Tamilans In Kuwait

  • Home
  • Tamilans In Kuwait

Tamilans In Kuwait குவைத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளம்
(1)

02/12/2022
20/11/2022

5TH Ring சாலை நள்ளிரவு 2 மணி முதல் நாளை திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அவென்யூஸுக்கு எதிரே உள்ள ஜஹ்ரா திசையில் மூடப்படும் என்று சாலை மற்றும் தரைவழி போக்குவரத்து பொது ஆணையம் அறிவித்துள்ளது. அந்த காலக்கட்டத்தில் சர்வீஸ் சாலை மட்டுமே நுழைவுக்காக திறக்கப்படும்.

அவென்யூஸ் எதிரே உள்ள 5TH ரிங் ரோட்டில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்வதற்காக சில மணி நேரங்கள் மூடப்பட்ட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

குவைத் தமிழ் சோசியல் மீடியா

20/11/2022

குவைத் கிங் ஃபஹத் சாலையில் வாகன விபத்து; குவைத் நகருக்குச் செல்பவர்கள் வேறு சாலைகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது..

குவைத் தமிழ் சோசியல் மீடியா

20/11/2022

குவைத்தில் குடும்ப விசா வழங்குதல் நாளை (21 November 2022) (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடங்கும், குறைந்தபட்ச சம்பள வரம்பு 500 தினார்

குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் குடும்ப விசா வழங்குவதை மீண்டும் தொடங்க உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 500 தினார்களுக்கு குறையாமல் சம்பளம் பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் விஷயத்தில், குடியிருப்பு விவகாரங்கள் துறையின் மேலாளரின் சிறப்பு அனுமதியுடன் சம்பள நிபந்தனைகள் தளர்த்தப்படும்.

பிற நிபந்தனைகள் பின்வருமாறு: தந்தையும் தாயும் தங்கள் குழந்தைகளை அழைத்து வருவதற்கு செல்லுபடியாகும் (இக்காமா) குடியிருப்பு அனுமதியை கொண்டிருக்க வேண்டும்.

அமைச்சரவையின் முந்தைய முடிவின்படி தொழில் வல்லுநர்களுக்கு குறைந்தபட்ச சம்பள வரம்பு பொருந்தாது.

சிரியா - ஈரான் - பாகிஸ்தான் - ஏமன் - வட கொரியா - ஆப்கானிஸ்தான் - ஈராக் ஆகிய நாடுகளுக்கு குடும்ப விசா வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

20/11/2022

குவைத்தில் கடந்த 10 மாதங்களில் 2883 பேர் குடியிருப்பு சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டதாக மனிதவளத்திற்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளது.

மனிதவள ஆணையத்தின் ஆய்வுத்துறை 2022 ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரை 225 களஆய்வு சோதனைகளை மேற்கொண்டதாக மனிதவளத்திற்கான பொது ஆணையத்தின் அதிகாரி டாக்டர். முபாரக் அல் அஸ்மி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள், பிற முதலாளிகளிடம் இக்காமா பதிவு செய்யப்பட்டவர்கள், இக்காமா காலம் முடிந்துவிட்டவர்கள் மற்றும் சிவில் கார்டு இல்லாதவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

20/11/2022

குவைத் இன்றைய 1 தினார் மதிப்பு..

இந்தியா 🇮🇳 மற்றும் இலங்கை 🇱🇰

20 November 2022 / ஞாயிற்றுக்கிழமை

குறிப்பு : பணபரிவர்த்தனை செய்யும் நிறுவனங்களைப் பொருத்து நாணய மதிப்பில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்..

குவைத் தமிழ் சோசியல் மீடியா

20/11/2022

குவைத் மைதான் ஹவல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது, மேலும் குடியிருப்பாளர்கள் அவர்களது கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர், இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

குவைத் தமிழ் சோசியல் மீடியா

20/11/2022

குவைத் மக்கள் தொகை 15 லட்சத்தை தாண்டியுள்ளது.

