Kongunadu Weatherman

Kongunadu Weatherman TN &Kongu belt ன் மழை நிலவரங்கள் பதிவிடப்படும். This page is not official. Official website is IMD
(7)

தென்மேற்கு வங்க கடலை ஒட்டி உருவாகியிருக்கும் பரந்த சுழற்சி காரணமாக ஈரப்பதமான கிழக்கு திசை காற்று தமிழகத்தில் நுழைவதால் த...
06/11/2024

தென்மேற்கு வங்க கடலை ஒட்டி உருவாகியிருக்கும் பரந்த சுழற்சி காரணமாக ஈரப்பதமான கிழக்கு திசை காற்று தமிழகத்தில் நுழைவதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது மெல்ல தீவிரமடைய இருக்கிறது..

Nov 7 முதல் தமிழக கடலோர பகுதிகளில் படிபடியாக மழை ஆரம்பமாகும். ஒரிரு இடங்களில் கன மழை வரை இருக்கலாம்... தென் மாவட்டங்கள் உட்பட... MJO ஆனது நம் கட்டத்தில் (இந்தியபெருங்கடல்) நவம்பர் 2வது வாரம் வருகை தரலாம் என்பதால் Nov 13,14 முதல் கடலோர பகுதிகளில் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.. சிஸ்டத்தின் நகர்வை பொருத்து முன்பே கூட தீவிரமடையலாம்... அதுவரை MJO வின் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதால் மேக உற்பத்தி குறைவாக இருக்கலாம்..

நம் கொங்கு பகுதியை பொருத்த வரை Nov 7 முதல் வறண்ட காற்று விலகி லேசான/மிதமான ஈரப்பத காற்று நுழைவதால் Nov 7 நாளை முதல் ஆங்காங்கே ஒருசில/சில இடங்களில் மழை இருக்கலாம்... ஏதாவது ஒரிரு இடங்களில் காற்று குவிதலை பொருத்து கன மழை வரை இருக்கலாம்.. MJO நமக்கு சாதகமாக நகர்ந்த பின் சிஸ்டம் மேற்கு நோக்கி நகர்ந்தால்/அதாவது சிஸ்டத்தின் நகர்வை பொருத்து, காற்றின் திசையை பொருத்து (nov 13க்கு மேல்) பரவலாக மழை இருக்கலாம். ஆனால் தற்போது உறுதிபடுத்த இயலாது. வரும் நாட்களில் பார்ப்போம்.. அப்போதைய மழைக்காரணிகளை பொருத்து சிஸ்டம் நகர்வில் மாற்றமும் இருக்கலாம்.. அதுவரை கொங்கு பகுதிக்கு அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் நண்பர்களே. தற்போதைக்கு ஒருசில/சில,பல இடங்களில் மட்டும் மழை இருக்கும்.. காற்று குவிதலை பொருத்து சமயங்களில் சற்று பரவலாக இருக்கலாம் உறுதியல்ல...

தென்மேற்கு பருவமழை, வெப்பசலன மழையை கணிப்பது சற்று எளிது. ஆனால் வடகிழக்கு பருவமழையின் சிஸ்டம் நகர்வை பொருத்து மழை இடத்திற்கு இடம் மாறுபாடு என்பதால் ஒரிரு நாட்களுக்கு மட்டுமே கணிக்க இயலும்.. இடையில் மாற்றம் இருந்தால் வரும் நாட்களில் பதிவிடப்படும்...

மீண்டும் வறண்ட வானிலை முழுமையான வடகிழக்கு பருவக்காற்று நுழைந்தாலும் வட இந்தியாவின் வறண்ட காற்றும் தமிழகத்தில் நுழைய உள்ள...
03/11/2024

மீண்டும் வறண்ட வானிலை

முழுமையான வடகிழக்கு பருவக்காற்று நுழைந்தாலும் வட இந்தியாவின் வறண்ட காற்றும் தமிழகத்தில் நுழைய உள்ளதால் தமிழகத்தில் Nov 5 முதல் ஏறத்தாழ Nov 8 அல்லது 10வரை வறண்ட வானிலை நிலவும். கொங்கு பகுதி உட்பட... ஒரிரு/ஒருசில இடங்களில் மட்டும் மழை இருக்கும்...

