VELLORE TODAY

  • Home
  • VELLORE TODAY

VELLORE TODAY Printing Press/News Media Freelancer International Journalism
Ph:+918220773666

*முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மருமகனும் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களின் தங்கையின்...
10/10/2024

*முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மருமகனும் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களின் தங்கையின் கணவர் திரு.முரசொலி செல்வம் அவர்கள் சற்றுமுன் பெங்களூர் மருத்துவமனையில் காலமானார்😭😭

02/10/2024
பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ...
18/09/2024

பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் நீண்ட நாட்களாக தேடிவந்தனர். அவர் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு போலீசாரிடம் அவர் சிக்கவில்லை.

அப்படியிருக்க அந்த ரவுடி வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று காக்கா தோப்பு பாலாஜியை நெருங்கியபோது, அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாராம். அதில்தனிப்படை போலீசார் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாம்.

அத்துடன் போலீஸ் வாகனம் மீது குண்டு பாய்ந்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார்

காக்கா தோப்பு பாலாஜி நோக்கி இரண்டு முறை சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டபின் நடைபெறும் 2வது என்கவுண்ட்டர் இதுவாகும்.

26/08/2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-25 ஆக முன்பதிவு நீட்டிப்பு நாள் 02.09.2024 ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு விளையாட்டுப் மேம்பாட்டு ஆணையத்தில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் உள்ளன.

ஆக, 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை" விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது.

இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை https://sdat.tn.gov.xn--in-w6g2isbyl/ இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திட வேண்டும்.

மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மற்றும் இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன் முறையாக நான்காம் இடம் பெற்றவர்க்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரின் முயற்சியால் இவ்வாண்டுக்கான தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.08.2024 என அறிவிக்கப்பட்ட நிலையில் விளையாட்டு வீர்ர்இ வீராங்கனைகள் அதிகளவில் பங்கேற்றிடும் பொருட்டு

19/08/2024

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க முப்பெரும் விழாவில் TUJ மாநில துணைப் பொதுச் செயலாளர் என்கிற முறையில் பத்திரிகையாளர்களுக்கான குரலை பதிவு செய்த காணொளி பதிவு. வேலூரில் நடைபெறவிருக்கும் மாபெரும் மாநாட்டிற்கு அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். சமுதாயத்திற்காக போராடிவரும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுக்கவும் ஆதரவாக அழைக்கப்படுகிறீர்கள். விரைவில் 2007 ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் தமிழ் எக்ஸ்பிரஸ் என்கிற வார இதழை தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் வெளியிட உங்களுடைய முழு ஆதரவோடு நான் வருகின்ற ஆண்டில் இலங்கையில் புத்தக வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தி முடிக்க விரும்புகிறேன்.

14/08/2024

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடுவதற்கு தனக்கு மத்திய அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று இந்திய பேட்மின்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.1.5 கோடி வழங்கப்பட்டதாக வெளியான தகவலையும் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மின்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆடிய அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறினர். இந்த சூழலில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்த ஒரு கட்டுரையை செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டது.

அதில், ஹெ.எஸ்.பிரணாய்க்கு ரூ.1.8 கோடி வழங்கப்பட்டதாகவும், அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ இருவருக்கும் தலா ரூ.1.5 கோடி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த செய்திக்கு அஸ்வினி பொன்னப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சரியான தரவுகள் எதுவுமின்றி எப்படி ஒரு கட்டுரையை வெளியிட முடியும்? இப்படி ஒரு பொய்யை எவ்வாறு எழுதலாம்? தலா ரூ.1.5 கோடியா? யாரிடமிருந்து? எதற்காக? எனக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை.

நிதியுதவிக்காக எந்த அமைப்பிலோ அல்லது TOPSன் (Target Olympic Podium Scheme) ஒரு பகுதியாகவோ நான் இருக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் வரை நான் கலந்து கொண்ட போட்டிகளுக்கு எனக்கு நானே நிதியுதவி செய்தேன். அணியில் இணைவதற்கான தகுதியை அடைந்த பிறகுதான் இந்திய அணியுடன் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டேன்.

பாரிஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற பிறகுதான் நான் TOPS திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டேன், அவ்வளவுதான். இந்த உண்மைகளை சரிபார்க்காமல் இதை எப்படி எழுத முடியும்?

எங்களுடைய பயிற்சியாளரும் எங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது” இவ்வாறு அஸ்வினி பொன்னப்பா தெரிவித்துள்ளார்.

10/08/2024

ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும் மாட்டையே அடிக்காம ஆடியும் பாடியும் க...

https://youtu.be/_mWB0br3qQI?si=i2Z-lLEBIzroff4U
06/08/2024

https://youtu.be/_mWB0br3qQI?si=i2Z-lLEBIzroff4U

"தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்" சார்பில் முப்பெரும் விழாவானது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் P.ஜெயச்சந்.....

எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கான் பாருங்கள் 😇 ஏர்போர்ட் முதல் மின்சாரம் வரை எல்லாத்தையும் அதானி, அம்பானிக்கு வித்துட்...
06/08/2024

எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கான் பாருங்கள் 😇

ஏர்போர்ட் முதல் மின்சாரம் வரை எல்லாத்தையும் அதானி, அம்பானிக்கு வித்துட்டாங்க....😡 போலையே

https://youtu.be/L5veQBINsKs?si=TrmUL6dE1EVYjh2m
05/08/2024

https://youtu.be/L5veQBINsKs?si=TrmUL6dE1EVYjh2m

அரசியலில் இதுபோன்றவர்கள் சிலநேரங்களில் கோமாலிகளாகவும்,ராஜாக்களாகவும் உருமாருவது அவசியமாக உணர்ந்து செயல்பட....