குவைத் மக்கள் தொகை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. குவைத்தின் மக்கள்தொகை 2016 இல் 1,337,693 இல் இருந்து 2022 இல் 1,502,138 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஐந்தாண்டுகளில் சுமார் 11 வீத அதிகரிப்பாகும்.

2017 இல் 1,370,013 ஆகவும், 2018 இல் 1,403,113 ஆகவும், 2019 இல் 1,432,045 ஆகவும் இருந்தது. குவைத் மக்கள்தொகை 2020 இல் 1,459,970 ஆகவும், 2021 இல் 1,488,716 ஆகவும் அதிகரித்துள்ளது.

2022 மக்கள்தொகையின்படி, நாட்டில் 736,514 ஆண்கள் மற்றும் 765,624 பெண்கள் உள்ளனர்.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

20/11/2022

குவைத்தில் குடும்ப விசாக்கள் வழங்குவது வரும் நாட்களில் மீண்டும் தொடங்கப்படும் என்று என்ற செய்தி வெளியாகியுள்ளது..

குவைத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப விசாக்கள் வழங்குவது விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்றும், இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வரும் நாட்களில் அறிவிப்பை வெளியிடும் என அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் கட்டமாக, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்கப்படும். படிப்படியாக, பெற்றோர் மற்றும் இரத்த உறவினர்களுக்கு விசாக்கள் வழங்கப்படுவது மீண்டும் தொடங்கும். இது அமைச்சகம் வரையறை செய்துள்ள புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு விசா வழங்குவதற்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி தேவைப்படும் நாட்டினரைத் தவிர, வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே விசாக்கள் வழங்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா, ஈரான், பாகிஸ்தான், ஏமன், வட கொரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு விசாவைப் பெறுவதற்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது..

குவைத் தமிழ் சோசியல் மீடியா

17/11/2022

குவைத்தில் கடந்த 50 ஆண்டுகளில் 84 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்..

குவைத்தில் கடந்த 50 ஆண்டுகளில் 84 பேர் தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டில் மரண தண்டனை இன்னும் ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது. நாட்டில் மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் பலர் உள்ளனர்.

குற்றங்களை குறைப்பதற்கான தீர்வு,அதற்கான காரணங்களை எதிர்த்துப் போராடுவதே என்று அவர்கள் வாதிடுகின்றனர். மனித உரிமைகள் மற்றும் தண்டனைகள் பற்றிய அரசியல் விவாதங்கள் நாட்டில் பரவலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குவைத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளில் 20 குவைத் நாட்டவர்களும், 15 பாகிஸ்தானியர்களும் தூக்கிலிடப்பட்டவர்களில் முதன்மையான நாட்டவர்களாக உள்ளனர். மேலும் 7 பேர் குவைத்தில் நேற்று தூக்கிலிடப்படப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

குவைத்தில் மரண தண்டனை மீண்டும் அமலுக்கு வருவதை ஆதரிப்பவர்களும் உண்டு. மரண தண்டனையை நடைமுறைப்படுத்தாதது பலருக்கு கொடூரமான குற்றங்களைச் செய்வதை எளிதாக்குகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர். கொடூர குற்றம் செய்யும் நபர்களால் உயிரின் பாதுகாப்பு கூட கவலைக்கிடமாக உள்ளது என்கிறார்கள்.

மனித உரிமை ஆர்வலர்கள் நீண்டகாலமாக மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக குற்றவாளியை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மனித உரிமை ஆர்வலர்கள் வாதிடுவது தண்டனையின் நோக்கம் குற்றவாளியை சரிசெய்து அவரை நல்ல வழியில் மீண்டும் சமூகத்திற்கு கொண்டு வருவதே ஆகும் என்று தெரிவிக்கின்றனர்.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

17/11/2022

குவைத்திற்கு ஐரோப்பிய நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 24 மயக்க மருந்து மிட்ராகினைன் (திரவ கிராடோம்) அடங்கிய 24 பாட்டில்களை விமான சரக்கு துறையின் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டைரக்டர் ஜெனரலின் அறிவுறுத்தலின்படி சுங்கத்துறையின் பொதுநிர்வாகம் நாட்டிற்கு வரும் ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களும் தவறாமல் ஆய்வு செய்து வருகிறது.

