People news

People news அறியாமையின் மடைமைத்தனம் இது நமக்கான தளம் ஒற்றுமையாய் பயணிப்போம்!

*சோறு வரும் வழி:*01. வயல் காட்டைச் சீர்செய்தல்02. ஏர் பிடித்தல்03. உழவு ஓட்டுதல்04. பரம்படித்தல்05. விதை நெல் சேகரித்தல்...
03/12/2024

*சோறு வரும் வழி:*
01. வயல் காட்டைச் சீர்செய்தல்
02. ஏர் பிடித்தல்
03. உழவு ஓட்டுதல்
04. பரம்படித்தல்
05. விதை நெல் சேகரித்தல்
06. விதை நேர்த்தி செய்தல்
07. விதைகளை நீரில் ஊற
வைத்தல்
08. நாற்றங்காலில் விதைத்தல்
09. நாற்றாக வளருதல்
10. நாற்று எடுத்தல்
11. முடிச்சு கட்டுதல்
12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்
13. நடவு நடுதல்
14. களையெடுத்தல்
15. உரமிடுதல்
16. எலியிடம் தப்புதல்
17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்
18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்
19. கதிர் முற்றுதல்
20. கதிர் அறுத்தல்
21. கட்டு கட்டுதல்
22. கட்டு சுமந்து வருதல்
23. களத்துமேட்டில் சேர்த்தல்
24. கதிர் அடித்தல்
25. பயிர் தூற்றல்
26. பதறுபிரித்தல்
27. மூட்டை கட்டுதல்
28. நெல் ஊறவைத்தல்
29. நெல் அவித்தல்
30. களத்தில் காயவைத்தல்
31. மழையிலிருந்து பாதுகாத்தல்
32. நெல் குத்துதல்
33. நொய்யின்றி அரிசியாதல்
34. அரிசியாக்குதல்
35. மூட்டையில் பிடித்தல்
36. விற்பனை செய்தல்
37. எடை போட்டு வாங்குதல்
38. அரிசி ஊறவைத்தல்
39. அரிசி கழுவுதல்
40. கல் நீக்குதல்
41. அரிசியை உலையிடல்
42. சோறு வடித்தல்
43. சோறு சூடு தணிய வைத்தல்
44. சோறு இலையில் இடல்
இத்தனை தடைகளைத் தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவது உலகமகா பாவம்.
உண்ணும் முன் உணருவோம்,
அந்த உணவு நம் இலைக்கு வந்த பாதையையும், அதன்பின்னுள்ள
உழவனின் உழைப்பையும்.!.....
"உணவை வீணாக்காமல் பருகுங்கள்"

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அஸ்வெசும கொ...
03/12/2024

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு 2023ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2024ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் மீள திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயனாளி குடும்பங்களுக்கு 4 வகையான சமூகப் பிரிவின் கீழ் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் வாழ்க்கை செலவுடன் ஒப்பிடுகையில் தற்போது வழங்கப்படும் தொகை போதுமானதல்ல என கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அஸ்வெசும கொடுப்பனவு முறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வறிய சமூக பிரிவுகளில் உள்ளவர்களுக்கான கொடுப்பனவை 8,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிகவும் வறிய சமூகப் பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கான கொடுப்பனவை 15,000 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த திருத்தப்பட்ட அஸ்வெசும திட்டத்தை நாடாளுமன்றினால் அங்கீகரிக்கப்படும் நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம், நிலையற்றவர்கள் என்ற சமூக பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவை அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை நீடிக்கவும், ஆபத்துக்கு உட்பட்டவர்கள் என்ற பிரிவில் உள்ளவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

03/12/2024
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர்ரத்ன கமகே அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு (2024-12-01) விஜயம் ஒன்...
01/12/2024