இதனால் விவசாய்கள் வேளாண் பணிகளை இதற்கு ஏற்றார் போல் திட்டமிடுங்கள்.

Nov 4 (நாளை வரை) மட்டும் ஆங்காங்கே சில இடங்களில் மழை இருக்கலாம்..பரவலாக இருக்காது. இன்று (nov 3) லேசான வறண்ட காற்று நுழைவதால் தான் தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் மழை இருந்தது.

ஈரப்பதமிகுந்த MJO ஆனது இந்தியா பெருங்கடலுக்கு நவம்பர் 2வது வாரத்தில்(nov 10,12வாக்கில்) வருகை தந்து தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழையை நவம்பர் 2வாரம் முதல் ஏறத்தாழ நவம்பர் இறுதி வரை அடுத்தடுத்த சிஸ்டங்கள் உருவாகி பருவமழையை தீவிரப்படுத்த சாதகமாக அமையும்..

இதனால் nov 8-10 வாக்கில் வங்ககடலில் புதிய தாழ்வு நிலை உருவாகி தமிழகத்தை நோக்கி நகரலாம்... இடையில் ஏதாவது மாற்றம் இருந்தால் பதிவிடப்படும்..

02/11/2024

மத்திய,தெற்கு கொங்கு பகுதிகளில் சற்று பரவலான மழை. இரவு இன்னும் சற்று பரவி பெய்யும். உங்கள் பகுதியின் மழை நிலவரங்கள் பதிவிடுங்கள்.

அம்பர்லா அலார்ட்....மத்திய மாவட்டங்களில் ஆங்காங்கே  உருவான மேகங்கள் மேற்கு/தென்மேற்க்கா நகர்கிறது..வலுவிழக்காமல் மேற்கு/...
02/11/2024

அம்பர்லா அலார்ட்....

மத்திய மாவட்டங்களில் ஆங்காங்கே உருவான மேகங்கள் மேற்கு/தென்மேற்க்கா நகர்கிறது..

வலுவிழக்காமல் மேற்கு/தென்மேற்கு நோக்கி நகர்ந்தால் இரவு கொங்கு பகுதிகளில் ஆங்காங்கே மழை இருக்கலாம்...

மேற்கு நோக்கி நகர நகர சற்று மேகங்கள் பரவலான மேகங்களாக நகரலாம்.. ஒரிரு இடங்களில் கன மழை வரை இருக்கலாம்.. ஏதாவது ஒரிரு இடங்களில் மிக கன மழை வரை கிடைக்கலாம்..
சில/பல இடங்களை ஒதுக்கியும் வருகிறது...

தற்போது கிழக்கு கொங்கு பகுதிக்கு entry ஆகியுள்ளது...

லேசான கிழக்கு திசை காற்றால் கிழக்கு வரை காற்று குவிதல்  காரணமாக  வட கிழக்கு/ மத்திய கொங்கு பகுதிகளில் உருவான மேகங்கள் மே...
01/11/2024

லேசான கிழக்கு திசை காற்றால் கிழக்கு வரை காற்று குவிதல் காரணமாக வட கிழக்கு/ மத்திய கொங்கு பகுதிகளில் உருவான மேகங்கள் மேற்கு/தென்மேற்க்காக நகர்ந்து மேற்கு கொங்கு பகுதியை நோக்கி நகர்கிறது...

வலுவிழக்காமல் மேற்கு/ தென்மேற்கு நோக்கி நகர்ந்து கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்ட தென்மேற்கு பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது..

