Atulugama.com

Atulugama.com அடுலுகமை மண்ணின் உத்தியோகபூர்வ செய்?

தாய் தந்தையர்கள் பூமிக்கு மேலால் உள்ள பொக்கிஷங்கள்https://youtu.be/22UFbkMFmcQ
20/08/2021

தாய் தந்தையர்கள் பூமிக்கு மேலால் உள்ள பொக்கிஷங்கள்

https://youtu.be/22UFbkMFmcQ

தாய் தந்தையர்கள் பூமிக்கு மேலால் உள்ள பொக்கிஷங்கள்

👨‍👩‍👧‍👦 இன்றைய பிள்ளை வளர்ப்பு முறையின் கவலைக்குரிய இயல்புகள்.👨‍👩‍👧‍👦🔘 பெற்றோரிடையே பாரிய அளவில் எழுத்தறிவின்மை காணப்படு...
18/01/2021

👨‍👩‍👧‍👦 இன்றைய பிள்ளை வளர்ப்பு முறையின் கவலைக்குரிய இயல்புகள்.👨‍👩‍👧‍👦

🔘 பெற்றோரிடையே பாரிய அளவில் எழுத்தறிவின்மை காணப்படுதல். இது அறிவைத் தேடுவதற்கும் திறன்களைக் கற்பதற்கும் தடையாக அமைந்துள்ளது.

🔘 ஆக்கத்திறனோ முயற்சிகளைத் தொடக்கிவைக்கும் ஆற்றலோ இல்லாத அடிமை மனப்பான்மையை வளரச்செய்கின்ற அச்சம் மிகுந்த பண்பாடு காணப்படுதல்.

🔘 எவ்வித விமர்சன ரீதியான பகுப்பாய்வுமின்றி மற்றவர்களைக் குருட்டுத்தனமாக பிரதிபன்னி அவர்களுக்குக் கீழ்படியும் இயல்பு (மந்தை மனப்பான்மை காணப்படுதல்)

🔘 வீட்டிலும் பொது நிறுவனங்களிலும் ஆதிக்கத்துடன் கூடிய வற்புருத்திக் கீழ்படியச் செய்யும் அணுகுமுறை காணப்படுதல்.

⌚️ அச்சமும் அடக்குமுறையும் கொண்ட ஒரு நிலைமையில் பிள்ளைகள் வளர்க்கப்பட்டால், இடர்களுக்குத் துணிந்து முகங்கொடுக்கவும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் அவர்கள் பயப்படுவார்கள். இறுதியில் பொறுப்புணர்வு குறைந்தவர்களாகவும் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாதவர்களாகவும் அவர்கள் மாறி விடுவார்களை.
இது பொது விவகாரங்களில் பங்கு கொள்ளாமை, தலைவர்களின் ஆதிக்கம் பற்றி கேள்வி கேற்பதில் தயக்கம் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இதன் விளைவாகவே ஆதிக்கப் போக்குள்ள சர்வாதிகார ஆட்சிகள் உருவாகின்றன. இவ்வாறு வளர்க்கப்பும் பிள்ளைகள் ஊழல்களை சகித்துக்கொள்வதோடு சமூகத்துக்கும் தாம் ஆற்றவேண்டிய கடமைகளிலிருந்து ஒதுங்கிப் போவார்கள். இப்போக்கினால் குழுவாக இயங்கும் ஆர்வம் இல்லாமல் போகும். இதன் விளைவாகவே சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான நிறுவனங்கள் உருவாவது தடைப்படும். குருட்டு நம்பிக்கையும் பகுத்தறிவின்மையும் கொண்ட எப்போதும் பின்னோக்கிப் பார்க்கின்ற நெகிழ்வுத்தன்மையற்ற ஒரு கலாச்சாரம் பிள்ளைகளின் மாசற்ற இளம் உள்ளங்களில் ஆழப் பதிவதனால் விஞ்ஞான தொழில்நிட்பத் துறைகளில் விருத்தி ஏற்படாமல் போகிறது ⌚️

அமைதியான மன ஆறுதல் மிக்க வீட்டுச்சூழலொன்றில் இசைவாக்கமடைந்த இறையச்சம் கொண்ட பிள்ளைகளோடு மகிழ்ச்சிகரமான குடும்பமொன்று ஒற்...
16/01/2021

அமைதியான மன ஆறுதல் மிக்க வீட்டுச்சூழலொன்றில் இசைவாக்கமடைந்த இறையச்சம் கொண்ட பிள்ளைகளோடு மகிழ்ச்சிகரமான குடும்பமொன்று ஒற்றுமையாக வாழ்வதை ஒருவர் காண நேரிட்டால் அது சந்தர்ப்பவசமான விளைவே என்று அவர் நினைக்க முடியாது.

*சிறந்த பெற்றார் பிள்ளை உறவுகளை விருத்திசெய்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட கடும் உழைப்பினதும் முயற்சியினதும் விளைவே அதுவாகும்.*

சிறந்த பிள்ளை வழர்ப்பு ஒரு நீண்ட கால முதலீடாகும். மனவெழுச்சி ரீதியாகவும் உடல் மற்றும் உழவியல் ரீதியாகவும் பிள்ளைகளை வெற்றிகரமாக விருத்தியடைய செய்யக்கூடிய திறவுகோலாக அது இருக்கிறது.

நீங்கள் சந்தோஷமாக வாழ விரும்பினால் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதனால் கிடைக்கும் சந்தோ...
12/01/2021

நீங்கள் சந்தோஷமாக வாழ விரும்பினால் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.

அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதனால் கிடைக்கும் சந்தோஷமே உண்மையான சந்தோஷம்.

