ISCUF KURAL

ISCUF KURAL Voice of ISCUF

கடந்த 5,6,7 தேதிகளில் கோபி பகுதியில் இந்தியா கூட்டணியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் கதிர் அரிவா...
17/04/2024

கடந்த 5,6,7 தேதிகளில் கோபி பகுதியில் இந்தியா கூட்டணியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடந்த 5,6,7 தேதிகளில் கோபி பகுதியில் இந்தியா கூட்டணியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் கதிர் அரிவா...
17/04/2024

கடந்த 5,6,7 தேதிகளில் கோபி பகுதியில் இந்தியா கூட்டணியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

13/04/2024
சென்ற இடமெல்லாம் சிறப்பு...
13/04/2024

சென்ற இடமெல்லாம் சிறப்பு...

நேற்று குறை இன்று தீர்வு.திருப்பூர். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருப்பூர் மக்களவை தொகுதிக்கான இந்தியக் கம்யூன...
01/04/2024

நேற்று குறை இன்று தீர்வு.
திருப்பூர்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருப்பூர் மக்களவை தொகுதிக்கான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயன் அவர்கள் நேற்று 31.03.2024 மாலை திருப்பூர் மாநகரம் மூன்றாவது வார்டு பகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மளிகைக் கடை அண்ணாச்சி வாகனத்தை மறித்து குறைகளை சொன்னார். அதை செவி மடுத்த வேட்பாளர் கே.சுப்பராயன் இன்று 1.04.2024 காலை 7.00 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஸ்குமார், மண்டல தலைவர் கோவிந்தராஜ், 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் லோகநாயகி கருப்புசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் துரைசாமி ஆகியோரை சம்மந்தப் பட்ட இடத்திற்கு நேரில் அழைத்து சென்று விட்டார்.
பகுதி மக்களை நேரில் அழைத்து விசாரித்தபோது, அவர்கள் ரோடு வந்துவிட்டது, பாதாள சாக்கடை வசதி வேண்டும் என்று கூறினர். அதை கேட்டுக் கொண்ட வேட்பாளர் பாதாள சாக்கடை திட்டம் ஏற்கனவே மாமன்றத்தின் திட்டத்தில் உள்ளது.
தேர்தலுக்கு பின்னர் அது படிப்படியாக உங்கள் பகுதிக்கும் விரிவு படுத்தப் படும் என்று கூறினார். இதற்கு பகுதி மக்கள் நன்றி கூறினர்.

ஜனவரி 26 விவசாயிகள் டிராக்டர் பேரணி - கோவை மாதம்பட்டியில் தொடங்கி பேரூரில் முடிவுற்றது.கோவை.ஒன்றிய அரசு தொகடைபிடித்து வர...
26/01/2024

ஜனவரி 26 விவசாயிகள் டிராக்டர் பேரணி - கோவை மாதம்பட்டியில் தொடங்கி பேரூரில் முடிவுற்றது.

கோவை.

ஒன்றிய அரசு தொகடைபிடித்து வரும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து இன்று ஜனவரி 26 ல் நாடுத் தழுவிய அளவில் டிராக்டர் பேரணி நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆகியவை இணைந்து முடிவு செய்து இருந்து.

அதன்படி கோவையை அடுத்த மாதம்பட்டியில் இருந்து இன்று மாலை மணிக்கு டிராக்டர், ஆட்டோ, டாக்சி, இருசக்கர வாகனங்களில் விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தினர் பேரணியாக வந்தனர். பேரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

இதில் 44 தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக நான்கு சட்டங்களாக திருத்தியதை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப் பட்டது.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பெரியசாமி, பி.ஆர்.பழனிசாமி, மூர்த்தி, தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோ, மாவட்ட தலைவர் பழனிசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் எம்.ஆறுமுகம், எல்.பி.எஃப். ஆனந்த், ஐ.என்.டி.யூ.சி. பி.சண்முகம், ஏ.ஐ.டி.யூ.சி. சி.தங்கவேல், எச்.எம்.எஸ். ஜி.மனோகரன், சி.ஐ.டி.யூ. கே.மனோகரன், எம்.எல்.எப். மு.தியாகராஜன், வி.சரவணகுமார், ஏ.ஐ.சி.சி.டி.யூ. க.பாலசுப்ரமணியம், எஸ்.டி.டி.யூ. ரகுபு நிஸ்தார், எல்.டி.யூ.சி. மணிகண்டன் உள்ளிட்ட மத்திய சங்கங்களின் மாவட்ட தலைமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பத்மஸ்ரீ விருபெற்ற பத்ரப்பன் அவர்களுக்கு வாழ்த்து.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பத்ரப்பன் மேட்டுப் பாளையத்த...
26/01/2024

பத்மஸ்ரீ விருபெற்ற பத்ரப்பன் அவர்களுக்கு வாழ்த்து.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பத்ரப்பன் மேட்டுப் பாளையத்தை அடுத்த தாசம் பாளையத்தை சேர்ந்தவர். இவர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளி கும்மி கலையை பயிற்றுவிப்பது மற்றும் அரங்கேற்றுவது என்று பணியாற்றி வருகிறார்.

