G5media

G5media Cinema news, entertainment, and politics news. Stay tuned for the latest news, reviews & Interviews

30/03/2024

: பேய் ஜெயிக்க முடியுமா? முடியாதா!
Speech



30/03/2024

நதியா வளையல், குஷ்பூ இட்லி.. ராமராஜன் சட்டை.. - : ராமராஜன் ராமராஜன் தான் Dir Perasu Speech

30/03/2024

Team 😀TrailerLaunch

| | |

30/03/2024

Tammanna, Khanna, ”Aranmanai 4"*

30/03/2024

Actress Launch Function of ”Aranmanai 4"

30/03/2024

Actress *Trailer Launch Function of ”Aranmanai 4"*

30/03/2024

மனித நேயம் உள்ளவர் ராமராஜன். " சாமானியன்" பாடல் வெளியீட்டு விழாவில்
தயாரிப்பாளர் விஜயமுரளி உருக்கம். #

29/03/2024

: மக்கள் நாயகன் ராமராஜன்
இளையராஜா பாட்டு இல்லைனா இந்த ராமராஜன் இல்லை-ராமராஜன்
ரசிகர்கள் மத்தியில் Massஆக🔥🔥 பேசிய Ramarajan ! Speech at Audio launch ் | Actor Ramarajan என் ரசிகர்களுக்கு நான் எதுவுமே செய்யல

29/03/2024

Deverakonda: "கண்டிப்பா லவ் மேரஜ்தான்! ஆனால்" - திருமணம் பற்றி மனம் திறந்த தேவரகொண்டா

29/03/2024

ActorRamarajan*Audio & Trailer Launch of Saamaniyan*

29/03/2024

தேவயானி கேட்ட கேள்வி? பார்த்திபன் பதில்
வளர்மதி.? தனம்.? யாரை புடிக்கும்? பார்த்திபன் பதில் #அழகி

28/03/2024

*Actress Daughter Re-Release Press Meet of Udhayageethawin AZHAGI* “*அழகி*”.

28/03/2024

பெற்றோரை
பாசத்திற்காக
ஏங்க விடாதீர்கள்ProducetPR0President Speech

28/03/2024

" அந்த கிராமத்துக்குள் போன மாதிரி இருந்துச்சு.."-வெப்பம் குளிர் மழை Press Meet -ல் M.S. பாஸ்கர்
இயற்கை சார்ந்த கருத்தா தான் Climax சொன்னேன்-டைரக்டர்

27/03/2024

[FULLVideo என்னை வாத்தியார்னு கூப்பிட்டதில் மகிழ்ச்சி "-CLEVER Trailer Launch-ல் கே. ராஜன்
[ நாயை வைத்துக்கொண்டு தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்.."

: 70 வயதிலும் ராணுவ அதிகாரியாக நடிக்கும் டத்தோ ராதாரவி: மர்மங்கள் நிறைந்த க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘கடைசி தோட்டா’ ...
27/03/2024

: 70 வயதிலும் ராணுவ அதிகாரியாக நடிக்கும் டத்தோ ராதாரவி
: மர்மங்கள் நிறைந்த க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘கடைசி தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.சுவாமிநாதன் தயாரிப்பில், நவீன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடைசி தோட்டா’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வையாபுரி, கொட்டாச்சி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஒரு நாளில் நடக்க கூடிய மர்மங்கள் நிறைந்த க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படமான இதன் முதல் பார்வை போஸ்டர் முதல் சமீபத்தில் வெளியான டைடில் டீசர் வரை அனைத்தும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், ‘கடைசி தோட்டா’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொடைக்கானல், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ராதாரவி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், வனிதா விஜயகுமார் அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷ்னராகவும் நடித்திருக்கிறார்கள். ஸ்டைலிஷாக நடித்திருக்கும் ராதாரவியை இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தில் பார்க்கலாம். அதேபோல் வனிதா விஜயகுமாரின் அதிரடியான போலீஸ் வேடமும், அவரது நடிப்பும் நிச்சயம் பேசப்படும். குடும்ப தலைவராக நடித்திருக்கும் ஸ்ரீகுமார், நகைச்சுவைப் பகுதியில் பட்டைய கிளப்பியிருக்கும் வையாபுரி என அனைத்து நடிகர்களும், அவர்களது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது.

வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையில், சினேகன் வரிகளில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இரண்டு பாடல்களும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் விதத்தில் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருக்கிறது. விவி பிரசன்னா, கானா சுதாகர், டெய்ஸி ஆகியோர் பாடல் பாடியுள்ளனர். மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லோகேஷ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

முழு படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் பின்னணி வேலைகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு குறித்து விரைவில் அறிவிக்க உள்ள படக்குழு அதை தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளது.

விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள ‘கடைசி தோட்டா’ க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்பட ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் விதமாக உருவாகியுள்ளது.

27/03/2024

Hotspot [ சர்ச்சைக்குரிய படமா, இப்ப இருக்கிற SOCIETY க்கு ஏற்ற படம் Press ShowTeam Review

27/03/2024

நல்ல உள்ளம் கொண்டவர்
தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் சேஷு
Santhanamspeech

26/03/2024

Gorgeous Actresd_bhavya in Theatre movie

26/03/2024
இரவின் கண்கள் திரைப்பட இசை வெளியீடு !! உணர்வுப்பூர்வமான படங்கள் எடுத்தால் ஓடாது - ஆர் வி உதயகுமார் !! படம் பார்த்து தளபத...
26/03/2024

இரவின் கண்கள் திரைப்பட இசை வெளியீடு !!

உணர்வுப்பூர்வமான படங்கள் எடுத்தால் ஓடாது - ஆர் வி உதயகுமார் !!

படம் பார்த்து தளபதி சொன்ன விசயம் - பேரரசு !!

Prathab Enterprises பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதாப் தயாரிப்பில், இயக்குநர் பாப் சுரேஷ் இயக்கத்தில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும் சயின்ஸ் பிக்சன் வகையில் உருவாகியுள்ள படம் "இரவின் கண்கள்". வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசியதாவது..
Prathab Enterprises ல் அடுத்தடுத்து நிறைய நல்ல படைப்புகள் வரவுள்ளது அதில் இப்படத்தை வெளியிடச் சொல்லி என்னை அணுகினார்கள். படத்தின் ஐடியாவே எனக்கு மிகப்பிடித்திருந்தது. ஒரு செல்ஃபோன் என்ன செய்யும் என்பதே இன்றைய காலகட்டத்தில் ஆச்சரியகரமாக இருக்கிறது. அதில் ஏ ஐ வைத்து ஒரு அழகான படத்தைத் தந்துள்ளார்கள். இப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. திரையரங்கில் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

எடிட்டர் இமான் பேசியதாவது...
இது சின்ன பட்ஜெட் படம் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தைப் பெரிதாக எடுத்துச் செல்லும் தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்

ஒளிப்பதிவாளர் கீதா கரண் பேசியதாவது...
மிக சின்னதாக ஆரம்பித்த படம், இந்த அளவு பெரிதாக எடுத்து வந்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பாப் சுரேஷுக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்


கிரி துவாரகேஷ் பேசியதாவது...
இரவின் கண்கள் முதல் நன்றி இயக்குநர் சுரேஷ்க்கு தான். ஏ ஐ பயன்படுத்தி ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கியுள்ளார். பாப் சுரேஷ் நாளைய இயக்குநரில் வித்தியாசமான குறும்படங்கள் செய்தவர். அவரது பல நாள் ஆசை, இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்

இசையமைப்பாளர் சார்லஸ் தனா பேசியதாவது...
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. மிக வித்தியாசமான திரைக்கதையை இயக்குநர் உருவாக்கியுள்ளார். படத்திற்குள் நிறைய டிவிஸ்ட் ஆச்சரியங்கள் இருக்கிறது. இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

டாலி ஐஸ்வர்யா பேசியதாவது...
எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைவருக்கும் நன்றி. இப்படம் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இயக்குநர் பாப் சுரேஷ், ஜினீத் என எல்லோருக்கும் நன்றி. இந்தப்படம் மிக வித்தியாசமான கான்செப்ட், மனதிற்கு நெருக்கமான மிகவும் பிடித்த படம். வளர்ந்து வரும் எங்களைப் போன்ற புதியவர்களை ஆதரிக்க வேண்டுகிறேன். இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்