நீங்கள் ஒரு சுவையான உணவை சாப்பிடுவதால் கிடைப்பது FUN - ஒரு தற்காலிக இன்பம் மாத்திரமே. அது சந்தோஷமல்ல.

ஆனால் உங்கள் உணவை பசியுடன் இருக்கும் ஒரு ஏழைக்குக் கொடுத்து அவரின் பசியை போக்கி, அவரின் முக மலர்ச்சியைப் பார்த்து நீங்கள் அடையும் திருப்தி - மனநிறைவு இருக்கின்றதே அதுதான் HAPPINESS - சந்தோஷம்; உண்மையான சந்தோஷம்.

நீங்கள் பெறும் போதும் அனுபவிக்கும் போதும் கிடைப்பது தற்காலிக இன்பம்; நீங்கள் கொடுக்கும் போது கிடைப்பதுதான் மகிழ்ச்சி;
நீங்கள் கொடுப்பது பணமாகவோ அல்லது பொருளாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை.
அது நீங்கள் போதிக்கும் ஒரு கல்வியறிவாக இருக்கலாம்; நீங்கள் சொல்லும் ஓர் ஆலோசனையாக, வழங்கும் வழிகாட்டலாக இருக்கலாம்;

நீங்கள் கற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக இருக்கலாம்; நீங்கள் அடுத்தவருக்காகச் செய்யும் ஒரு பிரார்தனையாக இருக்கலாம்; ஏன் அது ஒரு புன்னகையாகக் கூட இருக்கலாம்.

"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதும் தர்மாகும்"
இது ஒரு நபி மொழி.

"மேலும் நாங்கள் கொடுத்தவற்றிலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள்" இது அல்குர்ஆனின் வழிகாட்டல்.

எனவே ஏதோ ஒரு வகையில், வழியில் அடுத்தவர்களை மகிழ்வித்து மகிழ்ச்சியோடு வாழ்வோம்!

01/01/2021

மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்ப்ட்டுள்ளான். ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால் (திடுக்கிட்டு) நடுங்குகிறான்.

அஸ்ஸலாமு அலைக்கும். இன்று அதிகாலை முதல் இந்த நேரம் வரை எமதூரின் அனைத்து வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றதுஊரெங்கிலும் ...
29/12/2020

அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்று அதிகாலை முதல் இந்த நேரம் வரை எமதூரின் அனைத்து வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றது
ஊரெங்கிலும் மயான அமைதி .
தலைமைத்துவங்களின் வேண்டுகோளுக்கு கட்டுப்பட்டு ஊர் மக்கள் பூரண சுய தனிமைப் படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மையில் பெருமையாக இருக்கின்றது
சந்தோஷமாக இருக்கின்றது...

எமதூரின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

எமதூரின் அனைத்துப் பள்ளி நிர்வாகங்கள் உலமாக்கள் மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த புத்தி ஜீவிகள் இணைந்து எடுத்த சுய தனிமைப் படுத்தல் என்ற முடிவை முழு ஊரிலும் நடைமுறைப்படுத்துவது என்பது சாதாரண விடயம் அல்ல.
எமதூர் மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம்.

எமதூர் மக்களின் இந்த தியாகம் ஒன்றே போதும்.
இதனை முன்வைத்து அல்லாஹ்விடத்தில் கையேந்துவோம்.
இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக எமது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.
அதே நேரத்தில் இந்த பொறுப்புகளில் உள்ள அனைவருக்கும் நீண்ட ஆயுழையும் நோயற்ற வாழ்வையும் கொடுத்தருள வேண்டும் என்றும்
எமதூர் அவசரமாக தனிமைப்படுத்தலில் இருந்து விடுபடவேண்டும் என்றும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கின்றேன்.

ஹஸ்ஸான் .

ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.பையனோ வி...
07/12/2020

ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.
பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான்.
“”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். “”அப்பா…அப்பா… ” என்றான் பையன்.
“”என்னடா?” கோபத்துடன் கேட்டார்.
“இந்தக் காட்டாறு எங்கே போகுது?” “”நம்ம வீட்டுக்குத்தான்”
பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது.

மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம்.
நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.

பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ ன்னும் பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்

இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள் .
குழந்தைகளுக்கு மட்டுமல்ல யாருக்கு எதை கற்று கொடுத்தாலும் அதில் ஒரு தெளிவு வேண்டும் .
கற்றுக்கொள்பவர்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்வார்களா ?என்ற தெளிவும் வேண்டும் .

ARM. SAMEER
VALAICHENAI

அதிகாரம் இருக்கிறது என்பதனால் யாருக்கும் அநியாயம் செய்து விடாதே! அநியாயத்தின் மூலம் கைசேதத்தையே சம்பாதிதத்துக் கொள்வாய்!...
04/12/2020

அதிகாரம் இருக்கிறது என்பதனால் யாருக்கும் அநியாயம் செய்து விடாதே! அநியாயத்தின் மூலம் கைசேதத்தையே சம்பாதிதத்துக் கொள்வாய்!

உன் கண்கள் தூங்கிவிடும்! அல்லாஹ் தூங்குபவனல்ல!! (உன்னால்) அநியாயம் இழைக்கப்பட்டவன் கண்விழித்திருப்பான்! உனக்கெதிராய் அவன் அல்லாஹ்வை அழைத்துக் கொண்டிருப்பான்.

