People's Voice

People's Voice Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from People's Voice, Social Media Agency, Akkaraipattu.

21/10/2023
21/10/2023
12/10/2023

தலைவர் எப்போதும் வேற ரகம் 🔥

திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேவைக்கு தேவையான காணிகளை விடுவிக்க பூரண உடன்பாடு எட்டப்பட்டது! திருகோணமலை மாவட்டத்தில்வன ...
10/10/2023

திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேவைக்கு தேவையான காணிகளை விடுவிக்க பூரண உடன்பாடு எட்டப்பட்டது!

திருகோணமலை மாவட்டத்தில்
வன இலாகா திணைக்களத்திலிருந்து மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் சம்பந்தமான கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் ஏற்பாட்டில்
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

விவசாய பயிர்ச்செய்கை, பண்ணை வளர்ப்பு, பொதுத் தேவைக்கு தேவையான காணிகளை எதிர்கால நலன் கருதி வன இலாகாவினால் விடுவிப்பு செய்வதற்கு ஏகமனதாக இக் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டது.

இதற்கான நெறிப்படுத்தலினை வழங்கி,
பொது இணக்கப்பாடு உருவாக,
தேசிய காங்கிரஸ் தலைவரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ), மற்றும் மாவட்ட இணைத் தலைவரான கபில அதுகோரல (பா.உ) இருவரும் முக்கிய பங்காற்றினார்கள்.

மேலும் இக்கூட்டம்,
வெற்றிபெற பங்களிப்பு செய்த திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், ஜனாதிபதி செயலக பிரதானிகள், வன இலாகா உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய தினணக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்  குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சி  அவர்களின் ஏற்பா...
10/10/2023

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் ஏற்பாட்டில்,
தேசிய காங்கிரஸ் தலைவர்
ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ),
கபில நுவான் அதுகோரல (பா.உ) கிழக்கு மாகான ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆகியோரின்
இணைத் தலைமையில் மாவட்ட செயலகத்தில் (2023.10.10) இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,
மாவட்டத்தின் மக்கள் தேவையாக கருதிய பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்தில் தேசிய காங்கிரஸ் தலைவரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா(பா.உ) அவர்களினால் முன்மொழியப்பட்ட விடயங்கள் வருமாரு....

அதற்கு சாத்தியமான தீர்வுகளும் எட்டப்பட்டன.

01.தோப்பூர் மாவட்ட வைத்தியசாலையில் இரசாயன கூடம் ஒன்றை ஏற்படுத்தல்.

02. திருகோணமலையிலிருந்து வாகரை,மட்டக்களப்பு ,கல்முனை ,அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் வரை செல்லுகின்ற தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை பேரூந்துகளினை தோப்பூர் கிராமத்தின் ஊடாக செல்வதற்கான அனுமதியை வழங்கல்.

03. தோப்பூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தற்போது நடாத்தப்பட்டு வருகின்ற எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு
பம்பி ஒன்றை பொருத்தி, எரிபொருள் விநியோகத்தினை சீர் செய்தல்.

04. தோப்பூர் உப பிரதேச செயலகத்தினை முறைப்படி நடாத்துதல்.நிரந்தர உதவி பிரதேச செயலாளர் ஒருவரை நியமித்தல்.

05. தோப்பூர் பிரதேசத்திற்கு தொடர்ச்சியான நீர் வழங்கலை விநியோகித்தல்

06. தோப்பூர் பிரதேசத்தில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின ஏ.டி.எம் இயந்திரத்தை உடனடியாக நிறுவுதல்.

07. தோப்பூர் அல்லைக் குளம் மற்றும் அதற்குரிய சிறிய வாய்க்கால்களை புனர்நிர்மாணம் செய்தல்.

08.குரங்கு பாஞ்சான் குளம் புணரமைப்பு சம்பந்தமான தற்போதைய நிலமை.

09.திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் மேய்ச்சல் தரை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.

10.கிண்ணியா குறுஞ்சாக்கேணி பாலம் நிர்மாணம் சம்பந்தமான தற்போதைய நிலமையை அவதானிது அதற்கான தீர்வினை எட்டுதல்.

11.கிண்ணியா கல்வி வலைய பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களை திடீரென இடமாற்றியமை சம்பந்தமாக.

12.நுற்றாண்டு விழா காணும் மூதுர் மத்திய மகா வித்தியாலையத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேம்படுத்தல்.

13. குச்சவெளி பிரதேசத்திற்கு தனியான கல்வி வலையத்தினை நிறுவுதல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு காத்திரமான தீர்வுகளும் எட்டப்பட்டன.

10/10/2023

ஷாம் தேசத்திற்கு நற்செய்தி உண்டு

“அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே”

09/10/2023
இன்று இருக்கின்ற ஒரு அதி கூடிய நகரும் செயற்பாட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினறாக ALM அதாவுல்லா இருப்பதனை நாம் காணக்கூடி...
09/10/2023

இன்று இருக்கின்ற ஒரு அதி கூடிய நகரும் செயற்பாட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினறாக ALM அதாவுல்லா இருப்பதனை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் ஒரு பிரதேசத்தை மையப்படுத்தி அப்பிரதேச மக்களினால் அவர்களின் பிரதேச அபிவிருத்தி வளர்ச்சி என்ற ஒரு கோட்பாட்டை சாத்தியப்படுத்துமுகமாக பாராளுமன்றத்துக்கு மக்கள் சார்பாக அனுப்பப்படும் ஒரு பிரதி நிதியாகும்.

