Thoothukudi News

  • Home
  • Thoothukudi News

Thoothukudi News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thoothukudi News, Media/News Company, .

30/06/2023

எங்கள் நிறுவனத்தின் புதிய படைப்பை அறிமுகம் செய்ய பெருமைப்படுகிறோம், நம்ம ஊர் சினிமா, இந்த பக்கத்தை லைக் மற்றும் ஃபாலோவ் செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்ள்கிறோம்

30/03/2022

LIVE: Latest Namma Oor News Live | Tamil News | Modi | BJP | DMK | CM MK Stalin | Ukraine | Russia

22/02/2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022 - சிறப்பு நேரலை | Local Body Election | Urban Local Election | Election Updates
https://fb.watch/bk5MnUynLO/

https://youtu.be/Gwcbhzd9bGcRR Vs SRH Live Tamil | Rajasthan Royals Vs Sunrisers Hyderabad | IPL Live | IPL 2021 | Crick...
27/09/2021

https://youtu.be/Gwcbhzd9bGc
RR Vs SRH Live Tamil | Rajasthan Royals Vs Sunrisers Hyderabad | IPL Live | IPL 2021 | Cricket

RR Vs SRH Live Tamil | Rajasthan Royals Vs Sunrisers Hyderabad | IPL Live | IPL 2021 | Interested in more Sports news update ? subscribe Namma Oor News immed...

14/09/2021

இதுக்கு போய் ரூ.1.50 கோடி செலவா? கனிமொழிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ள திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, தனது தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது, கட்டிடங்களை திறந்து வைப்பது என்று எப்போது பிஸியாக உள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் (2019-2020) ஆம் ஆண்டு எம்பி நிதியை கொண்டு மில்லர்புரம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதனை தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சில தினங்களுக்கு முன்பு திறந்துவைத்தார். தூத்துக்குடி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த பேருந்து நிழற்குடை அமைக்க ரூ. 154 லட்சங்கள் (ரூ. 1.54 கோடி) செலவு செய்யப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவரான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேருந்து நிலையம் மற்றும் செலவு குறிப்பிடப்பட்ட கல்வெட்டு ஆகியவற்றின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், " இதற்கு போய் 1.54 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதா" என்று திமுக எம்.பி. கனிமொழியை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

13/09/2021

பள்ளி ஆசிரியரை மிரட்டி ரூ.4.5 லட்சம் பறித்த சென்னை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி ஆசிரியரை கடத்தி சென்று நான்கரை லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில் சென்னை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏழல் அருகே குறிப்பான்குளம் குப்பத்தை சேர்ந்தவர் சாலமன். இவர் அங்குள்ள அரியநாயகபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சாலமன் தம்பி தேவராஜுக்கும், சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சிவகுமார் நாயருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு குறிப்பான்குளம் குப்பத்திற்கு சென்ற சென்னை வளசரவாக்கம் போலீசார், சாலமனை தனியாக அழைத்து சென்று தந்தையின் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு அழைத்துள்ளனர். அங்கிருந்த வேனில் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சிவகுமார் நாயர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். சாலமனை வேனுக்குள் ஏற்றிய அவர்கள், தம்பி தேவராஜ் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் சாலமனின் குடும்பத்தை மிரட்டி நான்கரை லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சாலமன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. சாலமன் அளித்த புகாரின் பேரில் சென்னை வளசரவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரமேஸ்கண்ணா, சிவகுமார் நாயர் உள்ளிட்ட 6 பேர் மீது ஆள்கடத்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் | 12-Sep-2021 |Mega Vaccination Drive | கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக தடுப்...
11/09/2021

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் | 12-Sep-2021 |
Mega Vaccination Drive | கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

07/09/2021

சாத்தன்குளம் வழக்கு: ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தது.

மேலும், தற்போதைய சூழலில் உயர்நீதிமன்ற உத்தரவில் மாற்றங்களை மேற்கொள்ள விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து ஜாமீன் மறுத்துள்ளது.

07/09/2021

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான முழு விவாதம்
https://fb.watch/7SIGxMzR6I/

06/09/2021

முதல்வர் அறிவிப்பையொட்டி தூத்துக்குடியில் வஉசி சாலை புதிய பெயர்பலகை-கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

தூத்துக்குடி : தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி சாலை வஉசி. சாலை என்று மாற்றப்பட்டு பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் சாரு ஸ்ரீ முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி புதிய பெயர் பலகையை திறந்து வைத்து பேசுகையில்:முதல்வர் மு.க.ஸ்டாலின், வ.உ.சியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு டபிள்யூ.ஜி.சி. ரோட்டிற்கு வ.உ.சி சாலை என்று மாற்றப்படும் என அறிவித்தார்.