24/07/2024

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற முப்பெரும் விழாவானது மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த விழாவில் மூத்த நிருபர் தெய்வத்திரு டெல்லிமோகன் உருவப்பட திறப்பு விழா,
சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா,
சங்க நிர்வாகிகள், விழா குழுவினர்கள் என முப்பெரும் விழாவாக மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்ச்சிக்கு

தலைமை
திரு.ஜெயச்சந்திரன்,

வரவேற்புரை
சீனிவாசன்,

முன்னிலை
பிரகாஷ், பாண்டியன், யோகானந்த்

படம் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றிய
திரு ஜார்ஜ்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர்

வாழ்த்துரை வழங்கிய
திரு நடராஜன்,
மாநில பொதுச் செயலாளர்,
திரு.மணிகண்ட பூபதி
மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள்
திரு.சசிகுமார் மற்றும் பிரபாகர்

நன்றி உரை வழங்கிய
கை.செல்வகுமார் திருவண்ணாமலை மாவட்ட ஆலோசகர் மற்றும் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து நிகழ்ச்சியை முப்பெரும் விழாவாக சிறப்பித்துள்ளனர்.

கூட்டத்தில் அனைத்து நிருபர்களுக்கு ஆபத்து கால உதவிகள் வழங்குவது, ஓய்வூதியம் பெற்று தருவது போன்று பயனுள்ளதாக பல நல்ல அம்சங்கள் நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களின் அடையாள அட்டையை விரைந்து புதுப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்🙏🏻
தொடர்புக்கு
+919994925735
உ.சசிகுமார்
மாநில துணை பொதுச்செயலாளர்👍🏻

22/07/2024

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆரணியில் நடைபெற்ற முப்பெரும் விழாவானது மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த விழாவில் மூத்த நிருபர் தெய்வத்திரு டெல்லிமோகன் உருவப்பட திறப்பு விழா,
சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா,
சங்க நிர்வாகிகள், விழா குழுவினர்கள் என முப்பெரும் விழாவாக மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்ச்சிக்கு

தலைமை
திரு.ஜெயச்சந்திரன்,

வரவேற்புரை
சீனிவாசன்,

முன்னிலை
பிரகாஷ், பாண்டியன், யோகானந்த்

படம் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றிய
திரு ஜார்ஜ்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர்

வாழ்த்துரை வழங்கிய
திரு நடராஜன்,
மாநில பொதுச் செயலாளர்,
திரு.மணிகண்ட பூபதி
மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள்
திரு.சசிகுமார் மற்றும் பிரபாகர்

நன்றி உரை வழங்கிய
கை.செல்வகுமார் திருவண்ணாமலை மாவட்ட மாநில ஆலோசகர் மற்றும் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து நிகழ்ச்சியை முப்பெரும் விழாவாக சிறப்பித்துள்ளனர்.

13/07/2024

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை ஒன்றிய அரசு வெளியிடுகிறது.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படும் என்று ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.100 சிறப்பு நாணயத்தில் கலைஞர் உருவப்படத்துக்கு கீழ் அவரது கையொப்பமும் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற உள்ளது.

இதற்கான உத்தரவு விரைவில் ஒன்றிய அரசின் கெஜட்டில் வெளியாக உள்ளது. இதற்கான மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 'டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி' என்றபெயருடன், 'தமிழ் வெல்லும்' எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது. இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியானது. நாணையத்தின் ஒரு புறம் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024’ என அச்சிடப்பட்டும், மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என நாணயத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

*ஜெயா டிவியில் கடந்த 25 ஆண்டுகாலமாக ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த அமல்ராஜ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று ( 01.07.202...
01/07/2024

*ஜெயா டிவியில் கடந்த 25 ஆண்டுகாலமாக ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த அமல்ராஜ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று ( 01.07.2024.) காலை,சுமார் 8 மணியளவில்
காலமானார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்*
இங்ஙனம்:
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்.

29/06/2024
13/06/2024

தோ்தலையொட்டி இடமாற்றம் செய்யப்பட்ட 40 காவல் ஆய்வாளா்களை மீண்டும் இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டாா்.
தோ்தலையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுத் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தமிழகத்தில் ஏப்.19-ஆம் தேதி நடைபெற்ற மக்களைவை தோ்தல் பணிகளுக்காக சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் ஆய்வாளா்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 5-ஆம் தேதி முதல் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

அந்த வகையில், சென்னை மாநகருக்குட்பட்ட 40 காவல் ஆய்வாளா்களை மீண்டும் இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு புதன்கிழமை வெளியான நிலையில், இடமாற்றம் செய்யப்பட்ட அனைவரும் தங்களுக்காக பணிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உடனடியாக பணியில் சேரவும் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

Address


Telephone

+918220773666

Website

Alerts

Be the first to know and let us send you an email when VELLORE TODAY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VELLORE TODAY:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share