Naatu Nadappu

  • Home
  • Naatu Nadappu

Naatu Nadappu Naatu Nadappu covers all over Tamil Nadu - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events,

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கைhttps://youtu.be/7zK9o1TFuTY
01/06/2022

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை

https://youtu.be/7zK9o1TFuTY

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை

31/05/2022

திமுகவின் மீது கடுமையான சாடல் வானதி சீனிவாசன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது

https://youtu.be/xbRAyYDbDDE
31/05/2022

https://youtu.be/xbRAyYDbDDE

திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது திமுகவை கடுமையாக சாடினார் ...

 ராஜஸ்தான் ராயல்ஸ் கெதிரான இறுதிப்போட்டியில் குஜராத் அணி தனது முதல் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று அசத்தியது
30/05/2022

ராஜஸ்தான் ராயல்ஸ் கெதிரான இறுதிப்போட்டியில் குஜராத் அணி தனது முதல் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று அசத்தியது

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்...
30/05/2022

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேறினார்.

கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஏமாற்றினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், டிரெண்ட் போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது.

குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் விளையாடிய குஜராத் அணியில் தொடக்க வீரர் சாகா 5 ரன்னுக்கும், மேத்யூ வேட் 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 34 ரன்கள் அடித்தார்.

பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் 45 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

குஜராத் அணி18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

16 வயது செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை.செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் 2வது இடம் பிடித்த பிரக்...
29/05/2022

16 வயது செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை.

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐஓசி) வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா, பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

16 வயது செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை.செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் 2வது இடம் பிடித்த பிரக்...
29/05/2022

16 வயது செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை.

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐஓசி) வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா, பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.



புதிய நபர்கள் அனைவரும் நமது பேஜ் ஐ ஃபாலோ செய்து கொள்ளுங்கள் Naatu Nadappu

29/05/2022

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது காவல்துறை காவல்துறை ஆக மாறியுள்ளது இது என்ன திராவிட மாடல் ? #பிரேமலதா_விஜயகாந்த் சரமாரி கேள்வி

பெரிய எதிர்பார்ப்பில் விக்ரம்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராகி இருக்கிறார், இவரின்...
29/05/2022

பெரிய எதிர்பார்ப்பில் விக்ரம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராகி இருக்கிறார், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து கோலிவுட் வட்டத்தில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாகி வருகிறது.

அதன்படி மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமலின் விக்ரம் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பில் இருந்தே அப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஏன்னென்றால் தீவிர கமல் ரசிகரான லோகேஷ் அவரின் படத்தை இயக்கியிருப்பதால் விக்ரம் திரைப்படம் எப்படி வந்துள்ளது என்ற அரவம் அனைவரிடமும் காணப்படுகிறது.

இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் விஜய்யின் 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்து அவரே சமீபத்தில் பேசியிருந்தார்.

மேலும் தற்போது மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள இயக்குனர் ரத்னா குமார் சமீபத்திய பேட்டியில் தளபதி 67 படத்தில் பணியாற்றுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

விக்ரம் படத்தை பார்த்தால் தளபதி 67 எப்படியான படமாக இருக்கும் என தெரியவரும், இந்த முறை முழுக்க முழுக்க லோகேஷ் படமாகவும், விக்ரமை விட உக்ரமாக இருக்கும் என ரத்னா குமார் பேசியுள்ளார்.

இதுபோன்ற சினிமா செய்திகளை தெரிந்துகொள்ள இந்த பக்கத்தினை தொடரவும் Naatu Nadappu

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதுகாவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறதுஎதற்கெடுத்தாலும் திராவிட மாடல் நின...
28/05/2022

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது

காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது

எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் நினைக்கிறார்கள் இதுதான் திராவிட மாடலா

தேமுதிக பிரேமலதா அவர்கள் கேள்வி

https://youtu.be/ZY03qocZvlY

தேமுதிக கேப்டன் விஜயகாந்த்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதுகாவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறதுஎதற்கெடுத்தாலும் திர...

