Divisional Secretariat - Akkaraipattu

Divisional Secretariat - Akkaraipattu This is the Official page of Divisional Secretariat - Akkaraipattu

25/03/2024
இலங்­கையின் 76 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு==========================இலங்­கையின் 76 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு இன்று எமத...
04/02/2024

இலங்­கையின் 76 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு
==========================
இலங்­கையின் 76 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு இன்று எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் TMM. அன்ஷார் அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வெகு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எமது தாய் நாட்டிற்காக உயிர் நீத்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இலங்கையின் சுதந்திரம், இறைமை, தேசிய ஒருமைப்பாடு எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் Y.ராசித் யஹ்யா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் AM. தமீம், நிருவாக உத்தியோகத்தர் MS. பாறூக் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூபாய் 45,000/= போசாக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் - 2024.                        ...
03/01/2024

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூபாய் 45,000/= போசாக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் - 2024.

மேற்படி விடயம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு பொதி வழங்குவதற்குரிய கடைகளை தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை 04 ம் திகதி பி.ப. 2.00 மணிக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்படுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்த, விருப்பம் உடைய கடையின் உரிமையாளர்கள் தவறாது அன்றைய தினம் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தகவல்:
கணக்காளர்
பிரதேச செயலகம்
அக்கரைப்பற்று

முதியோர் கொடுப்பனவு பற்றிய அறிவித்தல்.நவம்பர், டிசம்பர் - 2023 இற்குரிய முதியோர் கொடுப்பனவு, நாளை மற்றும் நாளை மறுநாள் த...
27/12/2023

முதியோர் கொடுப்பனவு பற்றிய அறிவித்தல்.

நவம்பர், டிசம்பர் - 2023 இற்குரிய முதியோர் கொடுப்பனவு, நாளை மற்றும் நாளை மறுநாள் தபாலகங்கள் ஊடாக காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை வழங்கப்படும். உரிய பயனாளிகள் இக்கொடுப்பனவை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று.

ப‌யிற்சி மாணவர்களை இணைத்துக் கொள்ளல் - 2024கிழக்கு மாகாண  கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் அக்கரைப்பற்று பிரதேச செய...
27/10/2023

ப‌யிற்சி மாணவர்களை இணைத்துக் கொள்ளல் - 2024

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண்களுக்கு 2023இற்கான தையல், கைவினை மற்றும் மனையியல் பயிற்சி நெறி, அக்கறைப்பற்று மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது . கற்கைநெறியில் இணைந்துகொள்ளும் மாணவர்களுக்கு நாளாந்தம் 300/-கொடுப்பனவு வழங்கப்படும்.

தகைமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகைமைகள்
* விண்ணப்பதாரி 2024.01.31ம் திகதியன்று 17 வயதிற்கு குறையாதவராகவும் 35வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

அத்துடன் ஆண்டு 10 கல்வியை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்

மேலும் விண்ணப்பதாரி அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வசித்து வருபவராகவும் இருத்தல் வேண்டும்

இணைய விரும்புவர்கள் 2023.11.15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்

விண்ணப்பப்படிவங்களை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலுள்ள மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்

Closing Date : 15.11.2023
Contact No :0752681840(teacher), 0750123450(rural development officer)
Age Limit : 16 - 35
Full-time course - Free

*வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குதல் தொடர்பான பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்*
27/09/2023

*வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குதல் தொடர்பான பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்*

*பிரத்தியேக வகுப்புக்கள்  தொடர்பாக பொது மக்களுக்கான அறிவித்தல்.* அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட சிறுவர் அ...
25/08/2023

*பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பாக பொது மக்களுக்கான அறிவித்தல்.*

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக.
வலயக் கல்விப் பணிமனை, சுகாதார பணிமனை, மாநகர சபை, அனைத்து நிறுவனங்களின் சம்மேளனம், பள்ளிவாயல் பிரதிநிதிகள் மற்றும் பிரத்தியேக கல்வி நிலையங்களின் முகாமையாளர்கள் , பாடசாலை அதிபர்கள் பங்குபற்றுதலோடு 2023.08.10 ஆம் திகதி பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடலில் மாணவர்களின் நலன்கள் குறித்து பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

1. தரம் 6-11 வரையான மாணவர்களுக்கு மாலை 6.00 மணிக்கு பிறகு எந்தவிதமான பிரத்தியேக வகுப்புக்களை நடத்தாமல் இருத்தல். உயர் தர வகுப்பு மாணவர்களில் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் கற்கும் மாணவர்களுக்கு மட்டும் பி.ப 7.00 மணிவரை வகுப்புக்களை நடாத்த முடியும்.