02/12/2020
அல்லாஹுதஆலா ஒருவருக்கு உதவ நாடிவிட்டால் அதற்கான காரண காரியங்களை உண்டாக்க அவனுக்கென்ன சிரமமிருக்கிறது?ஏழ்மைக்கும் சீமாந்த...
01/12/2020

அல்லாஹுதஆலா ஒருவருக்கு உதவ நாடிவிட்டால் அதற்கான காரண காரியங்களை உண்டாக்க அவனுக்கென்ன சிரமமிருக்கிறது?
ஏழ்மைக்கும் சீமாந்தனத்திற்கும் உள்ள காரண காரியங்களை கற்பிப்பவன் அவனே.
இந்த சோதனை எந்த நலவுக்கானது என்பதை பொறுமையாளர்கள் அறிந்துகொள்வார்கள்.

இவர்களுக்கு ஆட்சியையும் அறிவையும் அதிகாரத்தையும் கொடுத்து அவ்வாசனங்களில் அமர்த்தியிருப்பனே அவன் தான்.
இவைகளை அவனை ஏகனாக ஏற்றுக்கொண்டவர்களை காயப்படுத்தத்தான் இவர்கள் பாவிப்பார்களாயின், அவ்வாசனங்களையும் அதிகாரத்தையும் வழங்கியவனிடமே “நாம் அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டோம்” என்று முறையிட்டு அந்த வல்லவனின் விளையாட்டை பொறுமையுடன் எதிர்பார்ப்போம்

01/12/2020

“ அடியான் என்மீது நம்பிக்கை கொள்ளும்போது வானம் பூமி அனைத்தும் சேர்ந்து அவனுக்கு சூழ்ச்சி செய்தாலும் நான் அவனுக்காக தப்பிக்கும் வழியை ஏற்படுத்திவிடுகிறேன். “

24/11/2020

நம்பிக்கை இழக்க வேண்டாம். வழிகாட்டல்களைப் பின்பற்றுவோம்.
நிச்சயமாக அல்லாஹ் எங்களோடு இருக்கிறான்

22/11/2020

இன்றைய தினம் - 22.11.2020
அடுலுகமை ஊர்மக்களுக்கு அஷ்ஷேக் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி ஹஸரத் அவர்களின் முக்கிய அறிவுருத்தல் வழிகாட்டல்

கசப்பான மாற்றங்கள்
02/11/2020

கசப்பான மாற்றங்கள்

Not only for joke
30/10/2020

Not only for joke

Racism does not have color
19/10/2020

Racism does not have color

நாம் இழந்த சந்தோசங்கள்
17/10/2020

நாம் இழந்த சந்தோசங்கள்

இஸ்லாமிய குடும்பவியல்படியுங்கள்,  #நல்வழி பிறக்கும்.
07/10/2020

இஸ்லாமிய குடும்பவியல்
படியுங்கள், #நல்வழி பிறக்கும்.

பூமி ஒரேயடியாக அசைக்கப்படும் போது, மலைகள் தூள் தூளாக்கப்படும் போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும் அந்நாளில்.திருக்குர்...
07/10/2020

பூமி ஒரேயடியாக அசைக்கப்படும் போது, மலைகள் தூள் தூளாக்கப்படும் போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும் அந்நாளில்.

திருக்குர்ஆன் 56:6

என் இறைவா ! இப்பெண்கள் அழைப்பதை விட, எனக்கு சிறைச்சாலை மிகவும் விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப...
07/10/2020

என் இறைவா ! இப்பெண்கள் அழைப்பதை விட, எனக்கு சிறைச்சாலை மிகவும் விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றாவிட்டால், இவர்களை நோக்கி நான் சாய்ந்து, அறிவீனனாக ஆகி விடுவேன்'' என்றார். ( #நபி #யூசுப்ஃ)

திருக்குர்ஆன் 12:33

21/09/2020
11/09/2020

ஆட்சியாளர்களே;

உங்கள் விருப்பம் போல மாடுகளை வெட்டுவதை தயவு செய்து தடை செய்யுங்கள். அவசரமாகத் தடை செய்யுங்கள்.......

நாங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால் அவர்களாகவே மீண்டும் வெட்டலாம் என சட்டம் கொண்டு வருவார்கள். மாட்டிறைச்சி உண்பது ஒன்றும் எமக்கு பர்ளு அல்ல என்பதை உணரவைப்போம்.....

நாட்டின் கிராமப் புறங்களில் வாழும் இலட்சக்கணக்கான ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் அது தான்.....அவை வயதாகி முதிர்ச்சியடையும் போது அவற்றை தானாகவே இறக்கவிடும் அளவிற்கு அவர்களது பொருளாதாரம் ஒரு போதும் இடமளிக்காது. மறுபுறமாக ஒரு வருடத்தில் அவை பல்கிப் பெருகி வீதியில் இறங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்படும். வீதி விபத்துகள் அதிகரிக்கும். மேய்ச்சல் தரையின்றி பயிர் நிலங்களுக்குள் மாடுகள் படையெடுக்கும் நிலை ஏற்படும்....இறைச்சி இறக்குமதிக்காக பல கோடி ரூபாய்களை வருடாந்தம் அரசாங்கம் செலவு செய்யும் நிலை ஏற்படும்...கள்ளமாடு அறுப்பு ஊருக்கு ஊர் இடம் பெறும்..விட்டு விடுவோம்....நல்ல முடிவு....நாமும் ஆதரிப்போம்....மாறாக நாம் அந்தச் சட்டத்தினை எதிர்த்தால் அதனை அவசரமாக அவர்கள் நிறை வேற்றுவார்கள்....அதுவும் ஒருவகையில் நல்ல முடிவாகவே இருக்கும்.....தூரநோக்கற்ற சிந்தனைகள்....ஒரு இனத்தை தண்டிப்பதாக நினைக்கிறார்கள்.அப்படி எதுவுமேயில்லை என்பதனை நிரூபிப்போம்....நம்மவர்களது வைத்தியச் செலவுகளையாவது குறைக்க இது உதவும்....

