01/06/2022
பகிர் இலக்கிய வட்டம்
************************************************************
தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் இமையம் மிக முக்கிய இடம் வகிக்கிறார். இதுவரை அதிகம் கண்டுகொள்ளப்படாத பல்வேறு விதமான சமூக இருப்புகளையும் சமூக அவலங்களையும் தனது சிறுகதைகளிலும் நாவல்களிலும் வெளிப்படுத்தி வருகிறார். அவரது முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ வண்ணார் சமூகத்தினரின் வாழ்வியலை பதிவு செய்து, பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது. 1940-கள் முதல் 1970-கள் வரையிலான காலகட்டத்தை கோவிலுக்குப் பொட்டுக்கட்டி விடப்பட்ட ஒரு தேவதாசிப் பெண்ணுடைய பார்வையில் விவரித்துச் செல்லும் முக்கியமான நாவல் ‘செடல்.’ செறிவான மொழிநடையும் இடையிடையே சொலவடைகளும் என வடதமிழகத்தின் கிராமிய வாழ்வையும் அதன் நெருக்கடிகளையும் இவரது படைப்புகள் தொடர்ந்து கவனப்படுத்தி வருகின்றன. இவரது ‘எங் கதெ,’ ‘பெத்தவன்’ ஆகிய குறுநாவல்கள் பலரை இலக்கிய உலகுக்கு அழைத்து வந்த பெருமையுடையன.
இவரது ‘கோவேறு கழுதைகள்’ மற்றும் ‘செடல்’ ஆகிய இவ்விரு நாவல்கள் பற்றிய அறிமுக-விமர்சனக் கூட்டம் வரும் சனிக்கிழமை (04/06/2022) அன்று இரவு 9 மணியளவில் நடைபெறும். நண்பர்கள் அனைவரும் வந்து பங்குபெற்று ஒரு நல்ல உரையாடலை உருவாக்குவோம். வருக.
நாள்: 4-6-2022
நேரம்: இரவு 9 மணி
Zoom Link: https://us06web.zoom.us/j/87159941481?pwd=dnlnUjVQTWw5Q0NUNU5WVjU5eFJBdz09
Or
Meeting ID: 871 5994 1481
Passcode: 123456
Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...