2. பெண்பிள்ளைகள் பாடசாலை சீருடையில் மாத்திரம் தனியார் வகுப்புக்களுக்கு வருதல்.

3. தரம் 6-11 வரையான மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு பாடம் தொடர்பாக 8 மணித்தியாலங்கள் மாத்திரம் ஒதுக்கப்படுதல் வேண்டும்.

4. ஒரு மணித்தியாலயத்திற்கு அதி கூடிய கட்டணமாக ரூபா 60 அறவிடுதல் வேண்டும்.

5.மாநகர சபை மற்றும் சுகாதார பணிமனையினால் தர நிர்ணயத்திற்கு உட்பட்ட சொகுசு வசதிகளுடன் நடாத்தப்படும் தனியார் நிறுவனங்கள் மாத்திரம் ரூபா 70 வரை அறவிடலாம்.

6. ஞாயிற்றுக் கிழமையில் 6-11 வரையான மாணவர்களுக்கு முழு விடுமுறை நாளாக அறிமுகப்படுத்தல். அரச சுற்று நிருபத்திற்கமைவாக இந்நாளில் அகதியா வகுப்புக்கள் நடாத்தப்படுவதுடன் விளையாட்டு பொழுதுபோக்கு மற்றும் மார்க்க விழுமியங்களுக்கு வழி வகுத்துக் கொடுத்தல்.

7.பாடசாலை நேரங்களில் எவ்வித பிரத்தியேக வகுப்புக்களையும் நடத்தாமல் இருத்தல்.

8. பிள்ளைகளுக்கு மாலை, இரவு நேரங்களில் வீட்டிலேயே ஆசிரியர்களை வரவழைத்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்தல்.

9. தரம் 1-3 வரையான மாணவர்களுக்கு எவ்வித பிரத்தியேக வகுப்புக்களும் நடத்தப்படாமல் குர்ஆன் மத்ரஸாவிற்கும் மார்க்க ரீதியான கல்விக்கும் வாய்ப்பளித்தல்.

10.வளப்பற்றாக்குறையுடைய தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் நலன் கருதி உரிய உட்கட்மைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல். இவை மாநகர சபை மற்றும் சுகாதார பணிமனை போன்றவற்றினால் பரிசோதிக்கப்படும். இப்பரிசோதனையில் போதிய வசதிகளை வழங்காது நடாத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு எதிராக உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே மேற்குறித்த தீர்மானங்கள் அனைத்தும் 2023 செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனபதுடன் பொற்றோர்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைத்து மாணவர்களின் கல்வி, விளையாட்டு, ஓய்வு, மார்க்க விழுமியங்கள், ஒழுக்க மேம்பாடு போன்றவற்றை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று.

*Certificate Awarding Ceremony* அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அலுவல்கள் பிரிவினால் வருடாந்தம் ரமழான் மாதத்த...
09/08/2023

*Certificate Awarding Ceremony*

அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அலுவல்கள் பிரிவினால் வருடாந்தம் ரமழான் மாதத்தில் நடாத்தப்பட்டு வரும்
*Blessed Ramadhan students' programme* கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் TMM. அன்சார் அவர்களின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் ராசித் யஹ்யா அவர்களின் தலைமை மற்றும் முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் MHM. முக்தார் ஹுசையின் அவர்களின் ஒருங்கிணைப்பில் 2023 08.08 செவ்வாய் கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து நடைபெற்ற இக் கற்கை நெறியின் முடிவில் 49 மாணவர்கள் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் அதிதிகளாக
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் AM. தமீம், உதவி வலயக் கல்வி பணிப்பாளர் MM. சித்தி பாத்திமா சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் MJM. நிஹ்மதுள்ளாஹ் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.உவைஸ் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் SM. சபீஸ், செயலாளர் MB. அப்துல் ஹமீட் நிர்வாக கிராம உத்தியோகத்தர் AL. தாஹிர், கலாசார உத்தியோகத்தர்களான AL. தெளபீக், IL. றிஸ்வான், N. நவப்பிரியா, மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் MH. ஜெய்னுதீன், முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் MAM. இப்றாலெப்பை, மத்தியஸ்த சபை உத்தியோகத்தர் MMM. ஹமீட், பல் நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் M. சங்கீதன்
, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இஸ்மத், அந்நூர் நிறுவன செயற்பாட்டாளர் MAM. ஜனூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் மேற்படி நிகழ்வை நடாத்துவதற்கு அனுசரணை வழங்கிய அக்கரைப்பற்று பறகத் பவுன்டேஷன் நிறுவனர்களான BA. பைசால், BA நைசல், வர்த்தக சங்க தலைவர் AM. அப்துஸ் ஸலாம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் AL. முஸாதிக், பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் MC. ஜலால்தீன், வர்த்தகர் JM. அனஸ் உள்ளிட்ட வளவாளர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