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர்
ரத்ன கமகே அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு (2024-12-01) விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது அட்டாளைச்சேனை மீனவர்களின் மிக முக்கியமான பிரச்சினைகளும் தேவைகளும் கண்டறியப்பட்டதுடன் அட்டாளைச்சேனை 8 இல் அமைந்துள்ள மீன் பிடித்துறைக்கான மின்சார வசதி மற்றும்,மண்ணெண்ணை நிரப்பு நிலையத்தின் அவசியம்,
இந்திய கடல் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் இத்துறையின் மீனவர்கள் குறித்தும் பேசப்பட்டது ,
அதற்கமைவாக குறிப்பிட்ட விடையங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றினை அவசரமாக தயார் படுத்தி தருமாறும்
அதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி அவற்றிற்கான தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாகவும் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் போது அங்கே கூடியிருந்த மீனவமக்கள் அமைச்சர் அவர்களிடம் கூறியிருந்தார்கள் நாங்கள் இதுவரை காலமும் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றோம் இங்கே இருக்கின்ற மக்கள் யாவரும் வறிய மக்கள்
அவ்வாறு இருந்த போதிலும் மீன்பிடித்துறை சார்ந்த எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும்
எந்த ஒரு அமைச்சரும்
இதுவரைக்கும் எங்கள் பகுதிக்கு வந்ததே இல்லை
முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தியினுடைய பாராளுமன்ற உறுப்பினராகிய நீங்கள்
எங்களை நேரில் தேடி வந்து எங்களின் தேவைகளை கேட்டு அறிந்து செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளீர்கள் இதற்காக அட்டாளைசேனையின் மீன்பிடி சமூகமாகிய நாங்கள் எல்லோரும் உங்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று மீனவமக்கள் குறிப்பிட்டார்கள்.

இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட...
03/07/2024

இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது.

எனவே, இந்தப் பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் ஆதரவும் கிடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

கடந்த காலங்களில் திறைசேரியில் டொலர் கையிருப்பு இருக்கவில்லை. நாடு கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான வரிசைகள் உருவாகின.சமூகம் முழுமையாக வெறுப்புக் கலந்த சமூகமாக மாறி, நாடு முழுவதும் போராட்டங்கள் ஏற்பட்டன.

நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத வேளையில், பிரதமராகவும், முதிர்ந்த அரசியல்வாதியாகவும் அனுபவம் வாய்ந்த ரணில் விக்ரமசிங்க அந்தச் சவாலை ஏற்று நாட்டை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்.

அவர் செய்த முதல் விடயம், சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதனை வெற்றியடையச் செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

அத்துடன், ஒரு நாடு என்ற வகையில் இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றிருந்ததால், இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட முறையில் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்தது.

இதன் விளைவாக, 2027 ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்திற்குச் செல்ல முடிந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தின் பின்னரே, நம் நாடு சுவாசிக்கத் தொடங்கியது எனலாம்.

அனைத்து விடயங்களிலும் தன்னிறைவு அடையாத நாடாக நாம் கண்டிப்பாக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

அரசியல் ரீதியில் யார் தலைவராக இருந்தாலும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் கொடுக்கல் வாங்கல்களைப் பேண முடியாது.

இத்தகைய பரிவர்த்தனைகள் உலக விதிகளின்படி மட்டுமே நடக்க வேண்டும். நீடிக்கப்பட்ட கடன் வசதி ஒப்பந்தத்தின்படி, 2027 ஆம் ஆண்டு வரை கடன் ஒப்பந்தத்தில் ஈடுபட முடிந்துள்ளது. எனவே நாங்கள் வருடந்தோறும் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும்.

இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாமல், வரவுசெலவுத்திட்டத்தை 2027 வரை தயாரிக்க முடியாது.

சர்வதேச நாணய நிதியம் 2025 வரவு செலவுத் திட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும். உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வரவுசெலவுத் திட்டத்திற்காக வழங்குகிறது.

வரவு செலவுத் திட்ட ஆவணம் தயாரிக்கும் போது மேலும் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இவ்வாறுதான் தயாரிக்கப்பட வேண்டும். யார் ஆட்சி செய்தாலும் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நிவாரணங்கள் போன்றவற்றுக்கு பணம் கண்டிப்பாகத் தேவை. இந்த முறையைத் தவிர, வரவுசெலவுத் திட்டத்திற்கான பணத்தைப் பெற வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.