இங்கு ஏன் இதனை எழுதுகின்றேன் என்றால் அவரை ஏன் நாம் அன்று ஆதரித்தோம் என பல கேள்விகள் கேற்கபட்டது நாம் நமது பிரதேசத்தின் மண் வாசனையை சுவைத்தவர்கள் எமது ஊரின் சுவாசக்காற்றை சுவாசித்தவர்கள் தூரமாக ஒதுங்கி வாழ்ந்தாலும் ஊரைப்பற்றி கனவு காண்பவர்கள் எமது ஊரின் வளார்ச்சியில் எமது எண்ணக்கரு அல்லது கோட்பாட்டை எவ்வாறு உற்புகுத்துவது என்பது எமக்கான சவால்

ஒரு பிரதேசத்தின் தேவைப்பாடுகள் தனிமனித செயற்பாடுகளினால் நிவர்த்தி செய்யக் கூடியதாக இருக்கப்போவதில்லை அந்த வகையில் நாம் இன்று ஒரு செயற்பாட்டு பாராளுமன்ற உறுப்பினராக ALM அதாவுல்லாவை காண்கின்றோம்,

பல பிரதிவாதங்களுக்கு அப்பால் ஒப்பீட்டு அளவில் மற்றை அணைத்து பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான துடிப்பான நகர்வை இந்த வயதில் அவர் ஏற்படுத்தியிருப்பது சந்தோசமான விடயமே!

இப்போது இருக்கின்ற நாம் வாழும் காலங்களில் முடிக்கப்படாத பல பிரச்சினைகளை அதில் வாழும் மக்களின் நலன் கருதி நாம் கட்சிகளுக்கு அப்பால் பிரச்சினைகளுக்கான முடிவுகளை தேடி நகர வேண்டியுள்ளது.

ஒற்றை பாராளுமன்ற தெரிவை உள்ளடக்கிய அவரின் கட்சியின் செயற்பாடானது பொத்துவில் தொடக்கம் கிண்ணியா வாரை பரந்து காணப்படுகின்றது.

நமது பிரதேசத்தில் விடப்பட்டு கிடக்கும் பல சின்ன சின்ன பிரச்சினைகள் தொடக்கம் பெரிய பிரச்சினைகளை அவர் அதனை தீர்ப்பதற்காக கையாளும் விதம் ரசிக்க கூடியதாக இருக்கின்றது.

மற்றைய பாராளுமன்ற பிரதி நிதிகள் செய்ய முடியாது என்பதற்காக அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக சுறுசுறுப்பாக இயங்கும் அதாவுல்லாவை நாம் விமர்சிப்பதனை விடுத்து அவரின் செயற்பாட்டுக்கு நாம் கை கோர்ப்பதே காலத்தின் அவசிய தேவையாகும் இப்போது நமக்கு தேவையானது எமது பிரதேச அபிவிருத்தியாகும்.அதுவே எமது எதிர்காலத்தின் உயிரோட்டமாகும்.

பிரதேச அபிவிருத்தியை நாம் ஓரமாக வைத்திருப்போமானால் இன்று கல்முனை நகரம் எவ்வாறு அழகு இழந்திருக்கின்றதோ அவ்வாறே மற்றைய பிரதேசங்களும் அதனை நோக்கி நகரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தேசிய அரசியல் ரீதியிக அவரின் போக்கு நமக்குள் சில நேரம் தவறாக புரியபட்டிருக்கலாம் ஆனால் அதனை அவர் உணர்ந்தாவராக இருந்து அவரின் கட்சியின் அடிப்படை கொள்கையை கூட மாற்றி நகரும் ஒரு அரசியல்வாதியாக மாறி இருப்பது சந்தோசமான விடயமே

கொள்கைகள் என்பது மக்களின் நலனுக்காகவே இன்றி தமது தனிப்பட்ட தேவைகளுக்காக இருக்க கூடாது என்பதில் இப்போது மிகவும் தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றார் என்பது நன்றாகவே எம்மாள் புரிந்து கொள்ள முடிகின்றது அவர் DCC chairmanஆக இருந்து கொண்டு இப்போது துடிதுடிப்பாக இயங்கும் இயக்கபாடானது பாராட்டப்பட வேண்டிய விடயமே.

நம்மோடு இருக்கும் பல முஸ்லிம் கட்சிகளும் தங்களது பிரதேச மக்களின் தேவைகளுக்காக வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டுமே ஒழிய அதனைவிடுத்து ஒரு பெயர் சொல்லும் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதிலிருந்து விடுபடவேண்டும்.

Razeen Notes
ALM Athaullah

ஒலுவில் துறைமுகத்தின் அருமை பைசால் காசிம் அவர்களுக்கு தெரியுமா? முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரும் முன்னாள் துறைமுகங்கள் கப்ப...
08/10/2023

ஒலுவில் துறைமுகத்தின் அருமை பைசால் காசிம் அவர்களுக்கு தெரியுமா?