உங்கள் பகுதியின் மழை நிலவரங்களை பதிவிடுங்கள்...

இந்த மழையானது Nov 3/4வரை தொடரும்....

இரு திசை காற்று குவிதல்/காற்றின் திசையில் வேக மாறுபாடு காரணமாக கொங்கு பகுதி & தமிழகத்தில்  Oct 31  முதல் Nov 4,5   நாட்க...
30/10/2024

இரு திசை காற்று குவிதல்/காற்றின் திசையில் வேக மாறுபாடு காரணமாக கொங்கு பகுதி & தமிழகத்தில் Oct 31 முதல் Nov 4,5 நாட்களுக்கு ஆங்காங்கே வெப்பசலன மழை இருக்கும்...

குறிப்பாக oct 31 தீபாவளியன்று ஆங்காங்கே சில இடங்களில் மழை இருக்கலாம்.. ஆனால் பரவலாக இருக்காது..

Nov 1 - 4/5க்குள் ஒரிரு நாட்கள் கொங்கு பகுதி, தென் மாவட்டங்களில் பரவலான மழை இருக்கலாம்... Oct 30 இன்று ஒருசில இடங்களில் மழை இருக்கலாம்...

Nov 3-5 முதல் முழுமையான வடகிழக்கு பருவகாற்று தமிழகத்தில் நுழைந்து தமிழகத்தில் முழுமையான வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கடலோர பகுதிகளில் கன மழையும், கொங்கு பகுதி, தென் உள் மாவட்டங்களில் அவ்வப்போது மழை இருக்கலாம்...

இதனால் நாளை முதல் மழை இருக்கலாம் என்பதால் அறுவடை விவசாய்கள் கவனமாக இருக்கவும்..

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்💐

வறண்ட வானிலை ...டானா புயலானது எதிர்பார்த்தது போல் வடக்கு நோக்கி நகர்ந்ததால்  வறண்ட காற்றானது தமிழகத்தில் நுழைகிறது..கடந்...
26/10/2024

வறண்ட வானிலை ...

டானா புயலானது எதிர்பார்த்தது போல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் வறண்ட காற்றானது தமிழகத்தில் நுழைகிறது..

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஈரப்பத காற்று குவிதல் காரணமாக கொங்கு பகுதிகள், தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் அவ்வப்போது பரவலாக பெய்து வந்த மழையானது நேற்றுடன்(oct 25) நிறைவு பெறுகிறது.. தற்போது வரை கொங்கு பகுதிகளில் புரட்டாசிகால மழை, பருவமழையானது இயல்பு/இயல்பை விட சற்று அதிகமாகவும், சில பகுதிகளில் அதிக மழையும் பதிவாகியுள்ளது..

இதனால் இன்று முதல் Oct 26 முதல் ஏறத்தாழ 4,5 நாட்கள் அல்லது ஒரு வார காலத்திற்கு தமிழகம், கொங்கு பகுதிகளில் பெரிதாக மழை இருக்காது.... மலைப்பகுதிகள், மலையோர பகுதிகள் போன்ற ஒரிரு /ஒருசில இடங்களில் மட்டும் லேசான/மிதமான மழை இருக்கலாம்.. (கொங்கு பகுதிகளில் இன்று மட்டும் oct 26 ஏதாவது ஒரிரு/ஒருசில இடங்களில் மழை இருக்கலாம் )

Oct 26,27 மட்டும் தென் மாவட்டங்கள், கொங்கு பகுதிகளின் திண்டுக்கல் மலைப்பகுதிகள், மலையோர பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மலையோர பகுதிகளில் oct 26,27ல் ஒருசில இடங்களில் மழை இருக்கலாம்... அதன்பிறகு தென்கோடி மாவட்டங்களில் மட்டும் ஒருசில முறை மழை இருக்கலாம்..

