Global Pix Tamil

  • Home
  • Global Pix Tamil

Global Pix Tamil Welcome to the official page of Global Pix Tamil. Watch Global Pix Tamil News anytime and anywhere

Shout out to my newest followers! Excited to have you onboard! Ramakirouchenane Adhimoolam, Tanmoy Chakraborty, Venkat S...
31/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Ramakirouchenane Adhimoolam, Tanmoy Chakraborty, Venkat Sethu, ராமகிருஷ்ணன் சக்திவேல், Jeeva Vijay, Bharani Dharan, Shivdan Choudhary Ajmer, Jamal Mohaideen, Gautam Sharma Rabel, Srikrishna Kannan, M Ravikumar, Kumaresan M, Jeyakumar Jeyakumar, Badmash Chora, Raja Ramachdiram, Smarty Nilesh Kumar, ZubirJaffar ZubirJaffar, Govindha Raji, Hanuman Ram Gurjar Gunjal, Riknang Marak, Prince Verma, Abhishek Kumar, Ajit Rana, P Vijayvel, Vinod, Ncc Cadet Raja, Vinod Pandey, Bhayalal Bhayalal Parmar, Abhishek Daruan, Manibalan E, Vaibhav Vaibhav, Sei Telsing, बलराम प्रजापत, Samant Kumar, M Balaswami M Balu, Raja Zahid, Ramesh Kumar, Atul Jibhakate, Thiruknatarajan, Saan Raj

25/01/2024

👉தேசிய வாக்காளர் தினம்

✍️ இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் 2011ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது.

✍️இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது.

✍️வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது மேலும் தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Welcome to the official page of Global Pix Tamil.
Watch Global Pix Tamil News anytime and anywhere

கீழப்பளுவூர் சின்னச்சாமி:-அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீழப்பளுவூர் சின்னச்சாமி (1915 – 1964) என்று அறியப்படும் சின்னச்...
25/01/2024

கீழப்பளுவூர் சின்னச்சாமி:-

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீழப்பளுவூர் சின்னச்சாமி (1915 – 1964) என்று அறியப்படும் சின்னச்சாமி இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் முதன்முதலாகத் தீக்குளித்து உயிர்விட்ட போராளி ஆவார்.

தீக்குளிப்பு

1964 ஜனவரி 25 இல் திருச்சிக்கு வந்த சின்னச்சாமி,இரயில் நிலையத்தின் வாயிலில், விடியற் காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டு, ”தமிழ் வாழ்க, இந்தி ஒழிக” எனக் கத்தியவாறு, கட்டாய இந்தி திணிப்பைக் கண்டித்து தீக்குளித்து உயிரிழந்தார்.

சிலை

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் நாள் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளாகத் பா.ம.க, தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, நா.த.க போன்ற கட்சிகள் கடைபிடித்து வருகின்றன.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம் பேட்டையில் கீழப்பளுவூர் சின்னச்சாமிக்கு தமிழக அரசினால் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

24/01/2024

👉தேசிய பெண் குழந்தைகள் தினம் (National Girl Child Day)

✍️இந்திய சமுதாயத்தில் ஒரு பெண் குழந்தை எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

✍️ பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ (BBBP) திட்டத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது. பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ (BBBP-Beti Bachao, Beti Padhao) திட்டம் 22 ஜனவரி 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.

Welcome to the official page of Global Pix Tamil.
Watch Global Pix Tamil News anytime and anywhere

Shout out to my newest followers! Excited to have you onboard! Narender Kumar, Sakthi Rengarajan, Dnyaneshwar Kevat, Pra...
24/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Narender Kumar, Sakthi Rengarajan, Dnyaneshwar Kevat, Prabha, Sahil Jamal, Prasanna Kumar, Senthil Singai, Bharat Tanti, R Elangovan, முத்து, Samir Kothari, கொங்கு அன்பு ரமேஷ், Anoop Kumar Annu, Sudhakar Ramadoss, Dhananjay Kumar, Vck Ambethvanan

