Tiruppurinfo

Tiruppurinfo நம் திருப்பூர் மாவட்டம் சார்ந்த செய்திகள் மற்றும் பல தகவல்களை காண நமது Tiruppurinfo-வை லைக் செய்யவும்

08/06/2022
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 🌅💐
08/06/2022

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 🌅💐

மாதந்தோறும் 1000 ரூபாய் மாணவியர் விவரம் சேகரிப்பு
07/06/2022

மாதந்தோறும் 1000 ரூபாய் மாணவியர் விவரம் சேகரிப்பு

  பல்லடம் உட்கோட்டம் பல்லடம் காவல் எல்லைக்குட்பட்ட காரணம்பேட்டை to கோயம்புத்தூர் செல்லும் சாலையில் பழுதான சிக்னலை பல்லடம...
02/01/2022


பல்லடம் உட்கோட்டம் பல்லடம் காவல் எல்லைக்குட்பட்ட காரணம்பேட்டை to கோயம்புத்தூர் செல்லும் சாலையில் பழுதான சிக்னலை பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களால் சரி செய்யப்பட்டது.

2022 supur
02/01/2022

2022 supur

31/12/2021

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (30.12.2021) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்ட...
30/12/2021

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (30.12.2021) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (29.12.2021) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்ட...
29/12/2021

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (29.12.2021) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

29/12/2021

முக்கிய நிகழ்வுகள் :-

👉 1949ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர், சையத் கிர்மானி சென்னையில் பிறந்தார்.

👉 1993ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி உலகின் மிகப்பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது.

பிறந்த நாள் :-

ராஜேஷ் கன்னா
🌟 இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா.

🌟 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்து 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தை பெற்றார்.

🌟 இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகினர் இவரை 'இந்தித் திரையுலகின் சிவாஜி' என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்பு நண்பரானார்.

🌟 இவர் மூன்று முறை சிறந்த நடிகருக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மேலும் 2005ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 1990-களில் சினிமாவை விட்டு விலகி, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார்.

🌟 இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 69-வது வயதில் (2012) மறைந்தார். இவரின் மறைவுக்குப் பிறகு, பத்ம பூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

குவெம்பு
✍ இந்திய எழுத்தாளர் கே.வி.புட்டப்பா என்று பரவலாக அறியப்படும் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா 1904ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார்.

✍ 20ஆம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். புட்டப்பா தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்.

✍ இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தரிசனம் என்று எழுதியுள்ளார். கர்நாடக மாநில நாட்டுப்பண்ணான ஜெய பாரத ஜனனீய தனுஜாதே இவர் எழுதியதாகும்.

✍ இவர் பத்ம பூஷண், பத்மவி பூஷண், சாகித்திய அகாடமி விருது, ஞானபீட விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இராஷ்ட்ரகவி என்று பாராட்டப்பட்ட இவர் தன்னுடைய 89வது வயதில் (1994) மறைந்தார்.

29/12/2021

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முத்து.

விளக்கம்: அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்து போய்விடும்.

அழகான காலை பணிவுகள்.

திருப்பூர்:வஞ்சிப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.இது குறித்து சோமனூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சே.செ...
28/12/2021

திருப்பூர்:

வஞ்சிப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.இது குறித்து சோமனூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சே.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வஞ்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை வஞ்சிபாளையம், வெங்கமேடு, சாமந்தான் கோட்டை, செம்மாண்டாம்பாளையம், கோதபாளையம், காவிளிபாளையம், 15 வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வலையபாளையம், அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம்புதூர், முருகம்பாளையம், சோழிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைசெய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

21/12/2021

முக்கிய நிகழ்வுகள் :-

👉 1913ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி உலகின் முதல் குறுக்கெழுத்துப் போட்டி நியூயார்க் வேர்ல்ட் பத்திரிக்கையில் வெளியானது.

👉 1968ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச்சென்ற விண்கலமான அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.

பிறந்த நாள் :-

யு.ஆர்.அனந்தமூர்த்தி
✍ தமிழ் மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்ட கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி அடுத்த மெலிகே கிராமத்தில் பிறந்தார்.

✍ 1970ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியில் சேர்ந்து, 17 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். இவர் கோழிக்கோடு மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தராகவும், கர்நாடக மத்திய பல்கலைக்கழக வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

✍ இவர் ஆரம்பத்தில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார். சாகித்ய அகாடமி தலைவராக 1993ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

✍ இவர் எழுதிய 'சம்ஸ்காரா', 'பவா', 'திவ்யா', 'அவஸ்தே', 'மௌனி' உள்ளிட்ட பல படைப்புகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதி வந்த கட்டுரைகள் 8 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

✍ இவர் 'தமிழ் தனித்துவம் வாய்ந்தது, தமிழரின் கலாச்சார வேர்கள் வலிமையானவை' என்பார். குழந்தைகளுக்குப் பள்ளியில் பயிற்று மொழியாகத் தாய்மொழி இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியவர்.

