06/04/2023
ஐபிஎல் வரலாற்றில் 2-வது வீரர்…மலிங்கா ஓரம் கட்டிய யுஸ்வேந்திர சாஹல்.!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தனது,133-வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் சாஹல், புதன்கிழமை (நேற்று) பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஜிதேஷ் ஷர்மாவை விக்கெட் எடுத்தார்.
இதன் மூலம் சாஹல் தனது 171-வது விக்கெட்டை வீழ்த்திய இந்த சாதனையை படைத்தார். இவருக்கு முன்னதாக மலிங்கா 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தற்போது அவரை விட 1 விக்கெட்கள் அதிகமாக எடுத்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பட்டியலில் இப்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.