31/07/2023

*நலன்புரி நன்மைகள் தொடர்பான முக்கிய அறிவித்தல்*

அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்கான வங்கிக் கணக்கு திறப்பதற்கு அக்கரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்கள் வங்கி தனது அக்கரைப்பற்று கிளையினை 2023.08.01 செவ்வாய்க்கிழமை திறப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

எனவே, அஸ்வெசும நலன்புரி கணக்கினை ஆரம்பிப்பதற்கு கடிதங்களைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் மேற்குறிப்பிட்ட தினத்தில் இவ்வங்கிக் கிளைக்குச் சென்று தங்களுக்குரிய வங்கி கணக்கினை ஆரம்பிக்கலாம் என தெரியப்படுத்துகின்றேன்.

பிரதேச செயலாளர்,
அக்கரைப்பற்று.

28/07/2023

*நலன்புரி நன்மைகள் தொடர்பான முக்கிய அறிவித்தல்*

அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்கான வங்கிக் கணக்கு திறப்பதற்கு அக்கரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்கள் வங்கி (Peoples Bank), இலங்கை வங்கி (Bank of Ceylon), தேசிய சேமிப்பு வங்கி (National Savings Bank), பிரதேச அபிவிருத்தி வங்கி (Regional Development Bank) ஆகிய வங்கிகள் தங்களின் அக்கரைப்பற்று கிளையினை 2023.07.29 சனிக்கிழமை மற்றும் 2023.07.30 ஞாயிற்றுக்கிழமைகளில் திறப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

எனவே, அஸ்வெசும நலன்புரி கணக்கினை ஆரம்பிப்பதற்கு கடிதங்களைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் மேற்குறிப்பிட்ட தினங்களில் இவ்வங்கிக் கிளைகளுக்குச் சென்று தங்களுக்கான கணக்கினை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்

பிரதேச செயலாளர்,
அக்கரைப்பற்று.

25/07/2023

சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்களில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடும் இளைஞர் யுவதிகளுக்கு அது தொடர்பான தொழிற் பயிற்சியை வழங்குதல் சம்பந்தமான விழிப்பூட்டல் வேலை திட்டம் ஒன்று 2023/ 7/26 ஆம் திகதி மு.ப. 11 மணி தொடக்கம் பி.ப.12 30 மணி வரை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட உள்ளது.

எனவே ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

25/07/2023

**நலன்புரி நன்மைகள் தொடர்பான அறிவித்தல்**

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலுக்கமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ச்சியாக எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடுத்தகட்டமாக நாளை 26/07/2023 ஆம் திகதி புதன்கிழமை கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்கள் வழங்கப்படும்.

1- அக்கரைப்பற்று-01
2- அக்கரைப்பற்று-18
3- ஆலிம் நகர்

ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மாத்திரம் தங்களுக்கு வழங்கப்பட்ட QR இனையும், அத்துடன் தங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு என்பவனவற்றில் ஏதாவதொன்றுடனும் எமது பிரதேச செயலகத்திற்கு நாளை 2023.07.26ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இப்பிரிவுகளிலுள்ள பயனாளிகளில் எவரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களுக்கு பிராந்திய அபிவிருத்தி வங்கி (RDB Bank) விஷேடமான கணக்கினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றேன்.

குறிப்பு :
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் தங்களிடம் இல்லையெனில் தாங்கள் பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்கும் போது கடவுச்சீட்டு அளவிலான (Passport Size Colour Photo) வர்ணப் புகைப்படமொன்றுடன் வருகைதருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம சேவகர் பிரிவுகளுக்கான கடிதங்கள் வழங்கப்படும் தினம் பற்றிய தகவல்கள் தத்தமது கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பள்ளைவாயல்களிலும் எமது உத்தியோகபூர்வ page வாயிலாகவும் அறிவிக்கப்படும்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

23/07/2023

**நலன்புரி நன்மைகள் தொடர்பான அறிவித்தல்**

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலுக்கமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ச்சியாக எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடுத்தகட்டமாக நாளை 24/07/2023 ஆம் திகதி திங்கள்கிழமை கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்கள் வழங்கப்படும்.

