Namma Tiruvannamalai

Namma Tiruvannamalai For latest updates about in and around Tiruvannamalai. *News *Events *Jobs *Social Activities
(1)

திருவண்ணாமலையில் பக்தர்களின் காணிக்கை 75 இலட்சம் மூலம் புணரமைப்பு செய்த மகாரதம் மாடவீதியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது...இத...
08/11/2024

திருவண்ணாமலையில் பக்தர்களின் காணிக்கை 75 இலட்சம் மூலம் புணரமைப்பு செய்த மகாரதம் மாடவீதியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது...
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து பக்தியாக வடம் பிடித்து தேரை இழுத்தனர்...







கனமழை எச்சரிக்கை: திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட கலெக்டர் கோரிக்கைHeavy-rain-warning-distr...
16/10/2024

கனமழை எச்சரிக்கை: திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட கலெக்டர் கோரிக்கை

Heavy-rain-warning-district-collector-requests-pilgrims-to-avoid-coming-to-tiruvannamalai-kirivalam



திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலமானது‌ இன்று (16.10.2024) மாலை 8.00 மணி முதல் நாளை (17.10.2024) மாலை 5.38 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 17-ந் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் அறிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வயதானவர்கள், குழந்தைகள், உடல் நலிவுற்றவர்களுக்கு மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மழைப் பொழிவினை பொறுத்து பக்தர்கள் தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பெருமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைபாதிப்புகள் தொடர்பான மழை தொடர்பான பாதிப்புகள் -1077, 04175-232377, மின்சாரம் தொடர்பான பாதிப்புகள் 94987 94987 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் தங்கி இருக்கும் உள்ளூர் மக்களை காலி செய்துவிட்டு வெளி மாநில & வெளி மாவட்ட மக்களுக்கு வாடகைக்கு வீடுகள் வி...
26/09/2024

வாடகை வீட்டில் தங்கி இருக்கும் உள்ளூர் மக்களை காலி செய்துவிட்டு வெளி மாநில & வெளி மாவட்ட மக்களுக்கு வாடகைக்கு வீடுகள் விடப்படுகிறதாம்

நமது திருவண்ணாமலையில்..

Arunachalam's Arunachaleswarar Temple, Tiruvannamalai's temple, district updates, official news, Girivalam's cultural va...
22/09/2024

Arunachalam's Arunachaleswarar Temple, Tiruvannamalai's temple, district updates, official news, Girivalam's cultural value, and the symbolic significance of Lingam

13/09/2024
விநாயகர் அறுபடை வீட்டில் முதலாம் படை வீடு திருவண்ணாமலை...
13/09/2024

விநாயகர் அறுபடை வீட்டில் முதலாம் படை வீடு திருவண்ணாமலை...

♥கேதுவின் அஸ்வினி நட்சத்திரம் ஒரு பார்வை.அஸ்வினி குமாரர்கள், இவர்களை தேவர்களின் மருத்துவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். க...
28/08/2024

♥கேதுவின் அஸ்வினி நட்சத்திரம் ஒரு பார்வை.

அஸ்வினி குமாரர்கள், இவர்களை தேவர்களின் மருத்துவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

குதிரை முகம் கொண்டவர்கள்.

சாஸ்திரங்களில் அஸ்வினி குமாரர்கள் பிரம்மனிடமிருந்து மருத்துவக் கலையை கற்றுக் கொண்டார்கள்.

அஸ்வினி குமாரர்கள் இவர்களைப் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், இன்னும் சிலருக்கு ஆபத்தில் மாட்டிக் கொண்டவர்கள் காப்பாற்றுபவர்கள் அஸ்வினி குமாரர்கள். அறுவை சிகிச்சையை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் அஸ்வினி குமாரர்கள். இவர்கள் உலகை சுற்றி வரும்பொழுது, மனிதர்களிடம் மிக நெருக்கமாக நிலையில் வரும் பொழுது அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப. "ததாஸ்து "என்னும் ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம் உண்டு. அந்த நேரத்தில் நாம் என்னும் கொடிய எண்ணங்கள் நல்ல எண்ணம் அல்லது தீய எண்ணம் எதுவாக இருந்தாலும் உடனே பலிதமாகும்.