27/05/2022

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அடைய வேண்டுமானால் தீய சக்திகளை அடக்கவேண்டும் #அர்ஜுன்சம்பத்

Arjun Sampath | IMK .info |

ஜிஎஸ்டி நிலுவை தொகை ,  நீட் விலக்கு போன்ற கோரிக்கைகளை ஒரே மேடையில் பாரத பிரதமரிடம் ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்தார்   ...
27/05/2022

ஜிஎஸ்டி நிலுவை தொகை , நீட் விலக்கு போன்ற கோரிக்கைகளை ஒரே மேடையில் பாரத பிரதமரிடம் ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்தார்



https://youtu.be/lM7CZHdb380

ஜிஎஸ்டி நீட் விலக்கு போன்ற கோரிக்கைகளை ஒரே மேடையில் பாரத பிரதமரிடம் ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்தார் ...

https://youtu.be/xYBCEz2C4o4பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்க விழாவிற்கு வருகை தந்த திரு மோடி அவர்கள்புதிய கல்விக் கொள்கை ...
27/05/2022

https://youtu.be/xYBCEz2C4o4

பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்க விழாவிற்கு வருகை தந்த திரு மோடி அவர்கள்

புதிய கல்விக் கொள்கை மருத்துவம் இன்ஜினியர் போன்ற படிப்புகள் தாய்மொழியிலேயே கற்க வாய்ப்பு அளிக்கின்றன

பாரதப் பிரதமரும் தமிழக முதல்வரும் ஒரே மேடையில்

பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்க விழாவிற்கு வருகை தந்த திரு மோடி அவர்கள்புதிய கல்விக் கொள்கை மருத்துவம் இன்ஜி.....

பாஜக பிரமுகர் பாலசந்தர் படுகொலைக்கு நீதி வேண்டும்தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அதுபோல பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவி...
26/05/2022

பாஜக பிரமுகர் பாலசந்தர் படுகொலைக்கு நீதி வேண்டும்

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அதுபோல பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால் பாரதிய ஜனதா கட்சி கோட்டையை முற்றுகையிடும்



https://youtu.be/PFD2P9Ub8cU

பாஜக பிரமுகர் பாலசந்தர் படுகொலைக்கு நீதி வேண்டும்தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அதுபோல பெட்ரோல் டீசல் விலை....

மதுக்கடைகளை மூடினால் தான் மாணவர் சமுதாயத்தை காப்பாற்ற முடியும் – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை..!தமிழ்நாட்டில் மாண...
04/05/2022

மதுக்கடைகளை மூடினால் தான் மாணவர் சமுதாயத்தை காப்பாற்ற முடியும் – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை..!

தமிழ்நாட்டில் மாணவர்கள் பொது இடங்களில் மோதலில் ஈடுபடுதல், மது அருந்தி வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மாணவர்களின் ஒழுக்கம், எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் நலனுக்காக வரும் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் முன்னெடுப்புகள் குறித்து தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அவை தேவையானவை;

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களைத் தாக்க முனைதல், பொது இடங்களில் மோதலில் ஈடுபடுதல், மது அருந்தி வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட மாணவர்களின் செயல்பாடுகள் சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களின் இத்தகையப் போக்குக்கு முடிவு கட்டப்பட வேண்டும்; அவர்கள் நல்வழிப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும். இதைப் புரிந்து கொண்ட தமிழக அரசு, அதற்காக மாணவர்களின் கவனத்தை கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு, நீதி போதனை, சுற்றுலா என திசை திருப்பும் நோக்குடன் பல நிகழ்ச்சிகளை வரும் ஆண்டில் நடத்தவுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கது போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவது ஆகும். அரசின் இந்த நோக்கம் போற்றத்தக்கது.

மாணவர்கள் தவறான வழியில் பயணிப்பதற்கு சமூக நல நோக்கமற்ற திரைப்படங்களும், சமூக சூழலும் தான் முக்கியக் காரணங்கள் ஆகும். அவற்றையும் கடந்த முதன்மைக் காரணம் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாவது ஆகும். மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், மது மாணவர்களை வளைத்துப் பிடித்திருக்கிறது என்பதை அரசு உணர்ந்திருக்கிறது என்பது உறுதியாகிறது. ஆனால், எரிவதை பிடுங்கினால் தான் கொதிப்பது நிற்கும்; மதுக்கடைகளை மூடினால் தான் மாணவர் சமுதாயத்தை காப்பாற்ற முடியும் என்பதை மறந்து விட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாகக் கூறுவது கொதிக்கும் உலையில் நீர் ஊற்றுவதற்கு ஒப்பானது தான். அதனால் எந்த பயனும் ஏற்படாது; மாணவர் சமுதாயம் சீரழிவதையும் தடுக்க முடியாது.

