Vijay tharan_விஜய் தரன்

Vijay tharan_விஜய் தரன் அன்பே சிவம்

08/01/2024

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். மிகவும் நல்லவர். ஒரு நாள் அரண்மனையில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு வழக்கு. ஒ...
08/07/2023

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். மிகவும் நல்லவர்.

ஒரு நாள் அரண்மனையில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு வழக்கு. ஒரு விவசாயி வந்து புகார் கொடுத்தார்.

அது என்னவென்றால் அவரது வயலில் ஆடுகள் வந்து மேய்ந்து பயிரை அழித்துவிட்டன.

நிறைய உழைத்து செலவு செய்து பயிரை உண்டாக்கி வைத்திருந்தேன். எல்லாம் போய் விட்டது. இனிமேல் நான் என்ன செய்வது? நீங்கள் தான் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார் அந்த விவசாயி.

அந்த ஆடுகளுக்கு சொந்தக்காரர் யார் என்று கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவு போட்டார் ராஜா.

சேவகர்கள் போய் அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள். ராஜா விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்கினார்.

விவசாயி அடைந்திருக்கின்ற இழப்புக்கு ஈடாக உன்னுடைய ஆடுகளை அவரிடம் கொடுத்து விடு என்று சொன்னார்.

இதை மன்னருடைய மகன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

இந்த தீர்ப்பை இன்னும் சிறப்பாக வழங்க வேண்டும் என நினைத்தான்.

அதை அப்பாவிடம் சொன்னான். உடனே அரசர் சரி நீ இதற்குச் சரியான தீர்ப்பினை சொல் என்றார்.

இளவரசன் சொன்னான். உமது ஆடுகள் எல்லாத்தையும் ஓராண்டு காலத்துக்கு அந்த விவசாயிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த ஒரு வருடத்திற்குள் அந்த ஆடுகள் போடுகிற குட்டிகள், பால், எரு எல்லாம் விவசாயி எடுக்க வேண்டும். ஒரு வருடத்துக்குப் பிறகு உமது ஆடுகளை நீ திரும்ப வாங்கிக் கொள். இதுதான் இளவரசன் சொன்னது.

இது சரியான தீர்ப்புதான்.

எனது அரசு பொறுப்புகளை இளவரசன் வசம் ஒப்படைக்கிறேன் என்று சொல்லி விட்டார் ராஜா.

சுலைமான் நபி அவர்களின் சரித்திரத்திலே இந்த சம்பவம் காணப்படுவதாக ஒரு நண்பர் எனக்கு இதை கூறியிருந்தார்.

அதாவது ஒரு தண்டனையை பெறுகிறவன் அதற்குப் பிறகு சமூகத்தில் நல்லவிதமாக வாழ வாய்ப்பு கிடைக்கக் கூடியவாறு அந்த தீர்ப்பு அமைய வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

சில தீர்ப்புகள் அப்படி அமைவதில்லை.

ஒரு தண்டனையை அனுபவித்து முடித்தவன் அதன் பிறகு இந்த சமூகத்தில் நல்லவனாக வாழ நினைத்தாலும் அதற்கு தகுதி இல்லாதவன் என்கிற அளவுக்கு அவனை அப்படியான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு தள்ளிவிடுகின்றன பல தீர்ப்புகள்🙏🙏🙏

அன்பை வெளிப்படுத்தும் பொருட்கள்  எதேனும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை..!திரும்பி வந்த ஒரு ...
24/07/2021

அன்பை வெளிப்படுத்தும் பொருட்கள் எதேனும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை..!

திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது..!

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..!

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது..!

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்..!

ஏனென்று கேட்டபோது சொன்னாள்:-

நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...!

அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்,

“அன்பு என்றால் இது தான்"

ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...!

எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...!

நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...!

ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...!

ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...!

அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...!

அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…!!😢 போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்...
23/07/2021

அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…!!😢

போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப சொந்த நாட்டுக்கே வறோம் அப்படீன்னு வெளிநாட்டு வாழ்க்கை ஆரம்பிக்கும்..