இந்த மழை இடைவெளியை பயன்படுத்தி விவசாய்கள் அறுவடை பணிகள் இருந்தால் தீவிரபடுத்துதல், மருந்து அடித்தல், உரமிடுதல், உழவு செய்தல் போன்ற அனேக வேளான் பணிகளையும் மேற்கொள்ளலாம்...

வட மாவட்டத்தை ஒட்டிய வடகடலோர பகுதிகள் மற்றும் அரபிக்கடல், கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை படிபடியாக மெல்ல உயர்ந்து வருவது வடகிழக்கு பருவமழை இயல்பாக நல்ல மழை பெய்ய சாதகமான சூழல் உருவாகி வருகிறது..

நவம்பர் முதல் வார இறுதி வாக்கில் தான் முழுமையான வடகிழக்கு பருவக்காற்று தமிழகத்தில் நுழைய வாய்ப்பிருக்கிறது...

இன்னும் வடக்கு வங்ககடல் மற்றும் வட கடலோர பகுதிகளில் வெப்பநிலை சாதகமாக உளளதால் அடுத்த சுற்று பருவமழையானது டெல்டா பகுதிகள் , வட மாவட்டங்களில் நவம்பர் முதல் வார இறுதி அல்லது 2வது வாரம் முதல் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இருக்கிறது.. அந்த சமயத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் ஒரளவிற்கு மழை இருக்கும்... அதை வரும் நாட்களில் பார்ப்போம்...

அதன் பிறகு தான் வடக்கு வங்க கடல், வட கடலோர பகுதிகளின் வெப்பநிலை குறைந்து இந்திய பெருங்கடல், அரபிக்கடல் வெப்பநிலை உயர்ந்து பிறகு தான் சிஸ்டம் குமரிக்கடல், இந்தியா பெருங்கடல் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளது... இடையில் ஏதாவது மாற்றம் இருந்தால் பதிவிடப்படும்..

கோவை மாவட்டத்தில் உருவாகிய பரவலான மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது... வலுவிழக்காமல் கிழக்கு நோக்கி நகர்ந்தால் ம...
22/10/2024

கோவை மாவட்டத்தில் உருவாகிய பரவலான மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது... வலுவிழக்காமல் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மட்டும் மத்திய/கிழக்கு கொங்கு பகுதிகளில் மழை இருக்கும்.. மேகங்கள் வலுவிழந்து விட்டால் இருக்காது... ஒருசில/சில இடங்களில் மட்டும் இருக்கலாம்..

22/10/2024

வறட்சியிலிருந்த கோவை மாவட்டம் பரவலாக நல்ல மழை பதிவாகிவருகிறது. இரவு இது இன்னும் பரவி பெய்யும். உங்கள் பகுதியில் மழையா நண்பர்களே..

நேற்று திருப்பூர் மாவட்டம் மற்றும் மற்ற கொங்கு பகுதிகளில் பெய்த கன மழையளவுகள்...Tiruppur District Rainfall 21.10.2024Udu...
21/10/2024

நேற்று திருப்பூர் மாவட்டம் மற்றும் மற்ற கொங்கு பகுதிகளில் பெய்த கன மழையளவுகள்...

Tiruppur District Rainfall 21.10.2024

Udumalpet : 118 mm
Thirumoorthi Dam : 105 mm
Thirumoorthi IB : 100 mm
Tiruppur Collectorate : 92 mm
Tiruppur PWD IB : 84 mm
Tiruppur North : 72 mm
Amaravathy Dam : 54 mm
Mulanur : 42 mm
Uthukuli : 42 mm
Kundadam : 33 mm
Kangeyam : 22 mm
Vattamalai Karai Odai Reservoir : 20.4 mm
Madathukulam : 20 mm
Palladam : 16 mm
Avinashi : 15 mm
Dharapuram : 11 mm
Tiruppur South : 9 mm
Uppar Dam : 8 mm
Naathangal Odai Reservoir : 7 mm
Vellakoil : 6.6 mm

