Ilamkural News

  • Home
  • Ilamkural News

Ilamkural News Ilamkural News,
Finest and Purest news delivery instantly.

04/02/2024
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார்; டெல்லி செல்லும் ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை...
04/02/2024

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார்;

டெல்லி செல்லும் ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது;

இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

WhatsApp Group Invite

ஆய்வக உதவியாளர்கள் பணிகளை செய்வதற்கு ஆய்வகப் பணிகள் குறித்து தேவையான பயிற்சியினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், பாட...
04/02/2024

ஆய்வக உதவியாளர்கள் பணிகளை செய்வதற்கு ஆய்வகப் பணிகள் குறித்து தேவையான பயிற்சியினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், பாடத்திட்டத்தின்படி ஆய்வக செயல்பாடுகள் முறையாக தொடர்ச்சியாக நடைபெறுவதை பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் உத்தரவுகளை பிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஆய்வகங்களின் முக்கியத்துவம் கருதி, இப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆய்வக உதவியாளர்கள், ஆய்வக பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திடும் வகையில், அவர்களுக்கு ஆய்வக உதவியாளர் பணியினை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும்."

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Group Invite

03/02/2024

‘குரூப்-2 தேர்வர்கள் கவனத்திற்கு’ - டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


https://chat.whatsapp.com/EzB5SqMOWNeIyRLp9xqlp5

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்படாமலேயே இருந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 11, 2024 அன்று டி.என்.பி.எஸ்.பி. வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி நேற்று (02-02-24) வெளியிட்டது.

இந்த நிலையில், பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான நேர்முகத் தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு 21.02.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"கொள்கை என்னவென்று கூறட்டும் பிறகு பார்க்கலாம்"- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி...
03/02/2024

"கொள்கை என்னவென்று கூறட்டும் பிறகு பார்க்கலாம்"

- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து

WhatsApp Group Invite

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகாலம் நீட்டிப்புபாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் செல்வத்தின் பதவிகாலம் ஓராண...
03/02/2024

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகாலம் நீட்டிப்பு

பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் செல்வத்தின் பதவிகாலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இந்த மாதத்துடன் பதவி காலம் நிறைவடையும் நிலையில் மேலும் ஓராண்டு நீட்டித்து ஆளுநர் உத்தரவு

WhatsApp Group Invite

தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நின...
03/02/2024

தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்!

இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்!

எண்ணித் துணிக கருமம்!

முதல்வர்

WhatsApp Group Invite

”ரெண்டு பீர் வாங்குகேன்… ஒன்னு குடிச்சேன், இன்னொன்னு குடிக்கும்போது வயித்துவலி வந்துடுச்சு”…    டாஸ்மாக் கடையில் பீர் வா...
03/02/2024

”ரெண்டு பீர் வாங்குகேன்… ஒன்னு குடிச்சேன், இன்னொன்னு குடிக்கும்போது வயித்துவலி வந்துடுச்சு”…

டாஸ்மாக் கடையில் பீர் வாங்கி குடித்த நபர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி...

திறக்கப்படாத பாட்டிலில் கலங்கலாக தூசிகள் இருப்பதாக வீடியோ வெளியிட்ட நபர்

WhatsApp Group Invite

நடிகர் விஜய் கட்சி பெயர் அறிவித்ததும் மதுரையில் அலப்பறை கிளப்பிய தமிழக வெற்றி கழகத்தினர்.. தமிழகத்தின் கொடையாக தளபதி வரு...
03/02/2024

நடிகர் விஜய் கட்சி பெயர் அறிவித்ததும் மதுரையில் அலப்பறை கிளப்பிய தமிழக வெற்றி கழகத்தினர்.. தமிழகத்தின் கொடையாக தளபதி வருகிறார் எனக் கூறி மக்களுக்கு குடை வழங்கிய நிர்வாகிகள்…

WhatsApp Group Invite

https://chat.whatsapp.com/EzB5SqMOWNeIyRLp9xqlp5புத்தாண்டு லாட்டரி குலுக்கல்: சபரிமலைக்கு வந்த புதுச்சேரி அய்யப்ப பக்தரு...
03/02/2024

https://chat.whatsapp.com/EzB5SqMOWNeIyRLp9xqlp5

புத்தாண்டு லாட்டரி குலுக்கல்: சபரிமலைக்கு வந்த புதுச்சேரி அய்யப்ப பக்தருக்கு ரூ.20 கோடி பரிசு

புதுச்சேரியை சேர்ந்த பக்தர் தரிசனத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் வந்தபோது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியதாக தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,

கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. அந்த லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.400 ஆகும். மொத்தம் 45 லட்சம் சீட்டுகள் விற்பனையாகி இருந்தது. இந்த குலுக்கலில் முதல் பரிசு ரூ.20 கோடி எக்ஸ் சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு கிடைத்து இருந்தது.

இந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு பாலக்காட்டில் மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்து திருவனந்தபுரத்தில் உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் முதல் பரிசு பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் சபரிமலைக்கு வந்த புதுச்சேரியை சேர்ந்த 33 வயதான பக்தர் தரிசனத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வந்தபோது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் அவர், தனது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.


இதனால், கேரள லாட்டரி இயக்குனரகமும் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தனது நண்பர்களுடன் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு வந்த அந்த வாலிபர் முதல் பரிசு கிடைத்த
அந்த லாட்டரி சீட்டை அலுவலகத்தில் ஒப்படைத்து சான்றிதழ் பெற்றுக் கொண்டார். ரூ.20 கோடி பரிசு தொகையில், அதிர்ஷ்டசாலியான அய்யப்ப பக்தருக்கு வரி நீங்கலாக ரூ.12.60 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

WhatsApp Group Invite

2 மாதத்தில் 3வது முறை.. பிப்.25 ஆம் தேதி திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி? குஷியில் பாஜக தொண்டர்கள்சென்னை: தமிழக பாஜக த...
03/02/2024

2 மாதத்தில் 3வது முறை.. பிப்.25 ஆம் தேதி திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி? குஷியில் பாஜக தொண்டர்கள்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 25 ஆம் தேதி திருப்பூர் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 2 மாதங்களில் 3 வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். மத்தியில் 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி விரும்புகிறது. இதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி ஆட்சிய பிடிக்க இந்தியா கூட்டணி முயன்று வருகிறது.

எனினும் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருப்பது பாஜகவுக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. வட மாநிலங்களில் பாஜக வுக்கு ஆதரவுகள் இருந்தாலும் தென் மாநிலங்களில் பாஜகவால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக பாஜக தென் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் தான் பிரதமர் மோடி வருகிற 25 ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை அதிக வாக்குகள் பெறுவதோடு அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு அண்ணாமலை தமிழத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக கூறியிருப்பதால் பாஜக இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தான் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அண்ணாமலையில் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 25 ஆம் தேதி திருப்பூர் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் பிரதமர் மோடி 3வது முறையா தமிழகம் வருகை தருகிறார்

WhatsApp Group Invite

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ilamkural News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ilamkural News:

  • Want your business to be the top-listed Media Company?

Share