02/03/2024
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி
குழந்தை பருவ புற்றுநோய் இலவச சிகிச்சையளிப்பதற்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூலம் 'ரிதம்ஸ் ஃபார் க்யூர் ' என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்தவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல வருடாந்திர நிதி திரட்டும் நிகழ்வை நடத்துகிறது. இந்த ஆண்டு 16.03.2024 அன்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 9952405440 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் இலவச சிகிச்சையை வழங்கி வருகிறது. இந்த மையத்தில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைபிரிவு, அறுவை சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வசதி உள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 2800 க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மையத்தின் சேவைகளைப் பெற்றுள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் இலவச சிகிச்சை பெற்றவர்கள்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் வென்றவர்கள் இசை விருந்து படைக்க விருக்கின்றார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்க அனைவரையும் அழைக்கின்றோம். நன்கொடை அளிக்க விரும்புகிறவர்கள் "Camila Children Caner fund - S.R. Trust" என்ற பெயரில் காசோலையாகவோ அல்லது வரையோலையாகவோ வழங்கலாம்.
மேலும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இணையதள முகவரியில் (www.mmhrc.in.) மருத்துவ சேவைகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.