Kadivaalam News

Kadivaalam News கடிவாளம் செய்திகள் / உடனுக்குடன்

*🛑நேரலை*திருச்செந்தூர் சூரசம்ஹாரம் சிறப்பு நேரலை👇👇👇👇👇👇
18/11/2023

*🛑நேரலை*

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் சிறப்பு நேரலை

👇👇👇👇👇👇

தெளிவான நேர்கொண்ட பார்வையுடன், உள்ளதை உள்ளபடி சொல்லும், நடுநிலையான செய்தி தளம...

15/11/2023

குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் திறப்பு விழா

குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்
15/11/2023

குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்
14/11/2023

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்

மாநகராட்சி மேயர் புறக்கணிப்பு .?.தூத்துக்குடியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி - அமைச்சர், ஆட்சியர் பங்கே...
14/11/2023

மாநகராட்சி மேயர் புறக்கணிப்பு .?.
தூத்துக்குடியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி - அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு

தூத்துக்குடியில் இன்று (14/11/2023) குழந்தைகள் தின தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ராஜாஜி பூங்காவிலிருந்து மாநகராட்சி அலுவலகம் வரை WALK FOR CHILDREN பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், குழந்தை நலக்குழு தலைவர் ரூபன் கிசோர், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் உமா, சிறப்பு சிறார் காவல் அலகு உறுப்பினர் வழக்கறிஞர் சொர்ணலதா, காமராஜர் கல்லூரி மாணவ, மாணவிகள், சைல்டு லைன் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அதுவும் மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோருக்கு அழைப்பு கொடுக்காமலே இந்த பேரணி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இரவு, பகல் பாராமல் பணியாற்றி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி நன்மதிப்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இதனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தூத்துக்குடியில் நடைபெற்று வரும் சில நிகழ்ச்சிகளில் மேயர் ஜெகன் பெரியசாமியை புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் வேளையில், இன்று நடைபெற்ற குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியில் மேயர் ஜெகன் பெரியசாமியை அழைக்காமல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது வேண்டுமென்றே மேயர் புறக்கணிக்கப்பட்டதாக தூத்துக்குடி மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

ஆளும்கட்சியை சேர்ந்த, மாநகர தந்தைக்கே இந்த நிலை என்றால்.!!. மற்றவர்கள் நிலை.?.

திருச்செந்தூரில் பக்தர்கள் நீராட கட்டுப்பாடு
14/11/2023

திருச்செந்தூரில் பக்தர்கள் நீராட கட்டுப்பாடு

குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் திறப்பு விழா
14/11/2023

குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் திறப்பு விழா

ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாட்டிய காவல் உதவி ஆய்வாளர்
13/11/2023

ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாட்டிய காவல் உதவி ஆய்வாளர்

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் திறப்பு விழா
11/11/2023

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் திறப்பு விழா

அண்ணாமலை/ கனிமொழி எம்பி மோதல்
08/11/2023

அண்ணாமலை/ கனிமொழி எம்பி மோதல்

தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு
08/11/2023

தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு

திருச்செந்தூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
07/11/2023

திருச்செந்தூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூரில் பசுமடம் கட்டிடம் பணி
06/11/2023

திருச்செந்தூரில் பசுமடம் கட்டிடம் பணி

திருச்செந்தூரில் காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முற்றுகை #
06/11/2023

திருச்செந்தூரில் காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முற்றுகை

#

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
06/11/2023

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிப்பு
06/11/2023

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிப்பு

திருச்செந்தூர் அருகே பழிக்கு பலியாக காரை ஏற்றிக்கொலை
05/11/2023

திருச்செந்தூர் அருகே பழிக்கு பலியாக காரை ஏற்றிக்கொலை

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கொலை வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் கைது தூத்துக்குடி முருகேசன...
03/11/2023

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கொலை வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் கைது

