Saral Radio

Saral Radio தமிழ் இசையின் ராகம் சாரல் வானொலி

04/02/2023
04/02/2023
கல்முனை சாஹிரா கல்லூரிக்கு கிழக்கு மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு 🔰🔰🔰🔰🔰🔰🔰...
26/10/2022

கல்முனை சாஹிரா கல்லூரிக்கு கிழக்கு மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

இம் மாதம் 5ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 4 தங்கப் பதக்கம், 4 வெள்ளிப் பதக்கம், 6 வெண்கலப் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெறுமையை தேடித்தந்ததோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளதுடன் கிழக்கு மாகாண Relay Champion கவும் எமது பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது ..

இவ் வெற்றிக்காக உறுதுனையாய் இருந்த மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS) அவர்களுக்கும் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், மாணவர்களை வழிநடத்திய பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், கல்லூரியின் முன்னாள் மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றிபெற்ற மற்றும்

பங்குபற்றிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுகுழு (SDEC) மற்றும் பழைய மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாடசாலை சமூகம்

Saral Radio
26/10/2022

Saral Radio

அக்கரபத்தனை,மன்றாசி தோட்டத்தில்  ஒரே குடும்பத்தை  சேர்ந்த நான்கு பேர் பட்டம்பெற்றுள்ளனர்.தோட்ட தொழிலாளர்களான  தாண்டவராயன...
26/10/2022

அக்கரபத்தனை,மன்றாசி தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பட்டம்பெற்றுள்ளனர்.

தோட்ட தொழிலாளர்களான தாண்டவராயன்பிள்ளை, இந்திராகாந்தி ஆகிய தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளே இவ்வாறு பல்கலைக் கழகங்களில் பட்டங்களை பெற்றுள்ளதோடு அரச உத்தியோகங்களிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் கவிதா தாண்டவராயன்பிள்ளை
ஹோல்புறுக் த.ம.வி (கலை பிரிவு)கற்று ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் கற்று தற்போது ஆசிரியராக கடமைபுரிகின்றார் , திவ்யா தாண்டவராயன்பிள்ளை ஹோல்புறுக் த.ம.வி (O/l) மற்றும் கொட்டகலை த.ம.வி (A/l) கற்று வயம்ப பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் பட்டம்பெற்றுவர் (Management) தற்போது அபிவிருத்தி உத்தியோத்தராக கடமைபுரிகிறார்.ஜெபிரியா தாண்டவராயன்பிள்ளை
கிளன்லைன் த.வி (O/l )மற்றும் கொட்டகலை த.ம.வி (A/l) கற்று
யாழ்ப்பாண பல்கலைக்கழகதில் முகாமைத்துவ பட்டப்படிப்பை முடித்து விட்டு (Management)
வங்கி அலுவலக உத்தியோத்தராக கடமை புரிகிறார்.விணித்குமார் தாண்டவராயன்பிள்ளை கிளன்லைன் த.வி (O/l) (தோட்ட பாடசாலை - 8A,C) மற்றும் கொட்டகலை த.ம.வி (A/l) Distinct rank - 6th .. ஆகிய பாடசாலைகளில் கற்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக் கழகதில் நிதியியல் பட்டம் பெற்றுள்ளார் (finance department).

மலையக தோட்ட தொழிலாளர்களின் கல்வி ரீதியிலான இந்த முன் உதாரணமான வளர்ச்சியையும் அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்

அதிகமாக பகிரவும் உங்கள் ஒவ்வொரு பகிர்வும் சிறுமியின் உயிர்காக்க உதவும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெருன்பான்மையினத்தின...
18/10/2022

அதிகமாக பகிரவும் உங்கள் ஒவ்வொரு பகிர்வும் சிறுமியின் உயிர்காக்க உதவும்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெருன்பான்மையினத்தினை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி உயிர்வாழ தமிழ் மக்களிடம் உதவி கோரல்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற 13வயதுடைய எம்.ரி.ஜீ. தசினி டினரா என்ற பெருன்பான்மையினத்தினை சேர்ந்த சிறுமி தான் உயிர்வாழ உதவி செய்யுமாறு தமிழ் மக்களிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

மாதாந்தம் குறித்த சிறுமிக்கு மருந்துவ செலவுக்கு மாத்திரம் ஒரு லட்சம் வரையில் செலவாகுவதுடன் ஏனைய செலவுகள் என அவர்களினால் ஈடு செய்ய முடியாதளவில் குடும்பத்தினர் தவிர்த்து வருகின்றனர். சிறுமி முழுமையாக புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதற்கு 60லட்சத்திற்கு மேல் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரித்துள்ளனர்.