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரும் முன்னாள் துறைமுகங்கள் கப்பல்துறை , புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சருமான மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் தூரநோக்கு சிந்தனையில் உருவாக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்தை பற்றி ,

தலைவர் அஷ்ரப் இறந்தபின் அந்த கட்சியின் Brand ஐ வைத்து பாராளுமன்றம் சென்றவர்களுக்கு என்ன தெரியும் ஒலுவில் துறைமுகத்தின் பின்புலத்தை பற்றி ?

முஸ்லீம் காங்கிரஸ் எம்பிக்கள் சும்மா முட்டாள்தனமாக பாராளுமான்றத்தில் இந்த ஒலுவில் துறைமுகத்தை மூட்டச்சொல்லி இனிமேலும் பேசக்கூடாது.

ஒலுவில் துறைமுகத்தின் முழுத்திட்டத்தையும் அமுல்படுத்தாமல் அரைகுறையாக கட்டிவிட்டு கடல் அங்க அரிக்குது இங்கே அரிக்கிறது என்று இன்னும் ஊர்வாதம் பேசாமல் முழுமையான திட்டத்தை அமுல்படுத்துவதற்கான பொறிமுறைகளை நகர்த்துமாறு உரிய உயர் அதிகாரிகளுக்கும் , அரசியல் அதிகாமுள்ளவர்களுக்கும் வேண்டிகொள்கிறேன்.

ஒலுவில் துறைமுகமும், இந்தியாவின் சென்னை துறைமுகமும் ஒரே நேர்கோட்டில்தான்( same belt) இல்தான் உள்ளது. (இதுபற்றி பைசால் காசிம் எம்பி அவர்களுக்கு தெரியுமா? )

சென்னை துறைமுகம் உருவாக்கப்பட்ட போது இதே பிரச்சினைதான் அங்கும் உருவானது, அதாவது சென்னை துறைமுகம் காரணமாக தெற்கில் மணல் வார்ப்பு ஏற்பட்டது. அதை (Marina Beach) என்றும்,

சென்னை துறைமுகம் வடக்கில் கடல் அரிப்பு ஏற்பட்டதால் (breakwater), அதற்கு (Groins) போட்டு கடரிப்பை தடுத்து மீன்பிடி துறைகளும் கட்டினார்கள்.

மைக்கை எடுத்தால் அதாவுல்லாஹ்விற்கு ஏசுவதை நிறுத்திவிட்டு மாவட்டத்தையும் நாட்டையும் எப்படி அபிவிருத்தி செய்யலாம் என்பதையும் சிந்தித்து பேசுங்கள்.

Copied from Sayed Ishaq Mansoor

Faizal Cassim
ALM Athaullah

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பு  குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அவர்களின் ஏற்பாட்டில், தேசிய காங்கிர...
07/10/2023

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அவர்களின் ஏற்பாட்டில்,

தேசிய காங்கிரஸ் தலைவர்
ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ),
WD வீரசிங்ஹ (பா.உ),
கிழக்கு மாகான ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் இணைத் தலைமையில் அம்பாரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது,
மாவட்டத்தின் நகர அபிவிருத்தி, நீர்ப்பாசன அபிவிருத்தி, சுற்றுலாத்துரை மேம்படுத்தல், குடி நீர் சம்பந்தமான பிரச்சினைகள் இன்னும் முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருதி திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமான பல விடயங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்தில்,
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான
விமலவீர திஸாநாயக்க (பா.உ)
எஸ்.எம்.எம் முஸரப் (பா.உ)
மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மழைக்காலத்தில் வெள்ளக்காடாகும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவுள்ளது. இன்ஷா அல...
06/10/2023

மழைக்காலத்தில் வெள்ளக்காடாகும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவுள்ளது. இன்ஷா அல்லாஹ்!

பாடசாலையை ஊடறுத்து செல்லும் முறையற்ற வடிகாலமைப்பினால் கடந்த பல வருடங்களாக சாஹிரா தேசிய பாடசாலை வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் தத்தளித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் மாணவர்களின் கல்விக்கு பாரிய இடையூறு இருந்து வருகிறது.

கடும் மழைக் காலங்களில் மாணவர்களின் வகுப்பறைகள், நிர்வாக கட்டிடங்கள் மற்றும் மைதானம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாடசாலை சூழலே வெள்ளத்தினால் சூழப்படும் துர்ப்பாக்கிய நிலைவரம் காணப்படுகிறது.

கல்முனை தொகுதியில் கீர்த்தி மிக்க தேசிய பாடசாலையாக திகழ்ந்து வரும் சாஹிரா கல்லூரி கடந்த பல தசாப்தங்களாக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தேசிய காங்கிரஸ் தலைவரும், மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவரும், சாய்ந்தமருது அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ. ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்(எம்.பி) ALM Athaullah அவர்களின் முயற்சியின் பேரில் தீர்வு கிட்டியுள்ளது.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் வெள்ளப் பிரச்சினையானது கடந்த 14.09.2023 அன்று நடைபெற்ற சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின்(DCC) கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு கலந்துரையாடப்பட்டது. இதன் போது இப்பிரச்சினையை நிவர்த்தி செய்ய 45 மில்லியன் நிதி உரிய அதிகாரிகளினால் மதிப்பீடு செய்யப்பட்டு சபைக்கு முன் மொழியப்பட்டது.

