Aadvantv

Aadvantv news

12/09/2023
21/08/2023

விழுப்புரம் ஹனுமான் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை அண்ணா மேம்பாலத்தில், நுங்கம்பாக்கம் நோக்கி இறங்கும் பகுதியில் மாநகர போக்குவரத்துக்கு கழக பேருந்து இடித்ததால் சேதம...
22/07/2023

சென்னை அண்ணா மேம்பாலத்தில், நுங்கம்பாக்கம் நோக்கி இறங்கும் பகுதியில் மாநகர போக்குவரத்துக்கு கழக பேருந்து இடித்ததால் சேதமடைந்த பகுதியினை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டதின்படி சேதமடைந்த பகுதி நெடுஞ்சாலைத் துறை மூலம் உடனடியாக சரி செய்யப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்கள் ஆதிதிராவிடர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன் ஐஏஎஸ் அவர்கள் திடீர...
22/07/2023

காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்கள் ஆதிதிராவிடர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன் ஐஏஎஸ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்

முதியோர் உதவித்தொகை (OAP) 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அ...
22/07/2023

முதியோர் உதவித்தொகை (OAP) 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு மேல்மலையனூர் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி அருள்மிகு  அங்காளபரமேஸ்வரி அன்னை ஆலயத்தில் 2...
22/07/2023

ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு மேல்மலையனூர் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அன்னை ஆலயத்தில் 250001 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

ஆடிப்பூரபெருவிழாவை முன்னிட்டு  மேல்மருவத்தூரில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மதிப்பிற்குரிய தமிழிசை சௌவு ந்தர்ராஜன்  கருவற...
22/07/2023

ஆடிப்பூரபெருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மதிப்பிற்குரிய தமிழிசை சௌவு ந்தர்ராஜன் கருவறையில் உள்ள சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேகம் செய்தார்

தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், 7ஆவது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பை போட்டிகள் தொடர்...
21/07/2023

தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், 7ஆவது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பை போட்டிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்

தமிழ்நாடு முதலவர்  அவர்களை தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரும், சட்டமன்ற உறுப...
21/07/2023

தமிழ்நாடு முதலவர் அவர்களை தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.IDream R Murthy MLA , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர்கள், தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர், செயற்குழு உறுப்பினர், பொருளாளர், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருள்மிகு மங்களாம்பிகை சமேத  கிருபாபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அ...
21/07/2023

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருள்மிகு மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்
சந்தன காப்பு அலங்காரம்,,மலர் அலங்காரம் செய்யப்பட்டு வளையல்கள் அணிவிக்கப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது

விழுப்புரம் எடத்தெரு ஸ்ரீ ஏழை மாரியம்மன் திருக்கோவில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம்
21/07/2023

விழுப்புரம் எடத்தெரு ஸ்ரீ ஏழை மாரியம்மன் திருக்கோவில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம்

15/07/2023

*நேற்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 செயற்கைக்கோள் திட்ட இயக்குனர் முனைவர் பி.வீரமுத்துவேல் தான் வளர்ந்து வந்த பாதையை விளக்குகிறார். இறுதிவரை கேளுங்கள்.🙏*

விழுப்புரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது
12/07/2023

விழுப்புரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பி.செந்தில்குமா...
12/07/2023

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பி.செந்தில்குமார், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M. K. Stalin அவர்கள், எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்த...
12/07/2023

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M. K. Stalin அவர்கள், எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் 10 தளங்களுடன் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதலமைச்சர்* திரு.M. K. Stalin அவர்கள்* *தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்க...
12/07/2023

தமிழ்நாடு முதலமைச்சர்* திரு.
M. K. Stalin அவர்கள்* *தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் உயர்கல்வி பயிலும் 100 மாணவர்களுக்கு DBS வங்கியின் சமூக பொறுப்பு* *நிதியிலிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 25 இலட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 5 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்

*முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.276.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ...
12/07/2023

*முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.276.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.56.31 கோடி மதிப்பீட்டிலான மனை மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்*

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M. K. Stalin அவர்களை, CREDAI அமைப்பினர் சந்தித்துப் பேசினார்கள்
12/07/2023

