Namthagavalmaiyam

  • Home
  • Namthagavalmaiyam

Namthagavalmaiyam This page is a hub for information's. There are lots of categories you can choose with and build your knowledge.

08/10/2024

#நான்_தான்_என்ற #அகம்பாவம்.

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?

அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட

"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?

இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட

"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட

"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?

எதையும் ஏன் என்று சிந்தித்து பார்க்க

"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?

அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.

"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட.

எனவே நான் தான் என்கிற குணம்,
ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும்.
நம் வரலாற்றில் அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
அகம்பாவத்தால் அழிந்தவர்கள்
ஏராளம்! ஏராளம்!

தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kus...
04/06/2024

தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.

இனி பெயர்கள் அகர வரிசையில்:

1. அசனம்,
2. அடிசில்,
3. அமலை,
4. அயினி,
5. அன்னம்,
6. உண்டி,
7. உணா,
8. ஊண்,
9. ஓதனம்,
10. கூழ்,
11, சரு,
12. சொன்றி,
13. சோறு
14. துற்று,
15. பதம்,
16. பாத்து,
17. பாளிதம்,
18. புகா,
19. புழுக்கல்,
20. புன்கம்,
21. பொம்மல்,
22. போனகம்,
23. மடை,
24. மிசை,
25. மிதவை,
26. மூரல்,
27. வல்சி

""பழமையை மறந்தோம்,
படாதபாடு படுகிறோம்""

பழமையில் புதுமை படைப்போம்

பழமையை புதுமையாக காண்போம்

நம் முன்னோர்கள்
மூத்தோர்கள் ஆகிய

**ஆதிதமிழர்கள்**

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்

உணவே மருந்து

என

மிகச் சிறந்த முறையில் சீரும் சிறப்பாக
வாழ்ந்திருக்கார்கள்....

மருந்தே உணவாக வாழவில்லை.....

ஆய கலைகள் அறுபத்து நான்கு கற்றுணர்ந்து

அஞ்ஞானம் மெய்ஞானம் விஞ்ஞானம்

வாழ்வியல் மெய்யியல் அறிந்து தெரிந்து புரிந்து தெளிவடைந்து வாழ்ந்திருக்கிறார்கள்

யாதும் ஊரே யாவரும் கேளீர்

திரை கடலோடியும் திரவியம் தேடு உலகை முக்காலமும் தெரிந்து வாழ்ந்திருக்கிறார்கள் ஆதியிலிருந்தே

ஆதிதமிழர்கள்

ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை

🙏சொக்கவைக்கும்
சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏

🙏சொக்கநாதா
சொக்கநாதா

03/08/2023
குன்றா நலமும்குறையா வளமும்மங்கா புகழும்மாசிலா செல்வமும்அன்புடை சுற்றமும் அறமறிந்த நட்பும்பொங்கலோடு பொங்கிபொங்கியது தங்கி...
15/01/2023

குன்றா நலமும்
குறையா வளமும்
மங்கா புகழும்
மாசிலா செல்வமும்
அன்புடை சுற்றமும்
அறமறிந்த நட்பும்
பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி
தங்கியது பெருகி
பெருகியது உதவி
உதவியது உவகை பெருக்கி
பெருகிய உவகை பொங்கி
பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ
இத் தை திருநாளில்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும்.

உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🙏

09/11/2022

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...

திசையை எட்டாக பிரித்தான் தமிழன்

கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன்
இசையை ஏழாக கொடுத்தான்...

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன்
சுவையை ஆறாக பிரித்தான்...

இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன்
நிலத்தை ஐந்தாக பிரித்தான்...

குறிஞ்சி
முல்லை
நெய்தல்
மருதம்
பாலை

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்
காற்றை நான்காக பிரித்தான்...

தென்றல்
வாடை
கோடை
கொண்டல்

காற்றை நான்காக பிரித்த தமிழன்
மொழியை மூன்றாக பிரித்தான்...

