Madras view

Madras view Be happy with what you have. Be excited about what you want.

அன்பு தம்பி அஜித்துடன் ஒருமுறை துபாயில் கார் ஓட்டிய போது💥♥️🤩
15/01/2025

அன்பு தம்பி அஜித்துடன் ஒருமுறை துபாயில் கார் ஓட்டிய போது💥♥️🤩

ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) மகிமையை உணர்த்து கலித்தொகை பாடல்
14/01/2025

ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) மகிமையை உணர்த்து கலித்தொகை பாடல்

சிந்து சமவெளியில்  சிவனும் மஞ்சு விரட்டும்…சங்க இலக்கியப்படி பொங்கல் பண்டிகை 2,000 ஆண்டுகளுக்கும் மேலானது.   இந்தப் பண்ட...
14/01/2025

சிந்து சமவெளியில் சிவனும் மஞ்சு விரட்டும்…

சங்க இலக்கியப்படி பொங்கல் பண்டிகை 2,000 ஆண்டுகளுக்கும் மேலானது. இந்தப் பண்டிகை தமிழ்நாட்டில்தான் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. விவசாய வாழ்க்கை முறையுடன் பொங்கலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் சூரியனுக்கும், உழவுக்கு உதவும் காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாகவே வடிவமைத்துக் கொண்டாடப்பட்டது. இந்தத் திருவிழா அறிவியல் பூர்வமானது.

பொங்கல் பண்டிகையின் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியம் (சுமார் கிமு 500 முதல் கிபி 300 வரை) போன்ற பண்டைய தமிழ் நூல்களில் காணப்படுகின்றன, இது அறுவடை விழாக்கள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய பழக்க வழக்கங்களை விவரிக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இது இன்று நாம் காணும் நான்கு நாள் பண்டிகையாகப் பரிணமித்தது,

காளைகள் இல்லை என்றால் உழவு இல்லை. உழவு இல்லை என்றால் விவசாயம் இல்லை. எனவே விவசாயம் சிறக்கக் காளைகளை ஆராக்கியமாகவும் வலுவாகவும் வளர்த்தாக வேண்டும். ஆனால் வலுவான காளையைக் கையாளுவது கடினம்.

காளைகளின் அதன் திறன் மற்றும் உளவியல் அறிந்து கொள்ள; அதன் மேல் உள்ள பயம் நீங்க; அதன் பராமரிப்பைப் போட்டியாக மாற்ற மஞ்சுவிரட்டு உருவாக்கப்பட்டது.

இதுவரை கண்டறிந்த தொல்லியல் ஆதாரப்படி மஞ்சுவிரட்டு சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன் நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இந்தப்பதிவில் முதல் படம் சிந்து சமவெளி பகுதியில் கிடைத்த தொல்லியல் ஆதாரத்தைக் காட்டுகிறது. அதனை சற்று ஆழ்ந்து பாருங்கள். ஒரு காளையால் மனிதர்கள் பந்தாடப்படுவதை சித்தரித்திருப்பதை ரசிக்கலாம்.

இந்த ஆதாரங்கள் எங்கே கிடைத்தன தெரியுமா? குஜராத் முதல் ராஜஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் வரையிலான மண்ணில்தான் கிடைத்தது. இந்த இடங்களில்தான் 4500 ஆண்டுகளுக்கு முன் சிந்துசமவெளி மக்கள் வாழ்ந்தனர்
அவர்கள் அந்தக் காலத்திலேயே மஞ்சுவிரட்டைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். சிந்துசமவெளி மக்கள் வேறுயாரும் அல்ல அவர்கள்தான் ஆதிதமிழர்கள்.