படிக்கும் பருவத்தில் மது அருந்துவதும், அதன் போதையில் வன்முறையில் ஈடுபடுவதும் தான் சாகசம் என்ற தவறான எண்ணம் மாணவர்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. மது அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை திரைப்படங்களும், சமூகச் சூழலும் ஏற்படுத்துகின்றன என்றால், மாணவர்கள் மது குடிப்பதையும், அதற்கு அடிமையாவதையும் சாத்தியமாக்குவது தெருவுக்குத் தெரு திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான். அவற்றை மூடாமல் மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பது அறவே சாத்தியமற்ற ஒன்றாகும். இதை தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மது தாராளமாக கிடைப்பது தான், மதுவுக்கு மக்கள் அடிமையாவதற்கு காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. அது தான் தமிழகத்தில் நடக்கிறது. மாணவர்களால் எழுதுபொருட்கள் வாங்குவதை விட, மிகவும் எளிதாக மதுவை வாங்க முடிகிறது. நகரப்பகுதிகளில் ஒரு மாணவர் அவரது வீட்டிலிருந்து பள்ளிக்கு 2 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் என்றால், இடையில் குறைந்தது மூன்று இடங்களிலாவது மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். இந்த சூழல் தான் மாணவர்களையும், இளைஞர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி, அவர்களின் குடும்பங்களை சீரழிக்கிறது.

நகரப்பகுதிகளாக இருந்தால் பள்ளிகளில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும், மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிலும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு தாராளமாக அனுமதி அளித்துள்ளது. பள்ளிகளில் இருந்து 50 மீட்டர் அல்லது 100 மீட்டர் என்பது பள்ளி வளாகத்தின் எல்லையிலிருந்து தான் கணக்கிடப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் பள்ளி வளாகத்தில் மையத்திலிருந்து இந்த தொலைவு கணக்கிடப்படுகிறது. பள்ளிகளின் வளாகங்களே 300 மீட்டர், 400 மீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் என்பதால் பள்ளி வளாகத்திற்கு அடுத்த கட்டிடத்திலேயே மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.

அதேபோல், பள்ளி வளாகங்களுக்கு மிக அருகில் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் நேரடியாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மறைமுகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. மது, புகை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களுக்கு மத்தியில் வாழும் மாணவர்களிடம் மதுவுக்கு எதிராக விழுப்புணர்வு பரப்புரை செய்யும் போது அதனால் எந்த பயனும் ஏற்படாது; அரசு எதிர்பார்க்கும் பயனை இது தராது.

மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்; போதையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால், மதுக்கடைகளை மூட வேண்டும்; புகையிலைக்கு தடை விதிக்க வேண்டும். அதை செய்யாமல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக கூறுவது, அரசு தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, மாணவர்கள் சமுதாயத்தையும் ஏமாற்றும் செயலாகவே அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைமை செயற்கு குழு கூட்டம், தலைவர் . திரு. Kamal Haasan அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கட...
04/05/2022

மக்கள் நீதி மய்யம் தலைமை செயற்கு குழு கூட்டம், தலைவர் . திரு. Kamal Haasan அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நேரில் வரமுடியாதவர்கள் ஜூம் காணொளி மூலமாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் வருங்காலங்களுக்கான திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.
தலைவரின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளுடன் கூட்டம் நிறைவுற்றது.

Maiam Kamal Haasan

03/05/2022

இந்து மக்கள் கட்சியின் சார்பில் சிவனடியார்கள் அணி இன்று சென்னையில் கோலாகலத் துவக்கம் !

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை.. திராவிடர் கழகம் எதிர்த்த நிலையில் அரசு அதிரடிதருமபுரம் ஆதினம் குருமகா...
03/05/2022

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை.. திராவிடர் கழகம் எதிர்த்த நிலையில் அரசு அதிரடி

தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. . பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் அந்த ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்தா ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி காலமானார்.

அதனை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13 ம் ஆதீனகர்த்தராக பதவியேற்று ஞானபீடத்தில் அமர்ந்தார்.