இயல்
இசை
நாடகம்

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்...

அகம்
புறம்

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை...

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம்
புற வாழ்க்கை...

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்...
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்...

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான்
அதை...
உயிரினும் மேலாக வைத்தான்...

இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்...

" ஒழுக்கம் விழுப்பந் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் "

இந்த  மூலிகை இலையின் பெயர்  ரணகல்லி. யாருக்காவது மூத்திரபையில் கல்லடைப்பு, Gall Bladder ல் கல்லடைப்பு  இருந்தால் உடனடியா...
27/10/2022

இந்த மூலிகை இலையின் பெயர் ரணகல்லி. யாருக்காவது மூத்திரபையில் கல்லடைப்பு, Gall Bladder ல் கல்லடைப்பு இருந்தால் உடனடியாக திருநெல்வேலி To திருச்செந்தூர் போகும் வழியில் சோனகன் விளை என்ற ஊர் உள்ளது.

அங்கு இறங்கி சத்யா ஸ்டோர் பலசரக்கு கடையில் விடயத்தை கூறினால் ஒரு மூலிகை இலை இலவசமாக வழங்குகிறார்கள் அதை வாங்கிக் கொள்ளவும்.

இந்த இலையை அதிகாலையில் வெறும் வயிற்றில் இலையை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும்.

ஒரு நாளைக்கு ஒரு இலை சுவைத்து சாப்பிடவும் சாப்பிட்ட பின்பு 3 மணி நேரத்திற்கு பச்சைத் தண்ணீர்கூட அருந்தக்கூடாது.

ஒரு நாளைக்கு ஒரு இலை வீதம் மூன்று நாளைக்கு இதே போல் மூன்று இலையை சாப்பிட்டு வந்தால் கல்லடைப்பு கண்டிப்பாக குணமாகும்...

நாங்கள் திருச்செந்தூருக்கு நடைபயனம் சென்று திரும்பி கொண்டிருந்த வேலையில் இந்த கடையில் தண்ணீர் வாங்கி அருந்தினோம். அப்போது சென்னை, மைசூரு, பெல்லாரி, கும்பகோணம் போன்ற ஊர்களில் இருந்து வந்து இந்த இலையை வாங்கி வாயிலில் வெற்றிலை போடுவது போல் சாப்பிடுவதை கண்டு விசாரிக்க தொடங்கினோம்.

அப்போது அங்கு இருந்த ஒரு பெரியவர் எங்கள் இடம் கூறினார் திருநெல்வேலியில் லாட்ஜில் வந்து தங்கி நிறைய நபர்கள் பல வகையான ஊர்களில் இருந்து இங்கு வந்து கல் அடைப்பு குணம் ஆகிருக்கு என்று மகிழ்ச்சியாக கூறினார்.

உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் இங்கு அனுப்பி வையுங்கள் என்று சொன்னார்....

மற்றுமொரு ஆச்சரியமான விடயம் யாதுவென்றால் இந்த வைத்தியத்திற்கு அவர் ஒரு பைசா கூட வாங்குவதில்லை உண்மையிலுமே அவருக்கு கோடி புண்ணியம்....

25/11/2021

தவசிகளின் கூட்டு வழிபாட்டின் தாத்பரியம்.

தூய ஒழுக்கத்தில் இருக்கும் (மண்டல விரதம் இருக்கும் ஐயப்ப தவசிகள்) ஒன்று கூடி, வாரம் ஒரு முறை கூட்டு வழிபாடு செய்திடல் வேண்டும். மந்திரம் ஓதுதல், பாடல்களை பாடி இசைத்தல் முதலியன அப்போது நிகழ்த்திடல் வேண்டும். இதில் ஒரு முக்கிய பயன் விளையும்.

