youtu.be/1_EHl1WH288
06/06/2021

சிலாபம் கொழும்பு பிரதான பாதையை பயன்படுத்துவோர் அவதானம் ( Drone Video)
https://youtu.be/1_EHl1WH288

யார் இந்த  K A Bhttps://www.youtube.com/watch?v=mS8vFDA_m2I
06/06/2021

யார் இந்த K A B
https://www.youtube.com/watch?v=mS8vFDA_m2I

புத்தளத்தின் இரும்பு மனிதன் K A B கடந்து வந்த அரசியல் பாதை பற்றிய ஆவணம்

புத்தளத்தின் இரும்பு மனிதன் கடந்து வந்த அரசியல் பாதை https://youtu.be/mS8vFDA_m2I
31/05/2021

புத்தளத்தின் இரும்பு மனிதன் கடந்து வந்த அரசியல் பாதை
https://youtu.be/mS8vFDA_m2I

புத்தளத்தின் இரும்பு மனிதன் K A B கடந்து வந்த அரசியல் பாதை பற்றிய ஆவணம்

https://youtu.be/CThHbLLyGbY
11/05/2021

https://youtu.be/CThHbLLyGbY

மட்டக்களப்யில் நள்ளிரவில் எழும் மர்ம ஓசையை நோக்கிய திகில் பயணத்தின் அதிர்ச்சி அனுபவங்கள்

7 நாட்களுக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்க...
28/04/2021

7 நாட்களுக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வௌியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றிருந்தது.

நாடளாவிய ரீதியில் உள்ள 2,648 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை இடம்பெற்றிருந்தது............................................................................................................................

இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைகழகங்கள் மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை 2 ஆம் திகதி எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

https://youtu.be/PFTBkAFwOyc
04/03/2021

https://youtu.be/PFTBkAFwOyc

தென்னை தோப்புக்குள் அமைக்கப்பட்டுள்ள கிராமிய பண்பாட்டு விடயங்களை பிரதிபளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அ...

சிலாபத்தில் அழகிய ஒரு குடிசை வீடு ( video )
07/02/2021

சிலாபத்தில் அழகிய ஒரு குடிசை வீடு ( video )

சிலபம் நகரில் கடற்கரை சூழலில் அமைந்து இருக்கும் இயற்கை ஓவியம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பணிப்பாளராக சிலாபம் நகர துணை முதல்வர் சட்டத்தரணி A.W.  #சாதிகுல்_அமீன...
20/01/2021

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பணிப்பாளராக சிலாபம் நகர துணை முதல்வர் சட்டத்தரணி A.W. #சாதிகுல்_அமீன் அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் #பியங்கர_ஜயரத்ன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்கள் அகற்றம்வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்ற...
15/12/2020

வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்கள் அகற்றம்

வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்றுவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு மோட்டார் வாகனம் பதிவு செய்யப்படும்போது, ​​பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு தனிப்பட்ட எண் வழங்கப்படுகிறது, இதனால் வாகனத்தை திணைக்களத்தின் தரவுத்தளத்தில் மூலம் அடையாளம் காண முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய முறையின்படி, ஒவ்வொரு முறையும் மாகாணங்களுக்கு இடையில் ஒரு வாகனம் மாற்றப்படும் போது எண் தகடுகளை மாற்ற வேண்டியதில்லை.

சிலாபத்தில் 30 கிலோ வீதம் பொதியிடப்பட்ட 37 மஞ்சள் மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன
09/12/2020

சிலாபத்தில் 30 கிலோ வீதம் பொதியிடப்பட்ட 37 மஞ்சள் மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

சிலாபம் மரவில பகுதியில் சுமார் 200 கிலோ போதைப்பொருளுடன் 4 பேர் கைதுஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் தொகையொன்றுடன் 4 ...
06/12/2020

சிலாபம் மரவில பகுதியில் சுமார் 200 கிலோ போதைப்பொருளுடன் 4 பேர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் தொகையொன்றுடன் 4 சந்தேகநபர்கள் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடுவெவ மாரவில பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது 100 கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் மற்றும் 100 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

27/11/2020
07/10/2020
07/10/2020

Address

Chilaw Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voiceof chilaw posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voiceof chilaw:

Videos

Share