Trichy Today

Trichy Today "DEPTH OF TRICHY"
(1)

25/01/2024

இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி காலமானார்.

| |

‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
31/12/2023

‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!






தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் காலமானார்..
28/12/2023

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் காலமானார்..

திருச்சியில் 4 நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை.ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள 4 கடைகளில் சோதனை.10...
21/11/2023

திருச்சியில் 4 நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை.

ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள 4 கடைகளில் சோதனை.

10க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் 6 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை.

சென்னையில் நேற்று முதல் நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

06/11/2023

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் டால்மியாபுரம் அருகில் உள்ள மேலசூர் கிராமத்தில் பொதுமக்கள் செல்லும் வழியில் மலைப்பாம்பு உலா வருகின்றது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் கவனமாக செல்லவும்..

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்.எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிக...
08/09/2023

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து இன்று காலை திடீரென காலமானார்.

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர் மாரிமுத்து.

இதையடுத்து பரியேறும் பெருமாள் முதல் ஜெயிலர் வரை ஏராளமான படங்களில் குணச்சித்திர நடிகராக கலக்கி வந்த மாரிமுத்து, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானார்.

29/08/2023

ஐந்தருவியில் இன்று மாலை திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

26/08/2023

மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு.

ரயில் விபத்து நடந்த இடத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு நடத்தி வருகிறார்.

25/08/2023

*தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் 20 கடைகள் மேற்பட்ட தீப்பிடித்துள்ளது ஒரு சிலிண்டர் வெடித்து உள்ளது*

*குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான கடைகள் அருவியில் இருந்து வரும் வழியில் தெற்கு வாசல் பகுதியில் தற்காலிக சுமார் 30 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன இக்கடையில் திடீரென்று தீ பற்றி கொண்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம் எனத் தகவல்*


*தீ பற்றிய பகுதிக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீ அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்*

*கடைகள் தீப்பற்றி எரியும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது*

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளராக வழக்கறிஞர் S.R.கிஷோர்குமார் நியமனம்..திருச்சிராப்பள்ளி குற்றவ...
25/08/2023

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளராக வழக்கறிஞர் S.R.கிஷோர்குமார் நியமனம்..

திருச்சிராப்பள்ளி குற்றவியல் சங்க வளாகத்தில் இன்று 25.08.2023ந் தேதி பிற்பகல் 12.30மணிக்கு தலைவர் திரு.P.சுரேஷ் செயலாளர் திரு.P.V.வெங்கட் அவர்கள் தலைமையில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் துணை தலைவர்கள் R.பிரபு மற்றும் S.சசிகுமார் இணைசெயலாளர் V.விஜயநாகராஜன் மற்றும் ஆலோசனை குழு மூத்த வழக்கறிஞர்கள் திரு.J.மாரியப்பன் திரு.S.விஸ்வநாதன் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கீழ்கண்ட தீர்மானைங்கள் ஏகமனதாக ஏற்க்கப்பட்டது.

*தீர்மானம்*

நமது சங்கத்தில் 2016ம் ஆண்டு முதல் பொருளாளராக பொறுப்பு வகிக்கும் திரு.வீரவடிவேல் அவர்கள் தனது பொறுப்பை ராஜினமா செய்வதாக முன்வந்து கடிதம் கொடுத்ததை இந்த செயற்குழு ஏகமனதாக ஏற்றுகொள்கிறது.

மேலும் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க *புதிய பொருளாளராக திரு.S.R.கிஷோர்குமார் அவர்களை* நியமிப்பது என இந்த செயற்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.

இப்படிக்கு
நிர்வாகம்,
குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம்,
திருச்சிராப்பள்ளி.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம்!
18/07/2023

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம்!

திருச்சி ப்ரண்ட் லைன் மருத்துவமனை மற்றும்அதிநவீன வசதிகளுடன்  கருடா ஸ்கேன்ஸ்....
11/07/2023

திருச்சி ப்ரண்ட் லைன் மருத்துவமனை மற்றும்அதிநவீன வசதிகளுடன் கருடா ஸ்கேன்ஸ்....

