Raja paulraj

Raja paulraj மார்க்சிய மாணவன்

11/04/2024

| "ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்"

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

| | |

இஸ்லாமிய நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்
11/04/2024

இஸ்லாமிய நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்

கோவை நாடளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு சிவானந்தபுரம் கிளை சார்பாக வரவேற்பளி...
07/04/2024

கோவை நாடளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு சிவானந்தபுரம் கிளை சார்பாக வரவேற்பளிக்கப்பட்டது

எங்களுடைய பிரீமியர் ரப்பர் புராடக்ட்ஸ் புதிய ஓர்க் ஷாப் நேற்றையதினம் கோவை எல்ஜிபி நகரில் துவங்கப்பட்டது.வாழ்வின் அடுத்தக...
06/04/2024

எங்களுடைய பிரீமியர் ரப்பர் புராடக்ட்ஸ் புதிய ஓர்க் ஷாப் நேற்றையதினம் கோவை எல்ஜிபி நகரில் துவங்கப்பட்டது.
வாழ்வின் அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியுள்ளோம்...!
உடன் நிற்கும் அனைவருக்கும் நன்றிகள்...!

06/04/2024
தூத்துக்குடி நாடளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டு பிரச்சார...
02/04/2024

தூத்துக்குடி நாடளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டு பிரச்சாரகூட்டத்தில் தூத்துக்குடி புறநகர தோழர்களுடன் ....!

 #கையூர்_தியாகிகள்_நினைவு_தினம்கையூர், 1940களில் உலக கம்யூனிஸ்டுகளால் பேசப்பட்ட ஊர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கி எட...
29/03/2024

#கையூர்_தியாகிகள்_நினைவு_தினம்

கையூர், 1940களில் உலக கம்யூனிஸ்டுகளால் பேசப்பட்ட ஊர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கி எடுத்த விடுதலைப் போராட்ட வரலாற்றில், உழைக்கும் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்திய போராட்டங்கள் சில மட்டுமே, தெபாங்கா விவசாயிகளின் எழுச்சி, தெலங்கானா விவசாயிகளின் எழுச்சி, வோர்லி பழங்குடி மக்களின் வீரம் மிக்க போராட்டம், புன்னைப்புரா, வயலார் விவசாயத் தொழிலாளிகளின் போராட்டம், கப்பற்படை எழுச்சி என்ற போராட்ட வரிசையில், கையூர் விவசாயத் தொழிலாளிகளின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாறும் இடம் பெறும்.

1940களில் பொதுவாக இந்தியாவில் இருந்த நிலப்பிரபுக்களின் ஆதிக்கம், சுரண்டல், ஏகாதிபத்தியத்துடன் இணைந்து கொண்டு நடத்திய கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களே, நாம் மேலே பட்டியலிட்டவை. மிகப் பெரிய விவசாய எழுச்சி, நிலப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான கூட்டணியை போராட்ட களத்தில் அம்பலப்படுத்தியது. அன்றைய சென்னை ராஜதானிக்கு உட்பட்ட, வடக்கு மலபார் பகுதியில் அமைந்த கையூர் கிராம விவசாயிகளும் மேற்படி போராட்ட வரலாற்றை அரங்கேற்றினர்.

நிறைந்த, நீரோடு, அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் தேஜஸ்வினி நதிக் கரையில் அமைந்தது கையூர் கிராமம். செழிப்பான விவசாயத்திற்கு அன்றைக்கும், இன்றைக்கும் வாய்ப்பு இருக்கும் பகுதி. இன்றைக்கே இந்தியாவில், நிலம் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆள்வோர் தலையசைக்க மறுக்கிற போது, அன்றைக்கு எப்படி சம்மதிப்பார்கள்? அன்றைக்கு நிலச்சீர்திருத்தம் என கோரிக்கை கூட வைக்க இயலாத, வாயற்ற ஜீவன்களாக, விவசாயத் தொழிலாளர்கள் கையூரில் இருந்தார்கள். அவர்களுக்கு பேசும் சக்தியையும், கேள்வி கேட்கும் திறனையும், போராட்ட உணர்ச்சியையும் கொடுத்தது, கம்யூனிஸ்ட் இயக்கமும், விவசாய சங்கமும் ஆகும். அந்த காலத்தில், புரட்சிக்காரர்கள் என்ற வார்த்தையை சிறுவர் முதல் பெரியவர் வரை அறிமுகம் செய்திருந்தார்கள். இளைஞர்கள், “புரட்சிக் காரர்களுக்குரிய நற்குணங்கள் தங்களுக்கு உண்டு என்பதைத் தெரிந்து கொண்ட போது பெரும் மகிழ்ச்சியடைந்து பரவசப்பட்டு இருக்கிறார்கள்’’ குறிப்பாக கையூர் பகுதி நிலப்பிரபுக்களை எதிர்த்து போராட முடியும் என்கிற நம்பிக்கையை மிகப் பெரிய அளவில் முன்னிறுத்தியவர்கள் இளம் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர். மிகக் குறைவான கூலியைப் பெற்று, அதிகமான நேரம் உழைக்க வேண்டும் என்கிற எழுதப்படாத சட்டத்தை பின்பற்றினார்கள் கூலித் தொழிலாளர்கள். மனிதனுக்குரிய எந்த உரிமையும் பெற முடியாத விவசாயத் தொழிலாளர்களுக்கு, இளம் கம்யூனிஸ்டுகள் தான், அடிப்படை மனித உரிமையைப் பெற்றுத் தந்தார்கள்.

