Nila Television

Nila Television 😍🤩எமது பிரதேசத்தின் 💃கலை கலாசாரம் ,⛹️‍♀️விளையாட்டு மற்றும் 🐘ஆளுமைகளையும் வளர்க்கும் அலைவரிசை💥💯💥

31/12/2024

அனைத்து நல் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புது வருட வாழ்த்துக்கள்.

🤩🤩அனைத்து உறவுகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்🌹🌹🌹
24/12/2024

🤩🤩அனைத்து உறவுகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்🌹🌹🌹

16/12/2024

காட்டு யானையின் அட்டகாசம் பின்னிரவு 1.30மணி.

*புலமைப்பரிசில் மீண்டும் நடத்தப்படும்…!?*செப்டெம்பர் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும...
12/12/2024

*புலமைப்பரிசில் மீண்டும் நடத்தப்படும்…!?*

செப்டெம்பர் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் டிசம்பர் 16ஆம் திகதி நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று(11) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனு மீதான விசாரணையை வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது தெரிவித்தது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும், முதல் வினாத்தாளை இரத்துச் செய்யுமாறும் கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இணைந்து இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சட்டமா அதிபர் விராஜ் தயாரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரானதோடு, மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ் மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் ஆஜராகினர்.

*இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உலகளவில் முடக்கம்…**  தற்போது வழமைக்கு 12.12.2024 திரும்பியுள்ளது (1.15 am)*...
11/12/2024

*இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உலகளவில் முடக்கம்…*

* தற்போது வழமைக்கு 12.12.2024 திரும்பியுள்ளது (1.15 am)*

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்கள் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்ட மெட்டாவின் சமூக ஊடக தளங்களை அணுகுவதில் பயனர்கள் பரவலான சிக்கல்களை தெரிவிக்கன்றனர்.

முதன்முதலில் மதியம் 1 மணியளவில் தடங்கல் ஏற்பட்டது. புதன்கிழமை, பயனர்கள் Facebook மற்றும் Instagram இன் பயன்பாடுகள் மற்றும் இணையதளங்கள் இரண்டையும் அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மெசஞ்சர் பயனர்கள் உள்நுழைவதிலும் செய்திகளை அனுப்புவதிலும் உள்ள சிக்கல்களையும் தெரிவித்தனர்.

மெட்டா ஒரு அறிக்கையில் இடையூறுகளை ஒப்புக்கொண்டது, "எங்கள் பயன்பாடுகளை அணுகும் சில பயனர்களின் திறனை தொழில்நுட்ப சிக்கல் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விஷயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்து வருகிறோம், மேலும் ஏதேனும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துகொள்கின்றோம்

*பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவை கையளித்தார் அதாஉல்லா*கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட...
10/12/2024

*பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவை கையளித்தார் அதாஉல்லா*

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என்பதையும் கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக தன்னை குறிவைத்து பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள் இம் மனுவில் விஷேடமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.

மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்பட்டதுடன் வாக்குகள் எண்ணப்பட்டதிலும் பாரதூரமான மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்றார்.

மேலும், கச்சேரியில் எமக்கு எதிரான சதி வலை பின்னல் தொடர்ந்தது. ஆரம்பத்தில் காலையில் ஒரு விதமாகவும், பின்னர் வேறு ஒரு விதமாகவும் முடிவுகள் அறிவிக்கப்படலாயின. நாம் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை ஏற்று கொள்ளவில்லை. ஏற்பதாக கையொப்பம் இட்டு கொடுக்கவில்லை. வெளிப்படையாகவே ஆட்சேபித்தோம். ஆனால் புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. நாம் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று சட்டப்படி முறையாக கச்சேரியில் கோரினோம். ஆனால் வாக்குகளை மீண்டும் எண்ணப்படவே இல்லை. இதை ஆட்சேபித்து கொழும்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுத்துமூலம் பல தகவல்களையும் திரட்டியுள்ளோம்.

அவசியம் ஏற்படுகின்ற பட்சத்தில் உயர்நிலை நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வோம். நீதிக்கான எமது போராட்டம் தொடரும். நாம் கடந்த காலங்களில் அரசியலில் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி எம்.எம்.எம்.மு அஸ்ஸமும் கலந்து கொண்டதுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

💦💦குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை💦===================================தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ந...
10/12/2024

💦💦குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை💦
===================================தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாகவும், அது மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து டிசம்பர் 11-ம் திகதி இலங்கை – தமிழக கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 75ல் சில கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

*மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு*ஹதரலியத்த பொலிஸ் பிரிவில் தேதுனுபிட்டிய பிரதேசத்தில் நேற்று (07) மின்சாரம் தாக்...
09/12/2024

*மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு*

ஹதரலியத்த பொலிஸ் பிரிவில் தேதுனுபிட்டிய பிரதேசத்தில் நேற்று (07) மின்சாரம் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த நபர் கால்நடை வளர்ப்பு மேற்கொண்டு வந்தவர் எனவும், பண்ணையை சுத்தம் செய்யும் நடவடிகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தருணத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக ரம்புக்கனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹதரலியத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

*அமைச்சர்களின் பங்களாக்களை தமக்கு வழங்குமாறு தனியார் நிறுவனங்கள் கோரிக்கை*அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்...
08/12/2024

*அமைச்சர்களின் பங்களாக்களை தமக்கு வழங்குமாறு தனியார் நிறுவனங்கள் கோரிக்கை*

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள் அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்குக் கோரியுள்ளன. மேலும், அமைச்சர்களின் பங்களாக்களை தங்கள் பயன்பாட்டிற்கு தருமாறு மூன்று நீதிபதிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, சுற்றுலாத்துறையை மேம்படுத்த அமைச்சர் பங்களாக்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சின் சில அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்

06/12/2024

🪙🪙🪙💰இந்த இனிய வெள்ளி நாளில் உங்களுக்காக பொன்னும் பொருளும் அள்ளி வந்திருக்கின்றான் இந்த குபேரன்💰💰💰💰💰. 🪙🪙2024.12.06🪙🪙

04/12/2024

யானை நேரலை....