அன்றைய தினமே தருமபுரத்தில் ஏற்பாடு மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழச்சி நடந்தது, வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமரந்து வீதி உலாவந்தார். அந்த பல்லக்கை அதற்காக ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்து வந்தார்கள்.

அந்த நிகழ்வை தொடர்ந்து டிசம்பர் 24 ம் தேதி தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சென்றவரை, அங்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வெள்ளி பல்லக்கில் அமரசெய்து பட்டினப் பிரவேசம் செய்யவைத்தனர். அதே போலவே காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோயிலிலும் நடைபெற்றது.

இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கடந்த 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், " தருமபுர மடத்துக்குப் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட - மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் 'மனித உரிமையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்' என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது"என்று தெரிவித்தார்.

திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதீனத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப் பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்று - அதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது என்ற தகவலையும் கி.வீரமணி குறிப்பிட்டிருந்தார்

தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. மனிதர்கள் சுமக்கும் பட்டினப் பிரவேசத்தைக் கைவிட வேண்டும்" என்று தெரிவித்த வீரமணி, நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் கூறி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதாலும் இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக எந்த மீனவரும் கடல் எல்லையை தாண்டி வருவது இல்லை; சில நேரங்களில் தவ...
03/05/2022

இலங்கையில் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக எந்த மீனவரும் கடல் எல்லையை தாண்டி வருவது இல்லை; சில நேரங்களில் தவறுதலாக வந்துவிடுகின்றனர்; இந்த பிரச்சனைக்கு கட்டாயம் தீர்வு காண்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மலையகம் மற்றும் ஈழப் பகுதிகளில் அண்ணாமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் மலையகத்தில் மே தின நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் இன்று யாழ்ப்பாணம் சென்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் தனியார் ஹோட்டல் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த ஆலோசனைக்குப்பின் யாழ்ப்பாணம் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கை அரசாங்கத்துக்கு நிதி உதவி, எரிபொருள் உதவி உள்ளிட்டவைகளை இந்தியா வழங்கிவருகிறது

இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13-வது சரத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இதனைத்தான் அண்மையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி இருந்தார். 13-வது அரசியல் சாசனம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை விரைவில் முடிவுக்கு வர இறைவன் அருள்புரிய வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் இலங்கையில் இருந்து அகதிகளாக வருகை தருகின்றனர். அப்படி அகதிகளாக வருகிறவர்கள் மீது கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை மக்களை தொப்புள் கொடி உறவுகளாக, அன்புடனும் ஆதரவுடனும் நேசக்கரம் நீட்டி வரவேற்கிறோம்

தென்னிந்திய மீனவர்களால் இலங்கை வட பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தாலும் இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்க வேண்டும் என்பதற்காக வருவது இல்லை. ஏதோ ஒரு சில தவறுகளால் வந்துவிடுகின்றனர். இது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விவகாரம்தான். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுகக்ப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறினார். மேலும் ஸ்ரீ ராமபிரானுக்கு அணில் உதவியது போல இலங்கை தமிழர்களுக்கு இந்த அண்ணாமலை உதவியாக இருப்பேன் என்றும் அண்ணாமலை கூறினார்

03/05/2022

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

03/05/2022
80 வயது குருக்கள் கைது பின்னணி என்ன? பொய் வழக்கு என போலீசுக்கு எதிராக கொதிக்கும் மக்கள்!கோவில் குருக்கள் பணியில் இருந்த ...
20/03/2022

80 வயது குருக்கள் கைது பின்னணி என்ன? பொய் வழக்கு என போலீசுக்கு எதிராக கொதிக்கும் மக்கள்!

கோவில் குருக்கள் பணியில் இருந்த 80 வயது முதியவரை, பொய்யான சிலை திருட்டு வழக்கில் கைது செய்துள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீது, கிராம மக்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு மேற்கே 3 கி.மீ., தொலைவில் உள்ளது நெம்மேலி கிராமம். இங்கு, 100 ஆண்டுகள் பழமையான விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் கோவில், உத்திராபதீஸ்வரர் கோவில் உள்ளன. இவற்றில், உத்திராபதீஸ்வரர் கோவில் சிதிலமடைந்து உள்ளது.

