26/12/2023
ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழக(ARU) ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு, குழந்தைகள் அதிகம் டிவி, மொபைல் போன் உள்ளிட்டவை பயன்படுத்துவது உடல்நலத்தில் பல்வேறு தீங்குகளை விளைவிக்கிறது என்று விரிவாக விளக்குகிறது.
'ஸ்கூல் ஹெல்த்' என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதிக மொபைல் போன் பயன்பாடு, குறிப்பாக குழந்தைகளின் கண்பார்வையை பாதிக்கும் என்றும் அவர்களின் உடல்நலனிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் கல்வியால் #மாணவர்கள் கணினி, லேப்டாப், மொபைல்போன் பயன்பாடுமே ஆபத்துதான் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜெர்மனி, கனடா, சிலி உள்ளிட்ட நாடுகளில் #மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாகவே உலகம் முழுவதுமுள்ள மாணவர்களின் கண்பார்வை, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரேநேரத்தில் பல மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்து என்றும் எச்சரிக்கின்றனர். உதாரணமாக லேப்டாப் பார்க்கும்போதும் மொபைல்போனையும் பயன்படுத்துவது கண்ணில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி விரைவில் பார்வை குறைபாடு வரக் காரணமாகிறது. கழுத்து, தோள்ப்பட்டை வலி, முதுகு வலி, உடலியக்கம் இல்லாததால் உடல் பருமன், அதனால் நீரிழிவு என பாதிப்புகள் தொடர்கின்றன.
ஆய்வாளர் ஷாஹினா பர்தான் இதுகுறித்து,
“குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. ஆனால், அதே நேரத்தில் அவர்களின் #ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம்.
சரியான முறையில் மற்றும் டிஜிட்டல் சாதனங்களிலிருந்து விலகி வெளியில் விளையாடுவது போன்ற #உடல் இயக்க நடவடிக்கைகள் #குழந்தைகளை ஈடுபட வைக்க வேண்டும்.
கற்றலுக்காக அவற்றை பயன்படுத்துவது அவசியம். ஆனால், சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்கிறார்.
ஆகவே, எப்போதும் உங்கள் தொலைபேசி திரை நேரத்தை 3 மணி நேரத்திற்கு மிகாமல் பார்த்து கொள்வது நல்லது 📲🔥