#கலாநிதி_அனீஸ்_செரிப்,
#கொழும்பு #பல்கலைக்கழகம்

இது முஸ்லிம்களுக்கான பிரச்சினை அல்ல. எனவே இதை பற்றி நாம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை.இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்க...
10/09/2020

இது முஸ்லிம்களுக்கான பிரச்சினை அல்ல. எனவே இதை பற்றி நாம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை.

இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்களது சமூகமே.

இறைச்சி கடை வியாபாரிகள் வெறும்னே வாங்கி விற்பவர்களே. வளர்த்துவிட்டு விற்கவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களது சமூகத்துக்கே உள்ளது .

கணவன் மனைவி இருவரும் ...ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இர...
03/09/2020

கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...

அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..

பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....

அதான்...
என்று இழுத்தாள்...

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..

அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

போடி லூசு.. அவன் சிரித்தான்.

ஆனால் அதில் உயிரில்லை.

மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....
நான் தான்மா....
ஏன் சும்மா பேசக்கூடாதா?..
என்ன செய்ற......
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

படித்ததில் உறைத்தது.

13/08/2020

வாழ்க்கைக்கு அறிவுறை

13/08/2020

கோபமும் எரிச்சலும்

*கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!.**AUGUST 13,2020, THURSDAY*பாடசாலை மாணவர்களின் கல்...
13/08/2020

*கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!.*

*AUGUST 13,2020, THURSDAY*

பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட ஆலோசனை கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருநூறுக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் இவ்வாற திருத்தம் மெற்கொள்ளப்பட்டுள்ளது. 200இற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில், கல்வி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தரத்திற்கும் வெவ்வேறு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு அந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் N.ர்.ஆ.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப கல்வி நடவடிக்கைகளை தொடர முடியுமாயின் வழமை போன்று மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதில் எவ்வித தடையும் இல்லை என கல்வி அமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

01. මහින්ද රාජපක්ෂ – මුදල් අමාත්‍ය02. නිමල් සිරිපාල ද සිල්වා – කම්කරු අමාත්‍ය03. ජී.එල්. පීරිස් – අධ්‍යාපන අමාත්‍ය04. පව...
12/08/2020

01. මහින්ද රාජපක්ෂ – මුදල් අමාත්‍ය
02. නිමල් සිරිපාල ද සිල්වා – කම්කරු අමාත්‍ය
03. ජී.එල්. පීරිස් – අධ්‍යාපන අමාත්‍ය
04. පවිත්‍රා වන්නිආරච්චි – සෞඛ්‍ය අමාත්‍ය
05. දිනේෂ් ගුණවර්ධන – විදේශ අමාත්‍ය
06. ඩග්ලස් දේවානන්ද – ධීවර අමාත්‍ය
07. ගාමිණි ලොකුගේ – ප්‍රවාහන අමාත්‍ය
08. බන්දුල ගුණවර්ධන – වෙළෙඳ අමාත්‍ය
09. ආර්.එම්.සී.බී. රත්නායක – වනජීවි හා වන සංරක්ෂණ අමාත්‍ය
10. ජනක බණ්ඩාර තෙන්නකෝන් – රාජ්‍ය සේවා පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍ය
11. කෙහෙළිය රඹුක්වැල්ල – ජනමාධ්‍ය අමාත්‍ය
12. චමල් රාජපක්ෂ – වාරිමාර්ග අමාත්‍ය
13. ඩලස් අලහප්පෙරුම – විදුලිබල අමාත්‍ය
14. ජොන්ස්ටන් ප්‍රනාන්දු – මහාමාර්ග අමාත්‍ය
15. විමල් වීරවංශ – කර්මාන්ත අමාත්‍ය
16. මහින්ද අමරවීර – පරිසර අමාත්‍ය
17. එස්.එම්. චන්ද්‍රසේන – ඉඩම් අමාත්‍ය
18. මහින්දානන්ද අලුත්ගමගේ – කෘෂිකර්ම අමාත්‍ය
19. වාසුදේව නානායක්කාර – ජල සම්පාදන අමාත්‍ය
20. උදය ගම්මන්පිල – බලශක්ති අමාත්‍ය
21. රමේෂ් පතිරණ – වැවිලි අමාත්‍ය
22. ප්‍රසන්න රණතුංග – සංචාරක අමාත්‍ය
23. රෝහිත අබේගුණවර්ධන – වරාය හා නාවික අමාත්‍ය
24. නාමල් රාජපක්ෂ – තරුණ හා ක්‍රීඩා අමාත්‍ය
25. අලි සබ්රි – අධිකරණ අමාත්‍ය

சில மாதங்களுக்கு முன் 25 வயதான ஒரு பெண்ணும் அவருடைய தாயாரும் வந்தார்கள்“என்னம்மா பிரச்சின?”“முதுகு வலி டொக்டர்”“எவ்வளவு ...
26/07/2020

சில மாதங்களுக்கு முன் 25 வயதான ஒரு பெண்ணும் அவருடைய தாயாரும் வந்தார்கள்

“என்னம்மா பிரச்சின?”

“முதுகு வலி டொக்டர்”

“எவ்வளவு நாளா?”

“புள்ள புறந்ததில இருந்து”

“புள்ளைக்கு எத்தன வயசு?”

“கடைசி ஆளுக்கு 2 வயசு”

“உங்களுக்கு எத்தன புள்ளைகள்?”