ஆனால் வரலாறு, மனித உயிர்களைக் குடிக்காமல் உரிமைகளை கொடுத்ததில்லை. கையூர் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளும் பலி பீடத்திற்கு பின்னர்தான் பெறக்கூடியதாக அமைந்தது.

மடத்தில் அப்பு,

சிருகண்டன்,

குஞ்ஞம்பு,

அபுபக்கர்

ஆகிய நால்வரின் உயிரை அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரக்கமற்று குடித்தது. “அந்தப் போலிஸ்காரனை அடித்துக் கொன்றவர்கள், இந்தக் கோர்ட்டின் முன் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் அவனுடைய மரணத்திற்கு இவர்களும் தான் பொறுப்பாளிகள் என்று கூறி, செஷன்ஸ் நீதிபதி அவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனையை விதித்தார்.’’ சென்னை உயர்நீதி மன்றமும் அந்த தண்டனையை ஊர்ஜிதம் செய்தது. இந்தியாவின் விடுதலைப் போரில் எண்ணற்ற இளைஞர்கள் தூக்கு கயிற்றிற்கு இரையாகி இருந்த போதிலும், இந்த நால்வருக்கும் கொடுக்கப்பட்ட தண்டனையை, உலகம் முழுவதிலும் இருந்த மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும், பிரிட்டிஷாரும், நிலப்பிரபுக்களும் உறுதியாக இருந்தனர்.

இருபத்தைந்து வயதுக்குட்பட்ட அந்த நால்வரின் தூக்கு தண்டனையை எதிர்த்து, கம்யூனிஸ்ட் இயக்கம், நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, வைசிராயும், பிரிவி கவுன்சிலும் நிராகரித்த போது, நால்வரும் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில்,’’ ...... சிறையில் ஒவ்வொரு நிமிடமும தேசிய கீததங்களைப் பாடி வருகிறோம். பகத்சிங்கைப் போன்ற தேச பக்தர்களின் வீரம், எங்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது. ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சியைப் புரட்சியின் மூலம் நிர்மூலம் ஆக்குவதற்கு முன்னே, தோழர். லெனின் அனுபவித்த சிரமங்களையும் நாங்கள் மறக்கவில்லை’’. எனக் குறிப்பிட்டுள்ளனர். இக்கடிதம் அன்றைய கம்யூனிஸ்ட் இதழான ஜனசக்தியில் (13.01.1943) பிரசுரமாகி உள்ளது.

நால்வரின் செயலும் 29.03.1943ல் தூக்கிலிடப்படும் வரை, இதயத்துடிப்பு நிற்கும் வரை அப்படியே இருந்துள்ளது அதாவது சாவின் விளிம்பிலும் சொல்லுக்கும், செயலுக்கும் இடையே வித்தியாசம் இன்றி வாழ்ந்த நால்வரும் மிக முக்கியமானவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

23/03/2024

மாவீரர்கள்
பகத்சிங் சுகதேவ் ராஜகுரு நினைவு தினம்
#செவ்வணக்கம் தோழர்களே..!

22/03/2024
வேட்பாளராக வருகை தரும் கனிமொழி கருணாநிதியை வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம்
20/03/2024

வேட்பாளராக வருகை தரும் கனிமொழி கருணாநிதியை வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம்

16/03/2024

தேர்தல் அறிவிக்கப்பட்டது..!
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என நினைக்கும் இந்த நாட்டில் தமிழ்நாட்டில் ஒரேகட்டம் வட மாநிலங்களில் பல கட்டம்

16/03/2024
16/03/2024

தோழர் சின்னதுரை அவர்களின் கோரிக்கை வெற்றி தமிழக அரசு அறிவிப்பு

இது ஊழல் லிஸ்டில் சேராதா உத்தமர் அண்ணாமலையாரே...?
15/03/2024

இது ஊழல் லிஸ்டில் சேராதா உத்தமர் அண்ணாமலையாரே...?

