களம் TV

  • Home
  • களம் TV

களம் TV முயற்சிகளுக்கான களம் உண்மை நடுநிலைக்கே முதலிடம்

அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக (நிர்வாகம்) அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எச்.பெளஸ் (SLEAS) ...
03/01/2025

அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக (நிர்வாகம்) அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எச்.பெளஸ் (SLEAS) அவர்கள் தனது கடமையை உத்தியோகபூர்வமாக வியாழக்கிழமை (02) பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

(றிஸ்வான் சாலிஹு)

களம் TV

உடலை அடையாளம் காண உதவுங்கள்.======================47 வயது மதிக்கத்தக்க படத்தில் காட்டப்பட்டுள்ள ஆணின் உடல் அக்கரைப்பற்று...
03/01/2025

உடலை அடையாளம் காண உதவுங்கள்.
======================

47 வயது மதிக்கத்தக்க படத்தில் காட்டப்பட்டுள்ள ஆணின் உடல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.

இவர் சுகயீனமுற்ற நிலையில் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டத்தை அண்மித்த பிராதன வீதியில் கண்டெடுக்கப்பட்டு கடந்த 1ஆம்‌ திகதி எமது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் கொண்டு வரப்பட்டிருந்தார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று 03 ஆம் திகதி மரணித்த நிலையில் இதுவரை எந்த ஒரு உறவினரும் வருகை தரவில்லை.
(மயக்கமுற்ற நிலையில் அவரது பெயர் தௌபீக், வயது 47, நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.)

இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவினை தொடர்பு கொள்ளவும்.

சட்ட வைத்திய அதிகாரி.
ஆதார வைத்தியசாலை.
அக்கரைப்பற்று.
2025.01.03

🔵 ஆசிரியக் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்க.பொ.த உயர் தரத்தின் பின்னர், ஆசிரியர் சேவையில் பிரவேசிப்பதற்கான மூன்று பாடநெறிகளு...
02/01/2025

🔵 ஆசிரியக் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்

க.பொ.த உயர் தரத்தின் பின்னர், ஆசிரியர் சேவையில் பிரவேசிப்பதற்கான மூன்று பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1. 2023 ஆம் ஆண்டு உயர் தரம் எழுதிய தொழிநுட்ப பிரிவு மாணவர்களுக்கு கல்விமாணி (தொழிநுட்பவியல்) பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குளியாப்பிட்டியில் அமையப்பெற்றுள்ள தொழிநுட்பவியல் தேசிய கல்வியியல் கல்லூரியில் இப்பாடநெறி ஆரம்பமாகவுள்ளது.

தொழிநுட்பவியலில் 3 கல்விமாணி பாடநெறிகளில் ஒன்றைத் தகைமையின் அடிப்படையில் தெரிவு செய்யலாம். இப்பாடநெறிக்கு 210 மாணவர்களை உள்ளீர்க்க திட்டமிடப்பட்டள்ளது.

தொழிநுட்பத் துறை, பௌதீக விஞ்ஞானத்துறையில் கற்றிருப்பின் அல்லது ஏதேனும் ஒரு துறையில் கற்று குறிப்பிட்ட பாடங்களை உள்ளக்கி பரீட்சை எழுதி இருப்பின் இப்பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இது முற்றிலும் இலவசமான முழு நேர பாடநெறியாகும்.

பாடநெறி முடிந்த கையோடு நேரடியாக ஆசிரியர் சேவையில் நியமனம் கிடைக்கும். உயர்தரத்தின் தொழிநுட்பத் துறையில் ஆசிரியராக கடமையாற்றலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி - 10.01.2025

விபரங்கள்: https://teachmorepro.lk/bed-degree-at-national-college.../

2. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் கல்விமாணி (ஆரம்ப கல்வி) பாடநெறிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

இப்பாடநெறிக்கான மாணவர் சேர்ப்பு பாடநெறியின் மூன்றாவது மட்டத்திற்கும் பாடநெறியின் 5 ஆவது மட்டத்திற்குமாக இரு மட்டங்களில் நடைபெறுகிறது.