இவ்வேலைத்திட்டத்தினை முறையாக செயற்படுத்த தேவையான 45 மில்லியன் நிதியினை மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு ஊடாக பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை தான் மேற்கொள்ள முயற்சிப்பதாக சாய்ந்தமருது DCC தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் (எம்.பி) 14|09|2023 திகதிய கூட்டத்தில் வாக்குறுதி அளித்தார்.

அதற்கமைவாக இன்று (06)அம்பாறை மாவட்ட செயலகத்தில் கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சாஹிரா கல்லூரி விவகாரம் குறித்து பேசப்பட்டது. அதனடிப்படையில், சாஹிரா தேசிய பாடசாலையின் வெள்ள அவலத்தை தீர்ப்பதற்கென கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் 45 மில்லியன் நிதி பங்களிப்பினை கட்டம் கட்டமாக ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்! இலங்கை முஸ்லிம்களின் கனதியான கல்விக் கூடமாம் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் உள்ளக அபிவிருத்திகள் மென்மேலும் மேன்மையடைய பிரார்த்தனைகள்!

நீண்ட காலமாய் தொடரும் இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு பெறுமானம் மிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.
ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சட்டத்தரணி ஜே.எம்.வஃஷீர்,துறை சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபீர் உட்பட பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..!

எஸ். ஜனூஸ்
06.10.2023

இன்று கெளரவ ஜனாதிபதி றணில் விக்கிரமசிங்க அவர்கள் பொத்துவில் பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஓன்றை மேற்கொண்டு இருந்தார்.இதன்...
06/10/2023

இன்று கெளரவ ஜனாதிபதி றணில் விக்கிரமசிங்க அவர்கள் பொத்துவில் பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஓன்றை மேற்கொண்டு இருந்தார்.

இதன்போது கெளரவ ஆளுநர் மற்றும் அம்பாறை மாவட்ட 04 பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடல் மேற்கொண்டிருந்த சந்தர்பத்தில் தேசிய காங்கிரஸ் தலைவரின் பிறந்த நாளை ஜனாதிபதி அவர்கள் நினைவு கூர்ந்ததோடு நேரடியாக வாழ்த்த கிடைத்தமையையிட்டு சந்தோஷம் அடைவதாகவும் கூறி ,
அதனை சிறப்பிக்கும் வகையில் விஷேடமாக தருவிக்கப்பட்ட "கேக்" வெட்டி கொண்டாடினர்.

நினைவு கூர்ந்த கெளரவ ஜனாதிபதி மற்றும் கேக்கை ஏற்படு செய்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் அவர்களுக்கும் நன்றிகள்!

“இலங்கையில் 30% நிலப்பரப்பு காடாக இருக்கவேண்டும்,அதற்காக அந்த 30%மும் வடக்கு, கிழக்கிலேயே இருக்க வேண்டும் என்ற Forest De...
06/10/2023

“இலங்கையில் 30% நிலப்பரப்பு காடாக இருக்கவேண்டும்,அதற்காக அந்த 30%மும் வடக்கு, கிழக்கிலேயே இருக்க வேண்டும் என்ற Forest Department ண் எண்ணத்தை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது”

- ஏ.எல்.எம் அதாஉல்லா

திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோதமாக வனவிலங்கு திணைக்களத்தினால் (Forest Department) 1985ம் ஆண்டிற்கு பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 09/10/2023 அன்று திங்கள் திருகோணமலை கச்சேரியில் திருமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் கெளரவ ஏ.எல்.எம் அதாஉல்லா (MP) தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மத்திய அரசின் வன இலாகாவின் உயர் அதிகாரிகள், ஜனாதிபதி ஆணைக்குழுவின் உருப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல்வாதிகள் பங்குபற்ற உள்ளனர்.

ஏற்கனவே குச்சவெளி, கிண்ணியா, மூதூர் பிரதேச செயலகங்களில் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளிற்கான இறுதித்தீர்வை எட்டுவதற்கான சந்தர்ப்பமாக இதனை நாம் பயன்படுத்த எண்ணியுள்ளோம்,
இது சம்பந்தமாக மேலதிக/ விசேட தகவல்கள் ஏதேனும் இருப்பின் எம்மோடு தோடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஏறாவூரின் சொல்ல மறந்த கதை௮தாவுல்லாஹ்  சேரின் ௭ண்ணக்க௫வும்  தூர  நோக்கும்௮வ்வளவு  இலகுவில்  ஏர் ஊர்௮வரை  மறக்காது.💖ஆற்ற...
05/10/2023

ஏறாவூரின் சொல்ல மறந்த கதை

௮தாவுல்லாஹ் சேரின் ௭ண்ணக்க௫வும் தூர நோக்கும்
௮வ்வளவு இலகுவில் ஏர் ஊர்
௮வரை மறக்காது.

💖ஆற்றங்கரைப் பிரதேசம் ௮பிவி௫த்தியைக் கண்டதும்
தனக்கென ஏர் ஊர் பிரதேச செயலகத்தை கண்டதும்.
௮வரின் சிந்தனையின் சிகரம்

💖பெண் சந்தைக்க ஆரம்ப கட்டடம் ௮தாவுல்லாஹ் சேரின்
10 லட்சம் நிதியில் ௮மைந்தது.

👪சூபி மன்சிலில் ஒ௫ புதிய கட்டடம் ௮மைத்தவர்.