அவர்கள் பேசிய மொழியிலிருந்துதான் தமிழி உருவாகி இருக்கும். காரணம் தமிழி எழுத்துக்களும் சிந்து சமவெளி குறியீடுகளும் ஒருசேரத் தமிழகத்தில் பல இடத்தில் கிடைக்கின்றன. தமிழிலிருந்து வட்டெழுத்து வந்தது. வட்டெழுத்திலிருந்து தற்கால தமிழ் எழுத்து வந்தது. சிந்து சமவெளி குறியீடுகள் சுமார் 400 கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களால் சிந்துசமவெளி மக்கள் குறியீட்டைப் புரிந்து அவர்களின் பதிவை வாசிக்க முடிந்தால் போது. தமிழக அரசிடம் இருந்தது சுமார் 8.67 கோடி ரூபாய் சன்மானமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

சிந்துசமவெளி பகுதியில் காளைகளை அடக்கி விவசாயம் செய்து செழித்திருந்த நாம் இன்று மதுரையில் காளைகளை அடக்கி மதுரையைச் சுற்றிய பகுதியில் வாழ்ந்து வருகிறோம்.

ஆக 4500 ஆண்டு காலமாக நாம் பொங்கல் திருவிழா கொண்டாடி வருகிறோம் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

சரி… நாம் வணங்கும் தெய்வங்கள் சிந்து சமவெளிப்பகுதியில் மக்கள் வழிபட்டார்களா? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.

சிந்துசமவெளி மக்கள் பசுபதி என்ற ஒரு கடவுளை வணங்கியதாக அறியப்படுகிறது. பசுபதி என்றால் நிறையப் பசுக்களைக் கொண்டவன் எனலாம். அந்தப் பசுபதி வேறுயாரும் அல்ல நம் சிவன்தான்.
ஆக, சிவ வழிபாடு 4500 ஆண்டுகளுக்கும் பழமையான கொள்ளலாம். இந்தப் பதிவில் இரண்டாவதாகக் காட்டப் பட்டப் படம்தான் பசுபதி. இதுவும் சிந்து சமவெளி பகுதியில் கிடைத்த தொல்லியல் ஆதாரம்தான்.

போலும் சங்க இலக்கியம் (சுமார் கிமு 500 முதல் கிபி 300 வரை) போன்ற பண்டைய தமிழ் நூல்களில் முருகன் (அழகன்) மற்றும் கண்ணன் (கருப்பன்) போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. .

எனவே முருகன் மற்றும் கண்ணன் போன்ற தெய்வ நம்பிக்கை சுமார் 2500 ஆண்டுகளாகத் தமிழ் மக்களிடையே இருந்துவருகிறது எனவும் கூறலாம்.

தம் வரலாறு மிக நீண்டது.
சாதி பாகுபாடற்றது. பெருமைக்கூறியது.
நயவஞ்சகர்களால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நாம் பிரித்தாளப்பட்டோம்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

மோனாலிசா ஓவியத்தின் வரலாறுஉலகின் மிகப் பிரபலமான ஓவியங்களில் ஒன்றான "மோனாலிசா" ஓவியத்தை லியோனார்டோ தா வின்சி (Leonardo da...
14/01/2025

மோனாலிசா ஓவியத்தின் வரலாறு
உலகின் மிகப் பிரபலமான ஓவியங்களில் ஒன்றான "மோனாலிசா" ஓவியத்தை லியோனார்டோ தா வின்சி (Leonardo da Vinci) 1503 முதல் 1506 ஆம் ஆண்டு வரை வரைந்தார். இவ்வோவியம், பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது மற்றும் உலகின் முக்கியமான கலைக்கூடங்களில் ஒன்றாக பரிச்சயமாகியுள்ளது.

💫 போட்டி: "மோனாலிசா" என்ற பெயர், ஓவியத்தில் காணப்படும் பெண்ணின் முகம் மற்றும் அவளது வித்தியாசமான பார்வை காரணமாக பிரபலமானது. அவர் அற்புதமான ஒரு மனிதர் போல தோற்றமளிக்கின்றார், ஆனால் அவளது முகத்தில் எவ்விதமும் உணர்வு இல்லாமல் இருக்கின்றது. இது ஓவியத்தை மேலும் மர்மமாக்கும்.

🖼️ கலைப்பயிர்ச்சி: இந்த ஓவியத்தில், வின்சி உண்மையில் பிரபலமான "ஸ்பேல்-ஸ்டிகோ" (sfumato) technique இனை பயன்படுத்தியுள்ளார், இது அவர் உள்ள ஆழத்தையும் வண்ணங்களையும் மெல்லிய பரிமாணங்களோடு அழகாக உள்ளடக்கியது. இந்த தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் மென்மையானது மற்றும் நிஜமாகக் காணப்படுகின்றது.