வ.உ.சியின் புகழை, பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு வ.உ.சி தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் அறிவித்துள்ளார். வஉசி.க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக தேச துரோக குற்றத்துக்காக சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பெரிய போராட்டத்துக்கு பிறகு 4 ஆண்டுகளுக்குள் சிறையில் இருந்து வெளியே வந்தார். வ.உ.சி ஆங்கிலேயருக்கு எதிராக 2கப்பல்களை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கினார். அவர் வக்கீலாக பணியாற்றிய போது வழக்குகளுக்கு வருபவர்களை தன் வீட்டில் தங்க வைத்து உணவளித்து வழக்கை வென்று கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அவரது சுதேசி கப்பல் கம்பெனி லாபம் ஈட்டவில்லை. சிறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்தபோது அவருடைய பொருளாதாரம் மிக நெருக்கடிக்கு தள்ளப்பட்ட நேரத்திலும் தளர்ந்துவிடாமல் அவர் தொடர்ந்து இந்த மண்ணின் விடுதலைக்காக, மக்களின் உரிமைக்காக போராடினார். தேச விடுதலைக்காக மட்டுமின்றி சுய மரியாதைக்காகவும், சமூக மாற்றம், பெண் விடுதலைக்காகவும் அவர் தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பேசக்கூடிய தலைவராக இருந்துள்ளார். பெண்கள் கல்வி பெற வேண்டும், அனைத்து மனிதர்களுக்கும் கேள்வி கேட்கக்கூடிய உரிமை இருக்கிறது என்பதனை தான் வாழ்ந்த காலத்தில் தைரியமாக எடுத்து சொன்ன தலைவர் வ.உ.சி. தான் என்றார்.

02/09/2021

தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்- அமைச்சர் எ.வ.வேலு
https://fb.watch/7MxpTy9a6S/

தூத்துக்குடி எஸ்.பி.க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவுதூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார...
02/09/2021

தூத்துக்குடி எஸ்.பி.க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், மணல் கடத்தல் வழக்கில் சாயர்புரம் போலீஸார் என்னை ஜூலை 22-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

''மனுதாரர் மீது 2019-ல் மணல் கடத்தல் வழக்குப் பதியப்பட்டுள்து. ஆனால், கடந்த ஜூலையில்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இதே மனுதாரர் பட்டா நிலத்தில் இருந்து 1,500 யூனிட் மணல் கடத்திய புகாரை மாவட்டக் குற்றப்பிரிவு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கை எஸ்.பி. முறையாகக் கண்காணிக்கத் தவறிவிட்டார்.

எனவே, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மணல் கடத்தல் தொடர்பாக விஏஓ மற்றும் வருவாய்த் துறையினர் உரிய அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு!தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு தென்கிழக்க...
09/08/2021

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு தென்கிழக்கு திசையில் எட்டயபுரம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.இன்று (ஆகஸ்ட் 9) மாலை 3.17 மணி நிலவரப்படி கோவில்பட்டியில் இருந்து 17 கிமீ தொலைவிலும் எட்டயபுரத்தில் இருந்து 7 கிமீ தொலைவிலும் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தனியார் அமைப்பு தகவல் தெரிவித்தது.

தட்டாா்மடம் பகுதியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்கரோனா பரவலை தடுக்கும் வகையில் தட்டாா்மடம் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க...
05/05/2021

தட்டாா்மடம் பகுதியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தட்டாா்மடம் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.தமிழகத்தில் கரோனா 2-ஆம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ், முதலூா் சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் ஆகியோா் முதலூா், பொத்தகாலன்விளை, போலையா்புரம் விலக்கு, தட்டாா்மடம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டனா்.

அப்போது பொதுமக்களிடையே கரோனா பரவலை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழி முறைகள், தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பிரசாரம் மேற்கொண்டனா். நோய் தொற்றில் இருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மேலும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா்.

நாசரேத்தில் வெப்பத்தை தணித்த மழைநாசரேத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென மழை பெய்தால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்...
05/05/2021

நாசரேத்தில் வெப்பத்தை தணித்த மழை
நாசரேத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென மழை பெய்தால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.நாசரேத் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.பொதுமக்கள் இயற்கை பானங்கள், குளிா்ந்த பானங்களை பருகி வருகின்றனா். மேலும் மதிய வேளையில் வெளியே வருவதை தவிா்த்து வந்தனா்.

இந்நிலையில் நாசரேத் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மழையால் நாசரேத் பிரதான வீதி, ரயில்வே நிலையம் அருகில் சேதமடைந்துள்ள சாலையில் மழைநீா் தேங்கி காணப்பட்டது.

சங்கரலிங்கசுவாமி கோயிலில் அஷ்டமி பூஜைகோவில்பட்டி வீரவாஞ்சிநகா் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில...
05/05/2021

சங்கரலிங்கசுவாமி கோயிலில் அஷ்டமி பூஜை
கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. பின்னா் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கணபதி பூஜை, கால பைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீா், சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக பக்தா்கள் இல்லாமல் பூஜைகள் நடைபெற்றன.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Thoothukudi News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share