Thiruppathur News

Thiruppathur News திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள திருப்பத்தூர் நியூஸ்.

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 20
20/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 20

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 19
19/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 19

18/11/2023

முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சி

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 18
18/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 18

பொது விநியோகத்திட்டத்தின் கீழ்  நாளை (18.11.2023) சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேஷன்...
17/11/2023

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் நாளை (18.11.2023)
சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல்.

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் சனிக்கிழமை நாளைய தினம் (18.11.2023) காலை 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம்> புதிய குடும்ப அட்டை/நகலட்டை கோரியும் கைப்பேசி எண் பதிவு/மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டும், தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 17
17/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 17

16/11/2023

ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில்திருக்குட நன்னீராட்டு பெருவிழா. ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

மழைக் காலங்களில் மின்விபத்து ஏற்படுவதை தவிர்க்க தகவல் தரவேண்டிய மின் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மின்வாரியத்தால் வழங்கப...
16/11/2023

மழைக் காலங்களில் மின்விபத்து ஏற்படுவதை தவிர்க்க தகவல் தரவேண்டிய மின் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மின்வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 13 பகுதிகளுக்கு அலுவலர் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன கீழ்க்கண்டவாறு

திருப்புத்துார் - எம்.ஜான் எப் கென்னடி, செயற்பொறியாளர் - 94458 53131

சிங்கம்புணரி - ஆர்.சாத்தப்பன், உதவி செயற்பொறியாளர் - 94458 53117

காரைக்குடி - எம்.லதாதேவி, செயற்பொறியாளர் - 94458 53090

காரைக்குடி நகர் - உ.கணேசன், உதவி செயற்பொறியாளர் - 94458 53084

தேவகோட்டை - எம்.ஜோசப் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் - 94458 53086

கானாடுகாத்தான், கண்டரமாணிக்கம், புதுவயல், கல்லல் - பி.புவனேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் - 94458 53085

சிவகங்கை - கே.முருகையன், செயற்பொறியாளர் - 94458 53080

சிவகங்கை, மதகுபட்டி - டி.தேன்மொழி, உதவி செயற்பொறியாளர் - 94458 53074

காளையார்கோவில் - எஸ்.அன்புநாதன், உதவி செயற்பொறியாளர் - 94458 53078

மானாமதுரை - பி.ஜான்சன், செயற்பொறியாளர் - 94458 53111

மானாமதுரை, திருப்பாச்சேத்தி - எஸ்.சவுந்திரபாண்டி, உதவி செயற்பொறியாளர்
- 94458 53101

இளையான்குடி - சொர்ணப்பா, உதவி செயற்பொறியாளர் - 94458 53103

திருப்புவனம் - பி.ஆர்.உலகப்பன், உதவி செயற்பொறியாளர் - 94458 53102

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 16
16/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 16

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற உலக மூத்தோர் தடகளப் போட்டி பிரிவுகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்கம்புணரியை சேர்...
15/11/2023

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற உலக மூத்தோர் தடகளப் போட்டி பிரிவுகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்கம்புணரியை சேர்ந்த 84 வயது முதியவர் கோவிந்தனுக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கம்புணரி அருகே செல்லியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(84). இவர் 80 முதல் 85 வயதோருக்கான மூத்தோர் தடகளப் போட்டியில் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றுள்ளார். கடந்த வாரம் பிலிப்பைன்சில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டு இந்தியா சார்பில் கலந்து கொண்டார். இதில் 10 ஆயிரம் மீ ஒட்டப்பந்தயத்தில் 2 ஆம் பரிசான வெள்ளிப்பதக்கத்தையும், 1500 மீ ஒட்டப்பந்தயத்தில் 3 ஆம் பரிசான வெண்கலப்பதக்கத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். சிங்கம்புணரி வந்த கோவிந்தனுக்கு சிங்கம்புணரி மக்கள் மற்றும் செல்லியம்பட்டி கிராமத்தார்கள் மாலையணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றுப் பாராட்டினர். இவருடைய பிலிப்பைன்ஸ் பயணச் செலவை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஏற்றுக் கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்   ஊராட்சி ஒன்றியக்குழு மாதாந்திரக்கூட்டம் நடைபெற்றது.       ...
15/11/2023

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு மாதாந்திரக்கூட்டம் நடைபெற்றது.