எனவே தங்களது குடும்ப நிலமையினை கருத்தில் கொண்டு தாம் சகோதர இனமான தமிழ் மக்களிடம் எமது பிள்ளையின் உயிரை காப்பாற்ற உதவிக்கரம் நீண்டியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புகளுக்கு தந்தையின் தொலைபேசி இலக்கமான 0764524000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வங்கி விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கணக்கிலக்கம் - 8013777032 கொமர்சல் வங்கி

தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம், கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக...
18/10/2022

தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்

கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம், கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தை மாற்றியுள்ளது.

அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை டிக்கெட் விற்பனை செய்யப்படும், மேலும் பொதுமக்கள் இரவு 10.00 மணி வரை கோபுரத்தை பார்வையிடலாம்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை டிக்கெட்டுகள் விற்கப்படும், மேலும் பொதுமக்கள் தாமரை கோபுரத்தை இரவு 11.00 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

பள்ளிக் குழந்தைகளுக்கான சிறப்புச் சுற்றுலாக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ வருகைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

074-2019743/ 0112 – 421874/ [email protected] ஐ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

Zahirians 90 அணுசரனையில் உயர்தர கல்வியை மேம்படுத்தும் திட்டம் கல்முனை சாஹிறாவில் ஆரம்பம்.இம்முறை 2022 உயர்தர விஞ்ஞான பிர...
18/10/2022

Zahirians 90 அணுசரனையில் உயர்தர கல்வியை மேம்படுத்தும் திட்டம் கல்முனை சாஹிறாவில் ஆரம்பம்.

இம்முறை 2022 உயர்தர விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சாகிறாக் கல்லூரி மாணவர்களுக்கான முற்றிலும் இலவசமான model paper discussion class நேற்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முழு நாள் நிகழ்வாகையினால் மாணவர்களுக்கான மதிய உணவு ஏற்பாட்டையும் செய்து வழங்கிய Zahirians 90 தனவந்தர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இந்த முறையில் தொடரச்சியாக அனைத்து உயர்தர பிரிவு பாடங்களுக்கும் பரீட்சை நெருங்கும்வரை மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

18/10/2022
முகநூல் உறவுகள்  மற்றும் நண்பர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும், வணக்கம். சென்ற 2022.10.12ம் திகதி கடமை ஓய்விலிருந்து  மோட்டார்...
18/10/2022

முகநூல் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும், வணக்கம்.

சென்ற 2022.10.12ம் திகதி கடமை ஓய்விலிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் பொத்துவில் பிரதான வீதியில் தாண்டியடி திருக்கோவிலுக்கு இடைப்பட்ட தூரத்தில் எனது Samsung Galaxy A7 கறுப்பு நிற தொலைபேசியும் தனிப்பட்ட மற்றும் கருமபீட Sim card இரண்டும் போனுடன் தொலைந்து விட்டது. இதில் அதிகமான documents உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே இப்பதிவை அதிகமாக share செய்து உதவிக்கரம் நீட்டுமாறு தயவாய் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் உறவுகள் மற்றும் நண்பர்களின் தொடர்பு இலக்கங்கள் இல்லாததனால் 0778873126 க்கு தொடர்பை ஏற்படுத்தவும்.

நன்றி.
KLM.முஸ்தபா.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து மேக்கப் போடும் தனுஷ் பட நாயகி!...
17/10/2022

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து மேக்கப் போடும் தனுஷ் பட நாயகி!...

யானையின் தாக்குதலில் மனைவி பலியாகி மூன்றரை மாதங்களில் கணவரும் யானையின் தாக்குதலுக்குள்ளாகி பலி.யானையின் தாக்குதலில் மனைவ...
17/10/2022

யானையின் தாக்குதலில் மனைவி பலியாகி மூன்றரை மாதங்களில் கணவரும் யானையின் தாக்குதலுக்குள்ளாகி பலி.