அஸ்வினி -- கேதுவின் நட்சத்திரம். நட்சத்திரத்தில் சூரியன் உச்சம் ஆகிறார். ஆத்ம காரகனான சூரியனே நலிவுற்று இருக்கும் பொழுது அஸ்வினி குமாரர்கள் வைத்தியம் பார்த்ததாக சாஸ்திரங்களில் கூறுவது உண்டு.

கேதுவின் முதல் நட்சத்திரம், 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அஸ்வினி குமாரர்கள் உடைய அஸ்வினி நட்சத்திரம். நோய் பரப்புபவர் ராகு என்றால் மருந்து கொடுப்பவர் கேது என சொல்கிறோம்.

அப்படிப்பட்ட கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி கால புருஷனின் முதல் நட்சத்திரம், அஸ்வினி குமாரர்கள் நடத்திய முதல் அறுவை சிகிச்சையாக, ரிக் வேதத்தில் கால் உடைந்த ஒருவருக்கு செயற்கை கால்களை உருவாக்கியவர்கள் அஸ்வினி குமாரர்கள் என கூறுகிறார்கள்.

கண்டாந்த சக்கரத்தில் 27 நட்சத்திரங்களில் மூன்று கணுக்களாக சொல்லப்படுகிறது. அவை அஸ்வினி மகம் மற்றும் மூலம். சில குழந்தைகள் பிறக்கும் பொழுது ஏதேனும் ஒரு வகையான நோயினால் தாக்கப்படுவது (குறிப்பாக மேலே சொல்லப்பட்ட மூன்று நட்சத்திரங்கள்) கேது திசை முடியும் வரை கேதுவின் அம்சமாக விளங்கும் அஸ்வினி குமாரர்களை வழிபடுவதன் மூலம் அவர்களை வந்து மருத்துவம் செய்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது

அஸ்வினி குமாரர்களின் வழிபாடு செய்வதன் மூலம் கேது தசையில் ஏற்படக்கூடிய மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கும், மேலும் கர்ம வினையினால் வரக்கூடிய என்னவென்று தெரியாத நோய்களை குணப் படுத்துவதற்கும், கேதுவின் அம்சமாக இருக்கும் அஸ்வினி குமாரர்களின் வழிபாடு மிகுந்த நன்மை தரும்.

08/08/2024










#திருவண்ணாமலை_மாவாட்ட_காவல்துறை
#தமிழ்நாடு_காவல்துறை
#விழிப்புணர்வு
#சைபர்கிரைம்

தினம் ஒர் சித்தர் வரலாறு #கொங்கணவர்மேலைக் கடற்கரை கொங்கண தேசத்தவர் . வேட்டுவ குலத்தில் பிறந்தவர். போகரின் மாணாக்கர். இவர...
07/08/2024

தினம் ஒர் சித்தர் வரலாறு

#கொங்கணவர்

மேலைக் கடற்கரை கொங்கண தேசத்தவர் . வேட்டுவ குலத்தில் பிறந்தவர். போகரின் மாணாக்கர். இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும்போது, மரக்கிளையில் இருந்த கொக்கு எச்சமிட, அதனால் தவம் கலைந்து, கோபமுடன் சித்தர் நோக்க, கொக்கு எரிந்து சாம்பலானது . பிறகு, நீண்டநாள் தவத்திலிருந்து கலைந்தமையால் ஆகாரம் உண்ண ஒரு வீட்டிற்குச் சென்று உணவு கேட்டார். அவ்வீட்டிலிருந்த அம்மையார் காலந் தாழ்த்தி அன்னமளித்தார். சித்தர், அந்த அம்மையாரை, சினந்து நோக்கினார். உடனே, அம்மையார், ‘கொங்கணவா நான் ஒன்றும் கொக்கல்ல எரிந்து போவதற்கு’ என்று அமைதியாகப் பதில் அளித்தார். ‘என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்’ என்றார் அவர். கொங்கணவர், அந்த பெண்மணியின் தொலைவில் உணர்தலை (ஞானதிருஷ்டி) எண்ணி வியந்தார். அவளுடைய கற்பின் திண்மையை மெச்சி வாழ்த்தினார். தம்முடைய சினத்தை நினைத்து வெட்கினார். போகரின் கருத்துப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார் என்ற குறிப்பு போகர் ஏழாயிரத்தில் காணப்படுகிறது. இவர் திருவேங்கடத்தில் யோக சமாதியில் அமர்ந்தார் என்பர். கொங்கணவர் வாத காவியம் பல வேதியியல் ரகசியங்களைப் பெற்றுள்ளது. கொங்கணவரின் முக்காண்டங்கள்,

