Erode News

Erode News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Erode News, Media/News Company, .

26/12/2024

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை LIVE

30/03/2022

LIVE: Latest Namma Oor News Live | Tamil News | Modi | BJP | DMK | CM MK Stalin | Ukraine | Russia

02/03/2022

LIVE வேலூர் மயான கொள்ளை 2022 | Night Version

01/10/2021

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு: 85%விற்பனை

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து அதிகரித்ததால், விவசாயிகளும், வியாபாரிகளும் அவர்களுக்கு பிடித்த மாடுகளை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதி, நாமக்கல், கருர் போன்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.

இங்கு வரத்தாகும் மாடுகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று கூடிய சந்தையில் 400 பசுமாடுகள்,200 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 650 மாடுகள் வரத்தானது. மாடுகளை தென்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகளும் வந்து அவர்களுக்கு பிடித்த மாடுகளை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். இதனால், இந்த வாரம் வரத்தான மாடுகள் 85 சதவீதம் விற்பனையானதாக மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பு.புளியம்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தைக்கு நேற்று 50 எருமைகள், 650 கலப்பின மாடுகள், 300 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வந்திருந்தனர்.

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். எருமைகள் ரூ.16ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம், கறுப்பு வெள்ளை மாடு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம், ஜெர்சி ரூ.23 ஆயிரம் முதல் ரூ.53 ஆயிரம், சிந்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம், நாட்டுமாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.76 ஆயிரம் ரூபாய் வரையும், வளர்ப்பு கன்றுகள் 6000 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. நேற்று 1000 க்கும் மேற்பட்ட மாடுகள் ரூபாய் 2 கோடிக்கு விற்பனையானது.

ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான வருவாய் நி...
29/09/2021

ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் வருவாய்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் கென்னடி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் நடராஜன், வெங்கிடு, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் உஷாராணி சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி மற்றும் மாநில செயலாளர் ஏசையன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது, காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும், அனைத்து பணப் பயன்களும் வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு பொருந்தும் என்ற அரசானை எண்.625-ஐ கணக்கில் கொள்ளாமல், புதிய ஓய்வூதிய திட்டம் சந்தா தொகைப் பிடிப்பதை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்ட நிதித்துறை சிறப்பு செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டம் காரணமாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா விதிமீறல் வழக்கு. ஈரோடு நீதிமன்றத்தில் அமைச்சர் முத்துச்சாமி நேரில் ஆஜர்அதிமுக ஆட்சியின்போது கொராேனா விதி மீறலில்...
28/09/2021

கொரோனா விதிமீறல் வழக்கு. ஈரோடு நீதிமன்றத்தில் அமைச்சர் முத்துச்சாமி நேரில் ஆஜர்

அதிமுக ஆட்சியின்போது கொராேனா விதி மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது "விடியலை நோக்கி ஸ்டாலின்" என்ற தலைப்பில் பிரச்சாரத்தை திமுக மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அன்று திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான, கனிமொழி ஈரோடு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அவரது பிரச்சாரத்தின்போது, கொரோனா விதிகளை மீறியதாக கூறி அப்போதைய அதிமுக அரசு, ஈரோடு மாவட்ட திமுக செயலாளரும், வீட்டுவசதி துறை அமைச்சருமான சு.முத்துசாமி மீது வழக்கு தொடர்ந்தது. இன்று இந்த வழக்கு ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-இல் நடைபெற்றது.

இதனையொட்டி, அமைச்சர் முத்துசாமி. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல், வரும் அக்டோபர் 12ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். அமைச்சர் முத்துசாமி நீதிமன்றத்தில் ஆஜரானதால், ஏராளமான வழக்கறிஞர்களும், பொதுமக்களும் திரண்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

https://youtu.be/Gwcbhzd9bGcRR Vs SRH Live Tamil | Rajasthan Royals Vs Sunrisers Hyderabad | IPL Live | IPL 2021 | Crick...
27/09/2021

https://youtu.be/Gwcbhzd9bGc
RR Vs SRH Live Tamil | Rajasthan Royals Vs Sunrisers Hyderabad | IPL Live | IPL 2021 | Cricket

RR Vs SRH Live Tamil | Rajasthan Royals Vs Sunrisers Hyderabad | IPL Live | IPL 2021 | Interested in more Sports news update ? subscribe Namma Oor News immed...