தூத்துக்குடி முருகேசன் நகரில் வசித்து வரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான வசந்தகுமார் மகன் மாரிச்செல்வம் (23), அவரது மனைவி கார்த்திகா (21) ஆகிய இருவரையும் நேற்று (02.11.2023) மாலை 6.30 மணியளவில் மேற்படி வசந்தகுமார் வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த முதற்கட்ட விசாரணையில் மாரிச்செல்வமும் (23) அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (21) ஆகிய இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளதும் இதையறிந்த மாரிச்செல்வம் வீட்டார் கார்த்திகாவின் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டுள்ளதற்கு கார்த்திகாவின் தந்தை முதலில் மறுப்பு தெரிவித்துள்ளதும், அதன்பின்னர் கார்த்திகாவின் தந்தை ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒரே பகுதியில் குடியிருந்து வருவதாலும் 6 மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைக்கலாம், கொஞ்சம் பொறுமையாக இரு என்று கார்த்திகாவிடம் கூறியிருந்த நிலையில் கார்த்திகா கடந்த 30.10.2023 அன்று தன் குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக மாப்பிள்ளை வீட்டாருடன் கோவில்பட்டிக்குச் சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து மேற்படி மாரிசெல்வத்தை திருமணம் செய்துள்ளதும், நாம் பெரிதாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்த நிலையில் இவ்வாறு ஓடிப்போய் திருமணம் செய்து தங்களை அசிங்கப்படுத்தி விட்டாளே என்று பெண் வீட்டாருக்கு ஏற்பட்ட திடீர் ஆத்திரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் இருவரும் திருமணத்திற்குப்பின் நேற்று முன் தினம் (01.11.2023) பெண்ணின் வீட்டருகில் திரு.வி.க நகரில் உள்ள பெண்ணின் தாய் மாமா வீட்டிற்குச் தம்பதி சகிதம் விருந்திற்கு சென்று, அங்கு தங்கி வந்து சுமூகமான சூழ்நிலையே இருந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சண்முகம், ராஜபிரபு, சிறப்பு உதவி ஆய்வாளர் யாக்கோபு ஆகியோர் தலைமையிலான போலீசார் அடங்கிய 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து திரு.வி.க நகரைச் சேர்ந்த கொலையான கார்த்திகாவின் தந்தை 1) முத்துராமலிங்கம் (47), தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் 2) இசக்கிராஜா (23) தூத்துக்குடி சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் 3) ராஜபாண்டி (27) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 4 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சம்மந்தமாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி 3 நாட்களே ஆன காதல் தம்பதிகள் வெட்டிக்கொலை - இரட்டைக் கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த...
02/11/2023

திருமணமாகி 3 நாட்களே ஆன காதல் தம்பதிகள் வெட்டிக்கொலை - இரட்டைக் கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார் மகன் மாரிச்செல்வம் (24). திருவிக.நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 30-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டு முருகேசன் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.  இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் முருகேசன் நகரிலுள்ள அவர்களது வீட்டிற்கு சென்று புதுமண தம்பதிகள் இரண்டு பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், இரண்டு பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுத்தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் ரூரல் டி.எஸ்‌பி சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். திருமணம் செய்து 3 நாட்களே ஆன நிலையில் காதல் தம்பதிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு நவ 25 முதல் குறுஞ்செய்தி
02/11/2023

மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு நவ 25 முதல் குறுஞ்செய்தி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி
30/10/2023

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி

தூத்துக்குடி மின் நிறுத்தம் அறிவிப்பு ரத்து
30/10/2023

தூத்துக்குடி மின் நிறுத்தம் அறிவிப்பு ரத்து

தூத்துக்குடி ஆத்தூர் அருகே தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்தூத்துக்குடி ம...
30/10/2023

தூத்துக்குடி ஆத்தூர் அருகே தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து கோவைக்கு எஸ்.பி.எஸ். டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து நேற்றிரவு 10 மணியளவில் கிளம்பியுள்ளது. இந்த பேருந்து சாத்தான்குளத்தில் இருந்து கிளம்பும்போது பேருந்தின் இடது புறம் உள்ள லக்கேஜ் டோர் சரியாக மூடப்படாமல் இருந்ததால் வழிநெடுக நான்கு பேர் மீது மோதியதில் இருவர் பலியானார்கள். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன்படி ஆத்தூர் அருகேயுள்ள நரசன்விளை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிவனைந்த பெருமாள் மகன் சுப்பையா (வயது 70) என்ற முதியவர் மீது லக்கேஜ் டோர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து மேலஆத்தூர் குச்சிக்காடு கந்தசாமி மகன் செந்தில்குமார் (43) என்பவர் தெற்கு ஆத்தூர் பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது அடுத்து மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து தெற்கு ஆத்தூர் கீழத்தெருவை சேர்ந்த சிந்தா மகன் சாகுல்ஹமீது (43) என்பவர் மீது மோதியதில் இடது தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்துள்ளார்.
அதையடுத்து வடக்கு ஆத்தூர் உதயம் ஹோட்டல் முன்பு பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த மேலஆத்தூர் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த பலவேசம் மகள் பிரியதர்ஷினி (23) மீது மோதியதில் தலையில் அடிப்பட்டு அவரும் காயமடைந்தார். இதையடுத்து தகவலறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்தியது எஸ்.பி.எஸ். டிராவல்ஸ் தனியார் பேருந்து என்பதை உறுதி செய்தனர்.