District Total Rainfall : 877 mm
Average : 43.85 mm

நிகழ்நேர வானிலை பதிவு: காற்று குவிதல் காரணமாக மேற்கு கொங்கு பகுதிகளில் (கோவை, திருப்பூர் மாவட்டங்களில்) உருவான  பரவலான வ...
20/10/2024

நிகழ்நேர வானிலை பதிவு:

காற்று குவிதல் காரணமாக மேற்கு கொங்கு பகுதிகளில் (கோவை, திருப்பூர் மாவட்டங்களில்) உருவான பரவலான வலுவான மேகங்கள் கிழக்கு/வடகிழக்கு நோக்கி நகருவது போல தெரிகிறது.. ஒரிரு இடங்களில் கன மழை வரை இருக்கும்..Oct 20-23க்குள் ஒரிரு நாட்கள் பரவலான மழை இருக்கலாம் என்று பதிவிட்டது குறிப்பிட தக்கது..

இந்த மேகங்கள் வலுவிழக்காமல் தொடர்ந்து நகரும் பட்சத்தில் ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் போன்ற கொங்கு பகுதிகளில் இரவு மழை இருக்கலாம்.... ஒருவேளை மேகங்கள் வலுவிழந்தால் இருக்காது.. நாம் முன்பே எதிர்பார்த்த வாறு ஏறத்தாழ Oct 23,24வரை மழை தொடரும்.... அறுவடை விவசாய்கள் கவனமாக இருக்கவும்..

உங்கள் பகுதியின் மழை நிலவரங்களை பதிவிடுங்கள்..

தொடரும் வெப்பசலன மழை...சிஸ்டம் வட தமிழகத்தில் கரையை கடந்து அரபிக்கடலில் மேற்கு நோக்கி நகர்கிறது.  இதனால் வறண்ட மேற்கு தி...
17/10/2024

தொடரும் வெப்பசலன மழை...

சிஸ்டம் வட தமிழகத்தில் கரையை கடந்து அரபிக்கடலில் மேற்கு நோக்கி நகர்கிறது. இதனால் வறண்ட மேற்கு திசை காற்று நுழைந்து அறுவடை விவசாய்களுக்கு ஏறக்குறைய ஒரு வாரம் இடைவெளி இருக்கலாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்று சுழற்சி உருவாகி ஈரப்பதத்தை உந்துகிறது..

இதனால் காற்று சுழற்சி, மிதமான காற்று குவிதல் காரணமாக தமிழகத்தில் Oct 18,19 ஆங்காங்கே மழையும்(oct 18 மழை சற்று குறைவாக இருக்கலாம்). Oct 20,21,22,23க்குள் ஒரிரு நாட்கள் சற்று பரவலான மழையாகவும் இருக்கும்... கொங்கு பகுதி உட்பட... ஒரிரு இடங்களில் கன மழை வரை இருக்கும்.

தமிழகத்தில் Oct 18 முதல் ஏறத்தாழ 23/24வரை மாலை,இரவு வெப்பசலன மழை இருக்கும்... நம் கொங்கு பகுதி உட்பட.

இதனால் வெங்காயம், நிலக்கடலை போன்ற அறுவடை விவசாய்கள் கவனமாக இருக்கவும்... ஏறக்குறைய கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு மழை தொடருவதால் அறுவடை விவசாய்கள் சிரமத்தில் உள்ளனர்.

கடந்த பதிவில் சொன்னது போல் வடக்கு வங்ககடலில் வலுவான சிஸ்டத்திற்கு கடல் வெப்பநிலை சாதகமாக இருப்பதால் வரும் நாட்களில் அந்தமான் அருகே புதிய சிஸ்டம் உருவாகி வடக்கு நோக்கி நகர்ந்து வலுவான சிஸ்டமாக உருவாகி வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு வங்ககடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலையை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது... அதன் பின்பு தான் வங்க கடலில் சிஸ்டம் உருவாகி தமிழகத்தை நோக்கி நவம்பரில் முதல் வாரம் வாக்கில் நகரலாம்... இதற்கு இன்னும் நாட்கள் இருப்பதால் ஏதாவது மாற்றம் இருந்தால் இடையில் பதிவிடப்படும்..