பெருந்துறை ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி இடைத்தேர்தல். அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய...
20/09/2021

பெருந்துறை ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி இடைத்தேர்தல். அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் 10-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினராக பதவி வகித்த ஜெயக்குமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றார். அதனையடுத்து, 10-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. தற்போது 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பெருந்துறை தொகுதியில் காலியாக உள்ள 10-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினருக்கான இடைத் தேர்தலிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, 10-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக பொன்முடி ஊராட்சி சில்லாங்காடு கிளை செயலாளரான எஸ்.என்.பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் பொன்முடி, குள்ளம்பாளையம், மேட்டுப்புதூர், சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கு, வேட்பாளர் எஸ்.என்.பாலகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில், இன்று மதியம் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரிடம், அதிமுக வேட்பாளர் எஸ்.என்.பாலகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.2 கோடி நிதிபெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர...
16/09/2021

பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.2 கோடி நிதி

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 69 ஆயிரத்து 200 சதுரஅடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது‌.
ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களுடன் 401 படுக்கைகள் கொண்ட கட்டிடம் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டிடம் கட்டப்பட்டது.

இதற்கான பங்களிப்பாக சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடிக்கான காசோலை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி த்துறை அமைச்சர் சு. முத்துசாமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனங்களின் சேர்மன் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்திதுரைசாமி, செந்தில் குமார், ரோட்டரி சங்கங்கள் முன்னாள் தலைவர் டாக்டர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

14/09/2021

தொடர் அவதூறு கருத்து!: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2018ம் ஆண்டு பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என முகநூலில் எச். ராஜா பதிவிட்டிருந்தார். இதேபோல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2018ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டிருந்தார். எச்.ராஜா பதிவு தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் முன்னாள் அமைச்சரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் சார்பில் ஈரோடு நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு பதிவுசெய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து தற்போது முதல்முறையாக ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜராகியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வருகின்ற 21ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆம்புலன்சில் வந்து மனு அளித்த நபரால் பரபரப்பு!ஈரோடு மாவட்டம் அந்தியூர் சங்கராபாளையம் பகுதியை...
13/09/2021

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆம்புலன்சில் வந்து மனு அளித்த நபரால் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சங்கராபாளையம் பகுதியை சேர்ந்த நடராஜன் (58) என்பவர் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினருடன் ஆம்புலன்சில் வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- நான் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். எனக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். கடந்த 3 வருடத்திற்கு முன்பு நடந்து சென்றபோது தவறி விழுந்ததில் முதுகு தண்டுவடப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அன்றிலிருந்து படுத்த படுக்கையாக உள்ளேன்.

எங்கள் குடும்பத்திற்கு பூர்விகமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், எனக்கு இன்னும் ஒரு ஏக்கர் நிலம் பங்கு உள்ளது. அதை என் அண்ணன் தர மறுத்து வருகிறார். தற்போது என் மனைவியும், மகனும் என்னுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து சென்றுவிட்டனர். நான் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறேன். என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என் தாய் தான் என்னைக் கவனித்து வருகிறார். எனக்கு உரிய பங்கை வாங்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என் தாய் மிகவும் கஷ்டப்படுகிறார். எனவே, என்னை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு சார்பில் எனக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் ஆம்புலன்சில் வந்து மனு கொடுக்க வந்த நபரால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

ஈரோட்டில் பங்குச்சந்தை நிறுவன உரிமையாளர் திடீர் மாயம். மனைவி புகாரின் பேரில் போலீசார் விசாரணை!ஈரோடு பெரியசேமூர், எல்லப்ப...
13/09/2021

ஈரோட்டில் பங்குச்சந்தை நிறுவன உரிமையாளர் திடீர் மாயம். மனைவி புகாரின் பேரில் போலீசார் விசாரணை!

