28/04/2024
🤳 *கீழடி அருங்காட்சியகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய சங்கு வளையல்,தங்க அணிகலன்கள், வரிவடிவ எழுத்துக்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.*
*குறிஞ்சிப்பாட்டு,நெல்நல்வாடை, கலித்தொகை, பரிபாடல் உள்ளிட்ட சங்க கால இலக்கியப் பாடல்களை குறிப்பிட்டுள்ள நள்ளிருள், நாறி, மயிலை, மருதம், ஆரம், ஏழிலை பாலை பூக்கள் செடிகளை கடந்த மூன்று மாத காலமாக பயிரிட்டு வளர்த்து வந்தனர்.*
*பாண்டிய மன்னர்களின் காவல் தெய்வமாக வேம்பு மரம் போற்றப்பட்டுள்ளதாகவும், போரில் வெற்றி பெற்று வரும் படைவீரர்கள், காயம் பட்ட வீரர்களை பற்றி மன்னர்களிடம் காட்டும் பொழுது வேம்பு பூக்களை வேல் கம்பி நுனியில் மாலையாக அணிவித்து பின் காட்டப்படுவதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.*
*அகநூனூறில் குறிப்பிடப்பட்டுள்ள "தேம் கமிழ் திரு நுதல் திலகம் கைஇயும் " என்ற திலகம் என்ற பாடலில் திலகம் செடிகளை பற்றி குறிப்பிட்டுள்ளதையும், அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமத்தை பெண்கள் நெத்தியிலிட்டுள்ளனர் என்று குறிப்பும் செடிக்கு பக்கத்தில் வைத்து விளக்கம் அளித்துள்ளனர்.*
*அருட்காட்சியாக வளாகத்தில் உள்ள 10 கட்டிட தொகுதிகளை விடுத்து சுற்றியுள்ள காலியிடங்கள், பக்கவாட்டில் உள்ள இடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட செடிகள், மரங்கள், பயிரிட்டு பார்வையாளர்களுக்கு விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.*👌🏻