“மூணு பேரு”

“எல்லாரும் நோர்மலா பிறந்தாங்களா, இல்ல சீஸரா?”

“நோர்மல்தான்”

“கடைசி ஆளுக்கு பால் குடிய நிப்பாட்டியாச்சா?”

“இன்னும் இல்ல”

“இப்ப உங்கட உடம்புட நிற எவ்வளவு?”

“கடைசியா பார்க்கக்க 80 கிலோ”

“கடைசியா எப்ப பார்த்த?”

“ஒரு வருஷம் இருக்கும்”

“அப்ப இப்ப ஒரு 85 இருக்கும் என”

“ஒமோம்”

“சரி இப்ப சொல்லுங்க, முதுகு வலி எவடத்தில இருக்கு?”

“எங்க என்டு குறிப்பா சொல்ல ஏலா டொக்டர். இஞ்சால பின் பக்கம் புல்லா நோகுது.ஒரு வேலையும் செய்ய ஏலா,இருந்தாலும் நோகுது, நின்டாலும் நோகுது”

“முதுகுல மட்டும்தான் வலியா?”

“உடம்பெல்லாம் வலிதான். சத்து இல்லாத மாதிரி இருக்கு”

“சாதாரணமா என்ன சாப்பிடுவீங்க”

“பெரிசா சாப்பிர்ர இல்ல டொக்டர்”

“அது எல்லாரும் சொல்ற கததான், சும்மா சொல்லுங்க, இறைச்சி, மீன் எல்லாம் சாப்பிடுறயா?”

“பெரிசா சாப்பிடுறது இல்ல”

“முட்டை, பால்”

“முட்டை சாப்பிர்ர இல்ல, டீ குடிப்பன்”

“ஆக பிரதானமா சோறுதான் சாப்பிடுறீங்க”

“ஓம் டொக்டர்”

“இப்படி அபாயா போட்டுட்டுத்தானே வெளியில வாற நீங்க”

“ஓம் டொக்டர், ஏன் கேட்குறீங்க”

“சீரியஸ் ஆகாதிங்க, உங்கட உடம்புல வெயில் படுறதே இல்லவா?”

“ஓம் டொக்டர்”

“உங்களுக்கு இப்பதான் 25 வயசு, மூணு புள்ளஐகளுக்கு தாய், கடைசி ஆளுக்கு இப்பயும் பால் குடுக்குறீங்க. உங்கட சாப்பாட்லயும் மாச்சத்த தவிர பெரிசா சத்து ஒன்னும் போகுதில்ல. உடம்புல வெயிலே படுறதில்ல. உடம்பு முழுக்க நோவு.
இதையெல்லாம் வெச்சிப் பார்த்தா, உங்கட உடம்புல விட்டமின் D குறைபாடு இருக்கு போல”

“அது என்னத்துக்கு டொக்டர் தேவ?”

“உடம்புல நம்மட எலும்புகள ஆரோக்கியமா பேண்றதுக்கு கல்சியம் தேவ, அந்த கல்சியத்த நோர்மலா வெச்சிருக்கு விட்டமின் D தேவ. இந்த விட்டமின் D, இயற்கையாகவே உடம்பில தயாரிக்கப்படும். எப்பயெண்டா எங்கட தோல்ல வெயில் படும் போது. அதுவுமில்லாம அது இறைச்சி, பால், முட்டை, மீன், சீஸ் இதுகல்லயும் இருக்கு”

“இப்ப என்ன செய்யோணும் டொக்டர்”

“இந்தா இருக்கு துண்டு. உங்கட இரத்தத்துல விட்டமின் D அளவ பார்த்திட்டு வாங்க”
———————————————

அடுத்த வாரமே வந்தார். விட்டமின் D அளவு மிகவும் குறைவாக இருந்தது.

“பார்த்தீங்களா? சரியான குறைவா இருக்கு”

“இப்ப என்ன செய்யோனும்?”

“நான் சொல்றத எல்லாம் செய்வீங்களா?”

“கட்டாயம் செய்வன் டொக்டர்”

“முதலாவது உங்கட உடம்புல, காலையில 8 மணியில இருந்து பின்னேரம் 3 மணிக்கிடையில அடிக்கிற வெயில், குறைஞ்சது 20 நிமிஷம் படோனும். உங்கட தலைய மறைக்கலாம்.
இரண்டாவது விட்டமின் D கூடுதலா உள்ள சாப்பாடுகள சாப்பிடோனும்
மூணாவது, உங்கட விட்டமின் D லெவல் மிச்சம் குறைவா இருக்கிறதால, உங்களுக்கு விட்மின் Dயும் கல்சியமும் எழுதித் தாறன். அத பாவிங்க
நாலாவது ஒவ்வொரு நாளும் குறைஞ்சது 5000 அடிகள் நடக்கோனும். இதெல்லாத்தையும் செஞ்சிட்டு இன்னும் மூணு மாசத்துல வாங்க. பார்ப்பம் இன்ஷாஅல்லாஹ்.”

—————————————-
சரியாக மூணு மாதங்களில் வந்தார்.

“எப்படிம்மா இருக்கீங்க?”