1- அக்கரைப்பற்று-11
2- அக்கரைப்பற்று-17
3- நகர்ப்பிரிவு-1
4- நகர்ப்பிரிவு-3
5- நகர்ப்பிரிவு-5

ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மாத்திரம் தங்களுக்கு வழங்கப்பட்ட QR இனையும், அத்துடன் தங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு என்பவனவற்றில் ஏதாவதொன்றுடனும் எமது பிரதேச செயலகத்திற்கு நாளை 2023.07.24ஆம் திகதி திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இப்பிரிவுகளிலுள்ள பயனாளிகளில் எவரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களுக்கு பிராந்திய அபிவிருத்தி வங்கி (RDB Bank) விஷேடமான கணக்கினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றேன்.

குறிப்பு :
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் தங்களிடம் இல்லையெனில் தாங்கள் பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்கும் போது கடவுச்சீட்டு அளவிலான (Passport Size Colour Photo) வர்ணப் புகைப்படமொன்றுடன் வருகைதருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம சேவகர் பிரிவுகளுக்கான கடிதங்கள் வழங்கப்படும் தினம் பற்றிய தகவல்கள் தத்தமது கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பள்ளைவாயல்களிலும் எமது உத்தியோகபூர்வ page வாயிலாகவும் அறிவிக்கப்படும்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

20/07/2023

**நலன்புரி நன்மைகள் தொடர்பான அறிவித்தல்**

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலுக்கமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ச்சியாக எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடுத்தகட்டமாக நாளை 21/07/2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்கள் வழங்கப்படும்.

1- அக்கரைப்பற்று-5
2- பட்டியடிப்பிட்டி

ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மாத்திரம் தங்களுக்கு வழங்கப்பட்ட QR இனையும், அத்துடன் தங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு என்பவனவற்றில் ஏதாவதொன்றுடனும் எமது பிரதேச செயலகத்திற்கு நாளை 2023.07.21ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இப்பிரிவுகளிலுள்ள பயனாளிகளில் எவரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களுக்கு பிராந்திய அபிவிருத்தி வங்கி (RDB Bank) விஷேடமான கணக்கினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றேன்.

குறிப்பு :
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் தங்களிடம் இல்லையெனில் தாங்கள் பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்கும் போது கடவுச்சீட்டு அளவிலான (Passport Size Colour Photo) வர்ணப் புகைப்படமொன்றுடன் வருகைதருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம சேவகர் பிரிவுகளுக்கான கடிதங்கள் வழங்கப்படும் தினம் பற்றிய தகவல்கள் தத்தமது கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பள்ளைவாயல்களிலும் எமது உத்தியோகபூர்வ page வாயிலாகவும் அறிவிக்கப்படும்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

19/07/2023

**நலன்புரி நன்மைகள் தொடர்பான அறிவித்தல்**

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலுக்கமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ச்சியாக எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடுத்தகட்டமாக நாளை 20/07/2023 ஆம் திகதி வியாழக்கிழமை கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்கள் வழங்கப்படும்.

1- பள்ளிக்குடியிருப்பு-01
2- பள்ளிக்குடியிருப்பு-02

ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மாத்திரம் தங்களுக்கு வழங்கப்பட்ட QR இனையும், அத்துடன் தங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு என்பவனவற்றில் ஏதாவதொன்றுடனும் எமது பிரதேச செயலகத்திற்கு நாளை 2023.07.20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இப்பிரிவுகளிலுள்ள பயனாளிகளில் எவரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களுக்கு பிராந்திய அபிவிருத்தி வங்கி (RDB Bank) விஷேடமான கணக்கினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றேன்.

குறிப்பு :
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் தங்களிடம் இல்லையெனில் தாங்கள் பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்கும் போது கடவுச்சீட்டு அளவிலான (Passport Size Colour Photo) வர்ணப் புகைப்படமொன்றுடன் வருகைதருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம சேவகர் பிரிவுகளுக்கான கடிதங்கள் வழங்கப்படும் தினம் பற்றிய தகவல்கள் தத்தமது கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பள்ளைவாயல்களிலும் எமது உத்தியோகபூர்வ page வாயிலாகவும் அறிவிக்கப்படும்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

18/07/2023

**நலன்புரி நன்மைகள் தொடர்பான அறிவித்தல்**

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலுக்கமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ச்சியாக எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடுத்தகட்டமாக நாளை 19/07/2023 ஆம் திகதி புதன்கிழமை கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்கள் வழங்கப்படும்.