அலுவலகமன்ற அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் சோ.சண்முகவடிவேல் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்பிரகாசம், பர்ணபாஸ் அந்தோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய அளவிலான வளர்ச்சிப்பணிகள் திட்ட ஆய்வுகள் வரவு செலவுகள் குறித்து அறிக்கை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல் கிராமங்களுக்கான தார்ச்சாலை பணிகள் தேர்வு நடைபெற உள்ளது. பணிகள் தேவைப்படும் ஒன்றிய கவுன்சிலர்கள் கிராமங்களை தேர்வு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் வேளாண்மைத்துறை அலுவலர் தனலெட்சுமி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்தும் 50 சதவிகித மானியத்துடன் வேளாண்மைக்கருவிகள் வழங்குதல், இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுதல், குறித்தும் பேசினார். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவரித்தனர். தொடர்ந்து பேசிய வார்டு உறுப்பினர் கா.ராமசாமி, வேலங்குடி பள்ளிக்கட்டடம் சேதமுற்று இருப்பதால் சரிசெய்திடவும், மழைக்காலம் என்பதால் சாலை மேம்பாட்டுக் கொள்ளவும் கேட்டுக்கொண்டார். உறுப்பினர் நா.சகாதேவன், கிராமங்களில் கால்நடைத்துறை சார்பில் கால்நடை முகாம் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டார். கூட்டத்தி்ல ் ஒன்றியக்குழு துணைத் தலைவர் மீனாள்வெள்ளைச்சாமி, வார்டு உறுப்பினர்கள் சு.கருப்பையா, இரா.கலைமாமணி, கா.ராமசாமி, கா.பழனியப்பன், சே.கலைமகள் ராமசாமி, ப.பாக்கியலெட்சுமி, நா.சகாதேவன், க.ராமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் மேலாளர் சேதுராமன் நன்றி கூறினார்.

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 15
15/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 15

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 14
14/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 14

திருப்பத்தூர் காளியம்மன் கோயில் அருகே உள்ள ஶ்ரீ முருகன் திருக்கோயிலின் 8 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா  துவங்கியது.ஶ்ரீ முரு...
13/11/2023

திருப்பத்தூர் காளியம்மன் கோயில் அருகே உள்ள ஶ்ரீ முருகன் திருக்கோயிலின் 8 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா துவங்கியது.

ஶ்ரீ முருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாத் துவக்க நாளான திங்கள்கிழமை வள்ளி தெய்வானை சமேத மூலவருக்கும், உற்சவருக்கும் ஓரே நேரத்தில் பால், தயிர், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.18.11.23 சனிக்கிழமை சூரசம்ஹார நிகழ்வும் 7 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவமும் அன்று இரவு உற்சவர் முருகன் தேவியருடன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. கந்த சஷ்டி விழா நடைபெறும் 6 நாட்களும் ஆன்மீகச் சொற்பொழிவும், பக்திப் பாடல்களும், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஶ்ரீ முருகன் திருக்கோயில் கந்தசஷ்டி விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

13/11/2023

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கண்மாய் பகுதியில் சிதைவுற்ற நிலையில் ஆணின் சடலம் மீ்ட்பு. போலீசார் விசாரணை.