வயசு 22
தம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும்

வயசு 24
அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம்

வயசு 26
தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும் ஒரு தொழிலுக்கு என்னமும் பண்ணிக் கொடுக்கணும் அதனால இன்னும் ஒரு 2 வருஷம் –

வயசு 28
அப்பா அம்மா எனக்கு பொண்ணு பார்க்கறாங்க கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம் –

வயசு 30
கல்யாணத்துக்கு வாங்கின கடன் பட்ட கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும் அதுக்கு ஒரு 2 வருஷம் –

வயசு 32
தனக்குன்னு சின்னதா ஒரு குடும்பம் பிள்ளைய ஸ்கூல் சேர்க்கனும், அதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கனும் அதுக்கு 2 வருஷம் –

வயசு 34
ஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்து ஒன்னுமே சம்பாதிக்கல அதுக்கு ஒரு 6 வருடம்

வயசு 40
புள்ளங்க படிக்குது இப்போ ஊருக்கு போக முடியாது பணம் வேணும் அதுக்கு இன்னும் 10 வருஷம் இருந்தே ஆகனும் –

வயசு 50
புள்ளங்க படிப்ப முடிக்க இன்னும் 2 வருஷம் இருக்கு அதனால இன்னும் 3 வருஷம் –

வயசு 53
புள்ளைகளுக்கு ஒரு வேலை கிடைக்கனும், மகளுக்கு கல்யாணம் பண்ணனும் அதனால இன்னும் 4 வருஷம் –

வயசு 57
கல்யாணம் பண்ணி கொடுத்ததும் மாப்பிள்ளைகளுக்கு ஒரு தொழில் அல்லது ஏதாவது உதவிகள் செய்து கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது அதனால ஒரு 4 வருடம் –

வயசு 61
இதுக்கு மேல உயிரோடு இருந்தால் ஊருக்கு வந்து நல்ல வேலையா தேடிகிட்டு, புள்ளை குட்டிகளோடு சந்தோசமாக வாழ ஆரம்பிக்கலாம் ???!!!
என்று ஊருக்கு போய் வாழ்க்கையை கொஞ்சம் காலமாவது குடும்பத்தோட வாழ ஆசை பட்டு வெளிநாட்டு வாழ்கையை முடித்து விட்டு வீடு திரும்பினாள்....

கடைசியா எல்லாரும் கேக்கின்ற கேள்வி எங்களுக்குனு என்ன செஞ்சிங்கனு...😢😢😢
இது தான் உண்மையான வெளிநாட்டு வாழ்க்கை.😢😢

ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.இவ்வாறிருக்க ஒரு நாள் அவள் ஒரு...
22/07/2021

ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.

இவ்வாறிருக்க

ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.

அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.

ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.

நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.

அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள்.

அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள்.

அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.

தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.

அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து

"எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?

எனக் கேட்டான்.

அதற்கு அவன்

நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன்.

அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.

அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்"

எனப் பதிலளித்தான்.

💕பிறரின் குறைகள் எங்கள் கண்களுக்கு தென்படாமல் இருக்க சில வேளைகளில் நாமும் குருடன் போன்று பாசாங்கு காட்டுவது அவசியம்...

படித்ததில் பிடித்தது

 #நாட்டில்_புதிதாக_பரவிவரும்_டெல்டா_கொவிட்_பிறழ்வு;  #மிக_வேகமாக_பரவும்_அபாயம்நாட்டில் புதிதாக பரவிவரும்  டெல்டா கொவிட் ...
27/06/2021

#நாட்டில்_புதிதாக_பரவிவரும்_டெல்டா_கொவிட்_பிறழ்வு; #மிக_வேகமாக_பரவும்_அபாயம்

நாட்டில் புதிதாக பரவிவரும் டெல்டா கொவிட் பிறழ்வு, மிக வேகமாக பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம்” என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் என தெரிவித்த அவர், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் பாரதூரமான நிலைமையை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.

புதிய பிறழ்வுகள் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதென்பதால், அதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது ஏனைய பிறழ்வுகளைக் காட்டிலும் துரிதமாக பரவக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் இல்லாவிடினும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் அபாயகரமான சூழல் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் டெல்டா கொவிட் பிறழ்வுடன் ஐவர் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்காலத்தில் நாட்டின் பிரதான அரச வைத்தியசாலைகளில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்

 #கடவுச்சீட்டு_பெற்றுக்_கொள்ள_எதிர்பார்ப்பவர்களுக்கான_அறிவிப்புகடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வருகை தருபவர்கள் இணையத்...
27/06/2021

#கடவுச்சீட்டு_பெற்றுக்_கொள்ள_எதிர்பார்ப்பவர்களுக்கான_அறிவிப்பு

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வருகை தருபவர்கள் இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் eservices.immigration.gov.lk/td என்ற இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

 #பல்கலைகழக_விண்ணப்பம்_கோரல்_தொடர்பான_அறிவிப்பு2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 21 ஆ...
19/05/2021