👬ஓட்டுப்பள்ளிக்க புல் டைல்ஸ்க்க ௮வர் நிதியில்
செய்யப்பட்டது.

😎சுவிஸ் கிராமத்தில் 40 ஏழைகளக்க 6 பேர்ச் காணி வழங்கப்பட்டது.

💔ஏர் ஊரின் பிரதேச சபை
நகரசபையாக மாற்றம் பெற்றது
௮தாவுல்லாஹ் சேரின்
௮யராத ௨ழைப்பு.
💞இதை ௭ழுதவதற்கான காரணம் .
இவர் தனது பெயரை ௭ந்த இடத்திலும் பதிக்கவில்லை.
இவரின் சமூகம் சார்ந்த சிந்தனையும்
சுயநலமற்ற தூர நோக்கும்.
இன்று நாற்பது photo நாளாந்தம் பார்க்கம் விடயம்.
௮வரக்க ஊர்சார்பாக துஆ
செய்வோம்.
JASHAKALLAH Kair

சாய்ந்தமருது கடலரிப்பிற்கு நிரந்தர தீர்வு.ALM Athaullahசாய்ந்தமருது மக்களின் நீண்ட கால தேவையான கடலரிப்பை தடுப்பதானது ,கட...
03/10/2023

சாய்ந்தமருது கடலரிப்பிற்கு நிரந்தர தீர்வு.
ALM Athaullah

சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால தேவையான கடலரிப்பை தடுப்பதானது ,
கடந்த மாதம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற DCC கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைவாக ,
அதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு விடயதான அமைச்சர் கௌரவ பிரஸன்ன ரனதுங்க அவர்களின் அனுமதியுடன் முதற்கட்ட நிதியாக 35 மில்லியன் ஒதுக்கப்பட்டு இன்று வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

நிகழ்வில் சாய்ந்தமருது DCC தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களோடு
எச்.எம்.எம் ஹரிஸ் [பா.உ] முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,
மீனவர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

29/09/2023

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Sri Lankan Muslim Political Super Star
ALM Athaullah

29/09/2023

எல்லா அரசியல்வாதிகளும் ஓடி ஒளிந்திருக்கையில், அப்போதே, பயங்கரவாதி பிரபாகரன் உயிரோடு இருக்கும்போதே தைரியமாக தேசிய ஊடகத்தில் அவருக்கும் அவர் சார்ந்த இயக்கத்திற்கும் “சவால்விட்டவர்” அதாவுல்லாஹ்.

அவரது அரசியல் தைரியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

“மச்சான் எனக்கு பேசுவதற்கு ஐந்து நிமிடம் தா” என்று கேட்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்…

“நான் பேசும்வரைக்கும் நீங்கள் கேட்கத்தான் வேண்டும்” என்று சொல்லும் அதாவுல்லாஹ் ஒரு காவியமாகத்தான் தெரிகிறார்….

நீடூழி வாழ வாழ்த்துக்கள்
ALM Athaullah

ஒரு கலைக்கூடத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!அரசியலைத்தாண்டி நல்ல கலைஞனாய், நல்லதொரு ரசிகனாய் இவரைப் பிடிக்காதவர்கள் ...
28/09/2023

ஒரு கலைக்கூடத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

அரசியலைத்தாண்டி நல்ல கலைஞனாய், நல்லதொரு ரசிகனாய் இவரைப் பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் ஏ எல் எம் அதாவுல்லாஹ் அவர்களுக்கு. இறைவன் அருள்பெற்று வாழ வாழ்த்துக்கள்!

ALM Athaullah
Athaullah Ahamed Lebbe Maraikkar

சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் ❤😍- நிச்சயமாக பயணிக்க வேண்டிய இலங்கையின் மிக அழகான 20 இடங்கள்Save it and keep it - 20 most ...
28/09/2023

சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் ❤😍
- நிச்சயமாக பயணிக்க வேண்டிய இலங்கையின் மிக அழகான 20 இடங்கள்
Save it and keep it
- 20 most beautiful places to travel for sure
Uva Tourism Srilanka

If Love Srilanka share it too…🥰

 #அக்கரைப்பற்று_கருங்கொடித்தீவு_என்ற_ஊரின்_தொடக்கமும்_அவ்வூர்_உருவான_விதமும்_அதன்_பூர்விக_குடியேற்றமும்.சுமார் இற்றைக்கு...
28/09/2023

#அக்கரைப்பற்று_கருங்கொடித்தீவு_என்ற_ஊரின்_தொடக்கமும்_அவ்வூர்_உருவான_விதமும்_அதன்_பூர்விக_குடியேற்றமும்.

சுமார் இற்றைக்கு 419 வருடங்களுக்கு முன்னர் கி.பி. 1600 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களின் முதல் குடியேற்றம் அக்கரைப்பற்றில் நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் பயிச்செய்கையின் அறுவடை கிடைக்கும் காலத்தை அவதானித்து (சீசனுக்கு) வருடா வருடம் இந்தியாவிலிருந்து பட்டாணிகள் வர்த்தகத்திற்காக இலங்கை வந்து செல்பவர்களாக இருந்தனர்.

அந்தடிப்படையில், இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் ஒன்றான (அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள) திருக்கோவில் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட பயிர்ச்செய்கையின் அறுவடைக்காலத்தை அறிந்திருந்த பட்டாணிகள் வருடா வருடம் குறித்த ஸிசனுக்கு அங்கு வந்து செல்பவர்களாக இருந்தனர்.