யானையின் தாக்குதலில் மனைவி பலியாகி மூன்றரை மாதங்களில் கணவரும் யானையின் தாக்குதலுக்குள்ளாகி பலி.

கரடியனாறு பொலிஸ் பிரிவு ஈரளக்குளம், குடாவெட்டையில் சம்பவம்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் பிள்ளையான் (65) என்பவரே இன்று (16/10) அதிகாலை யானையின் தாக்குதலில் மரணித்தவராவார்.

குடாவெட்டையில் தனியாக தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, நள்ளிரவு வேளையில் தனது வீட்டு வளவுக்குள் நின்ற தென்னை மற்றும் பயன்தரும் மரங்களை யானைகள் உட்கொள்வதை அவதானித்ததால் அதனை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட போதுதான் கோபமடைந்த யானையினால் துரத்தப்பட்டு வயல் வெளியில் வைத்து தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

சென்ற 30-06-2022 அன்று கோயிலுக்கு சென்று வீடு நோக்கி வந்த இவரது மனைவியை வீட்டிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் வைத்து யானை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே மரணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரியின் தகவலுக்கமைவாக சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் மரண விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்து ,பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தார்.

Saral Radio saralradiofans
17/10/2022

Saral Radio saralradiofans

வியக்க வைக்கும் 5 விஷயங்கள்..!!🕵 நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.🕵 சுகப்பிரசவம் அல்லாமல் தன...
17/10/2022

வியக்க வைக்கும் 5 விஷயங்கள்..!!

🕵 நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

🕵 சுகப்பிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு 'சீசரியன்" என்று பெயர் வந்தது.

🕵 பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்களில் இருந்து கண்ணீர் வராது.

🕵 நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

வெளிநாட்டு வாழ்க்கை**************************உழைக்க வேண்டிய வயசு இதுதான் என்று விமானம் ஏறி வந்தோம். வாழ வேண்டியவயதும் இத...
14/10/2022

வெளிநாட்டு வாழ்க்கை
**************************

உழைக்க வேண்டிய வயசு இதுதான் என்று விமானம் ஏறி வந்தோம். வாழ வேண்டிய
வயதும் இதுதான் என்பதை மறந்து.
வெளிநாடு என்பது ஒரு வினோதமான சிறைச்சாலை அதில் இருப்பவன் வெளியே
வர துடிக்கிறான்...!!!

வெளியே இருப்பவன் உள்ளே வர துடிக்கிறான். வெளிநாட்டில் சம்பாதிக்கும்
குடும்பங்களே ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் செலவு செய்வது
பணம் அல்ல. சம்பாதிப்பவரின் வயதை.
என்னை வளர்த்த பெற்றோரின் கடைசி காலத்திலும் இல்லாமல். நான் பெத்த பிள்ளை வளரும் தருணத்திலும் அருகில்
இல்லாமல்...!!!

என்ன வாழ்க்கை இது. வெளிநாட்டு வாழ்க்கை ஒரு மெழுகுவர்த்தி போல தான்.
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும் அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.
ஓடி ஓடி உழைத்தாலும். கையும் காலும் விறைத்தாலும் அன்பாக பேச யாருமில்லை.
காசு என்பது நிற்கவில்லை. கடன் தொல்லை தீரவில்லை. சொன்னாலும் யாரும்
நம்பவில்லை...!!!

உழைக்க வேண்டிய வயது என விமானம் ஏறி வந்து. வாழ வேண்டிய வயதை தொலைத்து நிற்பதே இந்த வெளிநாட்டு வாழ்க்கை. உலகில் உள்ள வேதனைகளின் மொத்த உருவம் தான் இந்த வெளிநாட்டு வாழ்க்கை. பிறந்த குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்னும் அப்பாவை பார் என்று அறிமுகம் செய்யும் அவலம் எங்களுக்கு மட்டும் தான்...!!!