இன்றும்,நாளையும் பரவலாக மழை தொடரும் ....எதிர்பார்த்தவாறு பரந்த சுழற்சி மெல்ல நகர்வதால் ...இன்று பரந்த சுழற்சி யாகவே மெல்...
15/10/2024

இன்றும்,நாளையும் பரவலாக மழை தொடரும் ....

எதிர்பார்த்தவாறு பரந்த சுழற்சி மெல்ல நகர்வதால் ...இன்று பரந்த சுழற்சி யாகவே மெல்ல வடக்கு நகர்கிறது... இதனால் டெல்டா, கடலோர பகுதிகளில் பரவலாக நல்ல மழை இருந்தது...

எப்போதும் வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும் சுழற்சி கொங்கு பகுதிக்கு சாதகமாகவே அமையாது. லேசான/மிதமான மழையாகத்தான் பெய்யும்...ஆனால் இந்த முறை பரந்த சுழற்சியின் வெளி சுற்றின் வலுவான ஈரப்பதம் கொங்கு பகுதிக்கு சாதகமாகவே அமைகிறது... இதனால்தான் கொங்கு பகுதிக்கு பரவலாக நல்ல மழை இருந்தது...

இன்றும், நாளை ஏறத்தாழ மதியம் வரை வலுவான ஈரப்பதம் கொங்கு பகுதிக்கும் சாதகமாகவே அமைகிறது... நாளை சற்று குறைவாக இருக்கலாம்..

இதனால் இன்றும், நாளை வரை கொங்கு பகுதிகளில் பரவலாக மழை இருக்கும்... ஒருசில இடங்களில் கன மழையும், ஒரிரு இடங்களில் மிக கன மழை வரை இருக்கலாம்..... மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கன மழை வரை இருக்கும்...இதனால் அணைகளுக்கு நீர்வரத்து மிதமானளவில் இருக்கும்.. நிகழ்நேரத்தில் பார்ப்போம்.

கொங்கு பகுதிகளில் வறட்சியிலிருந்த/மழை கடுமையாக ஒதுக்கிய பகுதிகளிலும் நல்ல மழை பதிவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.....

நாளை இந்த பரந்த இரு சுழற்சியும் வலுப்பெற்றும் வட மாவட்டங்களில் மழை தீவிரமடையும்..

Oct 17,18 முதல் மழை குறைந்து ஒருசில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. அதன்பிறகு இடையில் மிதமான ஈரப்பதம் கிடைத்து தமிழகத்தில் சில இடங்களில் மழை இருக்கலாம்..அதை வரும் நாட்களில் பார்ப்போம்.

நிகழ்நேர வானிலை பதிவு:தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியிருக்கும் பரந்த மழை தரும் சுழற்சி/தாழ்வுநிலை காரணமாக டெல்டா மற்றும...
14/10/2024

நிகழ்நேர வானிலை பதிவு:

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியிருக்கும் பரந்த மழை தரும் சுழற்சி/தாழ்வுநிலை காரணமாக டெல்டா மற்றும் வட மாவட்டத்தை ஒட்டிய கடலோர பகுதிகளில் பரவலாக மழை பதிவாகிறது... மேக உற்பத்தி அபரிமிதமாக உள்ளது...இதனால் சில,பல இடங்கள் வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம்.. ஒரிரு இடங்களில் தீவிர மழைப்பொழிவு இருக்கலாம்..

