
26/11/2024
*மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்*
Zafar Organization சார்பாக அன்பான வேண்டுகோள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகத்துஹு,
நமது மீராவோடை, பதூரியா, மஞ்சோலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை மோசமான கனமழையின் தாக்கத்தால் மக்கள் மிகுந்த துயரத்தையும் இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர்.
வீடுகளும் வாழ்வாதாரமும் சேதமடைந்து, பல குடும்பங்கள் பல்வேறு பாதக நிலைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நமது பகுதி மக்களுக்கு இவ்வாறான சூழ்நிலையில் பல்வேறுபட்ட உதவிகள் தேவைப்படுகின்றன.
இந்த இடர் காலப் பகுதியில் As Zafar Organization உதவிகளை வழங்கக்கூடிய மக்களிடமிருந்து இயலுமான நிதி மற்றும் ஏனைய உதவிகளை திரட்டி இன்னல் பட்ட மக்களுக்கு உதவிக்கரங்களை வழங்க முன்வந்துள்ளது.
மழையின் தாக்கத்தால் பல குடும்பங்கள் உணவின்றி பசியால் வாடுகின்றன. சிறிய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு துயரப்படுகின்றனர்.
நமது உறவுகள், நம் சொந்தங்கள் இவ் இக்கட்டான நேரத்தில் பல்வேறு உதவிகளை எதிர்பார்க்கின்றனர்.
இந்நேரத்தில் நமது Zafar Organization இரு முக்கிய பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது:
1. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல்:மழை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, எந்த குடும்பங்களுக்கு உடனடி உதவி தேவை என்பதை சரியாக கண்டறிய வேண்டும் .
2. உதவி திரட்டல்:
உங்கள் வீட்டிலிருந்து சமைத்த உணவுகள், சோற்றுப் பொதிகள் போன்றவற்றை வழங்கி பசியால் அவதிப்படும் குடும்பங்களுக்கு உதவலாம்.
நிதி உதவி மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களைத் தயார் செய்து வழங்க முடியும்.
இது ஒரு சிறிய செயலாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் உதவிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பசியை போக்கி அவர்களுக்கு தைரியத்தை வழங்கும் அத்தோடு அவர்களின் கண்களில் நன்றி கூர்ந்த கண்ணீரை நீங்கள் காணும்போது உங்கள் இதயம் சந்தோசமடையும்.
இன்ஷா அல்லாஹ், நாளைய தினம் நம் பகுதி மக்களின் வாழ்க்கையில் சிறு சிறு மாற்றத்தை உருவாக்கும் முக்கியமான நாளாக இருக்கும்.
அதனால், அனைத்து Zafar Organization உறுப்பினர்களும், நண்பர்களும் இதற்குத் தங்களின் மனதையும் நேரத்தையும் அர்ப்பணிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உதவிக்கரங்கள் நீட்டுவோம், ஒரு குடும்பத்தின் உயிர்த்துளியாக இருப்போம்!
தொடர்புக்கு:
[உங்கள் உதவிகளை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்]
AA Sabran - 0756386481
AM Akram - 0752360950
SHM Fayas - 0756798935
As Zafar Organization
*உங்கள் நம்பிக்கையின் தளம்*