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி -   வேட்பாளர்களாக திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் ஆர்.சச்சிதானந்த...
15/03/2024

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி - வேட்பாளர்களாக திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் ஆர்.சச்சிதானந்தம், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் சு.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு.

15/03/2024

புதுக்கோட்டை நாமக்கல் காரைக்குடி திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சியாக அறிவிப்பு..!

15/03/2024

புல்வாமா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 4 நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் கம்பெனி தேர்தல் நிதி பத்திரம் வழங்கியுள்ளது
பாரத் மாதாகிஜே

15/03/2024

ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் பாகிஸ்தான் கம்பெனியிடமிருந்து தேர்தல் பத்திரத்தில் நிதி வாங்குவோம் பிஜேபியின் நாடாளுமன்ற முழக்கம்

14/03/2024

சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் டிவி உள்ளிட்ட TV நாடகங்களை தோற்கடித்தது மோடிஜியின் தேர்தல் நாடகம் பெட்ரோல் டீசல் விலை குறைப்பாம்

உலகம் இயங்குகிறது உன்னால் மறவாது தொழிலாளி வர்க்கம்
14/03/2024

உலகம் இயங்குகிறது உன்னால்
மறவாது தொழிலாளி வர்க்கம்

தேர்தல் பத்திர அரசியல் ஊழலை மறைக்க மோடி அரசு   அறிவிப்பு...
12/03/2024

தேர்தல் பத்திர அரசியல் ஊழலை மறைக்க மோடி அரசு அறிவிப்பு...

12/03/2024

சிவக்கட்டும்
மதுரை,திண்டுக்கல், திருப்பூர்,நாகை

11/03/2024

மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:

அதிமுக எம்பிக்கள்:

01. SR பாலசுப்பிரமணியன்
02. N சந்திரசேகரன்
03. A முகமது ஜான்
04. AK முத்துக்கருப்பன்
05. A நவநீதகிருஷ்ணன்
06. R சசிகலா புஷ்பா
07. AK செல்வராஜ்
08. R. வைத்திலிங்கம்
09. A. விஜயகுமார்
10. விஜிலா சத்யநாத்

பாமக எம்பி:

11. அன்புமணி ராமதாஸ்

சிஏஏவுக்கு எதிராக வாக்களிக்காமல் திமுக கூட்டணி வெளிநடப்பு செய்ததாக அதிமுகவின் அடிவருடிகளால் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

மக்களவையில் திமுகவினர் எதிர்த்து வாக்களித்ததற்கான ஆதாரம் மக்களவை வலைத்தளத்தில் 615ஆம் பக்கத்தில் இருக்கிறது.

மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்:

திமுக எம்பிக்கள்:

1. R.S. பாரதி
2. TKS இளங்கோவன்
3. M சண்முகம்
4. திருச்சி சிவா
5. P வில்சன்

மதிமுக எம்பி:

6. வைகோ

காங்கிரஸ் எம்பி:

7. P சிதம்பரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி

8. TK ரங்கராஜன்

வாக்குபதிவு ஆதாரம் படங்களாக இணைக்கப்பட்டிருக்கிறது.

Ayes - 125
Noes - 105

அன்புமணி மற்றும் அந்த 10 அதிமுக எம்பிக்களின் ஓட்டுதான் CAA சட்டம் நிறைவேற காரணம்.

அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால்

ஆதரவு 125-11=114
எதிர்ப்பு 105+11=116

116-114 என்ற கணக்கில் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

இவ்வளவு விரிவாக எந்த நடுநிலையாவது நக்கியிருக்கிறானா என்றும் தேடிக் கொள்ளுங்கள்.

08/03/2024

பெண்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த நாட்டில் மகளிர் தின கொண்டாட்டம் ஒரு கேடா..?

சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது; அது நவீன அறிவியலின் சாதனை...மும்பையிலிருக்கும் SBI  டில்லியிலிருக்கும் உச்சநீமன...
06/03/2024

சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது; அது நவீன அறிவியலின் சாதனை...
மும்பையிலிருக்கும் SBI டில்லியிலிருக்கும் உச்சநீமன்றத்தில் தேர்தல் பத்திர நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை. 48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை . இனி பின்னொட்டாக ஐ இணைத்துக் கொள்ளட்டும் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர்

Address

Tuticorin

Telephone

9087239722

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raja paulraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raja paulraj:

Videos

Share


Other Digital creator in Tuticorin

Show All

You may also like