25/06/2023

திருச்சி: மணப்பாறை அருகே கார், அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து.

5 பேர் உயிரிழப்பு - 40க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.

அரசுப் பேருந்து கவிழ்ந்த நிலையில், கார் முற்றுலும் சேதம் - போலீசார் விசாரணை.

முன்பின் தெரியாத இறந்தவர்களை உறவினர்களாய் இருந்து அடக்கம்  செய்யும் பெண்:திருச்சியில் மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டள...
20/06/2023

முன்பின் தெரியாத இறந்தவர்களை உறவினர்களாய் இருந்து அடக்கம் செய்யும் பெண்:

திருச்சியில் மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் பல சமூகப் பணிகளை செய்து வருபவர் திருமதி. சிந்து. அவரிடம் அவரது சமூகப் பணிகளைப் பற்றி பேசிய போது, நலிவடைந்தோருக்கு எங்களது அறக்கட்டளை மூலம் தேவையான உதவிகளை செய்து வந்தோம்.

எனது சமூகப் பணியில் ஆரம்பகட்டத்தில் இருந்து இன்று வரை இடுகாட்டிற்கு மட்டும் தான் சென்று சேவைகள் செய்யாமால் இருந்து வந்தேன்.

உறவினர்கள் இல்லாமல் இறந்தவர்களை உறவினராய் நான் இருந்து அடக்கம் செய்ய வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை எனக்கு அமையாத நிலை இருந்து வந்தது. இப்போது, எங்கள் இல்லத்தில் இருந்து வந்த பாட்டி 10 நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இறந்த விட்டார்கள் அவர்களது உடல் யாரும் இல்லாத நிலையில் அடக்கம் செய்யக்கூடாது என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது ,பின்பு நானே என் கையால் நல்ல முறையில் அடக்கம் செய்தோம். யாரும் இல்லாமல் எந்த உடலும் எண் கண் முன்பு அடக்கம் செய்யக்கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.

சாலையோரத்தில் யாரும் பார்க்காத நிலையில் சிரமப்பட்டு இருந்து வரும் அவர்களை மீட்டெடுத்து அவர்களை உறவினர்களாக அரவணைத்து பார்த்து வரும் நாங்களே அவர்களுக்கு உறவினர்களாக இருந்து அனைவரும் இணைந்து அவர்களை நல்ல முறையில் அடக்கம் செய்தோம்.

திருச்சி கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதியில் நாளை [17.06.2023] முழு நாள் பவர்கட்....? வாடிவதங்க போகும் பள்ளி குழந்தைகள்.......
16/06/2023

திருச்சி கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதியில் நாளை [17.06.2023] முழு நாள் பவர்கட்....? வாடிவதங்க போகும் பள்ளி குழந்தைகள்.....!

#திருச்சி_மாவட்ட_ஆட்சியர்_மாவட்ட_கல்வி_அலுவலர்_கவனத்திற்கு…

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் கோடை வெப்பம் தமிழகத்தில் அதிகரித்த காரணத்தினால் பள்ளி துவங்கப்படுவது ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த தாமத்தை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளிலும் பள்ளி செயல்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நாளை [17.06.2023]ந் தேதி சனிக்கிழமை பெரும்பாலான பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்சி தென்னூர் மின்வாரியம் தங்களுடைய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக திருச்சி கண்டோன்மென்ட், காஜமலை,சாத்தனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 04.00மணி வரை முழு பவர் கட் என அறிவித்துள்ளது.

மேலும் திருச்சி மின்சாரவாரியம் அறிவித்துள்ள பவர் கட் நேரம் தான், பெரும்பாலான பள்ளிகளின் வேலை நேரமும் கூட.

மேலும் நாளை திருச்சி மின்சார வாரியத்தால் மாதாந்திர பணிகளுக்காக பவர் கட் செய்யப்படும் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தான் பிலோமினால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயின் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயின் ஜேம்ஸ் சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி, ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, வாசவி வித்யாலயா பள்ளி, கேம்பியன் மேல்நிலைப்பள்ளி, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட அநேக பள்ளிகள் உள்ளன.