“அல்ஹம்துலில்லாஹ். ரொம்ப நல்லா இருக்கு டொக்டர். இப்ப ஒரு நாளைக்கு 10000 அடிகள் நடக்கன். ஜஸாகல்லாஹு ஹைர் டொக்டர்”

Dr Ahamed Nihaj
MBBS, MD-Orthopaedics, DSICOT

தேங்காய் ரொட்டியும்   பன்றி இறைச்சிக் கறியும்கொழும்பு புறநகர் பகுதியில்  (colombo suburb)   கடந்த சில நாட்களாக தேங்காய் ...
18/07/2020

தேங்காய் ரொட்டியும் பன்றி இறைச்சிக் கறியும்

கொழும்பு புறநகர் பகுதியில் (colombo suburb) கடந்த சில நாட்களாக தேங்காய் ரொட்டியும் பன்றி இறைச்சிக் கறியும் என்ற வர்த்தகம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த சிங்கள சமூகத்தில் ஓரளவு அறியப்பட்ட புகைப்படக்கலைஞர் ஒருவர் இதனை ஆரம்பித்துவைத்தார்.

சமூகவலைத்தளங்களில் ரொட்டியும் பன்றி இறைச்சிக் கறியும் என்ற ஒரளவுபிரபலமடைந்தது. இதனால் திருப்தியடையதாக உரிய நபர் தனது பேஸ்புக்தளத்தில் இப்படி எழுதினார்.

'ரொட்டியும் பன்றி இறைச்சிக் கறியும்' என்ற பெயரில் நான் தொடங்கியிருக்கும் இந்த வர்த்தகதிற்கு முஸ்லிம்களின் அச்சுறுத்தல் இருக்கிறது. ஆகவே இந்த வர்த்தகத்தை தொடர்ச்சியாக எடுத்துச்செல்ல உதவுங்கள்" என்று பதிவிட்டிருந்தார். .

எழுதுதியது தான் தாமதம். பல இளைஞர்கள் முகநூலில் உருவாக்கினார்கள். நாம் உங்கள் வர்த்தகத்தைப் முஸல்மான்களிடமிருந்து பாதுகாக்கிறோம் என்று 20ற்கும் 30ற்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞர்கள் கொதித்தெழுந்தார்கள். அவரது வர்த்தகம் ஜாம் ஜாம் என்று களைகட்ட ஆரம்பித்தது.

இதில் நகைச்சுவை என்னவென்றால் முஸ்லிம் வாசனையே இல்லாத பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள குறித்த பகுதியில் ' முஸ்லிம் அச்சுறுத்தலைக் காட்டி' தனது வர்த்தகத்தில் பெரும் இலாபத்தை ஈட்டிக்கொண்டார்.

நிற்க; தெஹிவளை சம்பத் வங்கி சம்பவம் உங்களுக்கு நினைவில் இருக்கும். அதன் சரி பிழையை ஒரு பக்கம் வைப்போம்.

சம்பத் வங்கியில் வங்கிக் கணக்கைப் பேணுபவன் என்ற ரீதியில், அண்மைக்காலமாக இந்த வங்கி வாடிக்கையாளரிக் கடுமையான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்திருந்தது

சம்பத் வங்கியின் பெரும்பாலான ஏ.ரி.எம் இயந்திரங்கள் இயங்குவதில்லை. அதன் தரவுகள் அடிக்கடி திருடப்பட்டமை, முறையான வாடிக்கையாளர் சேவை இல்லாமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களினால் பல வாடிக்கையாளர் தமது சம்பத் கணக்கை மூடிவிட்டு வேறு தனியார் வங்கிகள் மீது கவனம் செலுத்தினார்கள்.

ஆனால் தெஹிவளை சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் எமது வங்கியை வீழ்த்த ஆரம்பித்துள்ளார்கள் என்று தந்திரோபாயமாக முகநூலில் சிலர் எழுத ஆரம்பித்தார்கள். அடுத்த நிமிடம் சம்பத் வங்கியைப் பாதுகாக்கும் சங்கம் என்ற குழுவை முகநூலில் உருவாக்கினார்கள்.

பல்லாயிரம் கோடி ரூபா விளம்பரத்தாலும் பெற்றுக்கொள்ள முடியாத அனுதாபத்தை ஒரு பேஸ்புக் லைவ் மூலம் சம்பத் வங்கி உருவாக்கிக்கொண்டது.

ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் சம்பத் வங்கயில் புதிய கணக்கை ஆரம்பித்தார்கள். இன்று சம்பத் வங்கியின் சகல குறைகளும் மறைக்கப்படு அது பிரதான இனத்தில் காவலனாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை என்று கூறிவிட்டு முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று pocket meaning நடத்துவதும் இதன் ஒரு பகுதியாகும்.

முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் இன்று பிரதான சந்தைப்படுத்தல் strategy ஆக மாறியிருக்கிறது. உணர்வுகளுக்கு மதிப்பளிப்தை விட எதிர்ப்பு அரசியலில் மறைந்துள்ள முதலாளித்துவத்தின் சந்தைப்படுத்தல் மூலோபாயம் பற்றி அறிந்து நிதானமாக செயற்படுவோம். இது தேர்தல் காலம்

பர்ஹான் நவாஸ்.

பெண்களுக்கான ஒரு நற்சிந்தனைஓரிரு நிமிடங்கள் ஒதுக்கி கட்டாயம் வாசியுங்கள்"என்ன நம்ம கணவருக்கு மாதம் 15000 தான் சம்பளமா இத...
14/07/2020

பெண்களுக்கான ஒரு நற்சிந்தனை

ஓரிரு நிமிடங்கள் ஒதுக்கி கட்டாயம் வாசியுங்கள்

"என்ன நம்ம கணவருக்கு மாதம் 15000 தான் சம்பளமா இதை வைத்து என்ன செய்யுறது"

ஆம் இதுபோல் சிந்தித்து கவலைக் கொள்ளும் பெண்கள் சிலர் நம் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் 😔

தன் கணவன் செய்யும் வேளையில் அவர் வாங்கும் சம்பளத்தில் தான் சில பெண்களுக்கு கவுரவம் இருக்கு என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

உங்கள் கணவர் ஹராமான வேளை செய்து தவறான வழியில் சம்பாதித்தால் நீங்கள் கவலை கொள்வதில் அர்த்தமுன்டு ஆனால் அவர் ஹலாலான முறையில் சம்பாதித்து அவரால் முடிந்த வருமானத்தை கொடுத்தால் அதைக் கொண்டு நீங்கள் திருப்தி அடையுங்கள்.