நடிகர் பிரஜன் பேசியதாவது...
இயக்குநர் என்னிடம் இப்படத்தின் கதையைச் சொன்னார் மிக அருமையாக இருந்தது. வேறொரு கதை தான் அவர் செய்வதாக இருந்தது, அந்த நிலையில் இப்பட வாய்ப்பு கிடைக்கவே இதை செய்தார். புதிய முகங்கள் மிகவும் அர்ப்பணிப்போடு உழைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். இந்தப்படம் வெற்றியடைந்து பிரதாப் சார் அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் தர வேண்டும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாப் சுரேஷ் பேசியதாவது...
எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைத்து திரை பிரபலங்களுக்கும் நன்றி. இப்படம் மிக சின்னதாக ஆரம்பித்த படம் இப்படம் வெளியாகுமா என எங்களுக்கே சந்தேகம் இருந்தது, இன்று இப்படம் இந்த நிலைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை வெளியிடும் ஹரி உத்ரா அவர்களுக்கு நன்றி. பிரதாப் சாருக்கு நன்றி. சயின்ஸ் பிக்சன் ஜானரில் சுவாரஸ்யமான படம் தந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் பிரதாப் பேசியதாவது...
எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைத்து திரை பிரபலங்களுக்கும் நன்றி. இந்த படத்தைச் சிறிய அளவில் ஆரம்பித்து இப்போது பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறோம், ஆனாலும் திரையரங்குகள் குறைவாகவே கிடைக்கும், பத்திரிகையாளர்கள் மனதை வைத்து ஏற்படத்தை பாராட்டினால் எங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்துள்ளோம். ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது...
எனக்கு பிரசாத் லேப் சொந்த வீடு போல் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் இயக்குநர்கள் கதை சொல்வதே இல்லை. ஆனால் அப்போதெல்லாம் கதை சொல்லும்போதே படம் பார்த்த மாதிரி இருக்கும். சிலர் கதை சொன்னது போல் படம் எடுப்பதில்லை. அங்கு தான் பிரச்சனை. நான் அப்போது விஜய் சாரிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டேன். படமும் முடிந்து விட்டது. இந்த தியேட்டரில் தான் நானும் விஜய் சாரும் திருப்பாச்சி படம் ஃபர்ஸ்ட் காபி பார்த்தோம். அப்போது விஜய் சார் நீங்க கதை சொன்னதை விட மூன்று மடங்கு பலமாக இருக்கிறது என்றார். அப்போது தான் மகிழ்ச்சி வந்தது. இதோ இந்த இரவின் கண்கள் படமும் மிகப்பெரிய வெற்றி அடையும். இப்படத்தில் வித்தியாசமான கதை சொல்லியுள்ளார்கள். ஏ ஐ வைத்து வித்தியாசமாக யோசித்துள்ளார்கள். ரஜினி சார் சொன்னாரே சிஸ்டம் கெட்டுப்போச்சு என்று அது போல் பாப் சுரேஷ் சிஸ்டம் கெட்டுப்போனதை வைத்து படம் பண்ணியிருக்கிறார். படம் வித்தியாசமான திரில்லர் மூவி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது...
ஹாலிவுட்டில் சமீபத்தில் ஏ ஐ வைத்து நடிகரே இல்லாமல் நடிகரை ஏ ஐ இல் உருவாக்கிப் படமெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் ஹாலிவுட்டே சேர்ந்து ஏ ஐ க்கு எதிரான பெரிய போராட்டம் செய்தது. அதனால் இனிமேல் ஏ ஐ வைத்துப் படமெடுப்பதில்லை என முடிவெடுத்து விட்டார்கள். தம்பி பாப் சுரேஷ் அந்த ஏ ஐ வைத்து, வித்தியாசமான கதையைச் சொல்லியிருப்பது டிரெய்லரில் தெரிகிறது அவருக்கு வாழ்த்துக்கள். இன்றைய காலகட்டத்தில் வாழ்வியலைப் படமாக எடுப்பது குறைந்து விட்டது. இப்போதெல்லாம் ஓடிடி விற்றால் தான் படம் ரிலீஸ் செய்ய முடிகிறது. ஓடிடி உலகமெல்லாம் இருக்கக் கூடிய ஒரு தளம் அதில் படம் பார்ப்பவர்கள் இரவில் தான் பார்க்கிறார்கள் அவர்கள் அந்த இரவில் சில காட்சிகள் இருந்தால் தான் பார்க்கிறார்கள். அந்த மாதிரி காட்சிகள் படத்திலிருந்தால் தான் படம் ஓடிடி வாங்குகிறார்கள். பேரரசு படமெடுத்தால் இனி அது மாதிரி தான் படமெடுக்கவேண்டும். இன்றைக்கு வந்த ஆல்பம் பாடலில் அந்த மாதிரி மஜா காட்சிகள் இருக்கிறது. உணர்வுப்பூர்வமான படங்கள் வருவதில்லை என்கிறார்கள் ஆனால் அப்படிப் படமெடுத்தால் படம் ஓடாது. இப்போது படத்தில் கஞ்சா, பத்துப்பேர் தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் தான் வருகிறது. பெரிய ஹீரோக்கள் மாற வேண்டும், உணர்வுப்பூர்வமான படங்களில் நடிக்க வேண்டும். இப்போதுள்ள இயக்குநர்கள் நல்ல தரமான படங்களை எடுக்க முன் வாருங்கள். மாணவர்கள் மனதில் வக்கிரத்தைப் படங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு நடக்கும் குற்றங்கள் சினிமாவின் தாக்கம் இருக்கிறது. இரவின் கண்கள் திறந்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் அருமையாக இருக்கிறது, முதல் படம் போல் தெரியவில்லை, நல்ல அனுபவம் உள்ளது போல் உருவாக்கியுள்ளார்கள். படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாப் சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். டோலி ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : கீதா கரண்
இசை : சார்லஸ் தனா
எடிட்டிங் : இமான்
பாடல்கள் : மூர்த்தி
மக்கள் தொடர்பு : மணவை புவன்
கதை, திரைக்கதை : பாலசுப்ரமணியம் K. G
திரைக்கதையமைத்து, இயக்கி நாயகனாக நடித்துள்ளார் - பாப் சுரேஷ்.


இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

26/03/2024

*ராகவா லாரன்ஸ் Entry பள்ளி மாணவர்களுக்கு உதவிய KPY பாலா* !!

மூன்று விதமான காதலை சொல்லும்"காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் "புதுமையான  படம்!" காதலை மூன்று வகை படுத்தி இள...
26/03/2024

மூன்று விதமான காதலை சொல்லும்
"காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் "
புதுமையான படம்!

" காதலை மூன்று வகை படுத்தி இளைஞர் இளைஞிகளுக்காக கெளரி சங்கர் பல பொறுப்புகளை ஏற்று இயக்கி உள்ள படம்தான் " காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் " என்ற படம்.

சரவணன் , அபிநயா அன்பழகன், ஸ்ரீ பவி , ஐஸ்வர்யாபாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, சன் டிவி அகல்யா என நிறைய பேர் நடித்துள்ளனர்.

ஆதிஷ் உத்ரியன் இசையையும், து. மகிபாலன் ஒளிப்பதிவையும், லட்சுமணன் படத்தொகுப்பையும், சரவணன் சண்டை பயிற்சியையும், சுரேஷ் நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

கலை, உடை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு. இயக்கம் என எட்டு பொறுப்புகளை ஏற்றுள்ள கெளரி சங்கர் படத்தை பற்றி கூறியதாவது, " இன்றைய காதலை மூன்று வகைப்படுத்தியிருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பது தான் அது. புரிந்த காதல் சுகமானது. புரியாத காதல் சுமையானது. மூன்றாவது புரியாத காதல் முடிவில்லாதது. இதற்காக ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு ஜோடிகளை வைத்திருக்கிறேன். இன்றைய இளைய சமுதாயம் சமூகத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்களா? அதையே தொடர்கிறார்களா? என்பதை சுவையான திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறேன். " என்று கூறும் கெளரி சங்கர் தமது எம்.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் " காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை காதலர் தினம் " படத்தை தமது மூன்றாவது படமாக இயக்கி உள்ளார்.

விஜயமுரளி
PRO

26/03/2024

3 படத்துக்கு Advancel Interaction with Press | Music Video

25/03/2024

மக்கள் நீதி மய்யம் தலைவர் அவர்களை தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர்


[ மத்திய சென்னை வேட்பாளர் ,

25/03/2024

விஜய் SIR நடிப்பை விட்டு விலகுவது மிக வருத்தமாக உள்ளது - ACTRESS ANUKRISHNA.
[ 👆இதயகோயில் Movieshottingspot

25/03/2024

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எனக்கும் மகன்தான்!’ ராதிகா சரத்குமார் பேட்டி!

24/03/2024

நடிகை ராதிகா
[: விருதுநகர் தொகுதிEntry

24/03/2024

திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.ராஜநாயகத்தின்
"கவிதை தொகுப்பு" புத்தக வெளியீட்டு விழா

தலைமை
-------------------
உயர்நீதிமன்ற நீதிபதி
திரு.இரா.சுரேஷ்குமார்

முன்னிலை
------------------------
புதுவை தமிழ்ச் சங்க தலைவர்
கலைமாமணி வி.முத்து

புத்தகம் வெளியிடுபவர்
-----------------------------------------------
பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி அவர்கள்

பெற்றுக்கொள்பவர்
-----------------------------------------
திரு.டி.கே.ஜி ஆனந்த்
இயக்குனர். ராஜாநந்திவர்மன் அறிவியல் & கலைக்கல்லூரி

வாழ்த்தும் திரையுலக பிரபலங்கள்
-----------------------------------------------
திரு.ஆர்.அரவிந்தராஜ்
திரு.பேரரசு
திரு.தளபதி
திரு.மங்கை அரிராஜன

இயக்குனர் ஏ.ஆர்.ராஜநாயகம்
மக்கள் தொடர்பாளர் வெங்கட்

Address


Alerts

Be the first to know and let us send you an email when G5media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G5media:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share