அவ்வாறு ஆண்டு தோறும் வந்து செல்கின்ற போது, ஒரு வருடம் திருக்கோவில் பிரதேச வாழ் தமிழ் (இந்து) மக்களால் இந்த பட்டாணிகளிடம் ஓர் உதவி கேட்கப்பட்டது.

அதாவது, நாங்கள் எங்களது பயிர்ச்செய்கையை அறுவடை செய்கின்ற காலப்பகுதியில் (குறித்த ஸிசனில்), மகியங்கணை பகுதியில் இருந்து வேடுவர்கள் வந்து எங்களது பொருட்களை சூறையாடிச்செல்வது அடிக்கடி இடம்பெறுகின்றது எனவே எங்களுக்கு உங்களால் ஆன உதவியை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதர்க்கு, அந்த பட்டாணிகள் கூறியதாவது

" உங்களது அடுத்த அறுவடை சீசனுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் நாங்கள் வந்து உங்கள் பகுதியில் மறைந்திருந்து வேடுவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் " என வாக்குறிதியழித்து சென்றவர்கள் அதனைத்தொடர்ந்து வந்த வருடம் திருக்கோவிலுக்கு வந்தவர்கள் அவர்களது வாக்குறிதியை நிறைவேற்றினர்.

எவ்வாறெனில், பட்டாணிகள் மறைந்திருக்கையில் மகியங்கணை வேடுவர்கள் வந்தவுடன் மறைந்திருந்தவர்கள் வெளிப்பட்டு கொள்ளையிட வந்த வேடுவர்களை கடுமையாக தாக்கி அவர்களை துரத்திச்சென்று படவெட்டினகுடா வில் வைத்து அவர்களில் சிலரை வெட்டி மீதமானவர்களை விரட்டியடித்தனர்.

இச்சம்பவம் முடிந்த பின்னர், பட்டாணிகள் இந்தியா திரும்ப முற்பட்டனர். அப்போது, திருக்கோவில் வாழ் தமிழ் (இந்து) மக்கள் பட்டாணிகளிடம் கூறியதாவது,

" நீங்கள் இந்தியா செல்ல வேண்டாம். இங்கேயே தங்குங்கள். ஏனனில் நீங்கள் சென்றதன்பின்னர் உங்களால் அடிபட்ட அவர்கள் எந்த நேரத்திலும் வந்து எங்களைத்தாக்கலாம் ஆதலால் நீங்கள் போக வேண்டாம்" என உறுதியாக இருந்தனர்.

செய்வதறியாத பட்டாணிகள் {முஸ்லீம் வர்த்தகர்கள்} ஒரு முடிவுக்கு வந்தனர்.

திருக்கோவில் வாசிகளிடம் இவ்வாறு கூறினர்

" அப்படியாயின் எங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களது பெண்மக்களில் இருந்து ஒவ்வொருவரை திருமணம் முடித்து வைக்கவும் "
என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

அதர்க்கவர்கள் பரிபூரண சம்மதத்தை வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து அப்பட்டாணிகள் தங்களது மனைவியர்களுடன் அக்கரைப்பற்று_கருங்கொடித்தீவில் தங்களுக்கான குடியிருப்பிடங்களை (வீடுகளை) அமைத்துக்கொண்டனர்.
தங்களது பெண் மக்கள் பட்டாணி_கணவன் மாருடன் கருங்கொடித்தீவில் குடியேறிய அதேகாலப்பகுதியில், பெண் கொடுத்த தமிழ் (இந்து) மக்களில் அதிகமானோரும் கருங்கொடித்தீவின் தெற்கு புறத்தில் குடியேறினார்கள்.
குடியேற்றம் நடைபெற்ற உடனேயே அம்மக்கள் தங்களது வணக்க வழிபாடுகளுக்காக கம்புகளையும், கிடுகுகளையும் கொண்டு ஒரு பள்ளியை தமது வசிப்பிடங்களுக்கு மத்தியில் அமைத்தார்கள் அதுவே இன்று அக்கரைப்பற்று-ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகின்றது.

"தம்பிக்கண்டுவின் புத்தகம்" என்னும் வரலாற்று ஏட்டில்.................

01. இங்கு முஸ்லிம் மக்கள் குடியேறிய அதே காலப்பகுதியிலேயே தமிழ் மக்களும் இங்கு குடியேறினார்கள் என்பதும்,

02. இப்பள்ளிவாசல் கட்டுவதற்கும் தமிழ் மக்களின் சித்தி விநாயகர் ஆலயத்தை கட்டுவதற்குமான வேலை ஒரே நாளிலேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதும்,

03. தமிழ் மக்களின் விழாக்களில் முஸ்லிம் மக்களும், பள்ளிவாசல் கந்தூரி வைபவங்களில் தமிழ் மக்களும் நேசபாவத்துடன் கலந்து சிறப்பித்தார்கள் என்பதும்,

பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள "தம்பிக்கண்டுவின் புத்தகம்" என்னும் வரலாற்று ஏட்டின் மூலமாகத் தெரியவரும் செய்திகளாகும்.