இந்த தொடர் விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுத்தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஆறுமுகநேரி அருகேயுள்ள நல்லூர், நாககன்னியாபுரம் பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் மகேஷ் (23) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆத்தூர் அருகே தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து -
30/10/2023

ஆத்தூர் அருகே தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து -

தூத்துக்குடி மாமன்ற கூட்டம்
30/10/2023

தூத்துக்குடி மாமன்ற கூட்டம்

குரும்பூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்றவருக்கு அரிவாள் வெட்டு
28/10/2023

குரும்பூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்றவருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் புதிய உள் விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா
28/10/2023

தூத்துக்குடியில் புதிய உள் விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா

குலசை தசரா திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வ...
27/10/2023

குலசை தசரா திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் அருள்தரும் திருக்கோயிலின் 2023 தசரா திருவிழா நடைபெற்றது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா 15.10.2023 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் 24.10.2023 அன்று நடைபெற்றது. 25.10.2023 அன்று கொடியிறக்க நிகழ்ச்சிக்குப் பின் காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்திருவிழாவினைக் காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளார்கள். இதில் 10 மற்றும் 11-ம் திருநாளில் மட்டும் 15 லட்சம் பேர் திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ளார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுரையின்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைபுரிந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விரிவான வாகனங்கள் நிறுத்துமிட வசதி, பக்தர்களின் பாதுகாப்புக்காக திருக்கோயில் மூலம் ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா வசதி, பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய மேற்கொள்ளப்பட்ட வசதிகள், திருக்கோயில் மூலம் சிறப்பாக செய்யப்பட்டன. பல்வேறு ஊர்களிலிருந்து வருகைதந்த பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சுமார் 250 சிறப்பு பேருந்து வசதிகள், பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினரால் 3000-க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு ஏற்படுத்தப்படட பாதுகாப்பு வசதிகள், தீயணைப்பு வசதி,12 ஆம்புலன்ஸ்களை திருக்கோயில் வளாகம், கடற்கரை மற்றும் பைபாஸ் பகுதிகளில் பணியமர்த்தி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ வசதி, தொற்றுநோய் எதுவும் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தினமும் இரண்டு முறை கொசு மருந்து அடித்தல், குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்துதல், தேவையான அளவு குடிநீர் வசதி மற்றும் குடிநீரில் தினமும் குளோரின் அளவு சரிபார்ப்பு பணி, கடலில் குளிக்கும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடலோர காவல்படை மற்றும் மீன் வளத்துறையினர் துணையுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வசதிகள், தொடர்மின்சாரம் கிடைத்திட மின்சாரத்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட வசதி, கூட்ட நேரங்களில் விரைந்து பக்தர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக ஏற்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட தொலை தொடர்பு வசதிகள், உணவு மற்றும் பாதுகாப்பு துறையினரால் அனைத்து உணவு கடைகள் மற்றும் அன்னதானம் நடைபெறும் இடங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பணிகள் திருக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் சிறந்த முறையில் தரிசனம் செய்யும் வகையிலர் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து துப்புறவு முன்னேற்பாடுகளும், அனத்துத்துறை அலுவலர்களின் தொடர் பணிகளாலும் மேற்படி திருவிழா எந்தவொரு சிறு அசம்பாவிதமும் இல்லாமல், பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமலும் நிறைவடைந்துள்ளது. மேலும், இப்போது நிறைவடைந்த திருவிழாவில் எப்போதும் இல்லாத வரலாற்று நிகழ்வாக சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான முன்னேற்பாடுகளினால் எந்த சிறு அசம்பாவிதமோ, அசௌகரியமோ இல்லாமல் திருவிழா நிறைவடைந்தது மிகப்பெரும் சாதனையாகும்.

மேற்படி திருவிழாவினை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்ப நல்கிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பக்தர்களின் நலன்கருதி செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த பக்தர்களுக்கும், அன்னதான உபயதாரர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைதுதூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிர...
27/10/2023

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தருவைகுளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ்குமார், மாதேஷ்குமார், மணி, சக்தி உட்பட மொத்தம் 12 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஆழ்கடலில் கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது கடந்த 23.10.2023 அன்று திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து எல்லைத் தாண்டி வந்ததாக 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்து அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்தனர்.

