AMBUR TIMES

AMBUR TIMES AMBUR TIMES is FREE NEWS PAPER -LOCALITY BASED, AMBUR TIMES circulated most of HOUSES, RETAIL SHOP

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேர் கைது.4 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் பறி...
05/12/2023

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேர் கைது.4 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.

வாணியம்பாடி, டிச.5- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் பகுதியை சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் அஸ்லாம் பாஷாவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இது குறித்து அஸ்லாம்பாஷா அளித்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து வழிப்பறி கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் போலீசார் வெங்கிலி பகுதியில் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மூவரும் வாணியம்பாடி
கோனாமேடு பகுதியைச் சேர்ந்த பசுபதி, மாதவன், வசந்த் என்பதும், இவர்கள் மூவரும் தொடர்ந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்போரை குறி வைத்து செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நான்கு செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்ப்பட்ட 3 பேரை போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

20/11/2023
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் பணியில் இருக்கும் போது மாரடைப்பால் இறந்து தலைமை காவலர் முரளி என்பவர் வீ...
13/11/2023

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் பணியில் இருக்கும் போது மாரடைப்பால் இறந்து தலைமை காவலர் முரளி என்பவர் வீட்டிற்க்கு வேலூர் சரக காவல் துறை துணை தலைவர் முத்து சாமி , திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

12/11/2023
ஆம்பூரை சார்ந்த தலைமை காவலர் முரளிபணியில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் இது காவல்துறையினர் மத்தியி...
11/11/2023

ஆம்பூரை சார்ந்த தலைமை காவலர் முரளி
பணியில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்

இது காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இவர் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக்கொள்கிறோம்...

11/11/2023

தீபங்களை ஏற்றி அதில் வரும் ஒளியின் மூலமாக இருள் விலகும்.
அது போல நம் மனதிலுள்ள தீமை என்னும் இருள் நீங்கி நன்மை என்னும் பிரகாச ஒளிபெற தீபாவளியை கொண்டாடுகிறோம். தீபாவளி அன்று கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார்  சொகுசு பேருந்தும், அரசு சொகுசு பே...
11/11/2023

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்தும், அரசு சொகுசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 64 பேர் காயம் அடைந்துள்ளனர் இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.*

*மேலும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.*

ஆம்பூர் அருகே அழிஞ்சிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், "தமிழ்க்கூடல்" நிகழ்வுவேலூர் மாவட்ட...
09/11/2023

ஆம்பூர் அருகே அழிஞ்சிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், "தமிழ்க்கூடல்" நிகழ்வு

வேலூர் மாவட்டம், அழிஞ்சிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், "தமிழ்க்கூடல்" நிகழ்வும், அழிஞ்சிகுப்பம், வாசுகி அறக்கட்டளை"" மூலம் பள்ளியில் காலாண்டுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான 60 மாணவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் ஜெஸ்ஸி கிளாடியஸ்
அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் திரு. அமானுல்லா அவர்கள் தலைமையுரை ஆற்றினார். சிறப்புரையாக அரூர் பகுதியைச் சார்ந்த திரு.எ.கொ.அம்பேத்கார் அவர்கள்,"வானம் தொட்டுவிடும் தூரம்" என்னும் தலைப்பில் மாணவர்களுக்குச் சிறப்புரை ஆற்றினார். அறக்கட்டளையைச் சார்ந்த திருமதி. மீரா அவர்கள் நூல்களைப் பரிசளித்தார். பள்ளியின் முதுகலை ஆசிரியர் முருகவேல் நன்றியுரை தெரிவித்தார்.

ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி ?பிளாஸ்டிக் அரிசியா அல்லது தரமற்ற கலப்பட அரிசியா?வேறு யாரேனும் சுற்று வட்டாரத்தில் இது ...
05/11/2023

ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி ?

பிளாஸ்டிக் அரிசியா அல்லது தரமற்ற கலப்பட அரிசியா?
வேறு யாரேனும் சுற்று வட்டாரத்தில் இது போல கவனித்தீர்களா ?