ஐரோப்பிய நாட்டிலிருந்து சரக்கு அனுப்பப்பட்டது குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து, ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். ஏர் கார்கோவில் அனுப்பப்பட்ட பார்சலில் துர்நாற்றம் வீசும் திரவம் அடங்கிய 24 பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பரிசோதனையில், பாட்டில்களில் மிட்ராகினைன் (திரவம்) என்ற மயக்க மருந்து இருந்தது தெரியவந்தது.

சுலைமான் அல் ஃபஹ்த், சுங்கத்துறை பொது நிர்வாகத்தின் தலைமை இயக்குனர், இது போன்ற திரவ kratom கடத்தல் இதுவே முதல் முறை என்று கூறினார்.

கடத்தல் முறைகளை எப்படி மாற்றினாலும், சுங்கத்துறை அதிகாரிகள் கடும் சோதனை நடத்தி வெளியே கொண்டு வருவார்கள் என எச்சரித்தார்.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

17/11/2022

சவுதி அரேபியாவிற்கு 10 நிமிடங்களில் சுற்றுலா விசா; குவைத்துக்கான சவுதி அரேபிய தூதர்

குவைத்துக்கான சவூதி அரேபிய தூதர் இளவரசர் சுல்தான் பின் சாத் அவர்கள், ஆன்லைன் விசா விண்ணப்பம் இதுவரை உம்ராவுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது, தற்போது சுற்றுலா விசாவிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தூதரகத்திற்குச் செல்லாமல் அதிகபட்சமாக 10 நிமிடங்களுக்குள் விசா வழங்கும் வசதியும் உள்ளது. சுற்றுலா பயணிகள் எந்தவித கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் இன்றி நாட்டிற்குள் பயணம் செய்து உம்ரா கடமைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

17/11/2022

குவைத்தில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்துக்குரிய நபர் கத்தியுடன் பள்ளிக்குள் வந்து ஆசிரியரை பயமுறுத்தி தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோவும் வெளியானது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

17/11/2022

குவைத்தில் உள்ள சுலைபியா பகுதியில் ஆய்வு; குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு சட்டத்தை மீறிய 142 கைது..

குவைத்தில் உள்ள சுலைபியா பகுதியில் குடியிருப்பு விவகார விசாரணை பொது நிர்வாகத்தின் சார்பில் கூட்டுக் குழு அதிகாரிகள் கடுமையான சோதனையுடன் ஆய்வு நடத்தினர். குடியிருப்பு விவகார விசாரணை மற்றும் பொதுப் பாதுகாப்புத் துறையின் ஆதரவுடனும், தொடர்புடைய பிற அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் ஆய்வு நடத்தப்பட்டது.

குடியிருப்பு மற்றும் வேலை வாய்ப்பு சட்டத்தை மீறியதற்காக 142 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

17/11/2022

உலக கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை பார்வையிட கத்தார் தலைநகர் தோஹாவை நோக்கி உலகின் பல நாடுகளில் இருந்தும் வருகை தந்து கொண்டிருக்கும் விமானங்கள்..

குவைத் தமிழ் சோசியல் மீடியா

17/11/2022

குவைத்தில் புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறையாக இருக்கும்..

குவைத்தில் புத்தாண்டு விடுமுறை ஜனவரி 1 ஞாயிற்றுக்கிழமை என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அனைத்து அமைச்சகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ விடுமுறை ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 1, 2023 என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், டிசம்பர் 30 மற்றும் 31, வெள்ளி மற்றும் சனி ஆகிய மூன்று நாட்களாக இருப்பதால் இந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறை 3 நாட்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

குவைத்தில் பரிதவித்த தமிழர் மீட்டு தாயகம் அனுப்பி வைத்த "வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை& நலச்சங்கம்"   தமிழகம் கட...
16/11/2022

குவைத்தில் பரிதவித்த தமிழர் மீட்டு தாயகம் அனுப்பி வைத்த "வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை& நலச்சங்கம்"

தமிழகம் கடலூரை சேர்ந்த தினேஷ் என்ற தமிழர் குவைத் நாட்டிற்கு பணிக்காக வந்துள்ளார். பணிபுரியும் இடத்தில் பிரச்சினை வர மூன்று மாத ஊதியமும் கிடைக்காத சூழலில் மன வேதனையுடன் வெளியேறி உள்ளார்.