#பல்கலைகழக_விண்ணப்பம்_கோரல்_தொடர்பான_அறிவிப்பு

2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் கோரப்படவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

அவள்கண்களால் பேசும்வார்த்தைஆயிரம் புரியாத அர்த்தங்களுடன்அர்த்தத்தினுள் அர்த்தம் சேர்க்கும் அவளின்காதலுடன் கலந்தபுன்னகையு...
16/05/2021

அவள்
கண்களால் பேசும்வார்த்தை
ஆயிரம் புரியாத அர்த்தங்களுடன்

அர்த்தத்தினுள் அர்த்தம் சேர்க்கும் அவளின்
காதலுடன் கலந்தபுன்னகையும்

Vijay Tharan

 #தனிமைப்படுத்தல்_விதிமுறைகளை_மீறிய_மேலும்_548_பேர்_கைதுதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் மேலும் ...
11/05/2021

#தனிமைப்படுத்தல்_விதிமுறைகளை_மீறிய_மேலும்_548_பேர்_கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் மேலும் 548 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் மேல் மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், இது தொடர்பாக, கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலும் 7,864 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமானே அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பாக தனிமைப்படுத்தல் விதிகள் செயற்படுத்தப்படுகின்றனவா என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 4,702 பேர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தவறான முடிவு: கணவனைத் தொடர்ந்து மனைவியும் உயிரிழப்பு- யாழில் சம்பவம்!தவறான முடிவெடுத்து கணவன் உயிரை மாய்த்ததை அறிந்த மனை...
08/05/2021

தவறான முடிவு: கணவனைத் தொடர்ந்து மனைவியும் உயிரிழப்பு- யாழில் சம்பவம்!

தவறான முடிவெடுத்து கணவன் உயிரை மாய்த்ததை அறிந்த மனைவியும் அதேவழியில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம், யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலகப் பட்டறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது 34) மற்றும் அவரது மனைவி ரஜிதா (வயது 33) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

கணவன், நகை வேலைக்குப் பயன்படுத்தும் இரசாயனத்தை நேற்று மாலை உட்கொண்ட நிலையில், அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும் அவரது உயிர் பிரிந்தது.

இதனையறிந்த மனைவி அதே இரசாயனத்தை உட்கொண்ட நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

*அஷ்ட ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலக்ஷ்மி வழிபாடு!*அஷ்ட லக்ஷ்மியின் திருவருளைப் பெற,  தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தி...
19/03/2021

*அஷ்ட ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலக்ஷ்மி வழிபாடு!*

அஷ்ட லக்ஷ்மியின் திருவருளைப் பெற, தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் அரிசி மாவினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கோலத்தை போட்டு, அதைச்சுற்றி, மஞ்சள் பொடியால் அதேபோல் வரைந்து, நடுவில் மஞ்சள் குங்குமமிட்டு, இரண்டு பக்கமும் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

*வழிபாட்டு முறை:*

லக்ஷ்மி விக்ரகம் இருந்தால், அதை பட்டுத்துணியில் எழுந்தருளப் பண்ணி, பின் அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், பூ (வாசனை உள்ள பூக்கள் மட்டும்) வெண் சாமந்தி, மஞ்சள் நிற சாமந்தி, தாமரை சாத்தவும். அர்ச்சிக்கவும் உகந்தவை. பால் பாயசம் செய்து நைவேத்தியம் செய்யலாம் அல்லது துளசியிலை போட்டு தீர்த்தம் உசிதம்.

வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலையை (3 இலை), கரைத்து வைத்த சந்தனத்தில் தோய்த்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்கலாம்.

அபிஷேகம் செய்ய விரும்பினால், பால், தேன், பன்னீர் பிறகு இவை எடுத்து வைத்துவிட்டு, பின் சந்தனம், மஞ்சள் அபிஷேகம் செய்து, மல்லிகை, தவனம், மரு, தாமரை இப்படி வாசனை பூக்களால் அர்ச்சிக்கலாம்.

பூஜை முடிந்ததும் தாம்பூலம் கொடுத்து,. பிரசாதம் விநியோகம் செய்ய வேண்டும். எதுவுமில்லை எனில், துளசி தீர்த்தமாவது நைவேத்தியம் செய்து கொடுக்கலாம். மிகச்சிறந்த பலன் உண்டு.

*அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்!*

*மஹாலக்ஷ்மி:*

யாதேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மிரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!