29/10/2023

நாள் 30/10/2023

மேல்கொத்தகுப்பம் கிராமத்தில் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஊர் இளைஞர்கள் உதவியுடன் பேர்னாம்பட்டு வனத்துறையினர் கிணற்றில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.....
அதனை வீடியோவாக கான முழு வீடியோவையும் பாருங்கள்

#ஆம்பூர்

நாள் 30/10/2023 மேல்கொத்தகுப்பம் கிராமத்தில்  3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஊர் இளைஞர்கள் உதவியுடன் பேர்னாம்பட்டு வனத்த...
29/10/2023

நாள் 30/10/2023

மேல்கொத்தகுப்பம் கிராமத்தில் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஊர் இளைஞர்கள் உதவியுடன் பேர்னாம்பட்டு வனத்துறையினர் கிணற்றில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.....

மேல்கொத்தகுப்பம் கிராமத்தில் உள்ள கிணத்தில் இருக்கும் மலைப்பாம்பு
29/10/2023

மேல்கொத்தகுப்பம் கிராமத்தில் உள்ள கிணத்தில் இருக்கும் மலைப்பாம்பு

எத்தனை பேருக்கு இது மாதிரி அலர்ட் வந்தது ?குறிப்பு: இது அவசர காலங்களில் மக்களுக்கு முன் அறிவிப்புகள் அனுப்ப இந்திய அரசால...
20/10/2023

எத்தனை பேருக்கு இது மாதிரி அலர்ட் வந்தது ?

குறிப்பு: இது அவசர காலங்களில் மக்களுக்கு முன் அறிவிப்புகள் அனுப்ப இந்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வசதி. உங்கள் கருத்து ??

இந்திய நிலப்பரப்பை விட்டு முற்றிலும் விலகியது தென் மேற்கு பருவமழை..வட கிழக்கு பருவ மழை விரைவில் ஆரம்பிக்கும் ..அதை அதிகா...
19/10/2023

இந்திய நிலப்பரப்பை விட்டு முற்றிலும் விலகியது தென் மேற்கு பருவமழை..

வட கிழக்கு பருவ மழை விரைவில் ஆரம்பிக்கும் ..அதை அதிகாரப்பூர்வமாக இந்திய வானிலை மையமும் அறிவிக்கும்..

வட கிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தின் நாகப்பட்டினம்,காரைக்கால்,புதுச்சேரி,செங்கல்பட்டு,திருவள்ளூர்,கடலூர்,மயிலாடுதுறை உட்பட வட கடலோர மாவட்டங்களில் தான் அதிக மழை பொழிவு இருக்கும்.. நெல்லை,இராமநாதபுரம்,தூத்துக்குடி மாவட்டங்களின் வருடமழையில் 80 % இந்த காலத்தில் தான் பெறும்...

வடமேற்கு பகுதியில் இருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் தான் தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவத்தில் குறைவாக மழை பெய்யும் மாவட்டம் ஆகும்..

வேலூர் மண்டலத்தில் இந்த வட கிழக்கு பருவ மழை 2023 எப்படி இருக்கும் என்ற கணிப்பு நாளை வெளியிடப்படும்..

நன்றி : வேலூர் மண்டல வானிலை மற்றும் செய்திகள் Vellore Regional weather and News

விஜய் ரசிகரின் பதிவு முகநூலில் இருந்து பகிர்ந்தது"இது வேணாம் விஜய்னா"பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ டிரைலர்நல்லாவே இரு...
08/10/2023

விஜய் ரசிகரின் பதிவு முகநூலில் இருந்து பகிர்ந்தது

"இது வேணாம் விஜய்னா"
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ டிரைலர்நல்லாவே இருந்தது, சரி,நடுவில் அந்த வார்த்தை ஏன்? படத்தில் இந்த வசனம் பீப் ஆகப் போகிறது என நான் அறிவேன்,ஆனால் இந்த டிரைலரில்? ஏன்?
முன்பு ஒரு முறை "டுபுக்கு" என வடிவேலு ஒரு டையலாக் பேசியது நினைவு வரும்,அந்த வார்த்தை கூட வேறு வார்த்தையைத் திருப்பி போட்டது தான்,இன்று அந்த வார்த்தை எவ்வளவு பேமஸ் என்பது நான் சொல்லத் தேவையில்லை.
சர்வசாதாரணமாகக் குழந்தைகள் அதைச் சொல்கிறார்கள்,ஒரு முறை ஒரு திருமண வீட்டில் நான் பார்த்தது, கணவன் மனைவி பேசிட்டு இருக்க ஏதோ விளையாட்டாகப் பேசுவது போல அவர்களது மகன் சந்திரமுகியில் "ஒருத்தனுக்கு எந்திரிக்கவே வக்கு
இல்லையாம்...." டைலாக்கை அந்த சபையிலே சொல்லிவிட்டான்,ஒரு நிமிஷம் ஆடிதான் யோய்டோம்.நிச்சம் அதைப்
பொருள் புரிந்து சொன்னது அல்ல. ஆனால்அது திரு வடிவேலு மற்றும் திரு ரஜினி இருவரும் குழந்தைகளிடம் ஏற்படுத்திய தாக்கம் .