விரத காலத்தில், உங்கள் உடலில் நீங்கள் தேக்கி வைத்துள்ள உயிர் ஆற்றலில் உள்ள பிராணன் நீங்கள் பேசும்பொழுதும், உணர்வு ஒன்றி பாடும்போதும் வெளிப்படும். அது உங்களை சுற்றி ஒரு பிராண-ஒலி காந்தப் புலத்தை ஏற்படுத்தும். இது தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு உண்டாகும் ஒரு ஆற்றல் செலவு தான்.

ஆனால் உங்களைப் போன்றே பல ஐயப்ப தவசிகளும் ஒன்று கூடி, சீர்மையுடன் வெளிப்படுத்தும் போது (வெறும் இரைச்சலாக அல்லாமல், மந்திரம் போன்று, இசையை போன்று ஒரு சீர்மையுடன் வெளிப்படுத்தும்போது) அந்த இடமே பிராண-ஒலி ஆற்றலின் "மண்டலமாக" விளங்கும். அவ்வாற்றல் மண்டலம், அங்கு அமர்ந்துள்ள ஒருவரை ஒருவர் வலிமைப்படுத்தும். அவர்களின் சூக்கும உடல், அசுத்தம் நீங்கி பிராணனால் வலிவு பெறும். தேவையற்ற ஒலிப்பதிவுகள் அழிந்துபோயிருக்கும். பஜனை முடிந்து வருவோருக்கு இயல்பாகவே உடல் பொலிவுறும். அவருக்கு அன்று இரவு தூக்கம் குறைவாகவே தேவைப்படும். ஏனெனில் அவருக்கு அதிகப்படியான ஆற்றல் சேர்ந்துள்ளது.

கவனிக்க வேண்டியது:
இதில் நீங்கள் இயல்பாக பாடும்போதும், மந்திர உச்சாடனம், சரணம் சொல்லும்போதும் வெளிப்படும் பிராணன் ஒருவருக்கொருவர் பரவி பங்கேற்றுள்ள அனைவருக்கும் அவர்கள் வெளிவிட்டதை விட கூடுதலாக கிடைக்கும். ஆனால் இது அறியாத பலரோ கத்தி கத்தி தங்கள் பிராணனை அழித்தே விடுகிறார்கள். நிறைய பிரானணனை இழந்தோர் அன்று நன்கு தூங்குவார்கள்.

குழந்தைகள் கத்தி அழுதால் நன்கு உறங்குவதை பார்த்திருப்பீர்கள். இது வெளிப்படையாக பார்த்தால், தூக்கம் நல்லது தானே என்று தோன்றும். ஆனால் நாம் விந்தை கட்டி சேமித்த பிராணனும் குறைந்து விட்டது என்பதை முக்கியமாக உணர வேண்டும். ஐயப்ப சுவாமியின் மண்டல விரதத்தில் நம் பிராணனை பெருக்குவதே முக்கிய இலக்கு. அதைதான் ஐயனுக்கு சமர்ப்பிப்போம்.

அதுபோல, பிராணன் அதிகமாக உள்ள ஒருவருக்கு இயல்பாகவே தூக்கம் குறைவாகவே தேவைப்படும். அவரின் நுண் உடல் எப்போதும் ஆற்றல் கொண்டதாக விழிப்புடையதாக இருக்கும். இதை விரத காலத்தில் பலரும் உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் இருவேளை மட்டுமே உண்பீர்கள். குறைவாகவே தூங்குவீர்கள். ஆனாலும் மற்ற நாட்களை போல சோர்வு இப்போது இருக்காது. காரணம் உங்கள் உடலில் பிராணன் மிகுந்திருக்கும். சுறுசுறுப்பாக, புத்தி தெளிவாக உணர்வீர்கள்.