ஈரோடு பெரியசேமூர், எல்லப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (37). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரவிக்குமார் கடந்த ஒன்றை வருடமாக பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவரது பங்குச்சந்தை நிறுவனத்தில் திடீர் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். அவருக்கு மனைவி புவனேஸ்வரி ஆறுதல் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் ரவிக்குமார் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றுள்ளார். மதியம் புவனேஸ்வரி போன் செய்து சாப்பிட அழைத்தபோது சிறிது நேரத்தில் வருவதாக கூறியுள்ளார். ஆனால் மாலை ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், புவனேஸ்வரி மீண்டும் ரவிகுமாருக்கு போன்செய்த போது, அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி கணவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். ஆனால் ரவிகுமார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து, அவர் வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் மாயமான தனது கணவரை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தார். புகாரின் மீது வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

12/09/2021

திம்பம் மலைப்பாதையில் புலி நடமாட்டம்
ஈரோடு பகுதியைச் சேர்ந்த யூசுப் மற்றும் அவரது நண்பர்கள் தனது காரில் நேற்று அதிகாலை தாளவாடி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது 26 வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவர் மீது புலி ஒன்று படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக செல்போனில் படம் பிடித்தனர்.

வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்ட புலி மெதுவாக எழுந்து சென்று சாலையோர தடுப்பு சுவரிலிருந்து, கீழே இறங்கி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இரவு மற்றும் பகல் நேரங்களில் சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் | 12-Sep-2021 |Mega Vaccination Drive | கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக தடுப்...
11/09/2021

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் | 12-Sep-2021 |
Mega Vaccination Drive | கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

09/09/2021

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம்: அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார், ஈரோடு மாவட்டம் பெருந் துறை தொகுதிக்கு உட்பட்ட கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் விநியோகம் செய்ய அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
5 லட்சத்து 47 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

08/09/2021

மிளகு கொள்முதல் செய்து ரூ.8 லட்சம் மோசடி. ஜவுளிக்கடை உரிமையாளர் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த மனோஜ்குமார். மிளகு வியாபாரி. இவர் நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் மிளகு மற்றும் மஞ்சள் வியாபாரம் செய்து வருவதாகவும், கடந்த மாதம் 20ஆம் தேதி கேரளாவில் உள்ள டீலரிடம் 2.5 டன் மிளகு வாங்கிய நிலையில், அதில் ஈரோட்டை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவருக்கு ரூ.8 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலன 1.8 டன் கிலோ மிளகை கடனாக கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பணம் பெறுவதற்காக அவரது குடோனுக்கு சென்றபோது ஜவுளிக்கடை உரிமையாளரும், அவரது மனைவியும் பணம் தராமல் காலம் தாழ்த்தியதாவும், இதனை தொடர்ந்து பலமுறை கேட்டும் பணம் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 31ஆம் தேதி அவரது குடோனுக்கு சென்றபோது அது காலி செய்யப்பட்டது தெரிய வந்ததாகவும், இதுகுறித்து விசாரிக்க போனில் தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், கடந்த 2ஆம் தேதி ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டிற்கு நேரில் சென்று தான் பணத்தை கேட்டதாகவும், அப்போது, ஜவுளிக்கடை உரிமையாளர் குடும்பத்தினர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். எனவே, தனது ரூ.8.22 லட்சம் பணத்தை மீட்டுத்தரவும், பண மோசடியில் ஈடுபட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

07/09/2021

மாவட்டத்தில் தொடர் மழை ஈரோட்டில் அதிகபட்சமாக 55 மி.மீட்டர் கொட்டியது-குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 55 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெருந்துறை 10, கோபி, 5, பவானி 10, நம்பியூர் 12, சென்னிமலை 3, மொடக்குறிச்சி 7, கவுந்தப்பாடி 18.4, எலந்தை குட்டைமேடு 2.4, அம்மாபேட்டை 7.2, குண்டேரிப்பள்ளம் 11 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் சராசரி மழையளவு 8.4 மில்லி மீட்டர் ஆகும்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 102 அடியாகவும், அணைக்கான நீர் வரத்து 812 கன அடியாகவும் இருந்தது. மழை காரணமாக காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு 377 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குடிநீர் தேவைக்காக 373 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதேபோல மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.690 அடியாகவும், நீர் வரத்து 22,076 கன அடியாகவும் இருந்தது. மழையின் காரணமாக டெல்டா பாசனத்திற்கு ஆற்றில் திறந்துவிடப்பட்டிருந்த தண்ணீர் அளவு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

வாய்க்கால் பாசனத்திற்கு 650 கன அடி திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே தொடர் மழையின் காரணமாக முத்தம்பாளையம் மற்றும் பெரிய சடையம்பாளையம் ஆகிய மழைநீர் சேகரிப்பு குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

07/09/2021

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான முழு விவாதம்
https://fb.watch/7SIGxMzR6I/

Address


Alerts

Be the first to know and let us send you an email when Erode News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share