இன்றும் கூட இப்பள்ளிவாசல் நிர்வாகம் முஸ்லிம்- தமிழ் மக்களிடையே நல்லுறவு நிலவக்கூடிய ஆக்கபூர்வமான நட வடிக்கைகளில் அயராது ஈடுபட்டு வருகின்றது என்பதைத் துணிந்து கூறமுடியும்.

அக்கரைப்பற்றில் தமிழ் மக்களிடம் காணப்படுகின்ற குடிஅமைப்புக்கள் முஸ்லீம்களிடடும் இன்றுவரை பின்பற்றப்படுகின்றது.

உதாரணமாக. தமிழர்களிடம் காணப்படுகின்ற………..
01. பணிக்கனார்_குடி
02. குருக்கள்_குடி போன்றவை

முஸ்லீம்களிடத்தில் முறையே...............
01. பணியட்டுக்குடி
02. இலவக்குடி(ஆலிம்குடி) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.
பணிக்கனார்_குடி யைசேர்ந்தவர்களது தலமையில் சித்தி விநாயகர் ஆலயத்தின் தலைவர் தெரிவு செய்யப்படுவதும். அதுபோல்,

பணியட்டுக்குடி யைசேர்ந்தவர்களது தலமையில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் தெரிவு செய்யப்படுவதும் ஆன நடைமுறை இன்றுவரையில் இருக்கின்றது.

ஒரு குடியைச்சேர்ந்த ஆண் or பெண் அக்குடியை சேர்ந்த முறையே பெண் or ஆண் யினை திருமணம் செய்வது தவிர்க்கப்பட்ட ஒரு மரபாக இருந்துவந்துள்ளது. ஏனனில் ஆணும் பெண்ணும் ஒரு குடியை சேர்ந்தவர்களாயின் அவர்களது தாயின் தாய் அவளின் தாய் அப்படி செல்லும் போது அங்கு இருவரதும் தாய் ஒருவராக இருக்கின்றார் என்பது அதன் முடிவாகும்.

மேலே சொன்னவாறு கி.பி. 1600 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களின் முதல் குடியேற்றம் அக்கரைப்பற்றில் இடம்பெறுவதர்க்கு முன்பே அட்டாளைச்சேனை பகுதியில் பள்ளிவாசலுடன் மக்கள் வழ்ந்துகொன்டிருந்தமை இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.

ஓரு பிரதேசத்தில் புதிதாக ஒரு பள்ளிவாசல் கட்டுமான பணி செய்கின்ற போது, அவ்விடத்துக்கு அருகில் ஏற்கனவேயுள்ள பள்ளிவாசல் நிருவாக மக்களால் உதவிசெய்வது பொதுவானதோர் விடயமாகும்.

அந்த அடிப்படையில் அப்போது (பட்டாணிகள் காலத்தில் கி,பி. 1700) அட்டாளைச்சேனயில் வாழ்ந்த முஸ்லீம்களில் பலர் அக்கரைப்பற்று பள்ளிவாசலை கற்களால் கட்டுவதர்க்கு கற்கள் தருவதர்க்கு விருப்பம் தெரிவித்து இவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இவர்களும் மாட்டுவண்டில்களை கட்டிக்கொண்டு சென்றதாகவும். அங்கு சென்றதும் அங்கிருந்த ஒரு சிறிய குழுவினர் அதர்க்கு மறுப்பு தெரிவித்து திருப்பியனுப்பியதாகவும்.

இவர்கள் கற்கள் கிடைக்காத கவைலையில் வண்டில்களை திருப்பிக்கொண்டு வந்ததாகவும்.

திரும்பி வரும்போது, அவர்களைப்பற்றிய சில வசனங்களை இவர்களுக்கிடையே பேசிக்கொண்டு வந்ததாகவும் எழுதப்பட்டாத வரலாற்று தகவல்கள் சந்ததி சந்ததியாக கடத்தப்பட்டு வருகின்றமையையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் சுவாரசியமாக இருக்கும் என்பதால் கூறுகின்றேன்.

கருங்கொடித்தீவில் குடியேற்றம் நடந்ததிலிருந்து சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக (கி.பி. 1800) இப்பள்ளிவாசல் ஒன்றே இவ்வூர் முஸ்லிம் மக்களின் வணக்க வழிபாடுகளுக்கும் சமூக நடவடிக்கைகளுக்குமான மத்திய நிலையமாக இருந்து வந்துள்ளது. இவ்வூர் முஸ்லிம் மக்களின் சமய, சமூக, தொழில் மற்றும் வாழ்வியல் சம்பந்தமான அனைத்து விவகாரங்களும் இப்பள்ளிவாசல் நிர்வாகத்தின் தீர்மானங்களுக்கமையவே மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக மக்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை இறைபக்தி என்பன மிகவும மேலோங்கிக் காணப்பட்டன.