எல்லா உயிரினங்களிலும் ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

*தனலக்ஷ்மி: *

யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,
நமஸ்தஸ்யை நமோ நம!

சகல உயிர்களிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன்.

*தான்யலக்ஷ்மி:*

யாதேவி ஸர்வபூதேஷு க்ஷு��

 #ஶ்ரீலங்கா_சுதந்திர_கட்சி_விடுத்துள்ள_அறிவிப்புஎதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 31 ஆம் திகத...
11/03/2021

#ஶ்ரீலங்கா_சுதந்திர_கட்சி_விடுத்துள்ள_அறிவிப்பு

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாவும் அவர் தெரிவித்துள்ளார்

 #இலங்கையில்_கொரோனா_வைரஸ்_பரவல்_கட்டுப்பாட்டில்இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்ச...
11/03/2021

#இலங்கையில்_கொரோனா_வைரஸ்_பரவல்_கட்டுப்பாட்டில்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்றைய (11) தினம் தகவல் தருகையில் தடுப்பூசியின் மூலமும் நோய் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் கூறினார். நாடளாவிய ரீதியில் முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுகத் சமரவீர மேலும் தெரிவித்தார்

 #மட்டக்களப்பு -  #கிரான் பிரதான வீதியில் விபத்து...!மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில், கார் ஒன்றும் லொறியொன்றும் ...
11/03/2021

#மட்டக்களப்பு - #கிரான் பிரதான வீதியில் விபத்து...!

மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில், கார் ஒன்றும் லொறியொன்றும் சற்றுமுன் விபத்துக்குள்ளானதில்
கார் சாரதி சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரின் முன் பக்கம் பலத்த சேதத்துடன்,
லொறியின் டீசல் டாங்கியும் சேதமுற்றிருக்கிறது.

🟥 #பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல்.

🟥 #மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டல்.

🟥 #விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்குதல்

 #அனைத்துப்_பல்கலைக்_கழகங்களிலும்_கல்வி_செயற்பாடுகளை_ஆரம்பிக்க_நடவடிக்கை!நாட்டின் அடுத்த மூன்று வாரங்களுக்குள் நாட்டிலுள...
11/03/2021

#அனைத்துப்_பல்கலைக்_கழகங்களிலும்_கல்வி_செயற்பாடுகளை_ஆரம்பிக்க_நடவடிக்கை!

நாட்டின் அடுத்த மூன்று வாரங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக் கழகங்களையும் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

இவ்வாறு திறக்கப்படும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசியை ஏப்ரல் முதல் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரித்துள்ளார்

இலங்கையில் விசேட தேவையுடையோருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.   உங்களுக்கு...
02/08/2019

இலங்கையில் விசேட தேவையுடையோருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

உங்களுக்குத் தெரிந்த உண்மையான
விசேட தேவையுடையோர் யாராவது இருந்தால் உடனடியாக கிராம சேவகரை அல்லது பிரதேச செயலக SSO வையோ சந்திக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிபந்தனைகள்
1)அங்கம் இழப்பு
2) போலியோ
3) மூளை வளர்ச்சி குன்றியவர்கள்
4) வலிப்பு
5) முள்ளந்தண்டு வடம்
6) பாரிய உளநலம் பாதிக்கப்பட்டவர்கள்
7) செவிப்புலன் / பேச்சாற்றல் பாதிப்பு
😎 முழுமையான பார்வை இழப்பு
9) பெரு மூளை பாதிப்பு
♿குடும்ப மாத வருமானம் 6000/= உட்பட்டது🌟

எவ்வாறு விண்ணப்பிப்பது
1) GS/ SSO இடம் விண்ணப்படித்தை பெற்று பூரணப்படுத்துதல்
2) படிவத்ததை GS இடம் உறுதிப்படுத்துல்
3) படிவத்தில் வைத்தியரிடம் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொள்ளல்.

பூரணப்படுத்திய படிவத்துடன்
4) பாதிப்பு தெரியக்கூடிய புகைப்புடம்
5) தே.அ.அ பிரதி
6) வங்கி புத்தக பிரதி
7) தொலைபேசி இலக்கம் (கட்டாயாமானது)

விண்ணப்பம் முடிவுத்திகதி
02/09/2019
இத்தகவலை பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி,

வறுமைக்கோட்டிற்குள் வாழும் விசேட தேவையுடையோருக்கான மாதாந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள உதவுங்கள்.

02/08/2019

வணக்கம் நண்பர்களே

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Vijay tharan_விஜய் தரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Batticaloa

Show All

You may also like