தேசிய கல்வியியல் கல்லூரியில் ஆரம்பக் கல்வி பாடநெறியைத் தொடர்ந்துள்ளவர்கள் நேரடியாக மட்டம் 5க்கு விண்ணப்பிக்க முடியும். க.பொ.த உயர் தரம் சித்தி பெற்றவர்கள் மட்டம் 3க்கு விண்ணப்பிக்க முடியும்.

பாடநெறிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

மாகாணங்கள் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பம் கோருவதைப் போன்று, கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு என்று விசேடமான விண்ணப்பங்களைக் கோரி நியமனங்களை வழங்குகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 08.01.2025

விபரங்கள்:
https://teachmorepro.lk/bed-degree-in-primary-education-2/

3. BEd in English Language Teaching - UoVT ஆங்கிலம் கற்பித்தலில் கல்விமாணி - தொழிநுட்பவியல் பல்கலைக்கழகம் 14 பட்டப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

அப்பாடநெறியில் ஆங்கிலம் கற்பித்தலில் கல்விமாணி பட்டமும் ஒன்று. கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் எந்த துறையிலேனும் சித்திபெற்று, ஆங்கிலப் பாடத்தில் எஸ் சித்தி அல்லது பொது ஆங்கிலத்தில் ஏ சித்தி பெற்றிருப்பின் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

NVQ தகைமை அடிப்படையிலும் விண்ணப்பிக்க முடியும்.

மாகாணங்கள் வழங்கும் கல்விமாணி பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் நியமனம் கிடைக்கும்.

விண்ணப்பம் - 5.1.2025-10.2.2025

விபரங்கள்:
https://teachmorepro.lk/bed-in-english-language-teaching/

உங்கள் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்.

ZN

02/01/2025

சிறுவர்களை கடற்கரை நீர் அலையில் விளையாடும் போது கவனமாக இருங்க

இலங்கை பொலிசாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள e-Traffic செயலியின் நன்மைகள்இலங்கை பொலிசாரினால் e-Traffic என்ற விசேட செயலிய...
02/01/2025

இலங்கை பொலிசாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
e-Traffic செயலியின் நன்மைகள்

இலங்கை பொலிசாரினால் e-Traffic என்ற விசேட செயலியொன்ற அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணைவாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் குறித்த செயலி நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டது. போக்குவரத்து தவறுகள் மற்றும் வீதி சட்டங்களை மீறுவது தொடர்பில் இந்த செயலி ஊடாக பொதுமக்களுக்கு துரித முறைப்பாடு செய்ய முடியும்.
இலங்கை பொலிசின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக E-services பிரிவில் செயலியை தரையிறக்கம் செய்ய முடியும்.

நாளாந்தம் இடம்பெறும் வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற இந்த e-Traffic செயலி அறிமுகத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இந்த கணக்கின் ஊடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்ப முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்ஹானா_பதுறுதீன்

🛑 #மீன்கடை உரிமையாளர் ஒருவர் அவர் கடையில் வெட்டிய  #மீன்கழிவுகளை  #வீதியோரத்தில் வீசிவிட்டுச் சென்ற போதுஅதை அவதானித்த பி...
02/01/2025

🛑 #மீன்கடை உரிமையாளர் ஒருவர் அவர் கடையில் வெட்டிய #மீன்கழிவுகளை #வீதியோரத்தில் வீசிவிட்டுச் சென்ற போது

அதை அவதானித்த பிரதேச மக்கள் #வாகனத்தை பிடித்து அவர்கள் வீதியோரத்தில் கொட்டிய மீன் கழிவுகளை அள்ளி #வாகனத்துக்குள்ளே போட்டனர்...

பின்பு #அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் பொது மக்கள்...

கம்பளை #நகரிலுள்ள மீன் விற்பனை #நிலையம்.