நேர்மையான பெண் காவலர்களுக்கு குவியும் பாராட்டு
27/10/2023

நேர்மையான பெண் காவலர்களுக்கு குவியும் பாராட்டு

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - கவுன்சிலர் ரெங்கசாமி பங்கேற்பு  ஆயுத பூஜ...
26/10/2023

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - கவுன்சிலர் ரெங்கசாமி பங்கேற்பு

ஆயுத பூஜையை தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தாலும், வாகன ஓட்டிகளை பொறுத்த வரையில் ஆயுதபூஜை தினத்தை தங்களது தினமாக உற்சாகத்துடன் கொண்டாடி வருவது வழக்கம்.
அதன்படி, தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு ஆட்டோ தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக, தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளரும், தூத்துக்குடி மாநகராட்சி கணக்கு குழு தலைவருமான கவுன்சிலர் ரெங்கசாமி ஆயுத பூஜை விழாவில் கலந்து கொண்டு ஆட்டோ தொழிலாளர்களுக்கு இனிப்புக்கள் வழங்கினார்.
முன்னதாக, ஆட்டோக்களுக்கு வாழைக்கன்று தோரணம் கட்டப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவில் எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் வக்கீல் விஜயசுந்தர், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் ராஜு, வக்கீல்கள் பால் ஜோசப், சதீஸ்குமார், ஆட்டோ தொழிலாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் முருக ராஜ், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, உள்பட ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்துப் பெற்றனர்சென்னையில் மாநில திமுக இள...
26/10/2023

வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்துப் பெற்றனர்

சென்னையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும்; விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஏற்பாட்டில், அணியின் ஆலோசகர் கோவி லெனின், மாநில இணை செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர்கள் கார்த்திக் மோகன், அழகிரி சதாசிவம், தருண், மதுரை பாலா, கேசவன், விஜய கதிரவன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு சிறந்த குழு செயல்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதினை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, பழனிக்குமார், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் தூத்துக்குடி சி.என்.அண்ணாதுரை, விளாத்திகுளம் ஸ்ரீதர், பாரதிதாசன், கரண்குமார், அருணா, கோவில்பட்டி ஹரிஹரன், மகேந்திரன், ஒன்றிய அமைப்பாளர்; கழுகுமலை பேரூர் வெங்கடேஸ்வரன், திரேஸ்புரம் பகுதி சுரேஷ்குமார், சண்முகபுரம் பகுதி மனோராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை சந்தித்து, சென்னையில் பெற்றுக் கொண்ட விருதினை காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றுக் கொண்டனர்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்: தமிழகத்தில் மற்ற மாவட்டத்தை காட்டிலும், வடக்கு மாவட்ட திமுக முதன்மையான வகையில் எல்லா அணிகளும் செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய கால சூழ்நிலைக்கேற்ப தகவல் தொழில்நுட்ப அணியில் செயல்பாடுகள், சேவைகள் அதிகளவில் இருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறிப்பதற்கு தகவல் தொழில்நுட்ப அணி முழுமையாக ஈடுபட்டு திமுகவின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும், என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.
இதில், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கருணா, மணி, அல்பர்ட் ஆகியோர் உடனிருந்தனர்.

எட்டயபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம் எட்டயபுரம் அருகே உள்ள மே...
26/10/2023

எட்டயபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்

எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈரால் தெற்கு தெருவை சேர்ந்த வீரய்யா மகன் முருகன் (வயது 60). கூலி தொழிலாளி. இவர் கோவில்பட்டியில் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் கீழஈரால் வழியாக மேலஈராலுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னால் விளாத்திகுளம் தாலுகா குமாரசித்தன்பட்டியை சேர்ந்த சரவணகுமார் மகன் ஈஸ்வர் பிரகாஷ் (26) என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடி, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது. இந்த வேகத்தில் அந்த கார் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த தொடர் விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த முருகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் காரை ஓட்டி வந்த ஈஸ்வர் பிரகாசுக்கும் பலத்த காயமடைந்து போலீசார் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடியில் உள்ள மகளை பார்க்க சென்ற தாய் - ஆறுமுகநேரியில் அரசு பேருந்து மோதி உயிரிழப்புதூத்துக்குடி மாவட்டம் குரும்...
26/10/2023

தூத்துக்குடியில் உள்ள மகளை பார்க்க சென்ற தாய் - ஆறுமுகநேரியில் அரசு பேருந்து மோதி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகேயுள்ள அங்கமங்கலம் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 60). கணவர் இறந்து விட்ட நிலையில் ராமலட்சுமி தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் தூத்துக்குடியில் கூட்டுறவுத் துறையில் தணிக்கையாளராக உள்ளார். சம்பவத்தன்று தூத்துக்குடியிலுள்ள மகளை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு குரும்பூரிலிருந்து பஸ்சில் ஏறி ஆறுமுகநேரி சென்று அங்குள்ள கடையில் மகளுக்கு சில பொருட்களை வாங்கி கொண்டு, தூத்துக்குடிக்கு பஸ் ஏறுவதற்காக ஆறுமுகநேரி பஸ் ஸ்டாப் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