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M. K. Stalin அவர்களை, CREDAI அமைப்பினர் சந்தித்துப் பேசினார்கள்

( திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு கேரளா)   ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில்   ஜூலை 16 நடை திறப்புதிருவனந்தபுரம் கேரளா ஜூல...
12/07/2023

( திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு கேரளா)

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் ஜூலை 16 நடை திறப்பு

திருவனந்தபுரம் கேரளா ஜூலை 12/2023
சபரிமலை
சபரிமலைக் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது,
ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். மேலும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும்.
வரும் 16 ஆம் தேதி ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நடையை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். பிறகு கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அன்று மற்ற சிறப்புப் பூஜைகள் நடைபெறாது. ஆடி மாதப் பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். ஜூலய் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ் ரகலசாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். 21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்குக் கோவில் நடை அடைக்கப்படும்.
பக்தர்கள் வழக்கம் போல ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. தவிர பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திண்டிவனம் அடுத்த தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 7ம் நாள் உற்சவத்தில் கிராம மக்கள் 10...
01/05/2023

திண்டிவனம் அடுத்த தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 7ம் நாள் உற்சவத்தில் கிராம மக்கள் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
உற்சவர் பொய்யாமொழி விநாயகர் பிறை சந்திரனில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனூரில் அமைந்துள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் கடந்த 25ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. 7ம் நாள் நிகழ்ச்சியான இன்று காலை உற்சவர் பிறை சந்திரனில் அமர்ந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உற்சவர் முன் செல்ல கிராம மக்கள் 1008 பால் குடங்களை தலையில் சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பால்குடங்கள் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீர் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மிகவும் அவசரம்  அனைவருக்கும்  பகிருங்கள்விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லூம் போது எனக்கு  முன் இருசக்கர வாகனத...
30/04/2023

மிகவும் அவசரம் அனைவருக்கும் பகிருங்கள்

விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லூம் போது எனக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்றவரின் மணிபர்ஸ் கீழே விழுந்தது நான் எடுத்து விட்டு பின் தொடர்த்தேன் அவரை பிடிக்க முடியவில்லை
அதை திரந்து பார்க்கும் பொழுது ஏ.டி.எம் கார்டுகள், ஒரிஜினல் ட்ரைவிங் லைசன்ஸ் ,மற்றும் ஆதார், பேன், போன்று பல ஆவணங்களும் 300,ரூபாய் பணமும் இருந்தது
அவை அனைத்தும் இப்பொழுது விழுப்புரம் மந்தகரையில் உள்ள நமது அலுவலகத்தில் இருக்கிரது இவரை தெரிந்தவர்கள் நமது குழுவில் இருந்தால் என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்கள் 096264 60605

அவரின் பெயர் :செ.ஸ்டீவாருபன்
S.Stevaruban
முகவரி :1/213.புத்திரன் வீடு,ஈருடையாம்பட்டு,விழுப்புரம்
தமிழ்நாடு-605702

கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து தொடர் முழுக்க போராட்டம்காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்...
21/04/2023

கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து தொடர் முழுக்க போராட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் எம் பி பதவியை பறித்து ஜனநாயகத்தை படுகொலை செய்ததாக பி.ஜே.பி மத்திய மோடி அரசை கண்டித்து

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக தொடர் முழுக்க போராட்டமாக மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் கள்ளக்குறிச்சி தபால் நிலையம், BSNL அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசேலத்தார் P.S. ஜெயகணேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.

வரவேற்புரை கள்ளக்குறிச்சி நகர தலைவர் குமார் அவர்கள்

*மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, இளவரசன், கள்ளக்குறிச்சி நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், கள்ளக்குறிச்சி வடக்கு வட்டார தலைவர் அசோக்குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், சின்னசேலம் வடக்கு வட்டார தலைவர் தனபால், கலை பிரிவு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மாதேஸ்வரன்* ஆகியோர் முன்னிலையில்

*மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ்* கண்டன கோசங்கள் எழுப்பி *தபால் அலுவலகம் வாசலில் கீழே அமர்ந்து தர்ணா செய்தனர்*.