சரியான பாடம்!்மீன்கடை உரிமையாளர் ஒருவர் அவர் கடையில் வெட்டிய மீன்கழிவுகளை வீதியோரத்தில் வீசிவிட்டுச் சென்ற போது, அதை அவத...
01/01/2025

சரியான பாடம்!்

மீன்கடை உரிமையாளர் ஒருவர் அவர் கடையில் வெட்டிய மீன்கழிவுகளை வீதியோரத்தில் வீசிவிட்டுச் சென்ற போது,
அதை அவதானித்த பிரதேச மக்கள் வாகனத்தை பிடித்து அவர்கள் வீதியோரத்தில் கொட்டிய அள்ளி மீன் கழிவுகளை வாகனத்துக்குள்ளே போட்டனர்...

பின்பு அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் பொது மக்கள். கம்பளை நகரிலுள்ள மீன் விற்பனை நிலையத்தின் கழிவுகளே இது.

வினா 03:  #உலகின் மிகப்பெரிய தீவு எது?⏩ வினாக்கான விடையை  Comment செய்ய வேண்டும். சரியான விடையை பதிவிடுபவர்களுக்கு HUTCH...
01/01/2025

வினா 03: #உலகின் மிகப்பெரிய தீவு எது?
⏩ வினாக்கான விடையை Comment செய்ய வேண்டும்.

சரியான விடையை பதிவிடுபவர்களுக்கு HUTCH 998/- data packages (30 நாட்களுக்கு ,37GB ANYTIME Data, NONSTOP TikTok, Facebook, YouTube, Instagram, WhatsApp, Messenger, in, twitter) இலவசமாக வழங்கப்படும்

---------------------------------
நிபந்தனை
✅ வினாப் பதிவை 👍 Like 🔀 Share செய்வதுடன் எமது களம் tv page ஐ 👍 Like செய்வது அவசியம்.

✅ ஏதாவது உதவிகள் தேவையெனில் #களம்_tv என்ற எமது Fb page இன் Inbox ஐ நாடவும்.

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் புது வருட நிகழ்வுகள்
01/01/2025

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் புது வருட நிகழ்வுகள்

பஹ்ரைனைப் பற்றிய சில தகவல்கள் 1. பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும், இது 33 தீவுகளால் ஆனது, மிகப்பெ...
01/01/2025

பஹ்ரைனைப் பற்றிய சில தகவல்கள்

1. பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும், இது 33 தீவுகளால் ஆனது, மிகப்பெரியது பஹ்ரைன் தீவு ஆகும்.🇧🇭

2 பஹ்ரைன் உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும், ஆனால் இது பணக்கார நாடுகளில் ஒன்றாகும், இதற்கு அதன் செழிப்பான வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறைகள் காரணமாகும்.🇧🇭

3. பஹ்ரைன் பண்டைய காலங்களிலிருந்து ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது, இது தில்முன் நாகரிகத்தின் தாயகமாக இருந்தது, இது பண்டைய உலகில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்தது.🇧🇭

4. தலைநகர் மனாமாவில் அமைந்துள்ள பஹ்ரைன் உலக வர்த்தக மையம், உலகின் பிரபலமான கட்டிடமாகும் 🇧🇭

5. பஹ்ரைன் அதன் வளமான முத்துக்களும் வரலாற்றிற்காக அறியப்படுகிறது மற்றும் ஒரு காலத்தில் உலகின் முன்னணி முத்து உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருந்தது. பஹ்ரைன் பெர்லிங் டிரெயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். 🇧🇭

6. நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி அரபு, ஆனால் ஆங்கிலம் பரவலாக பேசப்படுகிறது, குறிப்பாக வணிகம் மற்றும் சுற்றுலா. 🇧🇭

7. பஹ்ரைனில் பஹ்ரைன் இன்டர்நேஷனல் சர்க்யூட் உள்ளது, இது உலகப் புகழ்பெற்ற மோட்டார்ஸ்போர்ட் மைதானமாகும், இது ஃபார்முலா 1 முக்கிய நிகழ்வான வருடாந்திர பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸை நடத்துகிறது. 🇧🇭

8 பஹ்ரைனில் கணிசமான வெளிநாட்டினர் உள்ளனர், நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறிப்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற அரபு நாடுகளிலிருந்து 🇧🇭

9. பஹ்ரைன் தேசிய அருங்காட்சியகம் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும், இது தில்முன் நாகரிகத்தின் முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மற்றும் பஹ்ரைனின் வரலாற்றின் கலைப்பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 🇧🇭