வைத்தியம் 200,

வாதசூத்திரம் 200,

ஞான சைதன்யம்,

வாலைக்கும்மி,

சரக்கு வைப்பு,

முப்பு சூத்திரம்,

ஞான வெண்பா,

உற்பத்தி ஞானம்,

சுத்த ஞானம் குறிப்பிடத்தக்கதாகும். இவர் சுமார் 24 நூல்கள் இயற்றியுள்ளார்.

எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று #அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு #போகர் ஆவார். கொங்கணர் சிறந்த #அம்பிகை #பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். கொங்கணர் குருநாதரைச்சுற்றி வந்து வணங்கிவிட்டு, உடனே கிளம்பி சென்று உயர்ந்த மலை ஒன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் அமர்ந்து அம்பிகையை நினைத்து #தவம் செய்து கொண்டிருக்கையில் மனதிற்குள் ஏதோ தோன்றவே, தவத்தைக் கைவிட்டு #சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான ஒரு யாகத்தை ஆரம்பித்தார். அப்பொழுது #கௌதமர் அவர் முன் வந்து “கொங்கணரே, தவத்தைச் செய்து அதன்மூலம் தான் #சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விடு, தவம் செய்” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். எனவே யாகமும் நிறுத்தப்பட்டது. தில்லையை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் முடிந்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராளமான சித்திகள் கிடைத்தன. அதனால் நிறைய குளிகைகளை உண்டாக்கினார். ஒருநாள் கொங்கணர் #திருமழிசை #ஆழ்வாரிடம் சென்று செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றினைப் பெருமையுடன் கொடுத்து, “இது காணி கோடியை போதிக்கும்” என்றார். ஆழ்வாரோ தம் உடம்பின் அழுக்கையே திரட்டி கொடுத்து “இரசவாதக் குளிகை இது காணி கோடியை ஆக்கும்” என்று கொடுத்தார். ஆழ்வாரின் பெருமையினை கண்ட கொங்கணர், அவரோடு நட்புறவு கொண்டார். #திருமழிசையாழ்வார் சந்திப்பிற்கு பிறகு தவத்தில் ஈடுபட்டார். கடுந்தவம் பலன் தந்தது. இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தைச் செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிச்சை எடுத்த உணவை மட்டுமே உண்டார்.

ஒருநாள் இவர் தவம் செய்து கொண்டிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு இவர் மேல் எச்சம் இட்டது. கொங்கணர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். உடனே கொக்கு எரிந்து சாம்பலாகியது. தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட கொங்கணர், திருவள்ளுவர் வீட்டிலே பிச்சையின் பொருட்டு வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் காலதாமதமாக பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர், மாதே! என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி விழித்து நோக்கினார். ஆனால் அவ்வம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்த்தார். உடனே வாசுகி அம்மையார் நகைத்து “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!” என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். திருவள்ளுவர் வீட்டிலிருந்து கிளம்பி வரும் வழியில் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் என்பவனைச் சந்தித்தார். கொங்கணரைப் பார்த்ததும் தர்மவியாதன் ஓடிவந்து வணங்கினான். “சுவாமி! வாசுகியம்மையார் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். கொங்கணருக்கு மேலும் வியப்பு. “அப்பா! நான் அங்கிருந்து தான் வருகிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார். தர்மவியதன், “சுவாமி! வாசுகி அம்மையார் கணவரிடம் பக்தி கொண்ட பதிவிரதை, அடியேன் பெற்றோர்கள்தான் தெய்வம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுபவன். இதனால் தான் எங்களிடம் ஏதோ சக்தி இருக்கவேண்டும்” என்று கூறி அவரிடம் விடைபெற்றான். கொங்கணர் உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது. கொங்கணர் போகரைச் சந்திப்பதற்கு முன் பல சித்தர்களைச் சந்தித்து சித்துக்கள் பல பயின்றார்.

தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார். அப்போது அவர், “திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்” என்று வழியனுப்பினார். பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை எதிர்கொண்டழைத்து உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்கு பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்து சமய தீட்சை நிர்வாண தீட்சை முதலியனவற்றையும் உபதேசித்தார். அதன்பிறகு கொங்கணர் திருவேங்கட மலை சென்று தவம் செய்தார். அப்போது வலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரைச் சந்தித்து அவர் சீடராக ஆனான். பலப் பல ஞான அனுபவ விவரங்களைக் கொங்கணரிடம் இருந்து அறிந்தான். அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க கொங்கணர் பல பாடல்களை எளிமையான முறையில் இயற்றி அருளினார். இறுதியில் கொங்கணர், திருவேங்கடத்தில் சித்தியடைந்தார்.

#திருச்சிற்றம்பலம்

28/07/2024

players

19/06/2024

28/05/2024

சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே இயங்கும் மின்சார ரயிலில் கழிவறை வசதியுடன் கூடிய பெட்டிகள் விரைவில் இணைக்கப்படும் எனத...
18/05/2024

சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே இயங்கும் மின்சார ரயிலில் கழிவறை வசதியுடன் கூடிய பெட்டிகள் விரைவில் இணைக்கப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு கடந்த மே 2-ஆம் தேதி முதல் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50மணிக்கு சென்னை வந்தடைகிறது.

சுமார் 6 மணி நேரம் பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். சென்னையிலிருந்து

திருவண்ணாமலைக்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணம் குறைவாகவும், பயணநேரம் குறைவாகவும் இருப்பதால் திருவண்ணாமலைக்கு பேருந்துகளை காட்டிலும் ரயிலில் பயணம் செய்வதற்கு தான் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ரயிலில் கழிவறை வசதிகள் இல்லாததால் 6 மணி நேரமாக இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர். இதனால், இந்த ரயிலில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என ரயில்வே துறைக்கு பயணிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர்

கூறுகையில்: கடற்கரை -

திருவண்ணாமலை இடையே இயங்கும் மின்சார ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த ரயிலில் கழிவறை வசதி உள்ள பெட்டிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், கழிவறையுடன் கூடிய மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் பெரம்பூர் ஐ.சி.எஃப்.யில் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பணிகள் முடிவுபெற்றயுடன் கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்றார் அவர்.

🤔🐎  #காரியம் ஆகனும்னா...!? கழுதையானாலும் காலை பிடி...!!!  👹💃🏻 #கம்சன்_தன்_தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால்...
09/05/2024

🤔🐎 #காரியம் ஆகனும்னா...!? கழுதையானாலும் காலை பிடி...!!!

👹💃🏻 #கம்சன்_தன்_தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன், மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...

💃🏻🙇🏻 #இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை. கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்...

🙇🏻👍 #குழந்தை_பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன...

🔥🙏👣🌀 #எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார்... உடனே தேவகி கணவன் வசுதேவன்... தயவுசெய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினார்...🙏 கழுதையும் கத்தவில்லை கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது🙂 எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!! "கர்நாடகாவில் அமிர்தாபுரத்து

👣🌀 #அமிர்தேஷ்வரர் கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது"..🙏🏻

   #அண்ணாமலையார்  #திருவண்ணாமலை
08/05/2024

#அண்ணாமலையார் #திருவண்ணாமலை

ஜாதக குருவாம் பிரகஸ்பதி எமக்கு பாதகம்  இன்றி பார  சாதகமாக வேதக குருவே!  விருட்ச நிழலே!!வீழ்ந்தேன்!! பணிந்தேன்!! விழி திற...
01/05/2024

