12/01/2021
சர்க்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது..
சர்க்கரை நோயை வைத்து
இந்தியாவில் மட்டுமே
*700 மருந்து நிறுவனங்கள்* (கம்பெனிகள்) ஆண்டுக்குப் *பல இலட்சம் கோடி ரூபாய்களை* அள்ளிச் செல்கின்றனர்.
இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும் ;
வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும் வீறுநடை போடும்.
இதற்கான
*அரு மருந்து நம்மிடமே உள்ளது.*
சர்க்கரை நோய்க்குக் காரணம் *இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;*
ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?
*உமிழ்நீர் தான்.*
சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்போம்.
*உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,*
கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் *இயற்கை மருந்து.*
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.
வாழ்வதற்காக உண்டனர்.
அதனால்தான் பொறுமையுடனும்
அமைதியுடனும்
பொறுப்புடனும் உணவருந்தினர்.
அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.
கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.
அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்
உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்
நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*
நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.
தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது.
நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.
உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,
சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,
அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.
நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.
உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.
நாளடைவில் அது *சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.
சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.
எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்.
நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்.