அதுபோல ஒலிபெருக்கிகளையும், ராட்சத மின் விளக்குகளையும் தயவு செய்து தவிர்த்திடுங்கள். மிகைப்பட்ட இரைச்சல் அலைகள் உங்கள் செவிகளையும், உடலையும் தொட அனுமதிக்க வேண்டாம். அக்கருவிகள் மனித உடலை போல பிராணனை செயல்படுத்தும் உயிர்-ஊடகம் அல்ல. அவை வெறுமனே ஒலியை வாங்கி மின்காந்த அலைகளாக்கி மீண்டும் ஒலி அலையாகவே வெளிப்படுத்தும், அவ்வளவே.. அவற்றின் அதீத மின்காந்த வெளியீடு உடலின் ஒத்திசைவை சிதறடித்து விடுகிறது. இதை தியானம் செய்து பழக்கமுள்ளவர்கள், தங்கள் கூர் உணர்வினால் நன்கு உணர முடியும்.

17/09/2021

ஸ்ரீவிஸ்வகர்ம ஜெயந்தி தினம்

விஸ்வகர்ம பகவானைத் தரிசிக்க வேண்டித் தேவாதி தேவர்கள் எல்லாம் கடுமையான விரதம் இருந்து ஶ்ரீ விஸ்வகர்ம தர்ஷன் மஹாயாகம் நடத்த (சூரியன் - சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயரும் அல்லது சூரியன் ஆட்சி பெறும்) ஆவணி மாதத்தை உகந்த மாதமாகத் தேர்ந்தெடுத்து ஆவணி மாதம் முழுதும் யாகம் நடத்தினார்கள். அதன் பலனாகப் புரட்டாசி மாதம் ஒன்றாம் தேதி தரிசனம் கிடைத்தது.
இந்த அற்புதமான சுபநாளே ஶ்ரீ விஸ்வகர்ம ஜெயந்தி தினம்.

சாதி, மத, இன பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் இத்தினத்தைக் கொண்டாடலாம்.

வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!

11/08/2021

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

01.துணைவி
02.கடகி
03,கண்ணாட்டி
04.கற்பாள்
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி,
14.மனையுறுமகள்
15.வதுகை
16வாழ்க்கை
17.வேட்டாள்
18.விருந்தனை
19.உல்லி
20.சானி
21.சீமாட்டி
22.சூரியை
23.சையோகை
24.தம்பிராட்டி
25.தம்மேய்
26.தலைமகள்
27.தாட்டி
28.தாரம்
29.மனைவி
30.நாச்சி
31.பரவை
32.பெண்டு
33.இல்லாள்
34.மணவாளி
35.மணவாட்டி
36.பத்தினி
37.கோமகள்
38.தலைவி
39.அன்பி
40.இயமானி
41.தலைமகள்
42.ஆட்டி
43.அகமுடையாள்
44.ஆம்படையாள்
45.நாயகி
46.பெண்டாட்டி
47.மணவாட்டி
48.ஊழ்த்துணை
49.மனைத்தக்காள்
50.வதூ
51.விருத்தனை
52.இல்
53.காந்தை
54.பாரியை
55.மகடூஉ
56.மனைக்கிழத்தி
57.குலி
58.வல்லபி
59.வனிதை
60.வீட்டாள்
61.ஆயந்தி
62.ஊடை

Dr ஆறுமுகம் கணேசன்

30/07/2021

*இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.*

உதாரணமாக,
"தேர் ஓடுவது எதனால்?
தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,

"அச்சாணியால்" என்பது.

தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது
அச் - சாணியால்
என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.

"நீ வசிக்கும் ஊர் எது?
உன் காலில் காயம் வந்தது எப்படி?"
என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது.

"சாம்பார் மணப்பதேன்?
உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் "பெருங்காயத்தால்!" என்பது.

இன்று ஆங்கில வழிக் கல்வி பெருகி விட்ட காலம். முன்னர் பெரும்பாலானோர் தமிழ் வழிக்கல்வியில் பயின்ற போது இத்தகைய சொல் விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும், சிந்தனைத் திறனையும் ஒரு சேர வளர்த்தன...

இடைக்காலத்தில் வாழ்ந்த இளஞ்சூரியன், முதுசூரியன் என்ற இரட்டைப் புலவர்களில் ஒருவர் கண்பார்வையற்றவர், ஒருவர் கால் ஊனமானவர்.