இவரது நிலையறிந்து ஒரு தமிழர் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கத்தின் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார். தினேஷ் vvtns சங்கத்தை தொடர்பு கொண்டு உதவிட கோரிக்கை
வைத்தார்

இந்திய தூதரகத்தின் மூலம் தாயகம் அனுப்பிட முயற்சிகள் செய்யப்பட்டது. அதனடிப்படையில் தொழிலாளர் நல நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்படி பணித்தது. இது குறித்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் தெரிந்து கொண்டு சங்கத்தை தொடர்பு கொண்டு நிறுவனம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் விசா அடித்துள்ளது அவர் தான் பணிபுரிய மறுத்து வருகிறார் என கூற,

தினேஷ் அந்த நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமும் இல்லை, அவரது மனநிலையும் அதற்கு ஒத்துழைக்காத சூழல். மேலும் தினேஷ் மிகவும் அதிர்ச்சியில் இருந்து வருவதை எடுத்து சொல்லி, தினேஷை தாயகம் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டோம்

சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தினேஷ் பணியாற்றிய நிறுவனத்திடம் பேச பட்டது. எவ்வித வழக்கும் இன்றி தினேசின் உடல் நிலையறிந்து தாயகம் அனுப்பிட நிறுவனம் ஒப்புக்கொண்டது

அதனடிப்படையில், 15.11.2022 அன்று சங்க நிர்வாகிகள் தலைவர் அப்துல் மஜீத், பொருளாளர் திருமா.இருளப்பன், துணை தலைவர் நவ்சாத் அலி, செயற்குழு உறுப்பினர் பாண்டிச்சேரி அப்துல் மஜீத் மற்றும் அய்யப்பன் ஆகியோர் குவைத் விமான நிலையம் சென்று தினேசை நல்ல முறையில் தாயகம் அனுப்பி வைத்தனர். தாயகம் சென்ற நிலையில் நல்ல முறையில் வந்து விட்டதாகவும் சங்கத்திற்கு நன்றியும் தெரிவித்தார்

மேலும் இவ்விசயத்தில் தினேசுக்கு இருக்குமிடம் உணவு உடை கொடுத்து உதவிய செயற்குழு உறுப்பினர் பாண்டிச்சேரியை சேர்ந்த அப்துல் மஜீத் அவர்களுக்கும் எவ்வித வழக்கின்றி அனுப்பி வைத்த நிறுவனத்தாருக்கும், தானிப்பாடி சேக் இஸ்மாயில் அவர்களுக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் சார்பில் பாராட்டும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்

தினேஷ் ராஜிக்கு, சங்கத்தின் உறவுகள் மருத்துவர் ஜான் ரமேஷ் மற்றும் சித்திரை செல்வன் ,தேனப்பன்,காமாட்சி ஆகியோர் இனிப்பு மற்றும் பொருட்களை அன்பளிப்பு வழங்கினர்..

குவைத் தமிழ் சோசியல் மீடியா

முக்கிய அறிவிப்புதமிழகத்தை சேர்ந்த கரீமுல்லாஹ் பர்வானா தபசும் என்பவர் வேலூர் பள்ளிவாசல் தெரு குனவட்டம் கிராமத்தை சேர்ந்த...
15/11/2022

முக்கிய அறிவிப்பு

தமிழகத்தை சேர்ந்த கரீமுல்லாஹ் பர்வானா தபசும் என்பவர் வேலூர் பள்ளிவாசல் தெரு குனவட்டம் கிராமத்தை சேர்ந்தவராவார்