சிங்கம்புணரியில் சிறுவர்கள்  டிபன் பாக்ஸில் பட்டாசை வைத்து வெடித்ததில் மூதாட்டியின் மேல் பட்டு பலியானார்.               ...
13/11/2023

சிங்கம்புணரியில் சிறுவர்கள் டிபன் பாக்ஸில் பட்டாசை வைத்து வெடித்ததில் மூதாட்டியின் மேல் பட்டு பலியானார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கக்கன் நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி முதல்நாள் இரவு சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து விளையாடியுள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் மீனாட்சி அம்மாளின் பேரனும் வெடிகளை வைத்து வெடித்து விளையாடியுள்ளான். அப்போது பெரிய வெடிகள் இரண்டை ஒன்றாக இணைத்து அதன் மேல் டிபன்பாக்சை மூடி வெடியைப் பற்ற வைத்துள்ளான். வெடி வெடித்ததில் டிபன் பாக்ஸ் சிதறி பாட்டி மீனாட்சியின்(80). முழங்கால் நரம்பில் பட்டு ரத்தம் பீறிட்டது. அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து சிங்கம்புணரி போலிசார் விசாரித்து வருகின்றனர். சிறுவர்களின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகே மாத்தூர் ஊராட்சியில் உள்ள தெக்கூரணி பகுதியில் சென்றவர்களை கதண்டு வண்டு கொட்டியதில...
13/11/2023

சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகே மாத்தூர் ஊராட்சியில் உள்ள தெக்கூரணி பகுதியில் சென்றவர்களை கதண்டு வண்டு கொட்டியதில், இரண்டு சிறுவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூரை அடுத்த எஸ்.எஸ்.கோட்டையை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு வருணேஸ்வரன் என்ற மகனும் தெய்வராணி என்ற மகளும் உள்ளனர். இருவரும் சைக்கிளில் மாத்தூர் தெக்கூரணி அருகே சென்று கொண்டிருந்த பொழுது புளிய மரத்தில் இருந்த கதண்டு வண்டு திடீரென கிளம்பி இருவரையும் தாக்க தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு ஓடிய சிறுவர்கள் அருகில் இருந்த குளத்தில் குதித்துள்ளனர். ஆனால் கதண்டு தண்ணீரின் மேலே சுற்றி அவர்களை தாக்கியுள்ளது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் குளத்தில் மூழ்கியதையடுத்து அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் மக்களே. உங்கள் மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் அல்லது வீடியோவை கமெண்டில் பக...
12/11/2023

உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் மக்களே. உங்கள் மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் அல்லது வீடியோவை கமெண்டில் பகிரலாம்.

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 12
12/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 12

அனைவருக்கும் திருப்பத்தூர் நியூஸ் சேனலின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
11/11/2023

அனைவருக்கும் திருப்பத்தூர் நியூஸ் சேனலின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் எனது இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்புடன், துவார் ஜி. சந்திரசேகர், தொழிலதிபர், சிங்கப்பூர்.
11/11/2023

அனைவருக்கும் எனது இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புடன்,
துவார் ஜி. சந்திரசேகர், தொழிலதிபர், சிங்கப்பூர்.

பறவைகளுக்காக வெடி வெடிக்காத கிராமங்களான திருப்பத்தூர்  அருகே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுகுடிப்பட்டி வேட்டங்குடிப்...
11/11/2023

பறவைகளுக்காக வெடி வெடிக்காத கிராமங்களான திருப்பத்தூர் அருகே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுகுடிப்பட்டி வேட்டங்குடிப்பட்டி கிராம மக்களுக்கு வனத்துறையினர் இனிப்பு வழங்கினர்.