கால் ஊனமானவரைக் கண்பார்வையற்றவர் தோளில் சுமந்து செல்வார். கால் ஊனமானவர் தோளில் இருந்தவாறே எப்படிச் செல்ல வேண்டும் என வழி சொல்வார்.

இவ்விரு புலவர்கள் எழுதிய வெண்பாக்கள் பலவும் இதேபோல் சொல் விளையாட்டு பாணியில் அமைந்தவை தான்.

ஒருவர் வெண்பாவின் இரண்டடியில் கேள்வி கேட்க மற்றவர் அடுத்த இரண்டடிகளில் பொருத்தமான பதில் சொல்வார்.

மதுரைத் தெப்பக்குளத்தில் கால் ஊனமானவர் படியில் அமர்ந்து பார்த்தவாறிருக்க, கண்பார்வை அற்றவர் தம் துணியை நீரில் அலசினார். அப்போது துணி குளத்தில் நழுவி எங்கோ சென்று விட்டது. அதைப் பார்த்த கால் ஊனமானவர்?

"அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ?"

- எனக் கேள்வி கேட்டார்.

அதாவது, தண்ணீரில் துணியைப் போட்டு துவைக்கிற சாக்கில் அடிஅடியென்று அடித்தால் அது (கோபித்துக் கொண்டு) நம்மை விட்டுப் போகாதா என்பது அவர் கேள்வியின் பொருள்.

அதற்கு பார்வையற்றவர் சொன்ன பதில் இது தான்!

"எப்படியும் இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதூரைச் சொக்கலிங்கம் உண்டே துணை"

- என்று வெண்பாவை நிறைவு செய்தார்.

அதாவது க *லிங்கம்* என்ற சொல்லுக்குத் துணி என்று பொருள்.

இந்தத் துணி போனால் என்ன? மதுரைச் சொக்கலிங்க மாகிய தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்பதே அவரது பதில்.

பார்வையற்றிருந்தாலும் அவரது தெய்வ நம்பிக்கையின் ஆழம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

இப்போது முழு வெண்பாவையும் பார்க்கலாம்..!

"அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ? -
எப்படியும் இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!"

தமிழின் பெருமையே பெருமை!

எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம், திருக்குறளைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டார்.

"திருக்குறள் 1330 குறள்கள் அல்லவா? திருக்குறளைத் திருக்குறள்கள் என்று தானே சொல்ல வேண்டும்? அப்படியிருக்க பன்மையில் சொல்லாமல் ஏன் ஒருமையில் திருக்குறள் என்று சொல்கிறோம்?" என்று கேள்வி கேட்டார்.

அதற்கு சுஜாதா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

"திருக்குறள் கள்ளை
அனுமதிப்பதில்லை".

_படித்ததில் ரசித்தது._

29/07/2021

செம்மொழி தமிழில்
*************************
ஒருபொருள் பன்மொழி
*****************************

#இலை
**********
வாழை #இலை
புளியந் #தளை
தென்னங் #கீற்று
பனை #ஓலை
தாழை #மடல்
சோளச் #சோகை
கரும்புத் #தோகை
நெல் #தாள்
முருங்கைக் #கீரை

#பூ
****
முகை, மொக்கு, அரும்பு,
போது, மலர், பூ, வீ, செம்மல்

பிஞ்சு
********
மா #வடு
பலா #மூசு
வாழைக் #கச்சல்
தென்னங் #குரும்பை
பாக்கு #நுழாய்
வெள்ளரிப் #பிஞ்சு
--தேவனேயப் பாவாணர்
தமிழர் வரலாறு

ஒருபொருளுக்கு ஒருசொல்
கூட இல்லாத மொழிகள் பல உள்ள நிலையில்
செம்மொழி தமிழில்
ஒருபொருளுக்குப் பல சொற்கள் உண்டு

Address


Alerts

Be the first to know and let us send you an email when Namthagavalmaiyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share