இவரது கலைத் திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டி ஏற்கனவே தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய அரசு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வங்கி அறிவித்துள்ளது. செய்தி அறிந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எ.ஆறுமுகம் எக்ஸ்.எம்.எல்.ஏ., கோவை மாவட்ட செயலாளர் சி.சிவசாமி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கே.வெங்கடாசலம், சாந்தி சந்திரன், கோவை மத்திய மண்டல துணைச் செயலாளர் ஏ.பி.மணிபாரதி, காரமடை மேற்கு கமிட்டி செயலாளர் ரங்கசாமி, மேட்டுப்பாளையம் நகரக் கமிட்டி துணை செயலாளர் மன்சூர், செல்வராஜ் ஆகியோர் பத்ரப்பன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நாட்டின் 75வது குடியரசு தினம். கொடியேறு விழா. கோவை. நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டி இன்று கோவை ஜீவா இல்லத்தில...
26/01/2024

நாட்டின் 75வது குடியரசு தினம். கொடியேறு விழா.

கோவை.
நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டி இன்று கோவை ஜீவா இல்லத்தில் இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியினர் தேசியக் கோடியை கொடியேற்றி வைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சிவசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சாந்தி சந்திரன் எம்.சி., தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் எக்ஸ்.எம்.எல்.ஏ., குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

மாவட்ட துணை செயலாளர்கள் ஜே.ஜேம்ஸ், எம்.குணசேகர், மாவட்ட பொருளாளர் சி.தங்கவேல், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கே.வெங்கடாசலம், வி.ஆர்.பாண்டியன், கல்லுடைக்கும் தொழிலாளர் சங்க பொது செயலாளர் கே.ஆர்.தங்கராஜ், மேற்கு மண்டல செயலாளர் என்.சந்திரன், மத்திய மண்டல துணை செயலாளர் ஏ.பி.மணிபாரதி, சி.ஜீவா, பூபதி, செல்வராஜ், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இ.எஸ்.ஐ., பி.எப்.க்கான ஊதிய உச்ச வரம்பை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.கோ...
05/01/2024

இ.எஸ்.ஐ., பி.எப்.க்கான ஊதிய உச்ச வரம்பை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோவை.

இ.எஸ்.ஐ., பி.எப். க்கான ஊதிய உச்ச வரம்பை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.ய.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இ.எஸ்.ஐ. என்பது தொழிலாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இதன்மூலம் தொழிலாளர்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம். தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படும் நேரங்களில் இத்திட்டம் பேருதவியாக உள்ளது.

இத்திட்டத்தில் தொழிலாளி, நிர்வாகம், மாநில அரசு என மூன்று தரப்பினரும் காப்பீட்டு நிதி பங்களிப்பு செய்கினறனர். அதேபோல பி.எப். அதாவது வருங்கால வாய்ப்பு நிதி. இதுவும் தொழிலாளி ஓய்வு பெரும் காலத்தில் பயனளிக்கும் முக்கியத் திட்டமாகும். இத்திட்டங்களில் சேர தற்போது ஒன்றிய அரசு வரம்பை நிர்ணயித்துள்ளது. மாத சம்பளம் ரூ 21 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் அவர் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர முடியாது என்றும், மாதச் சம்பளம் ரூ 15 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் அவர் பி.எப் திட்டத்தில் சேர முடியாது என்றும் வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மத்திய சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் தொழிலாளர்களை வஞ்சிக்கும் இந்த புதிய நடைமுறைக்கு எதிராக கோவையில் கோவை மாவட்ட பொறியியல் பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமைதாங்கினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.எம்.செல்வராஜ், கௌரவத் தலைவர் வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன், துணைப் பொதுச் செயலாளர்கள் சி.தங்கவேல், என்.ரமேஷ்குமார்,பொருளாளர் ஏ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய உச்ச வரம்பு சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப் பட்டது.

28/08/2023

#தொழிலாளி, விவசாயி இணைந்து போராட வேண்டும். #கே.சுப்பராயன் #கட்டட சங்கம் கூட்டம் merch

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது முதல் முறை ...
11/04/2023

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது முதல் முறை அல்ல இது போன்ற நயவஞ்சக தாக்குதல்களைக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை எதிர் கொண்டுள்ளது.

இந்திய விடுதலைக்கு முன்னர் தோன்றிய நான்கு கட்சிகளில் ஒன்று. இந்திய விடுதலைப் போரில் வேறு எந்த கட்சியையும் விட அதிக உயிர் தியாகம் செய்த கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். பூரண விடுதலை என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்மொழிந்த கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான்.

இந்த கட்சிக்கு தேர்தல் கமிஷன் கூறும் தேசிய அங்கீகாரத்திற்கான அளவுகோல் ஏற்புடையதல்ல.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் கே. சுப்பராயன் எம்.பி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளியானவுடன் தனது உணர்வுகளை பகிர்ந்து உள்ளார்.

" இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதாம்!