திருப்பத்தூர் வட்டம் ஏ.மேலையூர் அய்யாபட்டி ஊராட்சியில் அமைந்துள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமங்களில் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவு 38.426 ஹெக்டேர். பெரிய கொள்ளுகுடிபட்டி கண்மாய் 13.66 ஹெக்டேரிலும் சின்னக்கொள்ளுக்குடிபட்டி கண்மாய் 6.351 ஹெக்டேரிலும் வேட்டங்குடிகண்மாய் 16.415 ஹெக்டேரிலும் உள்ளட்டக்கியது இச்சரணாயலம். தீபாவளி என்றாலே அனைவரும் வெடிவெடிப்பது தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இச்சரணாலயம் அருகே அமைந்துள்ள இக்கிராம மக்கள் தங்களை நம்பி வாழ வந்திருக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு்ப் பறவைகளுக்கு எந்தவிதமான தொந்தரவு தரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஒற்றுமையுடன் ஓலி இல்லாத தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். இவர்களின் மனிதாபிமான செயல்களைப் பாராட்டி சுமார் 200 குடும்பங்களுக்கு மாவட்ட வன அலுவலர் செ.பிரபா இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜி.வி.கோபிநாத், வனச்சரக அலுவலர்கள் கார்த்திகேயன்,சுபாஷ், வனவர்கள் பிரவீன்ராஜ், உதயகுமார், சக்திவேல், மற்றும் பசுமைபாரதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 11
11/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 11

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவாலாயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.                      குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு...
10/11/2023

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவாலாயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்ட சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழாவை முன்னிட்டு மாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் திருத்தளிநாதர் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமாக பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீர், சொர்ணம், பன்னீர், உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது அதே நேரத்தில் திருத்தளிநாதருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து .சிவனுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் பிரகாரத்தை பக்தர்களின் ஹரஹர சங்கர கோஷத்துடன் மும்முறை வலம் வந்தார் இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெண்கள் நெய்விளக்கேற்றி சிவனை வழிபட்டனர். சீதளிமேல்கரையில் உள்ள ஆதித்திருத்தளிநாதர் ஆலயத்திலும் நந்தீஸ்வரருக்கும் சிவனுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்திலும் கல்வெட்டுப் பகுதிில் உள்ள கல்வெட்டு நாதர் கோயிலிலும் பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். விழா முடிவில் பிரதோஷக் குழுவினரால் பிரசாதம் வழங்கபட்டது.

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 10
10/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 10

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 9
09/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 9

08/11/2023

மழைத் தண்ணீரால் சூழப்பட்டுள்ள அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் அச்சம்

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 8
08/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 8

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 7
07/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 7

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் 4 இடங்களை பிடித்த மாணவ மாணவிகள...
06/11/2023

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் 4 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும், நீட் தேர்வில் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கும் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் சுவரன் மாறன் பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளையின் சார்பாக 10-ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில், பள்ளி அளவில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் எஸ்.புதூர் ஒன்றியம், கிழவயல் கிராமத்தில் இந்த பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. சுவரன் மாறன் பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம் ஆலோசனையின் பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக துரோணா ஐஏஎஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் பாலகுருநாதன், பட்டிமன்ற நடுவர் சாத்தை மு.பாரதிதாசன், சிங்கம்புணரி லயன்ஸ் கண்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் தஞ்சாவூர் மாரிமுத்து, மாணவி ஹேமா நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கிய விழாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் நான்கு இடங்களை பிடித்த, 8 மாணவ மாணவிகளுக்கு கேடயம், விருதுகள், புத்தகம், பதக்கம் மற்றும் பரிசுதாெகை வழங்கி அறக்கட்டளை நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் 23 மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கி பாராட்டி னர். அதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்த உலகம்பட்டியைச் சேர்ந்த அன்னபூரணி என்ற மாணவிக்கு ரூபாய் 34,500 அறக்கட்டளையின் சார்பாக வழங்கி, பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நன்னி, ஜல்லிக்கட்டு பேரவை ராஜா, கிழவயல் கருப்பன் பூசாரி, கரகம் மாடி கருப்பையா, ஜல்லிக்கட்டு ஆர்வலர் சிவானந்தம், கிழவயல் ஊராட்சி மன்ற தலைவர் அருண் பிரசாத், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிங்காரம், கிழவயல் ஊராட்சி மன்ற செயலர் சித்ரா, கே.புதுப்பட்டி நாட்டு அம்பலம் திருப்பதி, நல்லவன்பட்டி ராசு, மாணிக்கம், பழனிச்சாமி, பெரியசாமி, குமார் பூசாரி மற்றும் ஊர் பொதுமக்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் அழகு, காளைலிங்கம், ஜெயமங்களம் சுப்பையா, லதா மாதவன், சட்ட ஆலோசகர் ரமேஷ், பூமிநாதன், அர்ச்சுணன், பூலாங்குறிச்சி சின்னையா, மாதவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கல்வி அறக்கட்டளையின் துணைப் பொருளாளர், கத்தாளம்பட்டு குருசாமிகுமார் நன்றி உரை யாற்றினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்  மருதுபாண்டியர்களின் நினைவு நாளையொட்டி அவர்களது வரலாறு கூறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது...
06/11/2023