வெளிநாட்டு வாழ்க்கை தலையணையை சரி செய்து சுகமாய் தூங்கிய நாட்களை விட.
சோகம் நிறைந்த அசதியில் தூங்கிய நாட்கள் தான் அதிகம். வாழ்க்கை எனும் பயணத்தில் வேலை தேடி வெளிநாடு
செல்லும். நமக்கு நெருக்கமானவர்களின் பயணம் நம் கல் மனதையும் கரையைச் செய்கின்றது. யாரும் இல்லாமல் கூட
நிம்மதியாக வாழ்ந்து விடலாம். ஆனால் எல்லோரும் இருந்தும் அனாதையாக வாழ்வதே கொடுமை நிறைந்த வாழ்க்கை...!!!

உனக்கென்ன விமானப்பயணம் வெளிநாட்டு ராஜ வாழ்க்கை. என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை
பார்த்து விடும் பெருமூச்சு. வளைகுடா நாட்டின் அரபு நாட்டு வெப்பத்தை விட
சற்று அதிகமாகவே சுடுகிறது. கல்யாணம் முடிந்த பிறகு விடுமுறை முடிந்து. வெளிநாடு போகும் தருணம் என் கருவை சுமக்கும்
மனைவியையும் சேர்த்து. என் நெஞ்சில் சுமந்து கொண்டு தான் விமானம் ஏறுகின்றேன்...!!!

வறுமைக்காக அயல்நாடு சென்று
பணத்தை சேமிப்பதும். விடு முறைக்கு தாய் நாடு வந்து நினைவுகளை சேமிப்பதுமே
வெளிநாட்டு வாழ்க்கை. உள்நாட்டில் அடுப்பு எரிய வெளிநாட்டில் விறகாய் எரியும்
வாழ்க்கை. இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை. விசாவிற்கு பணத்தைக் கட்டி.
காதலுக்கு சமாதி கட்டி. இளமைக்கு பூட்டு போட்டு. தொடர்கிறது வெளிநாட்டு
பயணம்...!!!

டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டு. மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள். பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல்
தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு. கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்...!!!

இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை. நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள். கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு. எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது தொலைதூர பாசம் செய்தே. காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...!!!

நான் இங்கே நல்லா இருக்கேன் என்று. எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.
வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன் வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை நாங்கள். எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...!!!

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள். நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம். எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள். வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள். திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்...!!!

உனக்கென்ன விமானப்பயணம் வெளிநாட்டு ராஜ வாழ்க்கை. என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு. வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது. ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம். எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு...!!!

செய்திருக்கின்றோம் இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது. நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை வாலிபத்தை.
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...!!!

யாருக்காக...? எதற்காக...? ஏன்...?

தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு, சொந்தமாய் வீடு குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம்போல் கண் முன்னே. மனைவியின் கண்சிமிட்டல்/சினுங்கள், அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி எத்தனையோ இழந்தோம்...!!!

எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா...?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டு கொண்டதாலா...? சொந்த மண்ணில்
சொந்தங்களோடு சோறு திண்பவன்
யாரடா...? இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா...???

கனடாவில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.! RIP 😭கனடாவில் மார்க்கம் டெனிசனில் ந...
14/10/2022

கனடாவில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.! RIP 😭

கனடாவில் மார்க்கம் டெனிசனில் நேற்றைய தினம் நடந்த கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்,

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்த புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் பிள்ளைகள் ஆவர்.

இதில் இவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை,😭🙏 பாரத்தை இறைவன் மேல் வைத்து பிள்ளைகளின் பெற்றோர்கள் அமைதி அடைய பிரார்திக்கின்றோம்...ஆழ்ந்த_இரங்கல்கள் 😭😭

ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்ற சாதனைச் சிறுமி எம்மை விட்டுச் சென்றார் 😢கடந்த 2020ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் போ...
14/10/2022

ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்ற சாதனைச் சிறுமி எம்மை விட்டுச் சென்றார் 😢

கடந்த 2020ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் போது மாத்தறை, திக்வெல்ல, ரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த தெவ்மி ரன்சரா, இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலையில் இரண்டு கைகளும் சரிவர செயற்படாத நிலையிலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக் கொண்டிருந்தார்

கணிதப் பிரிவில் உயர்தரம் கற்கும் ஆசையைக் கொண்டிருந்த போதும் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்

நடக்க முடியாத அவரை காலையில் பாடசாலைக்கும் மாலையில் வீட்டுக்கும் சுமந்து செல்வது அவரின் பெற்றோருக்கு சுகமான சுமையாகவே இருந்தது. எழுதும் போது பேனையின் மூடியைக் கழற்றி இன்னொருவர் அவரது கையில் பேனையைக் கொடுக்க வேண்டும்.