படத்தில் வரும் தவறான
விஷயங்கள்/நடவடிக்கைகள் இது தவறு என்பதை வலியுறுவதாக இருக்க வேண்டுமே தவிர Potential or Vulnerable Sect-ஐ ஈசியாக பாதிப்பதாகவோ/ Normalise செய்யும்படியோ அமைந்துவிடக்கூடாது. இயக்குநர் லோகேஷ் மீது பெரிய மதிப்பு உண்டு எனக்கு,படத்தில் இது முக்கியமான இடமாக இருக்கும் என்றே முழுமையாக நம்புகிறேன்,அப்படி இருந்தும் படத்தில் பீப் ஆகப் போகும் வசனம் இங்க அவசியம் இல்லை என நினைக்கிறேன். உங்கள் முதல் படமான மாநகரம் படத்தில் சென்னையில் ரொம்ப கேஷ்வாலாக
பேசப்படும் ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி.ஏன் இதை நார்மைலஸ் ஆனது எனக் கேட்ட நீங்கள் வச்ச வசனம் இன்னும் நினைவில் அப்படியே இருக்கிறது, அதே லோகேஷ் தான் இந்த வசனத்தை வைத்தாரா? என சோசிக்க வைக்கிறது! தமிழ்நாட்டை பொருத்தமட்டில் "Vijay is more than a Star"✨
அதானால் தான் சொல்கிறோம் "இது வேணாம் விஜய்னா"

Vellore airport to become operational soon வேலூர் விமான நிலையத்தில் விமானத்தை இயக்கி சோதனை90 சதவீதம் பணிகள் நிறைவு, இந்த...
05/10/2023

Vellore airport to become operational soon வேலூர் விமான நிலையத்தில் விமானத்தை இயக்கி சோதனை

90 சதவீதம் பணிகள் நிறைவு, இந்த ஆண்டு இறுதியில் விமான சேவை தொடங்க நடவடிக்கை

வேலூருக்கு ஆங்கிலயர் காலத்தில் 1934 ஆம் ஆண்டு தொடங்கபட்ட விமான ஓடு தளம், ஆங்கிலயர் காலத்திலே வேலூர் முக்கியமான நகரம், வேலூர் மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் நினைத்து இருந்தால், தமிழ் நாட்டில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரம் ஆகிருக்கும் வேலூர், ஆனால் அவர்கள் அனைவரும் சென்னை மற்றும் பெங்களூரு நகரை முன்னேற செய்தனர்

Vellore Airport To Become Operational Soon, Preliminary Tests Complete

Long-pending Vellore Airport at Abdullapuram in Tamil Nadu will be operational soon after the completion of subsequent tests.

Hope 20 seater flight will be pushed to big flights by flight operator's while they realise the potential of Vellore 🙏

Chennai & Bangalore cities are easily accessible via road and train from Vellore, requesting AAI to analyse the Kolkatta, Itanagar, Ranchi, Dhaka(International ), Bhuveneswar, Cochin, Thiruvanthapuram ,Delhi & Hyderabad routes which lures more floating population to Vellore for medical treatment and higher education

News credit # Malai முரசு

#வேலூர்

நீங்களே கூறுங்கள் நான் என்ன சொல்ல....!?
05/10/2023

நீங்களே கூறுங்கள் நான் என்ன சொல்ல....!?

05/10/2023

எப்பொழுது கூத்தாடிகள் பின் செல்வதை நிறுத்துகின்றனரோ அப்பொழுது தான் நம் தமிழ்நாடு உருப்படும் இதை நாங்கள் இந்த நிகழ்வுக்காக பதிவிடவில்லை நம் தமிழகத்தில் அன்றிலிருந்து இன்று வரை கூத்தாடிகளின் பிடியில் இளைஞர்கள் சிக்கி வாழ்கையை அழித்துகொண்டுள்ளனர்......