நம் கொங்கு பகுதியை பொருத்த வரை மதியம், மாலை முதல் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது... கொங்கு பகுதிகளில் தற்போது 6.00pm சற்று பரவலான மழை பதிவாகிறது ... கோவை, கரூர், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன மழை பதிவாகி வருகிறது... இவை கொங்கு பகுதியில் இரவு இன்னும் சற்று பரவி பெய்ய வாய்ப்புள்ளது...

கடும் வறட்சியிலிருந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வருகிறது... இதேபோலவே மழை குறைவாக இருக்கும் மத்திய மாவட்டங்கள், காங்கேயம், சென்னிமலை சுற்று வட்டாரம், திருப்பூர் மாவட்ட வடக்கு, ஈரோடு மாவட்டம் போன்ற இன்னும் மழை மிகவும் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கும் வரும் மழைக்காலங்களில் நல்ல மழை கிடைக்கும்

உங்கள் பகுதியின் மழை நிலவரங்களை பதிவிடுங்கள்...

நேற்றுடன் விடைப்பெற்ற புரட்டாசிகால மழை..இன்றே தொடங்கிய வடகிழக்கு பருவமழை...புரட்டாசிகால மழை தாமதமாக தொடங்கி முன்கூட்டியே...
14/10/2024

நேற்றுடன் விடைப்பெற்ற புரட்டாசிகால மழை..

இன்றே தொடங்கிய வடகிழக்கு பருவமழை...

புரட்டாசிகால மழை தாமதமாக தொடங்கி முன்கூட்டியே விடைபெறுவதால் கொங்கு பகுதிகளில் குறுகிய நாட்களில் ஒரளவிற்கு பரவலாக நல்ல மழை கிடைத்தாலும் பல இடங்களில் சொல்லும்படியாக மழையே இல்லை... புரட்டாசிகால மழை குறைவாக பெய்த இடங்களில் மழைக்காரணிகள் சாதகமாகவே உள்ளதால் பருவமழை சமன்செய்யும் என்று நம்பிக்கையுள்ளது...

கடலோர பகுதிகளுக்கு Oct 15-20க்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என்று எதிர்பார்த்தோம்.. கொங்கு பகுதிக்கும், தென் மாவட்டங்களுக்கும் Oct 20அல்லது அதற்கு மேல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவமழையானது முன்கூட்டியே இன்றே (14.10.24) தொடங்கியது..

இதனால் டெல்டா, வட மாவட்டங்கள் மற்றும் வட உள்மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை கிடைக்கும்... பரந்த சுழற்சி மற்றும் அதற்கேற்றார்போல MJO, மேற்கத்திய இடையூறு சிஸ்டத்தின் நகர்வின் வேகத்தை குறைத்தல் போன்ற சிறப்பான மழைக்காரணிகளால் பரந்த சுழற்சி வலுப்பெற்று சென்னைக்கும் நெல்லூருக்கு இடையே சென்னையை ஒட்டி கரையை கடந்து வடமாவட்டங்களில்(சென்னை உள்பட) oct 14-18வரை சில இடங்களில் கன மழையும், ஒருசில/ஒரிரு இடங்களில் மிக கன மழை வரை இருக்கலாம்... சென்னை போன்ற வடமாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும்..கவனம் தேவை..

கொங்கு பகுதிகள், தென் மாவட்டங்களில் oct 16வரை லேசான மழையாகவும், சில இடங்களில் மிதமான மழையாக இருக்கும்.. கன மழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது...ஒருவேளை காற்று குவிதல் ஏற்படின் ஒரிரு இடங்களில் கன மழை இருக்கலாம்..