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு நாளையொட்டி அவர்களது வரலாறு கூறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழக மக்கள் ஜனநாயககட்சி மே பதினேழு இயக்கம் சார்பில் இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு முதல் வித்திட்ட சிவகங்கையை ஆண்ட மன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றினை நினைவுகூறும் வகையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திற்கு தமிழக மக்கள் ஜனநாயககட்சித் தலைவர் கே.எம்.ஷரீப் தலைமை வகித்தார். வாரிசுதாரர் ராமசாமி முன்னிலை வகித்தார்.‌ ஓவியர் புருஷோத்தமன் நோக்கவுரையாற்றினார். இக்கூட்டத்தின் சிறப்பு அழைபபாளராக கலந்து கொண்ட மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மருதுபாண்டியர்களின் வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசினார். மேலும் இக்கூட்டத்தி்ல் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தைஅரசன், ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன், தேவேந்திரகுல மக்கள் முன்னணி எஸ்.ஆர்.பாண்டியன், தமிழக முன்னேற்றக்கழகம் எம்.ராஜ்குமார், வீரகுல அமரன் இயக்கம் முருகன், தமிழர் விடியல்கட்சி இளமாறன், மற்றும் மி.ராசகுமார், ஜூசைன்ஹாசியார், விஸ்டம்கமருதீன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சு.கொண்டல்சாமி தொகுப்புரை வழங்கினார். முன்னதாக மருதுசகோதரர்கள் காட்டிய சாதி, மத பேத மற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருப்பத்தூர் சதக்கத்துல்லா நன்றியுரையாற்றினார்.

திருப்பத்தூரின் சிறந்த ஜுவல்லரிக்கான விருது திருப்பத்தூர் தீன் ஜுவல்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. காரைக்குடியில் நடைப...
06/11/2023

திருப்பத்தூரின் சிறந்த ஜுவல்லரிக்கான விருது
திருப்பத்தூர் தீன் ஜுவல்ஸ் நிறுவனத்திற்கு
வழங்கப்பட்டது. காரைக்குடியில் நடைபெற்ற
விழாவில் இந்த விருதை நடிகர்
பாண்டியராஜன் வழங்க தீன் ஜுவல்ஸ்
உரிமையாளர் திரு. பீர்முகமது பெற்றுக்
கொண்டார்.

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 5
05/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 5

💫ட்ரீம் ஹவுஸ் செராமிக்ஸ் மற்றும் சிஆர். தேஜாஸ்ரீ டிரேடர்ஸ் பெருமையுடன் இணைந்து வழங்கும்💫💥தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்💥   ...
04/11/2023

💫ட்ரீம் ஹவுஸ் செராமிக்ஸ் மற்றும் சிஆர். தேஜாஸ்ரீ டிரேடர்ஸ் பெருமையுடன் இணைந்து வழங்கும்💫

💥தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்💥

⚡நாளை மாலை 4:30 மணிக்கு⚡

✨இடம் : கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் காரைக்குடி✨

அனைவரும் வருக🙏🙏🙏

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 4
04/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 4