ஜாதக குருவாம் பிரகஸ்பதி எமக்கு
பாதகம் இன்றி பார சாதகமாக
வேதக குருவே! விருட்ச நிழலே!!
வீழ்ந்தேன்!! பணிந்தேன்!! விழி திறவாயே!!
மேதகு வாழ்வும் மெத்தநற் குணமும்
மேதினில் சிறக்க மெய்ப்பொருளருளே!!
வாதகத் திறமை வாய்மை வளமை வாய்ச்சொல் விளங்க வந்தெமை அணையே!
ஏதெனும் தீங்கு எமைவந்து அணுமுன்
எளியனை உம்மிருகண் ஏறிடு முன்னே!!
தூதகப் பணிபோல் துயர்முன் உணர்த்தி
தோன்றா அச்சம் வென்றிட விழையே!!
மாதிரை மாயை மனக்கண் விலக்கி
மணிப்பொருள் அடைய மலர்ச்சுடர் ஏற்றே!!
மாநிதிப் பொருளும் மங்கல நிகழ்வும்
மனையதில் நிறைய மலர்க்கரம் மகிழ்வே!!
ஓதிடும் உம்மௌனம் உணர்த்திடும் தியானம்
உன்னுடை அமைதி உலகிற்கு வழியே!!!
ஆதிரை அழகே!!ஆலமர்ச் செல்வே!
அடியனை வழிநடத்தி பிடியென கைகொடுவே!!

திருவண்ணாமலை To சென்னை: கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே - மகிழ்ச்சியில் பயணிகள்.திருவண்ணாமலையிலிருந்து சென்னை கடற்கரை வரை இ...
01/05/2024

திருவண்ணாமலை To சென்னை: கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே - மகிழ்ச்சியில் பயணிகள்.

திருவண்ணாமலையிலிருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயிலில் சென்னைக்கு 50 ரூபாயும், வேலூர் கண்ட்ரோல்மென்ட்க்கு 25 ரூபாயும் போளூருக்கு 10 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு திருக்கோவிலூர் விழுப்புரம் மார்க்கமாக கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் சேவை இருந்துள்ளது. தற்போது விழுப்புரம் காட்பாடி ரயில்வே மார்க்கம் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் சென்னை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு பௌர்ணமி நாட்களில் மட்டும் சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்ட்ரோல்மென்ட் வரை இயங்கி வந்த மின்சார ரயில் வரும் இரண்டாம் தேதி முதல் தினமும் திருவண்ணாமலை வரை இயக்கப்பட உள்ளது.

சென்னை கடற்கரைக்கு செல்ல ரயில் கட்டணம்
திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் இருந்து போளூருக்கு பத்து ரூபாயும், ஆரணி சாலைக்கு 15 ரூபாயும், கண்ணமங்கலத்திற்கு 20 ரூபாயும், வேலூர் கண்ட்ரோல்மென்ட்க்கு 25 ரூபாயும், காட்பாடிக்கு 25 ரூபாயும், சோளிங்கருக்கு முப்பது ரூபாயும், அரக்கோணத்திற்கு 35 ரூபாயும், திருவலங்காட்டிற்கு 40 ரூபாயும், திருவள்ளூருக்கு 40 ரூபாயும், வில்லிவாக்கத்திற்கு 45 ரூபாயும், பெரம்பூர் , வண்ணார்பேட்டை , ராயபுரம் , சென்னை கடற்கரை வரையில் 50 ரூபாயும் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து மே மூன்றாம் தேதி முதல் தினமும் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்ட்ரோல்மென்ட் காட்பாடி வழியாக சென்னை கடற்கரைக்கு 9.50 மணிக்கு சென்றடையும். அதேபோல் மாலை ஆறு மணிக்கு சென்னை கடற்கரை ஸ்டேஷனில் புறப்பட்டு ரயில் 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்து அடையும்.
திருவண்ணாமலையிலிருந்து பேருந்துகளில் செல்லும் பயணிகள் போளூர் கட்டணம் 30 ரூபாயும், வேலூர் செல்ல அரசு பஸ்களில் இரண்டு விதமாக கட்டணங்களில் 58 முதல் 75 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் வரையில் 150, அல்ட்ரா டீலக்ஸ் 180, ஏசி பஸ் 190 என வசூல் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Address

Tiruvannamalai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Tiruvannamalai media companies

Show All