🔍 மர்மம்: "மோனாலிசா" ஓவியம் சுமார் 500 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களும் கலைப்பண்பாளர்களும் மீண்டும் மீண்டும் ஆராய்ந்து வருகிறார்கள். அவளது பார்வை எப்போது பார்த்தாலும் மாறுபடுவதுபோல் தோன்றும், இது பெரும்பாலும் கலைவல்லுநர்களால் "மர்மமான பார்வை" என்று குறிப்பிடப்படுகிறது.

🌍 பிரபலத்தின்மூலம்: இந்த ஓவியம் உலகின் மிகப்பெரிய கலைப் படைப்பு என்று கருதப்படுகிறது, மேலும் அந்தத் தோற்றம், மர்மம் மற்றும் அதன் பின்விளைவுகளின் காரணமாக, உலகம் முழுவதும் நம்மை ஈர்க்கின்றது.

என்றாலும், "மோனாலிசா" கலை உலகின் மிக முக்கியமான மண்டலமாகவே இருந்து வருகிறது.

14/01/2025
13/01/2025

Tamil superstar Ajith Kumar's racing team has secured the third place in the Dubai 24H 2025 race on Sunday.Held annually...
12/01/2025

Tamil superstar Ajith Kumar's racing team has secured the third place in the Dubai 24H 2025 race on Sunday.

Held annually at the Dubai Autodrome, the racing event features high-performance GT and touring cars competing in a gruelling 24-hour format that tests speed, strategy and endurance.

"Here We Go!! secured 3rd Place in Proud Moment for Ak & Team,"

பிரம்மாண்டத்தை விட நல்ல கதை தான் ஜெயிக்கும் என்று நிரூபித்த பாலா
11/01/2025

பிரம்மாண்டத்தை விட நல்ல கதை தான் ஜெயிக்கும் என்று நிரூபித்த பாலா

நான் கடவுள் இல்லைநான்  #மோடி
11/01/2025

நான் கடவுள் இல்லை
நான் #மோடி

10/01/2025

#இந்தியன்2 க்கு கொஞ்சமே கொஞ்சம் மேல.. மத்தபடி Surely Not a 😒

Send a message to learn more

ஸ்டிக்கர் தேவையற்றது இதோட எப்படி ஒரு மனுஷன் கட்ட முடியும்
10/01/2025

ஸ்டிக்கர் தேவையற்றது இதோட எப்படி ஒரு மனுஷன் கட்ட முடியும்

தொழில் தொடங்க !!எச்சரிக்கை!!! பதிவு..டீ, காபியை மக்கள் அதிகமா விரும்புறது உண்மை தான். அதுக்காக எந்த இடத்துலயும் கடையை போ...
10/01/2025

தொழில் தொடங்க !!எச்சரிக்கை!!! பதிவு..

டீ, காபியை மக்கள் அதிகமா விரும்புறது உண்மை தான். அதுக்காக எந்த இடத்துலயும் கடையை போட்டு சம்பாதிச்சிட முடியாது.

தொழில் பற்றிய முன்அனுபவமே இல்லாம 5லட்சம் கட்டினா அவங்களே கடை செட்டப் போட்டு நம்மளை கல்லாபெட்டில உக்கார வச்சிடுவாங்கன்னு ஒரு ஆர்வத்துல நிறைய பேர் இதுல இறங்குறாங்க.

tea boy, tea time, tea break ன்னு ஏகப்பட்ட நிறுவனங்கள் Franchise பன்னி தராங்க. ஓப்பன் பன்னி தந்துட்டு போய்டுவாங்க. வாடகை 20-25K , ரெண்டு பேர் சம்பளம் 30K, EBக்கு 5K ன்னு மாசம் 50ஆயிரத்துக்கு மேல மீதி இருந்தா தான் ஓனருக்கு பணம் கிடைக்கும். இதுல மாசம் 2000-3000 Franchise க்கு கமிசன் கொடுக்கனும்.