✍ இவர் 1994ஆம் ஆண்டு ஞானபீட விருது பெற்றார். ராஜ்யோத்சவா, பத்மபூஷண் விருது மற்றும் இலக்கிய சாதனைக்காக பல முக்கிய விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.

✍ 2011ஆம் ஆண்டு இவரது 'பாரதிபுரா' படைப்பு 'தி இந்து' இலக்கியப் பரிசுக்காகவும், 2013ஆம் ஆண்டு இவரது பெயர் புக்கர் பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது.

✍ உலக அளவில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளரான யு.ஆர்.அனந்தமூர்த்தி தன்னுடைய 81-வது வயதில் (2014) மறைந்தார்.

என்ன அழகு ... பசுமையில் கண் குளிர்கிறது அடுத்த தலைமுறைக்கு ஏதவது செய்யனும்னா பனைமரம் வைத்து வளர்க்கலாம்...!
17/12/2021

என்ன அழகு ... பசுமையில் கண் குளிர்கிறது அடுத்த தலைமுறைக்கு ஏதவது செய்யனும்னா பனைமரம் வைத்து வளர்க்கலாம்...!

தந்தை நினைவு தினம் "நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க தடை" வடகொரியா} நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது,...
17/12/2021

தந்தை நினைவு தினம் "நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க தடை" வடகொரியா}

நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வடகொரியா நாட்டை கடந்த 1948-ம் ஆண்டு கிம் இல் சங் என்பவர் நிறுவினார். 1994 ஆம் ஆண்டு இறந்த இவர் தன்னுடைய கடைசி காலம் வரை வடகொரிய நாட்டை ஆண்டார்.1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவர் வடகொரியாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு இயற்கை எய்தினார். அதைத் தொடர்ந்து, இவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இவரது தலைமையில் வடகொரியா பல அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. அது மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு வடகொரியாவுடன் பனிப்போர் நிகழ்கிறது.

இந்த நிலையில் தற்போது வடகொரியாவில் இருந்து தற்போது அடுத்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி இருக்கிறது. வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களின் தந்தை கிம் ஜோங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார்.

இதனால் வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த காலத்தில், துக்க காலத்தில் குடித்துவிட்டுபோதையில் பிடிபட்ட பலர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட யாரும் இதுவரை திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.

கிம் ஜோங் இல் இறந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த துக்கம் 10 நாட்களுக்கு கடைபிடிக்கபடும். ஆனால் இது கிம் ஜோங் இல் இறந்து 10 - வது நினைவு ஆண்டு என்பதால் இந்த ஆண்டு 11 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த துக்க அனுசரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பூண்டிரிங் ரோடு ESI மருத்துவமனை கட்ட வேலைகள் ஆரம்பம். கட்டிடம் கட்டுவதற்க்கு 14/12/2021 அன்று பாலக்கால் பூஜை ...
16/12/2021

திருப்பூர் பூண்டிரிங் ரோடு ESI மருத்துவமனை கட்ட வேலைகள் ஆரம்பம். கட்டிடம் கட்டுவதற்க்கு 14/12/2021 அன்று பாலக்கால் பூஜை போடப்பட்டது.
- PK செல்வகுமார்.

சுப்பிரமணிய பாரதியார்🌹 தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்...
11/12/2021

சுப்பிரமணிய பாரதியார்
🌹 தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன்.

🌹 இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்று திகழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகம் இவரை மீசை கவிஞன் என்றும், முண்டாசு கவிஞன் என்றும் போற்றுகிறது.

🌹 இவர் 1912ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற புகழ்பெற்ற காவியங்கள் பாரதியாரால் எழுதப்பட்டவை.

🌹 ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிப்படுத்திய மகாகவி தன்னுடைய 38வது வயதில் (1921) மறைந்தார்.

🅞🅝 🅣🅗🅘🅢 🅓🅐🅨சர்வதேச மலைகள் தினம்🌷 மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவ...
11/12/2021

🅞🅝 🅣🅗🅘🅢 🅓🅐🅨
சர்வதேச மலைகள் தினம்
🌷 மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டு மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு இத்தினத்தை உருவாக்கியது. இவ்வமைப்பின் முயற்சியால் ஐ.நா.சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதியை சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது.
Ⓣⓘⓡⓤⓟⓟⓤⓡⓘⓝⓕⓞ

 திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (10.12.2021) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்...
10/12/2021


திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (10.12.2021) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

Salute to the brave sons of Mother India 🙏🙏🙏
09/12/2021

Salute to the brave sons of Mother India 🙏🙏🙏

Address

Tirupur

Telephone

+919360435079

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tiruppurinfo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tiruppurinfo:

Videos

Share