இந்தப் போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட *தலைவர் தனபால், முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளையராஜா, மாவட்டத் துணைத் தலைவர்கள் முனைவர் சீனிவாசன், சங்கராபுரம் இதயத்துல்லா, ஏபி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்*.

மத்திய அரசு அலுவலகமான *தபால் நிலையம்* முற்றுகையிடும் போராட்டத்தில் *மகிளா காங்கிரஸ் மாநில நிர்வாகி மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் பவுனாம்பாள், ராஜேஸ்வரி, அஞ்சலை, வட்டார தலைவர்கள் கிருபானந்தம் கேவிசி.முனியப்பன், ஜெயகுமார், உடையநாச்சி மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், நகர நிர்வாகிகள் கோவிந்தராஜ் சாந்தி பூசன், ராஜ்குமார், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கௌதம், நசீர், ராதாகிருஷ்ணன், கோடீஸ்வரர், ராஜீ, கையூம்பாஷா, பாண்டியன், ஜோதிவேல், நிஷார், பழனிவேல், மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த ராமலிங்கம், கோட்டை விஜயகுமார், ராமு உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்*.

மயிலம் வடக்கு ஒன்றியம் தீவனூர் கிராமத்தில் திமுக ஒன்றிணைவோம் வா சிறப்பு முகாம்.திண்டிவனம்,ஏப்:21விழுப்புரம் மாவட்டம் மயி...
21/04/2023

மயிலம் வடக்கு ஒன்றியம் தீவனூர் கிராமத்தில் திமுக ஒன்றிணைவோம் வா சிறப்பு முகாம்.

திண்டிவனம்,ஏப்:21
விழுப்புரம் மாவட்டம் மயிலம் வடக்கு ஒன்றியம் தீவனூர் ஊராட்சியில் திமுகவின் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் ஒன்றிணைவோம் வா சிறப்பு முகாம் மயிலம் தொகுதி பொறுப்பாளர்
மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு தலைமையில் நடைப்பெற்றது.முகாமிற்கு மயிலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன்,மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி குமரேசன்,ஒன்றிய கவுன்சிலர்கள் பரிதா சம்சுதீன்,உமா ஞானசேகர்,ராஜபாத்,சரசு ஆறுமுகம் ஒன்றிய அவைத்தலைவர் சேகர்,மாவட்ட பிரதிநிதிகள் தீவனூர் சேகர்,சிவானந்தம்,ஞானசேகர், ஊராட்சி செயலாளர் இராம முனியாண்டி மற்றும் திமுக நிர்வாகிகள் பாஸ்கர்,ராம்குமார்,கருணாநிதி,தெய்வக் கண்ணன் பிரபு,அன்புசேகர்,விஜயகுமார்,பழனிவேல்,ராஜா,காந்தி,நாராயணன்,சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்,
மயிலம் வடக்கு ஒன்றியம் தீவனூர் ஊராட்சியில் நடைபெற்ற திமுகவின் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் ஒன்றிணைவோம் சிறப்பு முகாமில் மயிலம் தொகுதி பொறுப்பாளர் மாணவர் அணி இணைச் செயலாளர் ஜெரால்டு முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் சேரும் போது எடுத்த படம் உடன் மயிலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன்,மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன்

அதிமுக பொதுச்செயலாளராக  எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை தேர்ந்தெடுத்தது செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம்  அங்கீகரித்த நி...
20/04/2023

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை தேர்ந்தெடுத்தது செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில் மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் B.A.B.L* அவர்களின் ஆலோசனைப்படி செஞ்சி கிழக்கு ஒன்றியம் அப்பம்பட்டு பகுதியில் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் க.சோழன் B.Tech MBA அவர்களின் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் இதில் ஒன்றிய பொருளாளர் நாராயணன் ஒ.துணை செயலாளர் ரங்கநாதன் மாவட்ட பிரதிநிதி ரங்கநாதன் ஒன்றிய கவுன்சிலர் துரை ஒ.சிறுபான்மை பிரிவு செயலாளர் பரான் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன் இளைஞரணி ஜெயபிரகாஷ் பாசறை செயலாளர் தமிழ்செல்வன் மாவட்ட பாசறை சூரியபிரகாஷ் கிளை செயலாளர்கள் கோவிந்தன், காசிவேல், நாகராஜ் சக்திவேல், கனகராஜ், சக்தி மற்றும் சையத் காதர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேல்மருவத்தூர்: ஏப்ரல்_19,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரிடம் மத்திய அரசின் உணவு...
19/04/2023