10. ஏலக்காய், குங்குமப்பூ மற்றும் கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட "கஹ்வா" என்று அழைக்கப்படும் பாரம்பரிய பஹ்ரைன் காபியுடன், விருந்தோம்பலின் அடையாளமாக விருந்தினர்களுக்குப் பரிமாறப்படும் பாரம்பரிய காபி கலாச்சாரத்திற்கு இந்த நாடு பெயர் பெற்றது🇧🇭

11. 1930 களில் வளைகுடா பிராந்தியத்தில் எண்ணெய் கண்டுபிடித்த முதல் நாடு பஹ்ரைன் ஆகும், இது நாட்டை ஒரு சிறிய வர்த்தக நிலையத்திலிருந்து நவீன, செழிப்பான மாநிலமாக மாற்ற உதவியது.🇧

அக்கறை ஊரின் வளர்ந்து வரும் ஆளுமை RuhaiMy IhthiZamவைத்தியர் சித்தீக் (அக்கறைப்பற்று)அவர்களின் புதல்வர், அன்பும் பண்பும் ...
01/01/2025

அக்கறை ஊரின் வளர்ந்து வரும் ஆளுமை RuhaiMy IhthiZam

வைத்தியர் சித்தீக் (அக்கறைப்பற்று)
அவர்களின் புதல்வர், அன்பும்
பண்பும் சமூகபற்றும் உள்ள ஓர் வாலிபன், தொழிற்துறையில் ஒரு Architect ❤️

அவருடைய ஓர் முயற்சிக்கு எம்மிடம் இருந்து ஒரு
சிறிய உதவியினை எதிர்பார்க்கிறார், நமது ஒரு like அவன் வாழ்வின் அடுத்த கட்ட நகர்வாய் அமையும் ❤️

மரமின்றி மரம் - (Tree Without Tree)

- என்ற தொனிபொருளில் முழுவதும் கழிவு
பொருட்களால் உருவாக்கப்பட்ட Christmas மரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த வடிவமைப்பானது கழிவு பொருட்களினால் ஒரு அழகான Christmas மரத்தை பிரதிபலிப்பதோடு காடுகள் அழிக்கபடுவதை வலியுறுத்துகிறது. மேலும் காடுகளை பாதுகாக்கும் முறையை ஒரு புத்தாக்க சிந்தனையூடாக வடிமைத்துள்ளார்.

மீள் சுழட்சி மூலம் ஓர் நிலைபேறான சமூக மாற்றத்தை உருவாக்க துடிக்கும் எமது மண்ணின் சகோதரனுக்கு நாமும் கைகோர்ப்போம் ❤️

இன்னும் 2 நாட்களே உள்ளன! கீழே உள்ள link இனை Click செய்து ஒரு 👍 இடுங்கள்!

மேலதிக தெளிவுக்கு இணக்கபட்டுள்ள Screenshot இனை பார்க்கவும். ( Vote என்பதற்கு அருகில் உள்ள ❤️ Click செய்யவும்)

https://archalley.com/submission/entry-47-archalley-christmas-competition/

நம்மவனை நாமே உயர்த்துவோம் ❤️✌️

🎉 2025 ஐ வரவேற்கிறோம்! 🎉**இந்த புத்தாண்டில் நாம் அடியெடுத்து வைக்கும்போது, ​​அதை நம்பிக்கையுடனும், தைரியத்துடனும், உற்சா...
31/12/2024

🎉 2025 ஐ வரவேற்கிறோம்! 🎉**

இந்த புத்தாண்டில் நாம் அடியெடுத்து வைக்கும்போது, ​​அதை நம்பிக்கையுடனும், தைரியத்துடனும், உற்சாகத்துடனும் ஏற்றுக் கொள்வோம். 2024 அதன் சவால்களைக் கொண்டு வந்துள்ளது, ஆனால் நாங்கள் வலிமையாகவும், புத்திசாலித்தனமாகவும், மேலும் உறுதியுடனும் வெளிப்பட்டுள்ளோம். இப்போது, ​​2025ல், புதிய இலக்குகளை நிர்ணயிப்போம், நம் கனவுகளைத் நிறைவேற்றுவோம் , வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகளை உருவாக்குவோம்.