03/11/2023

💫ட்ரீம் ஹவுஸ் செராமிக்ஸ் மற்றும் சிஆர். தேஜாஸ்ரீ டிரேடர்ஸ் பெருமையுடன் இணைந்து வழங்கும்💫

💥தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்💥

⚡படப்பிடிப்பு நாள் : 5.11.2023 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4:30 மணி⚡

✨இடம் : கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் காரைக்குடி✨

அனைவரும் வருக🙏🙏🙏

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 3
03/11/2023

திருப்பத்தூர் நியூஸ் இ பேப்பர் நவம்பர் 3

திருப்பத்தூர் பாபா அமீர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  விளையாட்டு விழா நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ...
02/11/2023

திருப்பத்தூர் பாபா அமீர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பாபா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பள்ளி மாணவர்களின் ஓட்டப்பந்தயம், தொடர்ஓட்டம், தடகளப்போட்டி, மற்றும் சிலம்பம், காராத்தே, கலைநுணுக்க வெளிப்பாடு, பிரமிடு போன்ற சாகசநிகழ்ச்சிகள் மாணாக்கர்களால் நடத்திக் கா்ட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பள்ளித்தாளாளர் ஹாஜி அமீர்பாதுஷா தலைமை வகித்தார்.பள்ளியில் அரபிக் துறைத் தலைவர் அபுபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி கலந்து கொண்டு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவி்ல் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் மகரிபா, மற்றும் பள்ளி மாணாக்கர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் வரதராஜன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் பி.சதீஷ்குமார் நன்றி கூறினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை கல்லறைத்திருநாளையொட்டி கல்லறையில் கிறிஸ்துவர்கள் முன்னோர் வழிபாடு நடத்தின...
02/11/2023

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை கல்லறைத்திருநாளையொட்டி கல்லறையில் கிறிஸ்துவர்கள் முன்னோர் வழிபாடு நடத்தினர்.

கிறிஸ்துவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தனது குடும்பத்தில் இறந்த முன்னோர்களை நினைவுபடுத்தும் வகையில் நவ, 2 ஆம் தேதி கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்திருநாளையொட்டி கல்லறையில் கூடிய கிறிஸ்துவர்கள் தனது குடும்பத்தில் முன்னோர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை மேற்கொண்டனர். புனித அமல அன்னை கத்தோலிக்க ஆலய பங்குத்தந்தை அற்புதஅரசு முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய பிரசங்கம் வாசித்தார். தொடர்ந்து அனைவரின் கல்லறைகளிலும் புனிதநீர் ஊற்றி ஜெபம் செய்தார். அதேபோல் சுவிடிஷ்மிஷன் வளாகத்தில் உள்ள கல்லறையிலும் ஜெபம் மற்றும் புனிதநீர் தெளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு முன்னோர் வழிபாடு நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தி்ல்  விஷப்பூச்சி கடித்ததில் தர்ஷன் என்ற பள்ளி மாணவன் உயிர...
02/11/2023

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தி்ல் விஷப்பூச்சி கடித்ததில் தர்ஷன் என்ற பள்ளி மாணவன் உயிரிழப்பு.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாடாடர்மங்கலத்தைச் சேர்ந்த சத்தியசீலன்-லெட்சுமி தம்பதியரின் இளைய மகன் தர்ஷன்.(வயது 14) இவர் கோட்டையிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதிகாலை தாயிடம் கையில் வலி ஏற்படுவதாகக் கூறியுள்ளார். உடன் இவனது சகோதரரும் தாயும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளும் போது வாயில் நுரை தள்ளி இறந்துள்ளார். மருத்துவர்கள் விஷப்பூச்சியின் தீண்டலாக இருக்கக்கூடுமென கூறினர். தகவலறிந்த திருப்பத்தூர்போலிசார் சடலத்தை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Address

Big Bazar Street
Tiruppattur
630211

Telephone

+919790597137

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiruppathur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thiruppathur News:

Videos

Share


Other News & Media Websites in Tiruppattur

Show All