குவைத் நாட்டில் ருமைதியா எனும் பகுதியில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்

11.11.2022 அன்று இரவு அவரது அறையில் வைத்து இறந்து விட்டார்

சந்தேகத்தின் பேரில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்க்கையில் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இறந்து விட்டதாக தகவல் சொல்ல

இது குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கத்தின் மண்டல துணை தலைவர் லெட்சுமாங்குடி நவ்சாத் அலி அவர்களுக்கு ரபீக் நூர் என்பவர் மூலம் உதவிட கோரிக்கை வைத்துள்ளர்

அதனடிப்படையில் இறந்து போன கரீமுல்லாஹ்வின் முதலாளியை நேரில் சந்தித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தினர் பேசினர்

சங்கத்தின் நிர்வாகிகளை வரவேற்ற முதலாளி தனது ஓட்டுனரின் உடல் தாயகம் கொண்டு செல்லும் அனைத்து செலவுகளும் ஏற்று கொள்வதாகவும் கூறினார்

அது மட்டுமின்றி கரீமுல்லாஹ் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு மாத மாதம் பணம் அனுப்புவேன் எனவும் இது குறித்து இறைவனை சாட்சியாக்கி கொள்கிறேன் என்றும் உள்ளம் உருகி கூறியதோடு மட்டுமின்றி தலைவர் அப்துல் மஜீத் மற்றும் பொருளாளர் திருமா இருப்பனிடம் இந்திய தொகை 60 ஆயிரத்து 820 ரூபாய் கொடுக்க கரீமுல்லாஹ் மனைவி பெயருக்கு அனுப்பி வைக்க பட்டது தன் ஓட்டுனர் இறந்தது தனது வீட்டில் ஒருவர் இறந்ததாக கருதவதாக கூறியது உள்ளம் நெகிழச் செய்தது

இவரை போன்ற அரபியர்களை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும் வாழ்த்த வேண்டும் அவர்களது குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்திட வேண்டும்

மேலும் 14.11.2022 அன்று இந்திய தூதரக அதிகாரி முன்னிலையில் சீலிட்டு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலசங்கம் மற்றும் குவைத் தமிழ் சோசியல் மீடியா சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தி விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கபட்டது

15.11.2022 அன்று சென்னைக்கு வந்த கரீமுல்லாஹ்வின் உடலை பெற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும் இராம நாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி MP அவர்கள் மூலம் மிக விரைவாக விமான நிலைய சட்ட பூர்வ நடவடிக்கை முடிக்க பட்டு அவரது குடும்பதாரிடம் ஒப்படைத்து ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி இல்லம் வரை மாநில அமைப்பு செயலாளர் திண்டிவனம் நூருல்லாஹ் அவர்கள் கொண்டு சேர்த்து அங்கு குடும்பத்தார் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலியிலும் கலந்து கொண்டு ஆறுதல் கூறி விட்டு வந்தார்

செய்தி

பக்ருதீன் & சரவணன் & பிலால்
ஊடக செயலாளர்கள்
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கம்,
குவைத் மண்டலம்

குவைத் தமிழ் சோசியல் மீடியா

14/11/2022

குவைத்திற்கு வரும் பயணிகளுக்கான உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குவைத்திற்கு லெபனான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் உணவுப் பொருட்களை கொண்டு வராமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுங்கத்துறை பொது நிர்வாகத்தின் விமான சரக்கு (Air Cargo) துறையின் இயக்குனர் முத்தலாக் அல் அன்சி இதனை தெரிவித்துள்ளார். இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் புதிய (fresh) , உறைந்த (frozen) அல்லது இனிப்புகள் உட்பட எந்த வகை உணவையும் கொண்டு வரக்கூடாது.

கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளில் பரவி வரும் காலரா குவைத்துக்குள் நுழையாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

14/11/2022

*✈️ ெளிநாட்டுக்காரன் ✈️*✈✈✈

இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு,

👉ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.

👉நாம சாப்பிட்ட, குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுகி வைக்க வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.