சேலம், தருமபுரி,கிருஷ்ண கிரி,ஈரோடு வடக்கு போன்ற வடக்கு, வடகிழக்கு கொங்கு பகுதிகளில் oct 17,18வரை இருக்கலாம்...ஒரிரு இடங்களில் கன மழை இருக்கலாம்

வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் கடல்மேற்பரப்பு வெப்பநிலை உயர்வு வலுவான சிஸ்டத்திற்கு சாதகமாக இருப்பதால் இன்னும் ஒரு சிஸ்டமாவது வடக்கு( வட தமிகம் /ஆந்திரா/ஒடிசா) நோக்கி நகர்ந்த பிறகு வடக்கு, மத்திய வங்ககடலில் வெப்பநிலை குறைந்த பிறகு தான் தென் மாவட்டம் மற்றும் கொங்கு பகுதிக்கு சாதகமாக சிஸ்டம் உருவாலாம்...

இதனால் இந்த முதல் சுற்று வடகிழக்கு பருவமழைக்கு பிறகு கொங்கு பகுதி, தென் மாவட்டங்களுக்கு மழை இடை வெளி சற்று நீண்ட இடைவெளி இருக்கலாம் ... இதைபயன்படுத்தி விவசாய்கள் oct 17,18 முதல் வெங்காயம், நிலக்கடலை போன்ற அறுவடை பணிகளை தீவிரப்படுத்தலாம்... இடையில் மழைக்கான சூழல் உருவானால் பதிவிடப்படும்...

இது பருவ மழை அல்ல புரட்டாசிகால மழை...டெல்டா ஒட்டி நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக Oct 15,16 வரை கொங்கு பகுதி, மத்திய ம...
12/10/2024

இது பருவ மழை அல்ல புரட்டாசிகால மழை...

டெல்டா ஒட்டி நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக Oct 15,16 வரை கொங்கு பகுதி, மத்திய மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை இருக்கும்.... சமயத்தில் பரவலான மழை இருக்கும்... ஒருசில சில இடங்களில் கன மழை வரை இருக்கும்.... Oct 15,16 வடக்கு கொங்கு பகுதிகளில் மழை இருக்கலாம் உறுதியல்ல... இதுதான் இறுதி சுற்று புரட்டாசிகால மழையாக இருக்கலாம்.. இடையில் வாய்ப்பு இருந்தால் பதிவிடப்படும்..

Oct 17 முதல் ஒரிரு/ஒருசில நாட்களுக்கு வறண்ட காற்று நுழையும் என்பதால் ஒரிரு/ஒருசில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்... இதை பயன்படுத்தி விவசாய்கள் நிலக்கடலை, வெங்காயம் போன்ற அறுவடை பணிகளை தீவிரப்படுத்தலாம்..

வடகிழக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கொங்கு பகுதிகளில் ஒரளவிற்கு பரவலான நல்ல மழை பெய்தது..சில இடங்களை தவிர... ஆனால் வடக்கு மத்திய, வடக்கு கொங்கு பகுதிதான் பரவலான மழை இல்லை...

வடகிழக்கு பருவமழையானது Oct 20 வாக்கில் அல்லது அதற்கு மேல் தொடங்க சாதகமான சூழல் உருவாலாம்...

09/10/2024

தெற்கு கொங்கு பகுதி, கோவை தெற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வறட்சியில் வாடிய பொள்ளச்சி பரவலான மழை. உங்கள் பகுதியின் மழை நிலவரங்கள்.

தெற்கு கொங்கு பகுதியில் உருவான வலுவான பரந்த மேகங்கள் வடக்கு/வடகிழக்கு கொங்கு பகுதியை நோக்கி நகர்கிறது.... இன்னும் பரவி ப...
08/10/2024

தெற்கு கொங்கு பகுதியில் உருவான வலுவான பரந்த மேகங்கள் வடக்கு/வடகிழக்கு கொங்கு பகுதியை நோக்கி நகர்கிறது.... இன்னும் பரவி பெய்ய வாய்ப்புள்ளதுங்க...

ஒருசில இடங்களில் கன மழை வரையும், ஒரிரு இடங்களில் மிக கன மழை வரை இருக்கலாம்..

உங்கள் பகுதியின் மழை நிலவரங்களை பதிவிடுங்கள் நண்பர்களே...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kongunadu Weatherman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share