அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு செய்தியாளர் சந்திப்பு
ஹைட்ரோ கார்பன், நீயூட்ரினோ போன்ற திட்ட பிரச்சினைக்கு தமிழகத்தில் இடமில்லை- முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ
ஹைட்ரோ கார்பன், நீயூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் பகுதியில் காலம் காலமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட ஒரு அறிவிப்பினால் இனி அந்த பிரச்சினைக்கு தமிழகத்தில் இடமில்லை, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரில் உள்ள இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா தலைமை வகித்தார். .இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு 128 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புறையாற்றினார்.
கோவில்பட்டியில் முதலமைச்சருக்கான ஹாக்கி போட்டி தொடக்கம்
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி - கோவில்பட்டியில் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் பிரிவு முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் தொடங்கியது. இருநாள்கள் நடைபெறும் இந்த போட்டியில் 9அணிகள் பங்கேற்றுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் இரு நாள்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான ஆண்கள் பிரிவு ஹாக்கிப் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் 9 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் நாள் முதல் ஆட்டத்தை ஹாக்கி பயிற்றுநர் முத்துகுமார் தொடங்கி வைத்தார். முதல் ஆட்டத்தில், டாக்டர் அம்பேத்கர் ஹாக்கி கிளப் அணியும், ஏ.எம்.சி. ஹாக்கி கிளப் அணியும் மோதியதில், 5க்கு 1 என்ற கோல் கணக்கில் அம்பேத்கர் அணி வெற்றி பெற்றது.2ஆவதாக நடைபெற்ற ஆட்டத்தில், நேதாஜி ஹாக்கி கிளப் அணியும், பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப் அணியும் மோதியதில், 7க்கு 0 என்ற கோல் கணக்கில் பாண்டவர்மங்கலம் அணி வெற்றி பெற்றது. 3ஆவது ஆட்டத்தில் கோவில்பட்டி ஹாக்கி கிளப் அணியும், யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் அணியும் மோதியதில் 5க்கு 0 என்ற கோல் கணக்கில் யங் சேலஞ்சர்ஸ் அணியை கோவில்பட்டி ஹாக்கி கிளப் அணி வீழ்த்தியது.4வது ஆட்டத்தில் சிறப்பு விளையாட்டு விடுதி அணியும், டாக்டர் அம்பேத்கர் ஹாக்கி கிளப் அணியும் மோதியதில் 7க்கு 0 என்ற கோல் கணக்கில் சிறப்பு விளையாட்டு விடுதி அணியினர் வெற்றி பெற்றனர். போட்டியின் நடுவர்களாக மூர்த்தி கார்த்திக்ராஜா, சுதாகர், ஓம்பிரகாஷ், வரதராஜன் ஆகியோர் செயல்பட்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட ராதா என்கிற ராணி 1941 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று பூலாவரி பஞ்சாயத்து தலைவராக பதவியேற்ற நிகழ்வுகளின் முழு தொகுப்பு உங்கள் JJ டிவி நியூஸ் தொலைக்காட்சி சிறப்பு செய்தி தொகுப்பு
சேலம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் பதவி ஏற்பு ...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போட்டிப் மிகப்பெரிய அளவில் அதிக அளவில் வெற்றி பெற்ற வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று தமிழகம் முழுவதும் பதவி ஏற்று வருகின்றனர்
சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலாவரி கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராதா அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார் அவரின் வெற்றியை கழகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் கழக தலைமை நிலையச் செயலாளரும் சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி எஸ் கே செல்வம் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடிகர் சூர்யா அவர்களில் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டுவிழாவில் ஒரு ஏழை மாணவியின் எழுச்சிமிகு முழுமையான பேச்சு தொகுப்பு...
சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் ஏழை மாணவியின் துணிச்சல் பேச்சு அனைவரையும் கண்கலங்க வைத்தது
முழுமையான பேச்சின் தொகுப்பு