✨ வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொள்ள ! ✨

களம் Tv யின் இந்த அற்புதமான பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் , நாம் தொடர்ந்து ஊக்குவிப்போம், பகிர்வோம், மேலும் செழிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவோம். 💬 2025ஐ நேர்மறை(possitive ), வெற்றிமிக்க ஆண்டாக மாற்றுவோம்.

வரும் வருடத்திற்கான உங்கள் நம்பிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் என்ன? கீழே அவற்றைப் பகிரவும் - புதிய உயரங்களை அடைய ஒருவரையொருவர் ஊக்குவிப்போம்! 🚀

year2025 beginning 2025

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (31) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மறைந்த இந்தியாவின்...
31/12/2024

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (31) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

பொகவந்தலாவில் 15 ஆண்டுகளாக தடம் பதித்து பயணிக்கும் லிட்டில் ஏஞ்சல்ஸ் முன்பள்ளி....கடந்த 15 ஆண்டுகளாக பொகவந்தலாவில் தனக்க...
30/12/2024

பொகவந்தலாவில் 15 ஆண்டுகளாக தடம் பதித்து பயணிக்கும் லிட்டில் ஏஞ்சல்ஸ் முன்பள்ளி....

கடந்த 15 ஆண்டுகளாக பொகவந்தலாவில் தனக்கென தனி இடத்தை தடம் பதித்து பயணிக்கும் லிட்டில் ஏஞ்சல்ஸ் முன்பள்ளி பல சமூக பணிகளை செய்துக்கொண்டு தனது 15வது அகவை நிகழ்வை வெகுவிமர்சையாக 2025.01.05 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொகவந்தலாவ sri கதிரேசன் மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறது.

இப்பள்ளியில் கல்வி பயின்று வெளியேற உள்ள மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வழி அனுப்பும் நிகழ்வோடு . நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் உட்பட கல்வி சமூகம் சார்ந்தவர்களும் முன்னாள் பாடசாலை பெற்றோர்களும் வருகை தரவுள்ளனர்.

இந்நிகழ்வின் ஒரு சிறப்பம்சமாக மலர் வெளியீடும் இப்பள்ளியில் கல்வி பயின்று பல்துறை சாதனையாளர்களாக திகழ்ந்துக்கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களை நகர் ஊர்வலமாக அழைத்து பொகவந்தலாவின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற உள்ளது . இதனை முன்னிட்டு பொகவந்தலாவ நகரில் கோலாகலமான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.உங்கள் வருகை மூலம் இந்நிகழ்வு மேலும் சிறப்பு பெறும்

 #பிள்ளைகளின் தற்கொலை  எண்ணங்களை ஆசிரியர்களாகிய நாம் எவ்வாறு கையாள வேண்டும்  என்கின்ற சில அபிப்பிரயாங்களை உங்களுடன் தாழ்...
30/12/2024

#பிள்ளைகளின் தற்கொலை எண்ணங்களை ஆசிரியர்களாகிய நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்கின்ற சில அபிப்பிரயாங்களை உங்களுடன் தாழ்மையாக பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

👉 பிள்ளைகளின் பின்புலங்களை கொஞ்சம் அறிந்து வைத்துக்கொள்வோம். பிள்ளைகள் எல்லோருமே எல்லாவற்றிலும் சமமானவர்கள் அல்ல.
அவர்கள் வீட்டு நிலைமை தனிப்பட்ட வாழ்க்கை முறையை வீட்டிற்கே சென்றும் பார்க்கலாம்.

👉 சில இடங்களில் பிள்ளைகள் தொடர்பான முடிவுகளை சட்டப்படி எடுப்பதை விட மனிதாபிமானப்படி எடுப்பது சிறந்தது.