21/01/2024

நான் அந்த ராமசாமி இல்ல சந்தானதிற்கு குளோபல் பிக்ஸ் தமிழ் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Welcome to the official page of Global Pix Tamil.
Watch Global Pix Tamil News anytime and anywhere

 🛕✍️ராமர் மந்திர் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஒரு இந்துக் கோயிலாகும்.  இத...
20/01/2024

🛕
✍️ராமர் மந்திர் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஒரு இந்துக் கோயிலாகும். இது இந்து மதத்தின் முக்கிய தெய்வமான ராமரின் பிறந்த இடமான ராம ஜென்மபூமியின் இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் அயோத்தியில் "சரயு" நதிக்கரையில் அமைந்துள்ளது. 1528 இல் முகலாய பேரரசர் பாபரால் 'பாபர் மஸ்ஜித்' என்ற பெயரில் ஒரு மசூதி கட்டப்பட்டதிலிருந்து இது சர்ச்சைக்குரிய இடமாகும்.

🗞️அயோத்தி ராமர் மந்திர் பற்றிய வரலாற்று சுவடுகள்:-

👉அயோத்தி கோவில் ஏன் பிரபலமானது?

✍️நீண்ட காலத்திற்கு முன்பு, ராம ஜென்மபூமி அல்லது ராமர் பிறந்த பூமியைக் குறிக்க ஒரு கோயில் இருந்ததாக அந்த இடம் அயோத்தியில் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இந்த கட்டிடம் இந்தியாவின் முதல் முகலாய பேரரசர் பாபரால் அழிக்கப்பட்டதாகவும் அதன் இடிபாடுகளில் பாபர் மசூதி என்ற மசூதியைக் கட்டியதாக கூறப்படுகிறது.

👉ராமர் கோவில் கதவை திறந்தது யார்?

✍️1980களில், விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பிற இந்து தேசியவாத குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அந்த இடத்தில் ராம ஜென்மபூமி மந்திர் ("ராமர் பிறந்த கோவில்") கட்டுவதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தன. 1985 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி அரசாங்கம் இந்துக்கள் பிரார்த்தனை தலத்தை அணுக அனுமதித்தது.

👉பாபர் மசூதியை இடித்தது யார்?

✍️ 1992 டிசம்பர் 6 ஆம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP),பிஜேபி, சிவசேனா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் ஆர்வலர்கள் மேலும் இந்து தேசியவாத அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து இலக்கு வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தினால் நாடு தழுவிய வகுப்புவாத கலவரங்களில் குறைந்தது 2,000 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.

👉ராமர் எப்போது உயிருடன் இருந்தார்?

📖சுமார் 5,000 கி.மு

✍️ராமர் கதை எல்லோரா குகைகளின் மிகப்பெரிய சிவன் கோவிலில் 8 ஆம் நூற்றாண்டின் நிவாரண கலைப்படைப்பாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளது, அது இந்திய சமுதாயத்திற்கு அதன் முக்கியத்துவத்தை பரிந்துரைக்கிறது. சில இந்து நூல்களில், ராமர் த்ரேதா யுகத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது, அவற்றின் ஆசிரியர்கள் கிமு 5,000 க்கு முன்பே இருந்ததாக மதிப்பிடுகின்றனர்.

👉ராமர் கோவில் பட்ஜெட் என்ன?

✍️ஏறத்தாழ ரூ.1,800 கோடி (அருகில் $217 மில்லியன்) செலவில் கட்டப்பட்ட ராமர் கோயில், உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு நாளும் 100,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

👉ராமர் கோவில் கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?