26/09/2023

பச்சகுப்பம் பாலாறு இன்று மழை மேலும் தொடர்ந்தால் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

26/09/2023

சிறு வலையில் மாட்டிய பெரிய மீன்.....

26/09/2023

வேலூர் மற்றும் திருப்பத்தூர் விவசாய மக்களின் மனநிலை: மழை வேண்டாம். வேர்கடலை அறுவடை இருக்கிறது.

பல்வேறு கிராமங்களில் வெகு விமர்சியாக நடைபெற்ற புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை உற்சவம்......இடம் : மேல்கொத்தகுப்பம்
23/09/2023

பல்வேறு கிராமங்களில் வெகு விமர்சியாக நடைபெற்ற புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை உற்சவம்......

இடம் : மேல்கொத்தகுப்பம்

படிப்பு வாசனையோடு 📖பூக்களின் வாசனையும் 🌺சேர்ந்து பயணிக்கிறதுநெடுஞ்சாலை நெடுகிலும்🚶.🚶............✍️ #எண்ணும்_எழுத்தும்_கண...
13/09/2023

படிப்பு வாசனையோடு 📖
பூக்களின் வாசனையும் 🌺

சேர்ந்து பயணிக்கிறது
நெடுஞ்சாலை நெடுகிலும்🚶.🚶............✍️

#எண்ணும்_எழுத்தும்_கண்ணெனத்_தகும்

இத்தனை வருடங்கள் அமைதியாக நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு  இவ்வளவு கெடுபிடி காட்டுவது எல்லாம் அரசியல்  சூழ்ச்சி ப...
13/09/2023

இத்தனை வருடங்கள் அமைதியாக நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இவ்வளவு கெடுபிடி காட்டுவது எல்லாம் அரசியல் சூழ்ச்சி போல் உள்ளது...

இதற்கு பேசாமல் நீங்கள் விநாயகர் சிலை வைக்க கூடாது என நேரடியாகவே கூறிவிடலாமே.......

நாட்றம்பள்ளி அருகே விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூபாய் 2 லட்சம், படுகாயம் அடைந்த...
12/09/2023

நாட்றம்பள்ளி அருகே விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூபாய் 2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் இறந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் அறிவிப்பு.

வாணியம்பாடி,செப்.11- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 8 ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்சாலாவுக்கு சுற்றுல்லா சென்று இன்று காலை சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வேன் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதி பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது வேன் பஞ்சராகி சாலையில் நின்றது.

இதனை தொடர்ந்து வேன் ஓட்டுநர் வேனை சாலையிலேயே நிறுத்தியிருந்த நிலையில் வேனில் பயணம் செய்தவர்கள் சாலை தடுப்பு அருகில் நின்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது வேகமாக வந்த லாரி பஞ்சராகி நின்று கொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதனால் வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி எதிர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பகுதி மக்கள் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்கள் மீரா (வயது 50), தெய்வானை (வயது 32), சேட்டுயம்மாள், (வயது 50) தேவகி,(வயது 50) சாவித்திரி, (வயது42) கலாவதி, (வயது50) கீதாஞ்சலி (வயது32) என்பது தெரியவந்துள்ளது.

மரணமடைந்த 3 பெண்களின் சடலங்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்ததை தகவல் அறிந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் அரசு சார்பில் இருந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சமும் , படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதாக பேட்டி அளித்தார்.

தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நன்றி: VNB FB News

ஆம்பூர் அருகே காணாமல் போனஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி காவல் நிலையத்திற்கு தானாக வருகை தந்து மன அழுத்தம் காரணமாக வீட்டிலி...
12/09/2023

ஆம்பூர் அருகே காணாமல் போன
ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி காவல் நிலையத்திற்கு தானாக வருகை தந்து மன அழுத்தம் காரணமாக வீட்டிலிருந்து வெளியேறியதாக வாக்குமூலம் அளித்தார்.

வாணியம்பாடி,செப்.12- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர்தட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி இந்துமதி.