நாடு தழுவிப் பரந்து விரிந்து பரவியுள்ள கட்சி மட்டுமல்ல,
உலகின் எல்லா நாடுகளிலும் தாக்குதல்கள், நெருக்கடிகளுக்கு இடையில் செயலாற்றி வருகிற நெருப்பு மலர் கம்யூனிஸ்ட் கட்சி!

இதன் வயது தெரியுமா பா.ஜ.க. வின் தேர்தல் கமிஷனுக்கு?

175 வயதுகொண்ட எந்த ஒரு கட்சியும் உலகில் எங்குமே இல்லை!

பல நாடுகளில் இன்றும் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டுள்ளது! அதன் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன! ஆயினும் அது அழிந்துவிடவில்லை!

இந்தியாவில் பிரிட்டீஸ் அரசால் 8 ஆண்டுகள் தடைசெய்யப்பட்டது! காங்கிரஸ் ஆட்சியில் 4 ஆண்டுகள் என 12 ஆண்டு காலம் தடைசெய்யப்பட்ட கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!

இந்துத்துவ மூடர்களே... அதனால்கம்யூனிஸ்ட் கட்சி அழிந்தா போயிற்று?

தூக்குக் கயிறுகளாலும், தோட்டாக்களாலும் கொல்லப்பட்டும் அழியாது வாழும் அமரகாவியம் படைத்தது கம்யூனிஸ்ட் கட்சி!

மிகச்சரியாக இந்துத்துவாவின் கழுத்தைக் குறிபார்த்து, களத்தையும், அணியையும் கட்டுகிற தளகர்த்தன் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி என்பதால், கைவைத்துக் காரியத்தை முடித்துவிடப்பார்க்கிறது பா.ஜ.க.!

இதே இந்திய மண்ணில், இந்திய வகைப்பாசிசத்தை, குழி தோண்டிப்புதைத்து முடிவுரை எழுதப்போவது இதே இரத்த ஜண்டா தான் என்பதை, நாடி நரம்புகள் முறுக்கேற, முஷ்டியை மடக்கி முழங்குவோம் தோழர்களே!

நமது வளர்ச்சியைத் தடுத்து, நம்மை பலவீனப்படுத்திட, வஞ்சகமாக சாதி, மத, இனவெறிகளைப் பயன்படுத்தினார்கள்! அதனால் தற்காலிக வெற்றி பெற்றுள்ளார்கள்!

வர்க்கப் பார்வை, வர்க்க ஐக்யம் வர்க்க உணர்வு கொண்ட விவசாயி - தொழிலாளர்களின் புரட்சிகர பெரும்படையைக் கட்டக்களமிறங்குவோம்! "

- கே.சுப்பராயன் MP

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த மாவீரன் கே. பாலதண்டாயுதம் அவர்களின் பிறந்தநாள் இன்று....
01/04/2023

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த மாவீரன் கே. பாலதண்டாயுதம் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து தற்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன் அவர்கள் பாலதண்டாயுதம் அவர்களுடன் சிறையில் வாழ்ந்த காலத்தை வசந்த காலம் என்று குறிப்பிடுகிறார்.

அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளதாவது " எனது இளம்பருவத்தில், என்னை ஈர்த்து இழுத்த தியாகத் திருஉரு, தோழர் பாலதண்டாயுதம் அவர்களை என்னால் என்றுமே மறக்கமுடிவதில்லை!

19 வயதில் பிரிட்டானிய போலீசால் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரவேங்கை தோழர் பாலதண்டாயுதம்!

அதற்குப் பின், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துருவ நட்சத்திரம் தோழர் பி.சி.ஜோசியின் தலைமையில், சோசலிச இந்தியாவைக் கட்டி அமைக்கத் தன் முழுவாழ்வையே அர்ப்பணித்த மாமனிதர் தோழர் பாலன்!

அவரது பிறந்தநாள் இன்று !

அடக்குமுறை நெருப்பிலேயே மலர்ந்த நெருப்பு மலர் தோழர் பாலன்!

அவரோடு 1970 ஆகஸ்டு 15-முதல் 22 நாட்கள் கோவை மத்திய சிறையில் வாழ்ந்தவசந்தகாலத்தை மறக்க முடியுமா?

காலையில் சிறைவாழ்வு, தலைமறைவு வாழ்வு என வகுப்பு நடத்தி கம்யூனிஸ்ட் இயக்க ஞானத்தை புகட்டிய ஞான ஆசிரியரை மறக்க முடியுமா?

அந்த மாமனிதனுக்கு எனது புகழஞ்சலிகள் !"

- கே.சுப்பராயன் MP

கோவை சுந்தராபுரம், விநாயகபுரத்தில் மக்கள் குடி போகாத இடத்தில் 106 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி 50 கோடி ரூபாய் மக்கள...
10/02/2023

கோவை சுந்தராபுரம், விநாயகபுரத்தில் மக்கள் குடி போகாத இடத்தில் 106 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி 50 கோடி ரூபாய் மக்கள் பணத்தை வீணடித்தவர்கள் வாய் கிழிய பேசுகிறார்கள் கலைஞருக்கு 81 கோடி ரூபாயில் பேனா சிலை வைக்க வேண்டுமா என்று.

Address


Telephone

+919443294260

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISCUF KURAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ISCUF KURAL:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share