👉 எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று குறை சொல்லக்கூடாது என்றும் படித்தது இங்கேதான்.

👉 இன்று பிரிட்ஜில் வைத்து நாளை சூடாக்கி சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது என்று படித்ததும் இங்கேதான்.

👉 வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவும், உறங்கவும் படிச்சது இங்கேதான்.

👉சத்தம் இல்லாமல் கதவை திறக்கவும் மூடவும் படித்தது இங்கேதான்.

👉 தனது கனவு தேவதையாக தலையணையை கட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான்.

👉 பொறுமை என்ற 3 எழுத்திற்கு அர்த்தம் என்ன என்பதை படித்ததும் இங்கேதான்.

👉எவ்வளவு கும்மிரட்டிலும் ரூமில் உறங்குப வர்களுக்கு தொந்தரவு செய்யாமல் ஆடை அணியவும், சாப்பாடு சாப்பிடவும் படித்தது இங்கேதான்.

👉 நூறு கிடைத்தாலும் பத்து ரூபாய் கடன் வாங்கி 110 ஆக நாட்டுக்கு அனுப்ப படித்ததும் இங்கேதான்.

👉மின்சாரத்தையும், தண்ணீரையும், சோப்பையும், பற்பசையையும் சிக்கனமாக உபயோகிக்க படித்ததும் இங்கேதான்.

👉பள்ளிக்கூடத்தில்
10 அல்லது 15 வருடங்களில் படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான்.

👉வாழ்க்கையில் இன்ப துன்பங்களை தாங்கி வாழ பழகி படிச்சதும் இங்கேதான்.

👉சொந்தமாக ஒரு சாயா கூட போட தெரியாதவன் வெளிநாட்டுக்கு வந்து ரெண்டு மூணு மாதங்களுக்குள் பிரியாணியும் கப்சாவும் போட படித்ததும் இங்கேதான்.

👉உலகத்தில் எங்கேயும் படிக்க கிடைக்காத பொருளாதார சாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான்.

👉தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூடு, மஞ்சப்பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ஆகியவை சூடாக்கிய எண்ணெயில் போட்டு வதக்கி மீன் போட்டால் மீன் குழம்பும், சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும், மட்டன் போட்டால் மட்டன் குழம்பும், மோர் ஊற்றியால் மோர் குழம்பும் ஒன்றும் போடவில்லை என்றால் அது தக்காளி குழம்பும் என்கிற வெளிநாட்டு வித்தையை வேற ஏதாவது யுனிவர்சிட்டிலோ அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ படித்திருக்க முடியுமா❓

வெளிநாட்டு வாழ்க்கை,
அது ஒரு கதை. யாரும் சொல்லாத கதை.

*சொல்ல மறந்த கதை.*
*வெளிநாட்டுக்காரர்களை வாழ்த்துகிறேன்.* நானும் உங்களில் ஒருவன் என்று பெருமை கொள்கிறேன்.

🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️

குவைத் தமிழ் சோசியல் மீடியா
Beer Mohamed

14/11/2022

குவைத் இந்திய தூதரகத்தின் ஓபன் ஹவுஸ் மீட்டிங் 16ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

குவைத் இந்திய தூதரக ஓபன் ஹவுஸ் 16 நவம்பர் 2022 புதன்கிழமை அன்று இந்திய தூதரகத்தில் காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறும்.

குவைத்தில் உள்ள அனைத்து இந்திய நாட்டவர்களும் கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில், ஓபன் ஹவுஸில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

பாஸ்போர்ட், பாஸ்போர்ட் எண், சிவில் ஐடி எண் மற்றும் குவைத்தில் உள்ள தொடர்பு எண் மற்றும் முகவரி.[email protected] என்ற மின்னஞ்சல் முகவரி போன்ற முழுப் பெயரையும் முன்கூட்டியே அனுப்பலாம்.

குவைத் தமிழ் சோசியல் மீடியா

Address

Kuwaitcity

Alerts

Be the first to know and let us send you an email when Tamilans In Kuwait posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilans In Kuwait:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share