✍️ தரை தளம் கட்டப்பட்டுள்ளது, முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் டிசம்பர் 2024 க்குள் முடிக்கப்படும், என்று எதிர்பார்க்கப்படுகிறது

👉இந்த நிலையில் அயோத்தியில் ராம்லாலாவின் பிரதிஷ்டை ஏற்பாடு:-

✍️வரும் 2024 ஜனவரி 22 அன்று ராமர் கோவிலில் ராம்லாலா பிரான் பிரதிஷ்டா நடத்தப்பட உள்ளது. பிரான் பிரதிஷ்டைக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது, ஏற்கனவே நிறைய ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. காசியில் உள்ள அறிஞர்கள் பண்டித ராம்லாலாவை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள் என்றும் நிகழச்சியில் பாரத பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது

✍️மேலும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மூலம் 7,000 க்கும் மேற்பட்டோர் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

📘 இந்திய ஆன்மிகவாதி ஓஷோ 1990ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி மறைந்தார்.
19/01/2024

📘 இந்திய ஆன்மிகவாதி ஓஷோ 1990ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி மறைந்தார்.


சுவாமி விவேகானந்தர்இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்த...
12/01/2024

சுவாமி விவேகானந்தர்
இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.

இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்' மற்றும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.

சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.

1893ஆம் ஆண்டு சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையை தொடங்குவதற்கு முன், 'அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!' என்று ஆரம்பித்தார்.

சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்திற்கும் சென்றார். அங்கே பல மக்கள் இவருக்கு சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், 'சகோதரி நிவேதிதா'.

இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த இவர் தன்னுடைய 39வது வயதில் 1902ஆம் ஆண்டு மறைந்தார்.


     #ராகுல்_டிராவிட்🏏 இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் 1973ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திலுள்ள இ...
11/01/2024



#ராகுல்_டிராவிட்
🏏 இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் 1973ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் பிறந்தார். 1996ஆம் ஆண்டு இந்திய அணி சார்பாக கிரிக்கெட் ஆடத் தொடங்கிய இவர், அக்டோபர் 2005ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

🏏 டிராவிட் சிறந்த ஆட்டக்காரர் மற்றும் சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் ஆகிய விருதுகளை தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். இவர் பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். நீண்ட நேரத்திற்கு நின்று பேட்டிங் செய்யக்கூடிய திறனைப்பார்த்து இவரை தி வால் (The Wall) என்று அழைப்பார்கள்.

🏏 ராகுல் டிராவிட் ஒரு இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் மற்றும் இந்திய தேசிய அணியின் முன்னாள் கேப்டனாவார், தற்போது அதன் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.


🏏 Indian cricketer Rahul Dravid was born on 11th January 1973 in Indore, Madhya Pradesh. He started playing cricket for the Indian team in 1996 and was appointed as the captain of the Indian cricket team in October 2005.

🏏 Dravid won Player of the Year and Test Player of the Year awards in his inaugural year (2004). He has received many awards like Padma Shri and Padma Bhushan. He is called The Wall because of his ability to stand and bat for a long time.

🏏 Rahul Dravid is an Indian cricket coach and former captain of the Indian national team, currently serving as its head coach.

சென்னையில் இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் டாப் 10 முதலீடுகள்!மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்...
08/01/2024

சென்னையில் இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் டாப் 10 முதலீடுகள்!

மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹55,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.


 #இனி_உலக_சுற்றுலாவினர்_லட்சதீவின்_பக்கம்இந்தியாவின் மிக அழகான மற்றும் அமைதியான இடங்களில் ஒன்று இந்த லட்சத்தீவு. மொத்தம்...
08/01/2024

#இனி_உலக_சுற்றுலாவினர்_லட்சதீவின்_பக்கம்

இந்தியாவின் மிக அழகான மற்றும் அமைதியான இடங்களில் ஒன்று இந்த லட்சத்தீவு. மொத்தம் 36 தீவுகள், 12 பவளப்பாறைகள் மற்றும் மூன்று திட்டுகளைக் கொண்டதே லட்சத்தீவு.