கொப்பியில் ஒரு பக்கத்தை எழுதி முடித்தால் மறுபக்கத்தில் தொடர இன்னொருவர் தான் அந்தத் தாளைப் புரட்டிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலும் உயர்தரக் கல்வியை மன உறுதியுடன் தொடர்ந்து கொண்டிருந்த அந்த சாதனைச் சிறுமி இன்று இவ்வுலகில் இருந்து விடைபெற்றுவிட்டார். காய்ச்சல் வடிவில் வந்த காலன் அவரை அழைத்துச் சென்று விட்டான்

சென்று வா மகளே.. ஆழ்ந்த இரங்கல்கள் சின்ன தேவதையே...

- அஷ்ரப் அலி பரீத்

புதிய காத்தான்குடி பத்ரிய்யா வித்தியாலய மாணவியின் வரலாற்றுச் சாதனை..!மாணவி M.மிஷ்ரத் சீமா குண்டெறிதல் போட்டியில் 1ம் இடத...
08/10/2022

புதிய காத்தான்குடி பத்ரிய்யா வித்தியாலய மாணவியின் வரலாற்றுச் சாதனை..!

மாணவி M.மிஷ்ரத் சீமா குண்டெறிதல் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் முதன்முறையாக கா.குடி பத்ரிய்யா வித்தியாலயத்தின் மாணவி M.மிஷ்ரத் சீமா 14 வயது பிரிவு குண்டெறிதல் போட்டியில் பங்கு பற்றி 1ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரைப் பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ASM.றிப்னாஸ் மற்றும் PT பாட ஆசிரியை Mrs.AB.சஸானா மற்றும் பலவழிகளிலும் உதவி செய்த ஆசிரியர்கள்,SDEC உறுப்பினர்கள்,மாணவியின் பெற்றோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியில் நடைபெறவுள்ள போட்டியிலும் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகின்றோம்.

இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்
11/09/2022

இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்

இங்கிலாந்து ராணி எலிசபெத் 96-ஆவது வயதில் உயிரிழந்தார்.The Queen died peacefully at Balmoral this afternoon.  |
08/09/2022

இங்கிலாந்து ராணி எலிசபெத் 96-ஆவது வயதில் உயிரிழந்தார்.
The Queen died peacefully at Balmoral this afternoon.

|

நீர் பாவனையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்-----------------------------------------------கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்...
01/09/2022

நீர் பாவனையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்
-----------------------------------------------
கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் இலங்கை மின்சார சபையினால் 02.09.2022ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளபடுவதால் அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, ஒலுவில், பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, மாலிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, நட்பிட்டிமுனை, மருதமுனை, கல்லாறு, சம்மாந்துரையின் சில பகுதிகளில் நீர் வினியோகம் 02.09.2022ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 காலை நீர் வினியோகம் தற்காலிகமாக தடைப்படும், எனவே நீர் பாவனையாளர்கள் தேவையான நீரினை முன் கூட்டி சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முகாமையாளர்,
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை,
அக்கறைப்பற்று.

காத்தாங்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி நிந்தவூர் வீதி விபத்தில் மரணம்.                   -   ஏ. ஷபாஅத் அஹமட் - நிந்த...
31/08/2022

காத்தாங்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி நிந்தவூர் வீதி விபத்தில் மரணம்.
- ஏ. ஷபாஅத் அஹமட் -

நிந்தவூர் பிரதான வீதியில் துரைடமூலை என்னும் இடத்தில் காத்தாங்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு இன்று காலை (31) ஸ்தலத்திலேயே மரணமானார் என்று சொல்லப்படுகிறது. இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.