நெம்மேலியை அடுத்து மண்ணாங்கோவில் கிராமம் உள்ளது. அங்கும் 100 ஆண்டுகள் பழமையான காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. நெம்மேலி காசி விசுவநாதர் கோவிலும், மண்ணாங்கோவில் காத்தாயி அம்மன் கோவிலும், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த இரண்டு கோவில்களின் குருக்களாக இருப்பவர், 80 வயது முதியவர் சூரியமூர்த்தி. அவரை தான், சிலை திருட்டு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, தஞ்சை சிறையில் அடைத்துள்ளனர்.நெம்மேலி மற்றும் அதை சுற்றியுள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கைது நடவடிக்கையை கண்டித்து, சீர்காழியில் போராட்டம் நடத்தி உள்ளனர்.

இது குறித்து, நெம்மேலி கிராம நாட்டாண்மையும், சினிமா துணை நடிகருமான அறிவழகன் கூறியதாவது:ஆறு தலைமுறைகளாக குருக்கள் பணியை சூரியமூர்த்தி குடும்பம் செய்து வருகிறது. ஐந்து கிராமங்களில், சூரியமூர்த்தியை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. காத்தாயி அம்மன் கோவிலின் ஏழு சிலைகள், அருகில் இருக்கும் திருமயிலாடி சிவன் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

திருவிழா மற்றும் சிறப்பு பூஜை நாட்களுக்கு மட்டும், அங்கிருந்து எடுத்து வருவர். திருவிழா முடிந்த உடன், மீண்டும் சிலைகளை பாதுகாப்பு மையத்தில் வைத்து விடுவர்.ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., வீரமணி என்பவருக்கு, காத்தாயி அம்மன் கோவில் குல தெய்வ கோவில். அதனால், கோவில் விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.சில நாட்களுக்கு முன், திருவிழாவுக்காக காத்தாயி அம்மன் கோவிலுக்கு மூன்று சிலைகள் மட்டும் எடுத்து வரப்பட்டன. மீதமுள்ள நான்கு சிலைகளின் நிலை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக, அறநிலையத் துறைக்கு வீரமணி கடிதம் அனுப்பினார்.

ஏழு சிலைகளும், சிலை பாதுகாப்பு மையத்தில் இருப்பதாக அதிகாரிகள் பதில் அளித்தனர். இருந்த போதும், நான்கு சிலைகள் திருடு போனதாக வீரமணி போலீசுக்கு தகவல் கொடுத்தார். கும்பகோணத்தில் உள்ள சிலை திருட்டு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நெம்மேலி காசி விசுவநாதர் கோவிலுக்கு வந்து குருக்கள் சூரியமூர்த்தியிடம் விசாரித்தனர்.

அப்போது சூரியமூர்த்தி, நெம்மேலியில் உள்ள உத்தராபதீஸ்வரர் கோவில் பல ஆண்டுகளாக பாழடைந்துள்ளது. அக்கோவிலைச் சேர்ந்த பிரகதீஸ்வர நாயகன் -- நாயகி சிலையை கிராம மக்களின் கோரிக்கையின்படி, காசி விசுவநாதர் கோவிலின் மூலவர் சன்னதியில், மூலவர் சிலைக்கு பின்னால் வைத்து பாதுகாக்கிறோம்.'இதற்கு, அப்போது காசி விசுவநாதர் கோவில் நிர்வாக அலுவலராக இருந்தவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது' என கூறியுள்ளார்.

உடனே, காசி விசுவநாதர் கோவில் உள்ளே சூரியமூர்த்தியை அழைத்துச் சென்ற போலீசார், மூலவர் சிலைக்கு பின்னால் இருந்த சிலையை கைப்பற்றினர். பின்னர் சிலை திருட்டு வழக்கில் அவரை கைதும் செய்தனர்.இதைக் கண்டு ஊரே கொதித்து போய் உள்ளது. சிலை திருடப்பட வில்லை என்று கூறியும், போலீசார் கேட்க மறுத்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
'‛கோர்ட்டில் தான் பரிகாரம் தேடணும்'

உத்திராபதீஸ்வரர் கோவில் சிலை, காசி விசுவநாதர் கோவிலுக்கு எதற்காக கொண்டு வரப்பட்டது. சூரியமூர்த்தி விசாரணையின் போது கூறிய தகவல்களை வைத்து தான் கைது செய்யப்பட்டுள்ளார். பிரச்னை நீதிமன்றத்துக்கு போய் விட்டது. தேவையான பரிகாரத்தை அங்கு தான் தேட வேண்டும்.

