Tuty News

Tuty News good
(4)

08/10/2020

குலசை தசரா திருவிழா 8000 பேர் ஒரே இடத்தில் ஒரே நாளில் (10நாட்கள்) கூடினால் கொரனா பரவாது... தெர்மாகோல் ஆட்சியர் அறிவிப்பு: 8000×10=80000

10/09/2020

வழக்கறிஞரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய எஸ்.ஐ.:
மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
குற்றவாளியை நீதிமன்றத்தில் சரணடைய வைத்த விவகாரத்தில் எஸ்.ஐ. ஒருவர், வழக்கறிஞரிடம் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், நெல்லை எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் இசக்கி பாண்டியன். இவர் நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.
தன் கட்சிக்காரரான குற்றவழக்கில் சிக்கிய பேச்சிமுத்து என்பவருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் வாங்குவதற்கு வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் முயன்றுள்ளார்.
ஆனால், நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனால் நெல்லை நீதிமன்றத்தில் பேச்சிமுத்து சரண் அடைவதற்காக வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் ஏற்பாடு செய்துள்ளார்.
இதனை அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, வழக்கறிஞர் இசக்கி பாண்டியனை செல்போனில் அழைத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது எங்கள் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.
ஆகவே, என்னிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு வழக்கறிஞர் மறுத்தாகக் கூறப்படுகிறது.
நேற்று சம்பந்தப்பட்ட குற்றவாளியை நெல்லை நீதிமன்றத்தில் சரணடைய வைத்துள்ளார் இசக்கி பாண்டியன்.
குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எஸ்.ஐ. இசக்கிராஜா தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்துகொண்டு சீருடை இல்லாமல் காரில் தூத்துக்குடியிலிருந்து கிளம்பி நெல்லை நீதிமன்றம் வந்துள்ளார்.
நீதிமன்றத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் மீது, எஸ்.ஐ. இசக்கிராஜா தனது நண்பர்களுடன் வந்த காரை வைத்து மோத முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் துப்பாக்கியைக் காட்டி இசக்கி பாண்டியனைச் சுட்டு விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும், அவதூறான வார்த்தைகளால் பேசி பேசி இசக்கிராஜா மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தன் மீது காரை மோத முயற்சி செய்து, துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இசக்கி பாண்டியன், எஸ்.ஐ. இசக்கிராஜா மீது புகார் செய்தார்.
வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்பேரில் அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ. இசக்கிராஜா மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்த வெளியான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து (SUO-MOTU) எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை 2 வார காலத்திற்குள் அளிக்கும்படி சம்பவம் நடந்த நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நன்றி
வழக்கறிஞர் திரு தங்கதுரை

09/09/2020

செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம்: மத்திய அரசு அனுமதி.!

02/09/2020

7 ந் தேதிக்கு பிறகு பொது
போக்கு வரத்து..
தமிழ் நாடு முழுவதும் பயணிக்கலாம்..
😁😁

21/08/2020

உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

அமெரிக்காவில் உள்ள கலிபோர்ணியா மாகணத்தில் அமைந்துள்ள கூகுள் நிறுவனம்.

தமிழ் மொழியை தன்னுடைய அலுவலகமொழியாக ( official மொழி) அங்கீகரித்துள்ளது.

இதில் முக்கிய பதவியில் உள்ள தமிழர் திரு சுந்தர்பிச்சைக்கும் . தமிழ் மொழியை அலுவலகமொழியாக்க அயராது பாடுபட்ட இலங்கை தமிழர் திரு விக்டர் அவர்களுக்கு நன்றி
தமிழ் உலகின் மூத்த முதல்மொழி இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து. தமிழனாய் பிறந்த்தர்க்கு பெருமிதம் அடைவோம். வாழ்க தமிழ் வளர்க தமிழர் கலாசாரம்..🌹🙏

20/08/2020



எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - எஸ்.பி.பி மகன் சரண் தகவல்!

19/08/2020

இரண்டாவது தலைநகரமாக எந்த மாவட்டம் இருக்க வேண்டும்?
உங்கள் கருத்தை காரணத்தோடு கமெண்ட் பண்ணுங்க?

Address

3rd Mile
Tuticorin
628008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuty News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Tuticorin media companies

Show All

You may also like