1- நகர்ப்பிரிவு-02
2- நகர்ப்பிரிவு-04
3- அக்கரைப்பற்று-02
4- அக்கரைப்பற்று-10
5- அக்கரைப்பற்று-12
6- அக்கரைப்பற்று-14
7- அக்கரைப்பற்று-20
8- அக்கரைப்பற்று-21

ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மாத்திரம் தங்களுக்கு வழங்கப்பட்ட QR இனையும், அத்துடன் தங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு என்பவனவற்றில் ஏதாவதொன்றுடனும் எமது பிரதேச செயலகத்திற்கு நாளை 2023.07.19ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இப்பிரிவுகளிலுள்ள பயனாளிகளில் எவரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களுக்கு பிராந்திய அபிவிருத்தி வங்கி (RDB Bank) விஷேடமான கணக்கினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றேன்.

குறிப்பு :
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் தங்களிடம் இல்லையெனில் தாங்கள் பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்கும் போது கடவுச்சீட்டு அளவிலான (Passport Size Colour Photo) வர்ணப் புகைப்படமொன்றுடன் வருகைதருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம சேவகர் பிரிவுகளுக்கான கடிதங்கள் வழங்கப்படும் தினம் பற்றிய தகவல்கள் தத்தமது கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பள்ளைவாயல்களிலும் எமது உத்தியோகபூர்வ page வாயிலாகவும் அறிவிக்கப்படும்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

17/07/2023

**நலன்புரி நன்மைகள் தொடர்பான அறிவித்தல்**

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலுக்கமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ச்சியாக எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடுத்த கட்டமாக நாளை 18/07/2023 ஆம் திகதி செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று-6 கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்து மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்கள் வழங்கப்படும்.

ஆகவே அக்கரைப்பற்று-6 கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மாத்திரம் தங்களுக்கு வழங்கப்பட்ட QR இனையும், அத்துடன் தங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு என்பவனவற்றில் ஏதாவதொன்றுடனும் எமது பிரதேச செயலகத்திற்கு 2023.07.18ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இப்பிரிவிலுள்ள பயனாளிகளில் எவரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களுக்கு பிராந்திய அபிவிருத்தி வங்கி (RDB Bank) விஷேடமான கணக்கினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றேன்.

குறிப்பு :
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் தங்களிடம் இல்லையெனில் தாங்கள் பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்கும் போது கடவுச்சீட்டு அளவிலான (Passport Size Colour Photo) வர்ணப் புகைப்படமொன்றுடன் வருகைதருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம சேவகர் பிரிவுகளுக்கான கடிதங்கள் வழங்கப்படும் தினம் பற்றிய தகவல்கள் தத்தமது கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பள்ளிவாயல்களிலும் எமது உத்தியோகபூர்வ page வாயிலாகவும் அறிவிக்கப்படும்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

16/07/2023

**நலன்புரி நன்மைகள் தொடர்பான அறிவித்தல்**

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலுக்கமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக நாளை 17/07/2023 ஆம் திகதி கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதங்கள் வழங்கப்படும்.

1- அக்கரைப்பற்று-03
2- அக்கரைப்பற்று-04
3- அக்கரைப்பற்று-13
4- அக்கரைப்பற்று-19

ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மாத்திரம் தங்களுக்கு வழங்கப்பட்ட QR இனையும், அத்துடன் தங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு என்பவனவற்றில் ஏதாவதொன்றுடனும் எமது பிரதேச செயலகத்திற்கு 2023.07.17ஆம் திகதி திங்கட் கிழமை காலை 8.30 மணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இப்பிரிவுகளிலுள்ள பயனாளிகளில் எவரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களுக்கு பிராந்திய அபிவிருத்தி வங்கி (RDB Bank) விஷேடமான கணக்கினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றேன்.

குறிப்பு :
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் தங்களிடம் இல்லையெனில் தாங்கள் பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்கும் போது கடவுச்சீட்டு அளவிலான (Passport Size Colour Photo) வர்ணப் புகைப்படமொன்றுடன் வருகைதருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம சேவகர் பிரிவுகளுக்கான கடிதங்கள் வழங்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

14/07/2023

**நலன்புரி கொடுப்பனவு சம்பந்தமான அறிவித்தல்**

நலன்புரி நன்மைகளுக்கான கொடுப்பனவினை பெறத் தகுதிவாய்ந்த நபர்கள் தொடர்பான பெயர்ப் பட்டியல் நலன்புரி நன்மைகள் சபையினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி பயனாளிகளின் பெயர்ப்பட்டியலுக்கமைவாக வங்கிக் கணக்கினை திறக்க வேண்டியிருப்பதனால் கீழ் குறிப்பிடப்படும் விடயத்தினை கருத்திற் கொண்டு தங்கள் வங்கிக் கணக்கினை திறப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

- பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளிகள் மாத்திரம் 2023.07.17ஆம் திகதி முதல் பிரதேச செயலகத்திற்கு வருகைதந்து தங்களுக்கு வழங்கப்பட்ட QR இனையும் தேசிய அடையாள அட்டையினையும் காண்பித்து வங்கிக் கணக்கு திறப்பதற்கான கடிதத்தினை பெற்று இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் ஏதாவதொன்றில் இலவசமாக தங்களுக்கான வங்கிக் கணக்கினை ஆரம்பிக்க முடியும்.

-பிரதேச செயலகத்திற்கு வருகை தருமுன் தங்கள் பெயர் நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட பட்டியலில் தங்களது பெயர், விபரம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்க வேண்டும்.

-வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் தங்களின் பெயருக்கு எதிரே Account Verified என வந்திருந்தால் தாங்கள் பிரதேச செயலகத்திற்கு வருகைதரவேண்டிய அவசியமில்லை.

-பயனாளிகளை பிரதேச செயலகத்திற்கு அழைக்கும் போது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாக அழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதனால் தங்கள் பிரிவுகளிலுள்ள பள்ளிவாயல்களில் அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

- கடந்த இரு வாரங்களாக மேன்முறையீடுகளைப் பதிவு செய்த விண்ணப்பதாரிகள் அது பற்றிய பரிசீலனைக்காக அழைக்கப்படும் வரை இது தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு வர வேண்டிய தேவையில்லை என்பதைக் கருத்தில் கொள்ளுமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்.நலன்புரி நன்மைகள் சபை உதவி கொடுப்பனவு********************************அக்கரைப்பற்று பி...
21/06/2023

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்.

நலன்புரி நன்மைகள் சபை உதவி கொடுப்பனவு

********************************
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து அரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபையின் உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியுடைய பயனாளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியில் தெரிவு செய்யப்பட்ட குடும்ப விபரங்களை உங்கள் கிராம சேவகர் பிரிவை தெரிவு செய்வதன் மூலம் பார்வையிட முடியும்.

https://iwms.wbb.gov.lk/household/list

***********
வழங்கப்படவிருக்கின்ற உதவித்தொகை விபரம்:

1. மிக வறுமை (Severely Poor) - மாதாந்தம் ரூ. 15,000.00
2. வறுமை (Poor) - மாதாந்தம் ரூ. 8,500.00
3. பாதிப்புக்கு உள்ளானோர் (Vulnerable) - மாதாந்தம் ரூ. 5,000.00
4. நிலையற்ற வருமானம் (Transient) - மாதாந்தம் ரூ. 2,500.00

***********
உதவித் தொகை பெறுவதற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் / தகுதியின்றி தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேன்முறையீடு 30.06.2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

Online முறையின் மூலம் மேன்முறையீட்டு / ஆட்சேபனைகளை,
https://iwms.wbb.gov.lk/complaint
எனும் இணைய முகவரிக்கு சென்று தெரிவிக்க முடியும்.

அல்லது,
மேன்முறையீட்டு / ஆட்சேபனை மாதிரி படிவத்தினை,
https://tinyurl.com/SSNP-PressAD-DSAKP
எனும் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து, படிவத்தினை பூரணப்படுத்தி எமது பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க முடியும்.

அல்லது,
1924 என்கின்ற நலன்புரி நன்மைகள் சபையின் விரைவு தொடர்பு எண்ணுக்கு (Hotline) அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்கமுடியும்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

10/06/2023

பொது மக்களுக்கான அறிவித்தல்

2023.06.12ம் திகதி மு.ப 11.00 மணியிலிருந்து அம்பாரை மாவட்ட செயலகத்தில் கௌரவ ஆளுனர் அவர்கள் பொது மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் கீழ்க்குறிப்பிடப்படும் விடயங்கள் கலந்துரையாடப்பட இருப்பதனால் இவ்விடயங்களுடன் தொடர்புபட்ட பொது மக்கள் குறித்த பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொள்ள முடியும் என்பதனை அறியத்தருகின்றேன்.

1. உள்ளூராட்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில், வீடமைப்பு, சுற்றுலா துறை மற்றும் போக்குவரத்து.

2. கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டுத்துறை.

3. சுகாதாரம், சமூக சேவை நன்நடத்தை.