காத்தாங்குடி-5, மீராப்பள்ளி வீதியைச் சேர்ந்த 23வயதுடைய அக்பர் அலி பாத்திமா அஸ்பா என அழைக்கப்படுபவரே மரணமானவராவார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட விடுதி மாணவியான இவர் இரண்டாவது பருவகால அமர்வின்பொருட்டு தனது கணவருடன் காத்தாங்குடியிலிருந்து இன்று காலை 6.00 மணியளவில் புறப்பட்டு நிந்தவூரினூடாக பல்கலைக்கழகத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த போதே வாகனமொன்றுடன் மோதுண்டு காலமானார்.

இவரது ஜனாஸா தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை நிர்வாகம் பொலிசாருக்கு இதுதொடர்பாக அறிவித்ததைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இம்மாணவி திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இப்பரிதாப மரணம் சம்பவித்துள்ளமை கவலைக்குரியதாகும்.

இம்மாணவியின் தந்தையான அக்பர் அலி
கல்முனை மின்சார சபையில் நீண்டகாலமாக பணியாற்றியவர் என அறியப்படுகிறது.

பல்கலைக்கழக கல்விக் கனவுகளுடனும், புதிதாக திருமணம் புரிந்து சந்தோசங்களைப் பகிர்ந்துகொள்ள முன்பாகவும் அல்லாஹ் இவரை அழைத்துக் கொண்டான்.

அன்னாரின் மறுமையின் சிறப்புகளுக்காகவும், அவரது இழப்பால் தவித்துப்போயிருக்கும் அவரது குடும்பத்தவர்களின் மன ஆறுதலுக்காகவும் மனமுருகிப் பிரார்த்திப்போம்.

அக்கரைப்பற்றுமனதை நொறுக்கியபிந்திய ஜனாஸா தகவல். 😭😭😭நாய்க்கடிக்கு 🐕‍🦺 இலக்கான  (இரண்டரை வயதுடைய) சின்னஞ்சிறு குழந்தையின் ...
30/08/2022

அக்கரைப்பற்று
மனதை நொறுக்கிய
பிந்திய ஜனாஸா தகவல்.
😭😭😭

நாய்க்கடிக்கு 🐕‍🦺 இலக்கான (இரண்டரை வயதுடைய) சின்னஞ்சிறு குழந்தையின் உயிர்...
கடந்த 2022-08-26 வெள்ளி கிழமை அன்று பிரிந்தது

(இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்)😢

கடந்த மாதம் (2022-07-13) அன்று
(அ.பற்று ஐனா பீச்) பின்னால் உள்ள வீட்டில் திருமண நிகழ்வு இடம்பெற்றது...

அந்த திருமண நிகழ்வின் போது இந்த குறித்த குழந்தை விளையாடிக்கொண்டு இருந்த போது அவ்விடத்தில் நின்ற நாய் 🐕‍🦺 பிள்ளையின் மேல் பாய்ந்துள்ளது.

அதை கண்ட பிள்ளையின் மாமி ஒருவர் கதிரையால் நாயை🐕‍🦺 தாக்கி விரட்டியடித்ததின் பின் பிள்ளையின் நெற்றியில் காயம் ஏற்ப்பட்டு இருப்பதை கண்டு.
அ.பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது காயம் நாய் 🐕‍🦺 கடித்ததா இல்லை நாயை தாக்கும் போது கதிரை பட்டு காயம் ஏற்பட்டதா எனும் சந்தேகம் வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு வைத்தியர்கள் பெற்றோரிடம் கூறி உள்ளார்கள் நாய்🐕‍🦺 கடித்து இருந்தால் அதற்கான தடுப்பூசி எம்மிடம் இல்லை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றுவோம் என்று கூறிய போது.

மட்டக்களப்புக்கு கொண்டு செல்ல பயந்து பெற்றோர்கள் கூறி உள்ளார்கள் இல்லை இது கதிரைதான் பட்டு இருக்கும் என்று கூறி தங்களின் விருப்பத்துக்கு டிக்கட்டினை வெட்டி வீடு திரும்பி வந்துள்ளனர்.

அதற்கு பிறகு அதை பற்றி பெற்றோர்கள் கவனம் கொள்ளவில்லை.

சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு பிறகு 07-28 அன்று குடும்பத்தோடு குருனாகல் பரகஹதெனியவில் உள்ள தங்களின் சகோதரியின் வீட்டுக்கு சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டார்கள்.