👉 கோபமான சந்தர்பங்கள், குழப்பமான சந்தர்பங்கள், பயமான சந்தர்பங்கள், உணர்ச்சி பாதிக்கப்பட்ட சந்தர்பங்கள் மற்றும் தன் மீதான நம்பிக்கை இழந்த சந்தர்பங்களில் தான் பிள்ளைகள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அவற்றை ஆழமாக கவனிக்கவும், கணிக்கவும் முயற்சி எடுப்போம்

👉கட்டுப்பாடில்லாத சுதந்திரம் அல்லது சுதந்திரமே இல்லாத கட்டுப்பாடு ஆகிய இரண்டுமே தவறான முடிவுகளுக்கே பிள்ளைகளை இட்டுச் செல்லும். ஆகவே பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுடனான சுதந்திரத்தை வழங்குங்கள்.

👉 தோல்வியை எதிர்கொள்ள பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

👉 தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் பற்றி சொல்லிக் கொடுங்கள். வலி தான் அவர்களை வலிமையாக்கும் வழிகள் என்பதை புரிய வையுங்கள்.

👉 சித்தி வீதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடவும் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

👉நல்ல வழிகாட்டுதலாக இல்லாதவரை தண்டனை என்பது மதிப்பற்றது. (ஓர் அறிஞர் கூற்று) இதை உணர்வோம்.

👉 மாணவர்களுக்கு பாடத்தோடு வாழ்க்கையையும் கற்பிக்க முயற்சிப்போம்.

👉 ஆசிரியர்களாகிய நாம் இயந்திரம் போல செயற்படாமல் உணர்வுகளை பரிமாறிக் கொள்ளுங்கள்.

👉 8 பாடவேளையும் பாடம் எடுத்த போது எங்களுக்கு ஏற்பட்ட திருப்தி பிள்ளைகளுக்கும் ஏற்பட்டதா என்பதை சிந்தித்தல் திறம்.

👉 வகுப்பறையில் நுழைபவரல்ல ஆசிரியர் மாணவர்களின் இதயத்தில் நுழைபவரே ஆசிரியர். அவர்கள் இதயத்தை தன்னம்பிக்கையால் நிரப்புங்கள்.

👉 தற்கொலை என்பது கோழைகளின் முடிவு என்பதை உணர்த்துங்கள்.

இன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த மூவர்! 👇29.12.2024
29/12/2024

இன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த
மூவர்! 👇

29.12.2024

179 பேர் இறந்த விமான விபத்தில்.. 2 பேர் மட்டும் பிழைத்தது எப்படி? எங்கே அமர்ந்திருந்தார்கள் தெரியுமா.! 181 பேருடன் பயணித...
29/12/2024

179 பேர் இறந்த விமான விபத்தில்.. 2 பேர் மட்டும் பிழைத்தது எப்படி? எங்கே அமர்ந்திருந்தார்கள் தெரியுமா.!

181 பேருடன் பயணித்த Jeju Air Flight 2216 இன்று அதிகாலை பெரும் விபத்துக்கு உள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 179 பேர் பலியானார்கள். 2 பேர் மட்டும் தப்பித்தனர்.

தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 177 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.

ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து திரும்பிய Jeju Air Flight 2216 விமானம் தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 28 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது,

விமானம் சுவற்றில் மோதிய உடன் தீப்பிடித்தது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் அவர்கள் மட்டும் தப்பித்தது எப்படி என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர்கள் இருவரும் கடைசி ரோவில் அமர்ந்து இருந்தனர். இரண்டு பேருமே ஜன்னல் பக்கம் இருந்துள்ளனர். அருகிலேயே எமர்ஜென்சி கதவும் இருந்துள்ளது. இதனால் அவர்கள் எளிதாக தப்பித்துள்ளனர்.

மற்றபடி விபத்தில் சிக்கிய எல்லோரும் உடல் நசுங்கி.. அதன்பின் தீயில் கருகி பலியாகி உள்ளனர். முன் பக்கம் முதல் கடைசி ரோவிற்கு முன்பு வரை விமானம் நசுங்கி வெடித்தது. இதனால் மற்ற எல்லோரும் பலியாகி உள்ளனர்.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஆனால், பறவை மோதல் அல்லது மோசமான வானிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை ஊகிக்கிறது
இந்த விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜியோங்-ஹியூன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

"விமானத்தின் வால் பகுதி அப்படியே இருக்கிறது. ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகளின் வடிவத்தை யாராலும் அடையாளம் காண முடியவில்லை", என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.