🛑🛑🛑🛑🛑இலங்கைக்கு தென்கிழக்கில் 700 km தொலைவிலும் கல்கத்தாவுக்கு தெற்கில் 1900 km தூரமாகவும் 07/12/2024 அன்று வங்காள விரிக...
04/12/2024

🛑🛑🛑🛑🛑
இலங்கைக்கு தென்கிழக்கில் 700 km தொலைவிலும் கல்கத்தாவுக்கு தெற்கில் 1900 km தூரமாகவும் 07/12/2024 அன்று வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகவுள்ளது. இது தாழமுக்கமாக உருவாகுவதற்கான ஏதுக்கள் அதிகமாகவுள்ளது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், 1964 டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் கடும் சேதங்களை விளைவித்த புயல் உருவான அதே இடத்தில் தான் மேற்குறித்த காற்றுச் சுழற்சியும் உருவாகிறது என்பதேயாகும். இதில் முக்கியமான கவனத்தை அனைவரும் செலுத்த வேண்டும். ஏனெனில் குறித்த புயல் தன் நகர்வுதிசையை மாற்றாத பட்சத்தில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகள் அதிகம் பாதிப்புறும். அத்துடன் குறித்த காற்றுச்சுழல், புயலாக மாற்றமுறும்வரை உராய்வுகள் எதையும் நிலத்தில் மேற்கொண்டு முடிவுறுத்தாதவாறே கடலமைவுள்ளது. எனவே முன்னெச்சரிக்கைகளை அனைவரும் மேற்கொண்டிருத்தல் அவசியமானது என்றே தோன்றுகின்றது.

இது அங்கிருந்து வடக்கு, வடமேற்காக (NNW) நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் ஏழாம் திகதியிலிருந்து பத்தாம் திகதி வரை வடக்கில் மிதமான/மிகக் குறைவான மழை பெய்யக்கூடும்.

காற்றுச் சுழற்சி வலுவடைந்து தாழமுக்கமாகும் என்று எதிர்பார்க்கப்படும் பதினோராம் திகதி அதிகாலையில் இருந்து அடுத்துவரும் தினங்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. குறித்த காற்றழுத்தமானது மட்டக்களப்பு, திருகோணமலைக்கு தூரகிழக்காக நகர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட கடல்வழியாகக் கரையைக் கடக்கும் என்று தரவுகள் காட்டுகின்றன. எனினும் இதனை உறுதிப்படுத்த காற்றுச்சுழற்சியின் வளர்ச்சியும் அதன் முதல் இரு நகர்வுகளும் மிக அவசியமாகின்றது.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் குறித்த காற்றுச்சுழற்சியின் தன்மையை அறிந்தவண்ணம் இருப்பது நல்லது. அத்துடன் பெரும்போக நெற் செய்கையினைத் தாமதமாக மேற்கொண்டவர்களும், ஏற்கனவே உடைப்பெடுத்த குளங்களுக்கான முன்னெச்சரிக்கைகளையும் இப்போதே சீராக முன்னெடுப்பது நல்லது.

அடுத்த மூன்று தினங்களிலேயே குறித்த காற்றுச் சுழற்சியின் வளர்ச்சி தாழமுக்கமாகிறதா? அதன் செல்திசை எது என்பது பற்றி மேலும் துல்லியமாகக் கணிக்க இயலும்.

04/12/2024

அதிக பனிப்பொழிவுடன் காணப்படும் ஒலுவில்..

*மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்!*மட்டக்களப்பு மாவட...
03/12/2024

*மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்!*

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று(2) அனர்த்த முகாமைத்து குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் அதிகமானோர் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன்காரணமாகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கருத்து தெரிவிக்கையில், ''இனிவரும் காலங்களில் அபிவிருத்தியானது மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தியாக இருக்க வேண்டுமே தவிர எந்தவகையிலும் அன்றாட வாழ்க்கைக்கு பாதகங்களை ஏற்படுத்தகூடிய அபிவிருத்தியாக இருக்கமுடியாது.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தாலும் சில அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே உயர் அதிகாரிகளை கொண்டு தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் காலங்களிலும் விதிமுறைக்கு முரணாக மண் அகழ்வுக்ள் இடம்பெறுமாயின் இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்குமாறு கேட்டுள்ளோம்.

இந்த அனர்த்தங்கள் மூலமாக கூட சரியான பாடங்களை கற்றுக்கொள்ளாவிட்டால் அது ஒரு பரவலான பாதிப்புக்கு வழியமைக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.

எனவே இந்த விடயம் தொடர்பாக பொறுப்பு கூறவேண்டிய அதிகாரிகள் இன்னும் பொறுப்புடன் செயற்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.'' என கூறியுள்ளார்.

*புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!*தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் 3 கேள்விகள்...
02/12/2024

*புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!*

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் 3 கேள்விகள் முன்கூட்டியே கசிந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த 3 வினாக்களுக்குமான முழுமையான புள்ளிகளை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வினாத்தாளுக்கான தேர்வை மீண்டும் நடத்துவதால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் பரீட்சையை மீண்டும் நடத்துவது பொருத்தமானதல்ல என அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள அழைக்கப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தக் கோரி, சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அதன்பின், மனு மீதான விசாரணையை டிசம்பர் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Address

Kolavil
Akkaraipattu
32000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nila Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share