ஆறுமுகநேரி மெயின்பஜார் பஸ்ஸ்டாப் அருகே திருச்செந்தூரில் இருந்து மூலக்கரை வழியாக நாசரேத் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் அவர் மீது திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது கால்கள் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி போலீசார் விரைந்து சென்று ராமலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் அணியாபரநல்லூரை சேர்ந்த பெருமாள் மகன் உடையார்(52) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

ஆறுமுகநேரி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் காயம்தூத்துக்குடி முத்தையாபுரம் முத்தம்மாள் புரத்தை சேர்ந்த தங்கவ...
26/10/2023

ஆறுமுகநேரி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் காயம்

தூத்துக்குடி முத்தையாபுரம் முத்தம்மாள் புரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் பொன்ராஜ் (வயது 50). இவரது மகன் முகிலன் (17), மகள் தனலட்சுமி(16). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் முடிந்து, நேற்று காலையில் முத்தையாபுரத்துக்கு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர்.

ஆறுமுகநேரி அருகிலுள்ள சாகுபுரம் வளைவில் சென்ற போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற எதிரே வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுத்தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த வீரபாண்டியன் பட்டணத்தை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் என்பவரை கைது செய்தனர்..

முக்கானியில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் மண் சரிந்து தொழிலாளி படுகாயம்தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அருகேயுள்ள மு...
26/10/2023

முக்கானியில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் மண் சரிந்து தொழிலாளி படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அருகேயுள்ள முக்காணி கிராம பஞ்சாயத்து பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதற்காக ஏற்கனவே இருந்த கால்வாய் மூடி பழுதடைந்தது. இதனால் புதிதாக கழிவுநீர் வாய்க்காலில் குழாய்கள் அமைத்து, அதன் மூலம் கழிவு நீரை வெளியேற்ற கிராம பஞ்சாயத்து சார்பில் பணி நடந்து வருகிறது.

இந்தபணியில் குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா காரங்காடு பகுதியில் உள்ளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் குழிக்குள் இறங்கி குழாய்களை இறக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த காரங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் கிருஷ்ணன் (வயது 22) மீது மண் சரிந்து விழுந்தது. இதனால் மண்ணுக்குள் கிருஷ்ணன் சிக்கி கொண்டார். தகவலறிந்த ஆத்தூர் போலீசார் மற்றும் சக பணியாளர்கள் மண்ணுக்குள் சிக்கி கிடந்த கிருஷ்ணனை மீட்டனர். அவருக்கு இடது கால் எலும்பு முறிந்திருந்தது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் ஒருவருக்கு தலையில் கத்தி வெட்டு - கத்தியால் வெட்டிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு தூத்...
26/10/2023

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் ஒருவருக்கு தலையில் கத்தி வெட்டு - கத்தியால் வெட்டிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி காளியப்பர் தெருவை சேர்ந்தவர் தாமஸ் மகன் நிர்மல் (28), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கென்னடி மகன் சிம்சோன் ஆகியோர் திரேஸ்புரம் தோமையார் கோவில் தெரு பகுதியில் நேற்றிரவு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த திரேஸ்புரம் பெலிக்ஸ் மகன்களான கௌதம், ராஜா உட்பட 6 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளது. தகராறு முற்றியதில் நீளமான, கூர்மையான கத்தியால் நிர்மல் தலையில் ஓங்கி வெட்டிவிட்டு ஓடி சென்றுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிர்மலை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த நிர்மலை மீ்ட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுத்தொடர்பாக நிர்மல் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் கத்தியால் வெட்டியவர்களை தேடி வருகின்றனர். கத்தியால் வெட்டிய கும்பல் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள திரேஸ்புரம் பகுதியில் நடுரோட்டில் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகம் நடைபெறுவதாகும், சர்வ சாதரணமாக சிறுவர்கள் கையில் புழக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே காவல்துறை இதன் மீது கவனம் செலுத்தி இப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செந்தூரில் தங்கச்செயின் பறிப்பு
25/10/2023

திருச்செந்தூரில் தங்கச்செயின் பறிப்பு

குலசை தசரா சூரசம்ஹாரம்
25/10/2023

குலசை தசரா சூரசம்ஹாரம்

திமுக கவுன்சிலர் ராஜினாமா #
25/10/2023

திமுக கவுன்சிலர் ராஜினாமா

#

Address

Tuticorin

Alerts

Be the first to know and let us send you an email when Kadivaalam News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kadivaalam News:

Videos

Share

Category


Other Magazines in Tuticorin

Show All

You may also like