அதன் பிறகு அங்கே வைத்து.
சென்ற வியாழக்கிழமை பிள்ளைக்கு திடிரென சுகவீனம் ஆகியதை அடுத்து குருனாகல் வைத்தியசாலையில் அனுமதித்த போது பரிசோதித்த வைத்தியர்கள் பெற்றோரிடம் கேட்டு உள்ளார்கள் பிள்ளைகளுக்கு மிருகம் ஏதும் கடித்ததா என்று.

அதற்கு பிறகு தான் பெற்றோர்க்கு புரிந்துள்ளது அன்று நாய்🐕‍🦺 கடித்த காயம்தான் அது என்று.

அதன் பிறகு வைத்தியர்களிடம் மொட்டையாக கூறி உள்ளார்கள் ஓம் நாய் 🐕‍🦺 கடித்த என்று.

வைத்தியர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் விஷ கிருமிகள் மூளையில் பரவியதால் வெள்ளி கிழமை அன்று பிள்ளையின் உயிர் பரிதாபமாக பிரிந்தது . 😭😭

அ.பற்று வைத்தியசாலையில் கதிரை அடிபட்ட காயம்
என்று அறிக்கை எழுதப்பட்டுள்ளதாலும்

குருனாகல் வைத்தியசாலையில் நாய் கடித்தது என்று பெற்றோர்கள் மொட்டையாக சொன்னதினால்
அங்கு வைத்திய அறிக்கை நாய் 🐕‍🦺 கடித்தது என்று எழுதப்பட்டதினாலும்.

வைத்தியசாலையில் இருந்து ஜனாஸாவை பெறுவதில் பல சட்ட சிக்கல்களும் தாமதங்கலும் ஏற்ப்பட்டது .

அல்லாஹ்வின் உதவியால் அ.பற்றில் இருந்து பலர் உதவியதால் பொலிஸ் அறிக்கை பெக்ஸில் கிடைக்கப்பட்ட பின் ஜனாஸா சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கிடைக்கப்பட்டு அன்று இஷா தொழுகையைத் தொடர்ந்து பரகஹதெனிய மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது இரட்டையாக பிறந்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புடைய பெற்றோர்களே..!
உமது பிள்ளைகளை மிகக் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
விலை மதிப்பற்ற குழந்தைச் செல்வங்களை ஏனோ தானோ என்று விட்டு விடாதீர்கள்.
காலங்கடந்து ஞானம் பிறப்பதில் எவர்க்கும் பிரயோசனமில்லை.

யா அல்லாஹ்...!
இச்சின்னஞ்சிறு ஆத்மாவை சுவனச் சிட்டுக்களில் ஒன்றாக மாற்றி அங்கேயே நிலைபெறச் செய்வாயாக..!🤲

அதுபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மன தைரியத்தையும், ஆறுதலையும் வழங்குவாயாக...!🤲

இதே போன்ற அலட்சியமும் பொடுபோகுமின்றி வைத்தியத்தேவைக்கு எங்கு வேண்டுமோ அங்கே சென்று வைத்தியம் பெறுங்கள்

2 கைகளும், ஒரு காலும் இல்லை - உயர்தரப் பரீட்சையில் 3 A சித்திபெற்ற மாணவிஎஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்ற...
30/08/2022

2 கைகளும், ஒரு காலும் இல்லை - உயர்தரப் பரீட்சையில் 3 A சித்திபெற்ற மாணவி

எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து, தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி, ஒருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி உயர்தர வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார்.

2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்த ரஷ்மி, தெல்ஒழுவ பாடசாலையில் ஆரம்ப கல்வியை தொடர்ந்தார்.

2012ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் எஹேலியகொட தேசிய பாடசாலையில் மேலதிக கற்கை நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 8 A சித்திகளையும் ஒரு B சித்தியும் பெற்றுள்ளார். தற்போது உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார்.

அத்துடன் 2017ஆம் ஆண்டு வியட்நாமில் இடம்பெற்ற Global IT challenge 2017 Super challenger சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

வாழ்க்கையில் வெற்றி பெற குறைகள் தடையில்லை என ரஷ்மி நிரூபித்து காட்டியுள்ளார் என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

Address

Akkaraipattu

Telephone

+94722072928

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saral Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saral Radio:

Videos

Share

Category


Other Radio Stations in Akkaraipattu

Show All

You may also like