- சிலை திருட்டு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்

வீரமணியின் தனிப்பட்ட பிரச்னை!

நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீரமணிக்கும், காத்தாயி அம்மன் கோவில் நிலத்தை அனுபவிப்போருக்கும் இடையே பிரச்னை உண்டு. அறநிலையத் துறைக்கு எதிராக, வீரமணி தொடர்ந்து புகார் அனுப்பி வருகிறார். காத்தாயி அம்மன் கோவில், வீரமணிக்கு குல தெய்வ கோவில். அவர் இரண்டு முறை கோவிலுக்கு வந்த போது, சூரியமூர்த்தி வெளியூரில் இருந்துள்ளார். தான் அழைத்தும், சூரியமூர்த்தி வரவில்லை என்ற கோபத்தில், சூரியமூர்த்தியை குறிவைத்து வீரமணி புகார் அனுப்பி உள்ளார். அதில் தான் சூரியமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். இது, ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

- கொள்ளிடம் ஜெ.சாமிநாதன்,
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர்

19/03/2022

Arjunsampath Press meet ( Thiruvannamalai)

18/03/2022

Presentation of Tamil Nadu State Budget for the Year 2022 - 23 | Live from Fort St.George, Chennai

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம்: பக்தர்கள் செல்ல 2 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதிதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்...
15/03/2022

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம்: பக்தர்கள் செல்ல 2 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சிக்காக தென் மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும்: #அர்ஜூன்சம்பத் #தூத்துக்குடி:“பல்வேறு வளா்ச்சிக்க...
15/03/2022

வளர்ச்சிக்காக தென் மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும்: #அர்ஜூன்சம்பத்

#தூத்துக்குடி:
“பல்வேறு வளா்ச்சிக்காக தென் மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும்” என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.

#பொதுக்குழு_கூட்டம்
நெல்லை மண்டல இந்து மக்கள் கட்சி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இளைஞர் அணி செயலாளர் செல்வசுந்தர், பூசாரி பேரவை மாநில அமைப்பாளர் சாஸ்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

#தீர்மானம்
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளர்ச்சி பெறவும், மக்கள் வாழ்வாதாரத்தை காக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாணவி லாவண்யா இறப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மேலூர் மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தனி மாநிலம்
பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்வேறு வளர்ச்சிக்காக தென்மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது மின் உற்பத்தி எந்திரம் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை.
அறநிலையத்துறை கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும். உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்க மத்திய அரசால் மட்டுமே முடியும். தமிழக அரசு டெல்லியில் இருந்து மட்டுமே அழைத்து வர முடியும். தமிழக கவர்னரை எதிர்ப்பது நல்லது அல்ல. மத்திய அரசுடன், மாநில அரசு சுமுக உறவு வைத்து இருக்க வேண்டும். இந்து ஒற்றுமை மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

IMK .info

தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை அமல்: முதல்வருக்கு பாலகுருசாமி பாராட்டுசென்னை-'மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, தமிழக ...
14/03/2022

தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை அமல்: முதல்வருக்கு பாலகுருசாமி பாராட்டு

சென்னை-'மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, தமிழக அரசு படிப்படியாக அமல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்து உள்ளார்
அவர் நேற்று விடுத்து உள்ள அறிக்கை: திறன் சார்ந்த கல்வியும், பயிற்சியும் பாட திட்டத்தில் கட்டாயமாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது, மாணவர்கள் தொழில் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைகள், கல்வியாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளன. 'இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன்' போன்ற திட்டங்கள், இளம் மாணவர்கள் கல்வியில் முன்னேற வழி வகுக்கும் திட்டங்கள். இந்த திட்டங்கள் எல்லாம், புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள். புதிய கல்வி கொள்கையை எதிர்த்தாலும், மறைமுகமாக அவற்றில் உள்ள முக்கிய பரிந்துரைகளை, தமிழக அரசு அமல்படுத்தி வருவது மிகச் சிறந்த நடவடிக்கை.