தினம் 3000 லாபம் பாக்கனும்ன்னா குறைந்தது 400பேர் டீ குடிக்க வரனும். ஒரு தெருல ஒரு கார்னர்ல ஒரே ஒரு டீ கடை இருக்கும் சமயத்துல 400பேர் டீ சாப்பிட வர்ரது சாதாரணம். ஆனா இப்போ அப்படி இல்லை.

ஒரு தெருல வரிசையா 20கடை இருக்குற இடத்துல குறைந்தது 5கடை டீ கடை தான் இருக்கு. அப்புறம் 400 கஸ்டமர் வர்ரது எப்படி சாத்தியம். கடை பில்டிங் ஓனருக்கும், EB காரனுக்கும், Franchise காரனுக்கும் சம்பாதிச்சி கொடுத்துட்டு கடை ஓனர் லாபமே இல்லாம தான் நிக்கனும்.

எங்க ஏரியால Tea boy ன்னு கடை ஒரே வாரத்துல பக்கத்து பக்கத்து தெருவுலயே போட்ருக்காங்க. வேற வேற ஓனர். ஏற்கனவே பழைய சின்ன டீ கடைகள் வேற அங்க இருக்கு. சின்ன தெருவுக்குள்ள இவ்ளோ டீ கடை வச்சிட்டு யாரும் திருப்தியா சம்பாதிக்க முடியாது.

Franchise காரன் இதுவரை 300 Outlets, 500 outlets ன்னு போய்கிட்டே இருப்பான். அவனுக்கு ஒரு கடைக்கு 2000 கமிசன் ன்னா கூட 300 கடைக்கு மாசம் 6லட்சம் லாபம் ஆச்சு. அதனால 5லட்சத்தோட யாரும் பிசினஸ் பன்ற ஐடியால இருக்காங்கன்னு தெரிஞ்சாலே பேசி கடையை போட வைக்க தான் அவங்க முயற்சி பன்னுவாங்க.

வியாபாரத்துக்கு நல்ல இடமா என்னன்னு பாத்து, உங்க பேர்லயே உங்க டிசைன்லயே கடையை ஆரம்பிக்கிறது தான் பெஸ்ட். எனக்கு தெரிஞ்ச ஒருசிலர் Franchise ன்னு போய் மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க.

Franchise இல்லாம சொந்தமா டீ ஷாப் வச்ச ஒருத்தரும் லாபமே இல்லாம தினமும் என்கிட்ட பொழம்புவார். 7லட்சம் செலவு பன்னி Interior work எல்லாம் நல்ல டிசைனா பன்னி ஆரம்பிச்சார். ஆனா வாடகை கொடுக்க கூட லாபம் நிக்கலன்னு சொல்வார். 9மாசம் ஆச்சு இன்னும் பிக்கப் இல்லை.ஆனாலும் கடையை விடவும் தயக்கமா இருப்பதாக சொன்னார்..

பிசினஸ் ஆரம்பிக்கும் போது இருக்குற ஆர்வமும் தைரியமும், பிசினஸ் சரியா போகலன்னு ஆறு மாசத்துலயே தெரியும் போது அதை இடம் மாத்தவோ, கைவிடவோ செய்யவும் தைரியம் இருக்கனும்.

நாலு பேர் என்ன நினைப்பாங்க, பிசினஸ் லாஸ் ஆகிருச்சே இப்படியெல்லாம் தயங்கிட்டு இருந்தா கண்ணை முடி திறக்குறதுக்குள்ள குழிக்குள்ள விழ வேண்டியிருக்கும். அப்புறம் மீள்வது கடினம்.

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும். பிசினஸ்ல இது ரொம்ப முக்கியம்.
படித்ததில் யோசிக்க வைத்த பதிவு

வெரி குட்... அடுத்த Assignment என்னனு Update பண்றேன் ❤️
10/01/2025

வெரி குட்... அடுத்த Assignment என்னனு Update பண்றேன் ❤️

Address


Alerts

Be the first to know and let us send you an email when Madras view posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madras view:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share