மேல்மருவத்தூர்: ஏப்ரல்_19,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரிடம் மத்திய அரசின் உணவு கூடத்திற்கான
ஈட் ரைட் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உருவாக்கி ஆன்மிகப் பணி, சமுதாயப் பணி மற்றும் அன்னதானத்தையும் சிறப்பாகவும் செம்மையாகவும் செய்து வருகிறார்.

சித்தர் பீடத்தில் விழா நாட்களில் ஐந்தாயிரம் பக்தர்கள் அமர்ந்து உணவு அருந்தக்கூடிய அன்னதான கூடம் உயரிய முறையிலும் சுகாதாரமான முறையிலும் செயல்பட்டு வருகிறது.

சித்தர் பீடம் வந்து செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரம், சுத்தம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட சுவையான உணவு பிரசாதங்கள் வழங்கி வரும் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் உணவு கூடத்திற்கு ஈட் ரைட் என்னும் தரச் சான்றிதழை இந்திய அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தினரால் வழங்கப்பட்டது.

இந்த தரச் சான்றிதழினை இன்று காசா டெக் சொல்யூஷன் நிறுவனத்தின் தணிக்கை குழு நிர்வாக அதிகாரி மோகன் ராகவேந்திரன்,ஆன்மிக குரு பங்காரு அடிகளாரிடம் வழங்கினார்.

அதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், அறநிலையத்தின் அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ், உணவு கூட மேலாளர் கணேசன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

மாண்புமிகு  முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை லண்டனில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை டி-20 சக்கர நாற்...
18/04/2023

மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை லண்டனில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை டி-20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் கேப்டனும், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் கீழசெல்வனூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் திரு. வினோத்பாபு அவர்கள் சந்தித்து, வெற்றிக் கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்

தென்காசி மாவட்டம், இலஞ்சி, இராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட சமூக நலன் ( ம) மகளிர் உரிமைத்துறை மற்றும...
18/04/2023

தென்காசி மாவட்டம், இலஞ்சி, இராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட சமூக நலன் ( ம) மகளிர் உரிமைத்துறை மற்றும் இளைஞர் நலன் ( ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணைந்து (18.04.2023) நடத்திய பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான்-2023 போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப.அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட...
18/04/2023

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில்
மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. இதே போன்று தென்காசி மாவட்ம் தென்காசி புதிய பேருந்து நிலையம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குழந்தைகளின் வருகையை கணக்கில் கொண்டு பிரதான மையங்களை மினி மையமாக மாற்றுவதையும், மினி மையங்களை பிரதான
மையங்களோடு இணைப்பதையும் கைவிட வேண்டும்.
ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை, அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் சேர்த்து பார்ப்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். அதனை சரி செய்திட வேண்டும். உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பல்வறு மாவட்டங்களில் வழங்கப்படாமல் உள்ள மினி மைய .
ஊழியர்களுக்கு எந்த விதமான நிபந்தனைகள் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். பத்து ஆண்டு பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தைக் கை விட வேண்டும். 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வை
உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டேவிட் பாக்கியராணி
தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் மணிமேகலை ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கமளித்து பேசினார். இதில் ''ரெஜினா பொன்மலர் சித்ரா மலைய பகவதி காளியம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசின் கவனத்தை ஏற்கின்ற வகையில் சிறப்புரையாற்றினார்கள்.
பாபி, சாந்தி பாக்யம், சந்தனமாரி, தங்கமலர், மகாலெட்சுமி, சுபா, விஜி, உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Address

25. Rajagopal Street
Villupuram

Telephone

+919626460605

Website

http://aadvantv.com/, http://aadvantv.com/

Alerts

Be the first to know and let us send you an email when Aadvantv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like