80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

தற்போது முவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த விபத்திற்கு பின் தொழில்நுட்ப பிரச்சனைதான் காரணமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடக்கும். விமானத்தில் பிளாக் பாக்ஸ் இன்னும் கிடைக்கவில்லை.

அது கிடைத்தவுடன் விசாரணை தொடங்கும் என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். தென்கொரியாவில் ஏற்கனவே அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு இடையே இந்த விபத்து அரசுக்கு எதிராக மாறி உள்ளது.

இந்த விபத்து தொடர்பான திகிலூட்டும் காட்சிகள் வெளியாகி வருகிறது, 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் போயிங் 737-800, தரையிறங்கும் போது லேண்டிங் கியர் வேலை செய்யாமல் போனதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து பிரிந்து சாலையில் சறுக்கி சென்று உள்ளது. அதோடு விமானத்தின் சக்கரங்கள் வெளியே வராமல் உள்ளேயே இருந்துள்ளது.

இப்படி விமானம் சரிந்துபடியே சென்று சுவற்றில் சட்டென மோதி உள்ளது. மோதிய உடன் விமானம் தீ பிடித்து பற்றி எரிந்து உள்ளது.

175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் போயிங் 737-800, தரையிறங்கும் போது லேண்டிங் கியர் வேலை செய்யாமல் போனதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து "பெல்லி லேண்டிங்" செய்ய அந்த விமானம் முயன்றுள்ளது. அந்த பெல்லி லேண்டிங் பயன் அளிக்காமல் விமானம் சறுக்கி சென்று சுவற்றில் மோதி உள்ளது.

பெல்லி லேண்டிங் செய்ய ஓடுபாதையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் விமானம் தரையிறங்கிய உடன் அது கட்டுப்பாடின்றி செல்ல தொடங்கியது.

பெல்லி லேண்டிங் செய்த உடன் மிக மிக வேகமாக விமானம் சறுக்கி சென்றது. அப்படியே சென்று அந்த விமானம் சுவற்றில் மோதியது.

விமானம் தரையிறங்கும் போது லேண்டிங் கியர் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தில் இருந்து திரும்பிய விமானம், தரையிறங்க முயன்றபோது,​​இந்த சம்பவம் நிகழ்ந்தது.

விமானம் விபத்தில் சிக்குவதற்கு சற்று முன்பாக, அதில் இருந்த பயணி ஒருவர் தனது குடும்ப உறுப்பினருக்கு செல்போனில் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த குறுஞ்செய்தியில், விமானத்தில் இறக்கையில் ஒரு பறவை மோதியதாக அந்த பயணி குறிப்பிட்டிருந்தார் என்கிறது அந்த செய்தி. அத்துடன், "எனது கடைசி வார்த்தைகளை அனுப்ப வேண்டுமா?" என்றும் குறுந்தகவலில் அந்த பயணி கூறியிருந்ததாக உள்ளூர் ஊடகம் கூறுகிறது.

அதன் பிறகு, விமானத்தில் இருந்த அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற உறவினர் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார்.
"இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மணிப்பு கேட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார்.

மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது.
முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.
ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும்.
தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நன்றி!

BBC NEWS தமிழ்

மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் போது காணாமல் போன இந்த குழந்தையை கண்டுபிடிக்க உதவுங்கள் 🙏🙏🙏யாரவது பார்த்தால்  இந்த நம்பருக...
29/12/2024

மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் போது காணாமல் போன இந்த குழந்தையை கண்டுபிடிக்க உதவுங்கள் 🙏🙏🙏
யாரவது பார்த்தால் இந்த நம்பருக்கு ஒரு கால் பன்னுங்க 😭
0704845331
உங்களால் முடிந்தவரை பகிருங்கள் அந்த பெற்றோருக்கு உதவவும்... தயவு செய்து இந்த குழந்தையை கண்டுபிடிங்கள்...🙏
(அனைவரும் கண்டுபிடிக்க உதவுங்கள்)

Address

Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when களம் TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to களம் TV:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share