" ஒரு பெண் எவ்வளவு சிரமப்பட்டு குழந்தையை பெற்றெடுக்கிறாள் என்பது அனைவருக்கும் தெரியும், பிரசவம் என்பது மறுபிறவி என்பது போல் இருக்கும் என்றெல்லாம் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்", ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி எத்தகைய கஷ்டமானதோ அதே போன்று தான் ஒரு ஆண் தன் குடும்பத்தை வழி நடத்த உழைப்பதும் கஷ்டமானது...

தாய், தந்தை, மனைவி என்று இருக்கும் போது இருந்த ஆணின் உழைப்பு பிள்ளைகள் என்று உறவு வந்தவுடன் இன்னும் அதிகமாகிறது..

8 மணி நேர வேளை 12 மணி நேரம் ஆகிறது
விடுமுறை நாட்களிலும் அவன் பணத்தை தேடி அலைகிறான்.

காரணம் : தன் குடும்பம், தன் மனைவி, தன் பிள்ளைகள் எல்லாரும் நிம்மதியாக பசியில்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான்.

தன் குடும்பத்தை வெளியில் கூட்டிச் சென்று விதவிதமாக ஓட்டலில் சாப்பிடும் ஆண்கள், தனிமையில் இருக்கும் போது ஒரு டி குடிக்க கூட யோசிப்பார்கள்... இதில் வெளியூர் சென்று வேளை செய்யும் ஆண்களின் நிலை ரொம்ப மோசம், வீட்டில் 8, 10 இட்லி சாப்பிடுவார்கள் ஆனால் வெளியூரில் 4 இட்லிக்கு மேல் சாப்பிட முடியாது காரணம் பசி இல்லை என்பது அல்ல சேர்த்து வைக்கனும் குடும்பத்திற்க்கு கொடுக்க வேண்டும் என்பதால் தான் 😒

சிலர் நினைப்பாங்க "நால்லா படிச்சவங்க மாதம 60000 சம்பாதிக்கிறாங்க, படிக்காதவங்க 15000 சம்பாதிக்கிறாங்க".

குறைவாக சம்பாதிப்பதும் அதிகமாக சம்பாதிப்பதும் அவரவர் விரும்பமோ சக்தியோ அல்ல அது அல்லாஹ் நிர்ணயித்த ரிஜ்க், அதில் யாரும் அதிகமோ குறைவோ செய்துவிட முடியாது.

படிச்சவங்க தான் அதிகம் சம்பாதிப்பாங்க படிக்காதவங்க குறைவா சம்பாதிப்பாங்க என்பதெல்லாம் கிடையாது, அல்லாஹ் நாடியதை அவரவருக்கு கொடுப்பான்..

அல்லாஹ் சொன்னதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் "இந்த உலக வாழ்க்கை விளையாட்டும் வீணும் இன்றி வேறில்லை, இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அழியக்கூடியதே"

அதற்காக இந்த உலகத்தில் வாழ கூடாது என்று அர்த்தமல்ல மாறாக இருப்பதை கொண்டு மகிழ்ச்சியோடு வாழுங்கள் 🙂

பதவி, பணத்தை வைத்துத்தான் கவுரவம் சந்தோஷம் என்று நினைத்தால் உங்கள் ஈமான் இன்னும் முழுமை அடையவில்லை என்று தான் அர்த்தம்.

தன் கணவன் 5 நேரம் தொழுகிறார், தன்னால் முடிந்ததை சதகா செய்கிறார், ஹலாலான முறையில் சம்பாதிக்கின்றார் என்று எந்த பெண் திருப்தி கொள்கிறாளோ அவளே சிறந்தவள்....

அல்ஹம்துலில்லாஹ் 🙂

திருமணமான பெண்கள் உணர்ந்து கொள்ளவும், திருமணமாகாத பெண்கள் படிப்பினை பெறவும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்....

இந்த பதிவில் ஏதேனும் தவறுகள் இருந்தால் என்னை மட்டுமே சாறும்.

பதிவை அதிகமாக பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்கிறேன்....

படித்ததில் பிடித்தது....

SOMETHING" TO LEARN FOR" LIFE"....... சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும். சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்." *ஆ...
12/07/2020

SOMETHING" TO LEARN FOR" LIFE".......

சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும்.
சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.

" *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும்.

கார் இருந்தால் " *ஆடம்பரமாக* " வாழலாம்
மிதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* " வாழலாம்.

" *வறுமை* " வந்தால் வாடக்கூடாது.
" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.

*வீரன்* சாவதே இல்லை.
" *கோழை* " வாழ்வதே இல்லை.

தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட.

சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது".

எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்".

ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில்.
ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே.

தேவைக்காக கடன் " *வாங்கு* ".
கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ".

உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது.

பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

" *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.

" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான்.

*வண்ணங்களில்* " இல்லை வாழ்க்கை.
மனித " *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை

" *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை.

" *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால்,

அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

*கடனாக* இருந்தாலும்சரி,
" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.

" *செலவு* " போக மீதியை சேமிக்காதே.
" *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.

உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்று தெரியும்.

கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" *புத்திசாலி* " என்பது புரியும்.