தமிழகத்துக்கு என்று, மாநில கல்வி கொள்கை வகுப்பது சிறந்த முடிவு. இது, தேசிய கொள்கையை சார்ந்து இருக்க வேண்டும்.தேசிய கல்வி கொள்கையானது, விரிவான சிறந்த உள்ளடக்கங்களை கொண்டது. இந்திய மாணவர்கள், 21ம் நுாற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வகையில், இந்த கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. இதை விட சிறந்த கொள்கையை, இன்னொரு கமிட்டி திட்டமிடுமா என்பது சந்தேகம். மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், பல்கலை மானியக்குழு, தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவற்றின் விதிகளின்படி, புதிய கல்வி கொள்கையை, மத்திய - மாநில பல்கலை கழகங்கள் அமல்படுத்த வேண்டியது கட்டாயம்.
இதுகுறித்து, அனைத்து பல்கலைகளுக்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை நாம் இந்த கொள்கையை முழுமையாக பின்பற்றாவிட்டால், நம் மாணவர்கள் தேசிய கல்வி திட்டங்களில் இருந்து விலகி நிற்க வேண்டியது நேரிடும். தேசிய அளவில் வேலைவாய்ப்பு பெறுவதிலும், கல்வி அங்கீகாரம் பெறுவதிலும், பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே, புதிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி கூறியுள்ளார்.

யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனைமதுரை: ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறு...
08/03/2022

யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை

மதுரை: ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கார் டிரைவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 பேருக்கு இரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவரும், உடன் படித்த நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் நட்பாக பழகினர். இருவரும், 2015 ஜூன் 23ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று பேசிக் கொண்டிருந்தனர். இரவு வெகு நேரம் ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை.

நாமக்கல் அருகே, கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை, உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. வேறு சமுதாய பெண்ணுடன் பழகியதால், அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகம் முழுதும் இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, சேலம் மாவட்டம், சங்க கிரி அருகே ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், 42, உட்பட 16 ஆண்களை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஜோதிமணி என்பவர், பின்னர் இறந்தார்.

இவ்வழக்கை விசாரித்த, திருச்செங்கோடு டி.எஸ்.பி.,யாக இருந்த விஷ்ணுப்ரியா தற்கொலை செய்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கு, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.கோகுல்ராஜின் தாய் சித்ரா, 'நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணை வெளிப்படையாக நடக்க வில்லை. மிரட்டலுக்குப் பயந்து சாட்சிகளில் சிலர், பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர்.'இவ்வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'வழக்கு விசாரணை, மதுரைக்கு மாற்றப்படுகிறது' என 2019ல் உத்தரவிட்டார்

மதுரையில் விசாரணை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில், 2019 முதல் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் கடந்த 5 ம் தேதி தீர்ப்பு வழங்கிய மதுரை நீதிமன்றம், யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் எனவும், இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று(மார்ச் 8) அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் அளித்த தீர்ப்பு: யுவராஜ் மற்றும் அவரது கார் டிரைவர் அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை விதித்தது.

குமார், சதிஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரு ஆயுள் தண்டனையும்
பிரபு கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன், 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும்

சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான திரு மு கருணாநிதி அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்த தமிழ...
07/03/2022

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான திரு மு கருணாநிதி அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்த தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் "பதவி அல்ல; பொறுப்பு" என்ற அவரது அறிவுரையை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தார்.

அவர்கள் அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இன்று வாழ்த்தும் நான், நாளை பாராட்ட வேண்டும்! என்றும் கூறினார்

திருப்பூர் பாஜக மாமன்ற உறுப்பினர் திரு காடேஸ்வரா S. தங்கராஜ் தலைமையில் 56 வார்டில் மேற்கொள்ளப்படும் தன்னார்வ தூய்மைப் பண...
07/03/2022

திருப்பூர் பாஜக மாமன்ற உறுப்பினர் திரு காடேஸ்வரா S. தங்கராஜ் தலைமையில் 56 வார்டில் மேற்கொள்ளப்படும் தன்னார்வ தூய்மைப் பணியில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்துமுன்னணி தொண்டர்கள்

BJP4Tamilnadu Hindumunnani Tirupur

Address


Telephone

+916383422673

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naatu Nadappu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naatu Nadappu:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share