காலஞ் செல்லச்செல்ல ஊரின் குடிப்பரம்பல் அதிகரித்து கொண்டு சென்றது. மக்கள் குடியிருப்புகளின் எல்லைகள் விஸ்தரித்துக் கொண்டு சென்றன. விஸ்தரிப்பின் கடைசி எல்லையிலிருந்து மக்களின் நாளாந்த வணக்க வழிபாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இப்பள்ளிவாசல் தொலைப்பட்டுப் போய்விட்டது என்று உணரப்பட்டபோது, கணிசமான கால இடைவெளிகளில் மேலும் இரு பள்ளிவாசல்கள் கருத்தொற்றுமையின் அடிப்படையில் அமைக்கப்பட்டன. என்றாலும் வாராந்த ஒன்றுகூடலுக்காக ஜும்ஆ தொழுகை மிகமிக நீண்ட காலமாக இப்பள்ளிவாசலில் மட்டுமே நடைபெற்று வந்துள்ளது. கிராமத்தின் தொன்மையான பள்ளிவாசல் ஒன்றுக்கு அக்கிராமத்தில் வதியும், ஒழுக்க விழுமியங்களிலும் இறை பக்தியிலும் சிறந்து விளங்கிய கண்ணியமிக்க மக்கள் கூட்டத்தினரால் வழங்கப்பட்ட தனித்துவம் நிரம்பிய கௌரவமாக இது கருதப்பட்டது.

அந்த வகையில் மிகமிக விசாலமான அமைதி மிக்க ஒரு நிலப்பரப்பிலும், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களாற் சூழப்பட்ட நிழற்பரப்பிலும், அமைந்து தொன்மைச் சிறப்புடன் கம்பீரமாகக் காட்சிதரும். அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கடந்த பல நூறு வருடங்களாக இவ்வூரின் ஆத்மீகத் தலைமையகமாகத் திகழ்ந்து வருவதுடன் இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் எண்ணிறைந்த காலங்களுக்கும் இவ்வாறே திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியப் பிரார்த்திப்போம்

Tidings :-

-எம்.எம்.ஏ. முஹியித்தீன்-
-மீராசாகிபு நாகூர் தம்பி (ஜமால்டீன்)-
-முஸ்தபா அப்துல் கனீம்-

27/09/2023

“ஏன் ஹக்கீம் சாருடைய முகம்
இப்படி வாடிப்போய் இருக்கிறது?”

ALM Athaullah
Rauff Hakeem

27/09/2023

மழைக்காலங்களில் வீதிகளில் செல்லும்போது
மிகவும் கவனமாக செல்லுங்கள்….

திடீர் தண்ணீர் பெருக்கெடுப்பு காரணமாக
வீதிகளின் பள்ளங்கள் தெரியாது.

பள்ளமான இடங்களை குறியிட்டு காட்டுங்கள்.
பகலிலும் இரவிலும் மற்றவர்களுக்குத் தெரியும்
விதமாக…

அவசரமாக Apply பன்னுங்கள்,அனைவருக்கும் பகிருங்கள்…இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவ பயிலுனர் பணிக்கு ( Management Train...
27/09/2023

அவசரமாக Apply பன்னுங்கள்,
அனைவருக்கும் பகிருங்கள்…

இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவ பயிலுனர் பணிக்கு ( Management Trainees) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன....

பொருத்தமானவர்கள் விண்ணப்பியுங்கள், மறக்காமல் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

27/09/2023

அக்கரைப்பற்றில்
நேற்றைய மழைக்கு திடீரென சரிந்த மரம்!

மறுக்கமுடியாத உண்மை,எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும் இருந்தாலும் போனாலும்கடைசிவரைக்கும் மாறாது கூடவே இருப்பது தாயவளின் தூ...
26/09/2023

மறுக்கமுடியாத உண்மை,

எத்தனை எத்தனை உறவுகள்
வந்தாலும் இருந்தாலும் போனாலும்
கடைசிவரைக்கும் மாறாது கூடவே இருப்பது
தாயவளின் தூய அன்பு மட்டுமே!

தாய் அன்புக்கே ஈடேதம்மா,
ஆகாயம் கூட அது போதாது. ❤️

தாயை பிரிந்து வாழ்பவர்களுக்கு சமர்ப்பணம்.

வட்டமடு உட்பட அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இருக்கும் விவசாய காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படும்...
26/09/2023

வட்டமடு உட்பட அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இருக்கும் விவசாய காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படும் !

மிகவும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் குறிப்பாக வட்டமடு , பொத்துவில் மற்றும் சம்மாந்துறை பிரதேச விவசாய காணிகளை விடுவிப்பதற்காக கடந்த பல மாதங்களாக பல தரப்பு மட்டத்தில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது !
(அல்ஹம்துலில்லாஹ்)

விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க எடுக்கப்பட்ட பல கட்ட முயற்சிகளில் அதற்கு சாதகமாக செயல்பட்ட அரசாங்கத்திற்கும் , அதிகாரிகளுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் இக் காணிகள் விடுவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விமோசனம் கிடைக்க பிரார்த்திப்போம் !

அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயம் தேசிய மட்டத்தில் சம்பியன் ஆனது…அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மூன்று Merit ப...
26/09/2023

அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயம் தேசிய மட்டத்தில் சம்பியன் ஆனது…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மூன்று Merit பதக்கங்கள்…

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்கப்பதக்கம்..

அக்கரைப்பற்று மத்திய கல்லாரிக்கு கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்கள்…

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரி மாணவன் இரண்டு தங்கப் பதக்கங்கள்…

- அனைத்தும் இந்த மாதம் அக்கரைப்பற்று பெற்றுக்கொண்ட கௌரவங்கள். இதனைப்பெற்றுக்கொள்ள முயற்சித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

15/01/2020

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் பொங்கல் வாழ்த்து!

Address

Akkaraipattu

Website

Alerts

Be the first to know and let us send you an email when People's Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like