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ".

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
" *தூற்றும்* ".

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ".

அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " *புத்திசாலி* ".

வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " *திறமைசாலி* ".

கவலைகள் கற்பனையானவை.
" *மீதி* " தற்காலிகமானவை.

குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான்.

குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* "
விழுதல் என்பது " *வேதனை* ".
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *~சாதனை*~ "

*ஆனந்தம் ஆரோக்கியம்!!!*

CALCULATE YOUR ELECTRICITY BILL YOURSELFஉங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மின்சாரப் பட்டியல் சரியாகத்தான் வழங்கப்பட்டிருக்...
25/06/2020

CALCULATE YOUR ELECTRICITY BILL YOURSELF

உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மின்சாரப் பட்டியல் சரியாகத்தான் வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள இலங்கை மின்சார சபையின் இந்த வெப்தளம் உங்களுக்கு உதவலாம்.

https://www.ceb.lk/bill-calculation-commercial/en

Existing Customer

11/06/2020

மஸ்ஜித்கள் திறப்பது சம்பந்தமான அறிவித்தல்

மஸ்ஜித்கள் திறப்பது சம்பந்தமான அறிவித்தல்
11/06/2020

மஸ்ஜித்கள் திறப்பது சம்பந்தமான அறிவித்தல்

09/06/2020

பாடசாலை ஆரம்பமாகும் திகதிகள்

படி 01
- ஜூன் 29 - ஜூலை 03 : அதிபர், ஆசிரியர், கல்விசாரா ஊழியர் பாடசாலை திட்டமிடல்

படி 02
- ஜூலை 06 - ஜூலை 17: தரம் 5, 11, 13

படி 03
- ஜூலை 20 - ஜூலை 24: தரம் 10, 12

படி 04
- ஜூலை 27: தரம் 3, 4, 6, 7 ,8, 9

செப்டம்பர் 7: உயர்தரப் பரீட்சை
செப்டெம்பர் 13: புலமைப்பரிசில் பரீட்சை

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 28 வயதான சாடியோ மானே செனகல் (மேற்கு ஆப்பிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ. 14 க...
31/05/2020

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 28 வயதான சாடியோ மானே செனகல் (மேற்கு ஆப்பிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ. 14 கோடி சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் பல இடங்களில் காணப்பட்டார்.

ஒரு நேர்காணலில், அதைப் பற்றி கேட்கப்பட்டபோது..

"நான் அதை சரிசெய்வேன், டிஸ்பிளே மாற்றிவிடுவேன்" என்றார்.

நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்றவேண்டும்..? பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று கேட்கப்பட்டது.

"என்னால் ஆயிரம் மொபைல்கள், 10 ஃபெராரிஸ், 2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை வாங்கமுடியும். ஆனால், இதையெல்லாம் நான் ஏன் வாங்கணும்..?

நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டுள்ளேன். என்னால் படிக்க முடியவில்லை.

எனக்கு காலணிகள் இல்லை. காலணிகள் இல்லாமல் விளையாடினேன், நல்ல உடைகள் இல்லை, சாப்பிடவில்லை.

ஆனால், இன்று நான் நிறைய பணத்தை சம்பாதிக்கிறேன். அதனால்தான் சம்பாதித்த பணத்தில் மக்கள் படிக்கும்படி பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்.. என் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும், உணவும் கொடுக்கிறேன்.

வசதியாக வாழ்வதற்கு பதிலாக அதை என் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்"
என்றார் அந்த அற்புத மனிதன்..!

Saravanan Marx
Via : தம்பி Salman Farish

நாமும் காண்கிறோம்... கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்களில் பலரது கைகளில் ஆப்பிள் போன்கள் இல்லை. பிராண்டு பார்த்து வியக்கும்படியான காட்ஜெட்ஸ் எதுவும் இல்லை. காலில் கிடக்கும் ஸ்நீக்கர்ஸ் கூட 1000 -2000 த்தை தாண்டவில்லை. வசதியாக வாழ நினைத்து அவர்கள் வெளிநாடுகளுக்கு ஓட வில்லை... எங்க சுத்தினாலும் லோக்கலில் குடியிருக்கும் வீடுகளுக்கு வந்தடைந்துவிடூகிறார்கள். அவர்களது பிள்ளைகள் யாரும் இன்டர்நேஷனல் பள்ளிகளில் பயிலவில்லை... வழக்கமாக ஏரியாவுக்குள் இருக்கும் பள்ளிகளில் பயில்கிறார்கள். ஆனால் அவர்களை பார்த்து வாயை பிளக்கும் சாமான்ய மனிதர்கள் தான் பெருமையடிப்பதற்காக தங்களது வசதியை வெளிக்காட்டுகிறார்கள். கஷ்டப்பட்டவர் தான் அடக்கமாக இருப்பார் என்றில்லை பரம்பரை பணக்காரனாக இருப்பவரும் அடக்கமாகத்தான் இருக்கிறார்கள். தங்களது அன்றாட வாழ்வினை எளிமையானதாக யாருக்கும் அலட்டிக்கொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அத்தியாவசிய தேவைக்கும் ஆடம்பர தேவைக்கும் வித்தியாசம் அறிந்தவர்களே மனிதரில் சிறந்தவர்.

போன தலைமுறையில் கூழுக்கு கஷ்டப்பட்ட பலரும், காசு வந்தபிறகு போடும் ஆட்டம் தான்....அல்லாஹ் அஹ்லம்.

S. Nasrath Rosy

Address

Atulugama
Bandaragama
12530

Alerts

Be the first to know and let us send you an email when Atulugama.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Bandaragama

Show All