28/06/2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

28/06/2024

சந்தேகநபரிடம் இருந்த கார், மோட்டார் சைக்கிள், தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் வாள்கள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

26/06/2024

டொளர் வீக்கத்தில் நியுயார்க் சிட்டி
மீண்டும் பட்டியலில் முதலாமிடம்

26/06/2024

18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளுடன் 06 இலங்கையர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

25/06/2024

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2500 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதிகரிக்கப்பட்ட சலுகை இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

14/06/2024

⭕️ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத்தாள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான ஆவணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அண்மைய நாட்களில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அர...
14/06/2024

தேர்தல் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அண்மைய நாட்களில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடல்களில் ஒன்று பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் 2 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன பாராளுமன்றத்தின் நேரத்தை நீடிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தியது போல், ​​தற்போதைய அரசாங்கமும் செயற்பட முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத் தடைகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மாற்று வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு 2 வாய்ப்புகள் இருப்பதாகவும், நாட்டில் தேசிய ரீதியில் முக்கியமான ஒரு பிரச்சினையை ஜனாதிபதி குறிப்பிட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக் கோரலாம் என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற சட்டத்தின் மூலம் 3 இல் 2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜூலை மாதம் வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சிங்கராஜா வனத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ...
14/06/2024

சிங்கராஜா வனத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு (2023) முதல் கலவன குடவ நுழைவாயிலிலிருந்து 27,427 உள்நாட்டு; மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், பயணச்சீட்டு வழங்கியதன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் சிங்கராஜா வனக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நல்ல மட்டத்தில் இருப்பதாக சிங்கராஜா வன அதிகாரி மங்கள குலரத்ன தெரிவித்தார்.கடந்த ஆண்டு 13,182 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 4,128 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர்.

மேலும், இந்த ஆண்டு 1,816 உள்நாட்டு; சுற்றுலாப் பயணிகளும், 3,301 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.இந்த ஆண்டு முதல் 27,427 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பயணச்சீட்டு விற்பனையிலிருந்து 1,65,34,963 வருவாய் கிடைத்தது.

இம்முறை பெய்த மழையினால் சிங்கராஜா வனப்பகுதி புத்துணர்ச்சியடைந்துள்ளதாகவும், வறண்ட காலங்களில் காண முடியாத நீர்வீழ்ச்சிகள் மற்றும் விலங்குகள் காணப்படுவதால் சிங்கராஜா வனப்பகுதிக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கராஜாவின் வெத்தகல துடவ பிரதேசத்திலுள்ள தொடர்பாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

13/06/2024

⭕️கொழும்பு புறநகர் பகுதியில் சிறுமி ஒருவர் மீது கொடூர தாக்குதல்

தேசிய மக்கள் சக்தியினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.நாட்டை கட்டி எழுப்புவது எ...
13/06/2024

தேசிய மக்கள் சக்தியினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

நாட்டை கட்டி எழுப்புவது எவ்வாறு என மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றைய தினம்(13.06.2024) இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா கருத்து தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க தான் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார். அதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் பாரதி திசையை நோக்கி தள்ளப்பட்டார்கள்.
ரணில் விக்ரமசிங்க வாக்கின் மீது இருந்த நம்பிக்கையை செயல் இழக்க வைத்தார்.

உணர்வு சார்ந்த அரசியலை முன்னெடுத்து, அரசியல் இருப்புகளை தக்க வைப்பது அரசியல்வாதிகளுக்கு இலகுவான ஒன்று.

இந்த முறை உணர்வு சார்ந்த அரசியல்களை தவிர்த்து அறிவு சார்ந்த அரசியலை செயல்படுத்துவது தமிழ் சிங்களமாகிய இரண்டு இனங்களுக்கும் தேவையான ஒன்று” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13/06/2024

⭕️சிறுமியை கடத்தி அறைக்குள் அடைத்து வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல்.

09/06/2024

⭕️பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

09/06/2024

Follow the PEOPLE NEWS channel on WhatsApp:

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when People news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share