மொத்தம் 36 தீவுகள் இருந்தாலும் அதில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். லட்சத்தீவு 1956இல் நமது நாட்டின் யூனியன் பிரதேசமாக ஆனது. இப்போது இந்தியாவில் இருக்கும் எட்டு யூனியன் பிரதேசங்களில் இதுவும் ஒன்றாகும்.

மோடி ஜி யின் லட்சதீவு விசிட் பிரமோட் செய்ய காரணமே மாலத்தீவு சமீபத்தில் சீனாவின் பக்கம் சாய்ந்ததன் விளைவே. இருப்பினும் இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான சலசலப்புக்கு மத்தியில், என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது,

சடாகோ சசாகி   ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் த...
07/01/2024

சடாகோ சசாகி

ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு வீச்சால், இரத்த புற்றுநோயினால் சசாகி பாதிக்கப்பட்டார்.

சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவருடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்னும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினார்.

அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினார். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தார், பின் எஞ்சிய கொக்குகள் அவரின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவரின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி அக்டோபர் 25, 1955 அன்று ஹிரோஷிமா செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனையில் தனது 12வது வயதில் இறந்தார்.

சசாகியின் மரணத்திற்குப் பிறகு, 1958 இல், ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் தங்கக் கொக்கு வைத்திருக்கும் சசாகியின் சிலை திறக்கப்பட்டது. சிலையின் அடிவாரத்தில் "இது எங்கள் அழுகை, இது எங்கள் பிரார்த்தனை, உலகில் அமைதி" என்று எழுதப்பட்ட பலகை உள்ளது.

24/11/2023

Finals are won on cricket field and not on paper 😅😅

24/11/2023

Rinku Singh The Finisher.

Just a leaf.
08/04/2023

Just a leaf.

மோதிலால் நேரு🏁 நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆ...
06/05/2022

மோதிலால் நேரு

🏁 நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார்.

🏁 ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார்.

🏁 இவர் 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போதுதான் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

🏁 இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார். எளிமையால் கவரப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால் நேரு 1931ஆம் ஆண்டு மறைந்தார்.

சர்வதேச மருத்துவச்சி தினம்💉 ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச்சி தினம் மே 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.💉 மருத்துவச்சி என்ப...
05/05/2022

சர்வதேச மருத்துவச்சி தினம்
💉 ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச்சி தினம் மே 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

💉 மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர் தாய்-சேய் செவிலி பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.

💉 இவர்கள் தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணிபுரிகின்றனர். இவர்களின் அறிவு திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

✍ உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கின்ற மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி   ட்ரையர் நக...
05/05/2022

✍ உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கின்ற மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி ட்ரையர் நகரில் பிறந்தார்.

✍ இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக தலைசிறந்த ஆய்வறிஞராக எழுத்தாளராக சிந்தனையாளராக புரட்சியாளராகக் கருதப்படுபவர்.

✍ பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஆனால் இவரது ஆய்வுகளும் கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்துள்ளது.

✍ பொதுவுடைமைக் கொள்கைகளின் முக்கியமானவர்களுள் ஒருவரான கார்ல் மார்க்ஸ் 1883ஆம் ஆண்டு மறைந்தார்.

🔥 மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் கா...
04/05/2022

🔥 மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

🔥 அவர்களை நினைவுக்கூறுவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகப் பின்பற்றப்படுகிறது.

21 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய் புதின் அவர்கள் இடையே நடந்த பேச்சு கூட்டத்தில் பின்புறத்தில் மோடி நிற்கிறார்.
08/03/2022

21 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய் புதின் அவர்கள் இடையே நடந்த பேச்சு கூட்டத்தில் பின்புறத்தில் மோடி நிற்கிறார்.

Welcome to the Official Global Pix Tamil  page 🙏🙏🙏
05/09/2019

Welcome to the Official Global Pix Tamil page 🙏🙏🙏

Address


Alerts

Be the first to know and let us send you an email when Global Pix Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global Pix Tamil:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share