இவர் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்துமதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனால் பாண்டியன் குடும்பத்துடன் மலைகிராமத்தை விட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இந்துமதி கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாததால் பாண்டியன் தன் மனைவி காணவில்லை என்று ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு இந்துமதி தானாக காவல் நிலையத்திற்கு வருகை தான் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பிரச்சனை தொடர்பான விவகாரத்தில் சில பிரச்சனை தொடர்வதால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதில் மனமுடைந்து வேலூர், திருப்பத்தூர்,தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டு வந்ததாகவும்,
கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் தொலைக்காட்சிகளில் வந்த செய்தி அறிந்து காவல் நிலையத்துக்கு வந்ததாக காவல் துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் காவல் நிலையத்தில் சரணடைந்த ஊராட்சி மன்ற தலைவர் இந்து மதியை போலீசார் ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
நன்றி: VNB FB News

நம் தமிழ்நாட்டில் கள்ளசாரயம் குடித்து உயிரிழந்தால் தான் 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்குவார்கள் போலஇறந்தவர்கள் ஆன்ம சாந...
12/09/2023

நம் தமிழ்நாட்டில் கள்ளசாரயம் குடித்து உயிரிழந்தால் தான் 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்குவார்கள் போல

இறந்தவர்கள் ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராம ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை.அவரது கணவர் கிரா...
12/09/2023

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராம ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை.அவரது கணவர் கிராமிய காவல்நிலையத்தில் புகார்.

வாணியம்பாடி,செப்.11- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர் தட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் இவரது மனைவி இந்துமதி.

இந்நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி பட்டியலினபிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால்,பாண்டியன் தனது மனைவி இந்துமதியை நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட வைத்தார்.

இதனை தொடர்ந்து பிற சமூகத்தினர் அதிகம் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலின பிரிவினருக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டத்தை கண்டித்து நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் இந்துமதி தலைவர் பதவியிற்கு போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் இந்துமதியை எதிர்த்து யாரும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடாததால் இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் பாண்டியன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அனைவருக்கும் அப்பகுதியில் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்துள்ளனர்.

மேலும் இந்துமதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவ்வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது.

இதனால் பாண்டியனின் உறவினர்கள் மலை கிராமத்தை விட்டு வெளியேறி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

மேலும் பாண்டியன் தனது மனைவி இந்துமதி மற்றும் இரு ஆண் பிள்ளைகளுடன் மலைகிராமத்தை விட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இந்துமதி கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் வெகுநேரம் ஆகியும் இந்துமதி வீடு திரும்பாததால் பாண்டியன் அவரை பல இடங்களில் தேடியுள்ளார்..

மேலும் இந்துமதி காணாததை குறித்தும் நாயக்கனேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மீது சந்தேகம் உள்ளதாகவும் இந்துமதியின் கணவர் பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: VNB FB News

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தமிழக ஆந்திர எல்லை ஆம்பூர் வனச்சரகம், துருகம் காப்பு காடு வனப்பகுதியில் அழுகிய நிலை...
07/09/2023

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தமிழக ஆந்திர எல்லை ஆம்பூர் வனச்சரகம், துருகம் காப்பு காடு வனப்பகுதியில் அழுகிய நிலையில் யானை சடலம்...

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என போற்றப்படும் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று.
05/09/2023

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என போற்றப்படும்

வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று.

தனியார் அமைப்புகளின் அனைத்து சர்வே களிலும் வேலூரின் முக்கியத்துவம் உலகிற்கு தெரிகிறது..ஆனால் ஏனோ தமிழக அரசு தான் மாற்றாந...
05/09/2023

தனியார் அமைப்புகளின் அனைத்து சர்வே களிலும் வேலூரின் முக்கியத்துவம் உலகிற்கு தெரிகிறது..ஆனால் ஏனோ தமிழக அரசு தான் மாற்றாந்தாய் மணபான்மையோடு நடந்து கொள்கிறது...

அருகருகே 10 நகர் பகுதிகள் சூழ்ந்துள்ள வேலூர் மாநகரின் எல்லையை அதிகரிக்க மனம் வரவில்லை..சுற்றிலும் நகரப்பகுதியே இல்லாத தஞ்சாவூர்,நாகர்கோவில் ஓசூர், மதுரை மாநகர் எல்லை மேலும் விரிவாக்கம் செய்ய அரசு அதீத ஆர்வம் காட்டுகிறது...