4. விவசாயம், விலங்கு உற்பத்தி, கூட்டுறவு, நீர்ப்பாசனம், மீன்பிடிக் கைத்தொழில்.

5.காணி மற்றும் பெருந்தெருக்கள்.

6. வேறு.

பிரதேச செயலாளர்,
அக்கரைப்பற்று

அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் உள்ள கால்களை இழந்தவர்களுக்கான செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வும் மற்றும் பொது ம...
29/05/2023

அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் உள்ள கால்களை இழந்தவர்களுக்கான செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வும் மற்றும் பொது மக்களுக்கான மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும் 2023.05.28ம் திகதி அக்கரைப்பற்று பிரதேச செயலகதில் பிரதேச செயலாளர் TM. முஹம்மத் அன்ஷார் அவர்களின் தலையில் இடம்பெற்றது.

இதில் Colombo friend - in - need society எனும் நிறுவனத்தின் Mobile team இனால் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் 2023.05.26ம் திகதி முதல் 3 நாட்கள் இரவு பகலாக செய்து முடிக்கப்பட்ட சுமார் 3 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்கை கால்கள் இலவசமாக வழங்கப்பட்டதுடன் Rotary club of capital city Colombo பிரதான அனுசரணையாளராகவும் Rotary club of Ampara இணை அனுசரணையாளராகவும் செயற்பட்டது.

மேலும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 3 நாட்கள் கொண்ட இந்நடமாடும் சேவைக்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கிய உத்தியோகத்தர்கள், தனிநபர்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கு தகுதியான நபர்களை இனங்காண்பதற்கென்று சென்ற வருடம் எமது பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெற...
12/04/2023

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கு தகுதியான நபர்களை இனங்காண்பதற்கென்று சென்ற வருடம் எமது பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களிற்கான களவிஜய தரவுக்கணக்கெடுப்பு நிகழ்ச்சித்திட்டமானது கடந்த 02/03/2023 ஆம் திகதிமுதல் ஆரம்பமானது.

இக்களப்பணியில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இளைஞர் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் அடங்கலாக 79 உத்தியோகத்தர்கள் எண்ணீட்டாளர்களாக செயற்பட்டிருந்தனர்.

கடந்த 10/04/2023 ஆம் திகதிவரை மொத்தமாக 8,671 களவிஜயங்கள் நிறைவடைந்துள்ள இந் நிகழ்ச்சித் திட்டத்தில், எண்ணீட்டாளர்களாக பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவாக முதற்கட்டமாக 8,283 களவிஜயங்களுக்கான கொடுப்பனவுகள் நேற்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இக்கொடுப்பனவுகளை குறித்த எண்ணீட்டாளர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வானது, இன்று மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் TM. முஹம்மட் அன்சார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ராஸித் யஹ்யா, பிரிவுத்தலைவர்கள் மற்றும் எண்ணீட்டாளர்களாக தமது கடமைகளை சிறப்புற செய்துமுடித்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

எமது பிரதேச செயலக காணிப்பிரிவின் CC, A.L. Mohamed Fazeel அவர்கள்திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையி...
31/03/2023

எமது பிரதேச செயலக காணிப்பிரிவின் CC, A.L. Mohamed Fazeel அவர்கள்
திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதியுயர் தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சையிலும், நேர்முகப் பரீட்சையிலும்
சித்தியடைந்துள்ளதுடன் மிக விரைவில் நிருவாக உத்தியோகத்தர் (AO) பதவியை பெற உள்ளார்.

எமது உத்தியோகத்தர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

03/03/2023

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை (WBB) பெற்றுக்கொள்ளத் தகுதியான நபர்களை மற்றும் குடும்பங்களை தெரிவு செய்வதற்கான தரவுக் கணக்கெடுப்பு எமது அக்கரைப்பற்று பிரதேச செயலக மட்டத்தில் இன்றுமுதல் ஆரம்பமாகின்றது.

இதுவரை எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களிடமிருந்து 8,891 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தரவுகளை செயலிகளில் பதிவிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எமது உத்தியோகத்தர்கள் மற்றும் தன்னார்வ இளைஞர், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் நாளைமுதல் உங்களது வீடுகளுக்கு விஜயம் செய்வார்கள்.

எமது உத்தியோகத்தர்களுக்கு சரியான, உண்மையான தகவல்களை வழங்குவதற்கு தயாராக இருக்குமாறும் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் சேகரிக்கப்படுகின்ற தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக கீழ்வரும் ஆவணங்களை களஅதிகாரிகளிடம் காண்பிப்பதற்கு தயார்நிலையில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

1. குடும்ப அங்கத்தவர்களின் தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி உரிமம்/முதியோர் அடையாள அட்டை/இறுதியாக பெற்றுக்கொண்ட வாக்காளர் அட்டை / 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் பிறப்புச்சான்றிதழ்.

2. சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக்கொண்டிருப்பின் சமுர்த்தி வங்கி கணக்குப் புத்தகம்.

3. முதியோர் கொடுப்பனவு பெற்றுக்கொண்டிருப்பின் முதியோர் கொடுப்பனவு அட்டை.

4. வேறு உதவிக் கொடுப்பனவுகள் பெற்றுக்கொண்டிருப்பின் அதற்கான ஆவணங்கள்.

5. மேட்டுக்காணி மற்றும் வயல் காணிகள் இருப்பின் அது தொடர்பான ஆவனங்கள்.

6. இறுதியாக பெற்றுக்கொண்ட மின்சார பட்டியல், நீர் பட்டியல்.

7. குடும்பத் தலைவரின்/அங்கத்தவரின் வங்கிக் கணக்கு புத்தகம்.

8. நீண்டகால நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான ஆவணங்கள்.

பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று

அழைப்பிதழ் **நேர்மைய பெற்றோரியம்(Positive Parenting)** புதிய சவால்களை முன்னிறுத்தி எமது மனதிற்கினியபிள்ளைகளை வளர்த்தெடுப...
02/02/2023

அழைப்பிதழ்

**நேர்மைய பெற்றோரியம்
(Positive Parenting)**

புதிய சவால்களை முன்னிறுத்தி எமது மனதிற்கினிய
பிள்ளைகளை வளர்த்தெடுப்போம்

வளவாளர்
கலாநிதி அஷ்ஷெய்க் றவூப் ஸைய்ன்

காலம்
2023.02.03 - வெள்ளி

நேரம்
பி.ப 3.45 மணி

இடம்

பிரதேச செயலக கேட்போர் கூடம்

ஆர்வமுடையோர்கள் குடும்ப சகிதம் கலந்து பயன்பெறுமாறு
அன்புடன் அழைக்கின்றோம்

ஏற்பாடு
பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அலுவல்கள் பிரிவு
அக்கரைப்பற்று

பிரதேச செயலக மட்டத்தில் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளத் தகுதியான நபர்களை மற்றும் குடும்பங்களை தெரிவு செய...
02/02/2023

பிரதேச செயலக மட்டத்தில் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளத் தகுதியான நபர்களை மற்றும் குடும்பங்களை தெரிவு செய்வதற்கான கள ஆய்வு - (WBB) 2023

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளத் தகுதியான நபர்களை மற்றும் குடும்பங்களை தெரிவு செய்வதற்கான கையடக்கத் தொலைபேசி செயலி (Aswasuma) ஊடாக தகவல்களை சேகரிக்கும் மாதிரி கள ஆய்வானது அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் TMM.அன்ஷார் அவர்களின்
தலைமையில் அக்கரைப்பற்று -03 பிரிவில் இன்று(02/02/2023)இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் Y. ராசித், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் AM. தமீம், நிருவாக கிராம உத்தியோகத்தர் ALM. தாஹிர், மற்றும் பிரிவுக்குப்பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் AL. மசீஹா, கிராம உத்தியோகத்தர் AS. அப்துல் ஹஸ்பி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் AM. மபாயிஸ், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உதவியாளர் ALA. முஹம்மட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

*நன்கொடையாளர்களின் பங்களிப்புடனான மனிதாபிமான வேலைத்திட்டம் 2023* இன் கீழ் சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களிலிருந்து தெரி...
18/01/2023

*நன்கொடையாளர்களின் பங்களிப்புடனான மனிதாபிமான வேலைத்திட்டம் 2023* இன் கீழ் சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று (18/1/2023) அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்TMM அன்சார் அவர்களின் தலைமையில், உதவி பிரதேச செயலாளர் ராசித் யஹ்யா, தலைமை பீட முகாமையாளர் MBM.ஹுசைன், முகாமைத்துவ பணிப்பாளர் MJM.நிஃமதுல்லாஹ், கருத்திட்ட முகாமையாளர் NT.மசூர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சங்கத்தலைவர்கள், பயனாளிக்குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதல்களுடன் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Address

Main Street
Akkaraipattu
32400

Opening Hours

Monday 08:15 - 16:15
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94672277380

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat - Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Divisional Secretariat - Akkaraipattu:

Videos

Share

Nearby media companies

Other News & Media Websites in Akkaraipattu

Show All

You may also like