வேலூரை விட சிறிய ஊரான (மக்கள் தொகை) நெல்லைக்கு மெட்ரோ வரைவு போடப்படுகிறது..

ஓசூர்,திருப்பூர்,மதுரை,சேலம் க்கு பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்கப்படுகிறது..

மதுரை,ஓசூர்,கோவையில் ஐ.டி டெக் சிட்டி அமைக்க படுகிறது...

சென்னை - பெங்களூர் என்னும் ஐ.டி தலைநகரங்களுக்கு இடையே சுமார் 12 லட்சம் மக்கள் தொகை சூழ காணப்படும் நகர் பகுதிகளை கொண்ட வேலூர் மாநகரத்தின் எல்லை விரிவாக்கம், பெருநகர் வளர்ச்சி குழுமம், பெரிய ஐ.டி பூங்கா, மெட்ரோ, என்று எதுவுமே அமைக்கவில்லை..

வேலூரின் வி.ஐ.டி பல்கலை கழகமே ஒரு மாவட்டம் தரும் பொறியாளர்களை விட அதிக பொறியாளர்களை தருகிறது..

வேண்டும் வேண்டும் வேலூர் மாநகர் எல்லை விரிவாக்கம்...

வேண்டும் வேண்டும் வேலூர் பெருநகர வளர்ச்சி குழுமம் (இராணிப்பேட்டை,ஆற்காடு,வாலாஜா,திருவலம் எல்லாம் இணைத்து )

வேண்டும் வேண்டும் வேலூர்க்கு மெட்ரோ ரயில் திட்டம்

வேண்டும் வேண்டும் வேலூருக்கு TNSTC வேலூர் கோட்டம்

வேண்டும் வேண்டும் வேலூருக்கு பெரிய ஐ.டி.பூங்கா..

வேண்டும் வேண்டும் வேலூருக்கு புறவழி சாலை (பைபாஸ் ) மற்றும் வெளிவட்ட சாலை (ரிங்ரோடு) வேண்டும்

Durai Murugan
Kanimozhi Karunanidhi
M. K. Stalin
வேலூர் டுடே - Vellore Today
Vellore Is My Heaven
Royal Vellore
Namma Vellore - நம்ம வேலூர்
Edappadi K. Palaniswami
AC. Shanmugam
Anbumani Ramadoss

https://www.gadgetsnow.com/tech-news/indian-it-industry-is-moving-to-new-cities-from-7-major-hubs-claims-report/articleshow/103314573.cms

நன்றி: வேலூர் மண்டல வானிலை மற்றும் செய்திகள் Vellore Regional weather and News

India's technology industry is undergoing decentralization, with IT companies moving to tier-2 and tier-3 cities across the country. This shift is fueled by a highly skilled workforce in emerging hubs proficient in digital technologies. These cities offer advantages such as access to fresh talent, c...

02/09/2023

ஆம்பூர் நரியம்பட்டு அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்த்த வாலிபர் நண்பர்களுடன் ராஜக்கள் ஊராட்சியில் அமைந்துள்ள பெரிய ஏரியில் விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்தார் பல மணி நேரம் தேடுதல் பிறகு உடலை கைப்பற்றினர்.......

ராஜக்கல் பெரிய ஏரியில் குளிக்க சென்ற அஜித் வயது 18 சங்கராபுரம் பகுதியை சேர்ந்த  வாலிபர் ஏரியில் மூழ்கியதாக வந்த தகவலின் ...
02/09/2023

ராஜக்கல் பெரிய ஏரியில் குளிக்க சென்ற அஜித் வயது 18 சங்கராபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஏரியில் மூழ்கியதாக வந்த தகவலின் பெயரில் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் 4 மணி நேர தேடுதலுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்........

02/09/2023

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்1 ஏவுகணை....

ஆரம்பமானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டம்
02/09/2023

ஆரம்பமானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டம்

ஆம்பூர் சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை ஆம்பூரில் மழை இல்லை என தகவல்...
02/09/2023

ஆம்பூர் சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை ஆம்பூரில் மழை இல்லை என தகவல்...

Address

Bye-Pass Road, Ambur Town
Vellore
635802

Alerts

Be the first to know and let us send you an email when AMBUR TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AMBUR TIMES:

Videos

Share

Category

Nearby media companies


Other Magazines in Vellore

Show All

You may also like