மேலும் மேற்படி பள்ளிகளில் ஜெனரேட்டர் வசதிகள் உள்ளனவா என்று தெரியாத நிலையிலும், மேலும் ஜெனரேட்டர் வசதியிருந்தாலும் சுமார் ஏழு மணி நேரம் ஜெனரேட்டரை இயக்க முடியாமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

எனவே கடுமையான இந்த வெயில் காலத்தில் பத்து நிமிடங்கள் கூட மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாத சூழலில். பள்ளி குழந்தைகளால் பல மணி நேரம் எப்படி மின்சாரம் இல்லாமல் இருக்க முடியும் என்ற இயல்பான கேள்வி எழுகிறது....?

எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட கல்வி அலுவலரும் இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி திருச்சி மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளை வேறு ஒரு தேதியில் மாற்றியமைத்தோ அல்லது மேற்படி கண்டோன்மென்ட், காஜாமலை, சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையளித்து வேறு ஒரு சனிக்கிழமைகளை பள்ளி வேலை நாட்களாக பரிசீலித்து ஆவணம் செய்ய தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

அன்புடன்
வக்கீல்.Ra.கிஷோர்குமால்,
மாவட்ட கழக செயலாளர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி,
திருச்சி தெற்கு மாவட்டம்.

திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவிற்காக சாமியணா பந்தல் போடப்பட்டு இருந்த நிலையில் அந்த பந்தல் ச...
16/06/2023

திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவிற்காக சாமியணா பந்தல் போடப்பட்டு இருந்த நிலையில் அந்த பந்தல் சரிந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விழா சரியான பாதுகாப்பு இல்லாததால் இந்த விபத்து நடந்துள்ளதாக பெற்றோர்கள் கண்ணீருடன் கதறல்.

16/06/2023
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால்..1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்புகளுக...
05/06/2023

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால்..

1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.

- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.

ஸ்ரீரங்கம் கொள்ளிடத்தில் மூழ்கி பலியான வேத பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.திருச்சி ம...
15/05/2023

ஸ்ரீரங்கம் கொள்ளிடத்தில் மூழ்கி பலியான வேத பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், கொள்ளிட கரையில் நேற்று [14.05.2023]ந் தேதி காலை குளிக்க சென்ற விஷ்ணுபிரசாத், ஹரிபிரசாத், அபிராம் என்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இருவரது பூத உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரது உடலை தீயணைப்பு துறையினர் தேடி வருகிறார்கள்.மேற்படி மூன்று மாணவர்களும் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சார்ந்த பத்ரிநாராயணன் என்பவரது வீட்டில் தங்கி குருகுல முறைப்படி வேதபாடம் கற்று வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

எளிய குடும்பத்தை சார்ந்த மேற்படி விஷ்ணுபிரசாத், ஹரிபிரசாத், அபிராமின் இறப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு, மேற்படி பலியான மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10-இலட்ச ரூபாய் வழங்க உரிய உத்தரவு பிறபிக்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.

அன்புடன்
வக்கீல்.Ra.கிஷோர்குமார்,
மாவட்ட செயலாளர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி,
திருச்சி தெற்கு மாவட்டம்.

இஸ்லாமியர்கள் அணைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி...
22/04/2023

இஸ்லாமியர்கள் அணைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது .

புனித ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்காக அல்லாஹ் த ஆலாவினால் வழங்க பட்ட மிக பெரிய வெகுமதியாகும். ஓரு அதீஸில் ரமலான் மாதம் எத்தகை சிறப்பு உள்ளது என்று ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள்.

ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் நினைக்கின்றனர்.ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளை கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள். என்பதாக முகமது நபி அவர்கள் அருளுகிறார்கள்.ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும் , மன ஊசலாட்டங்களையும், நீக்கி விடும் என ஓரு அதீஸில் அறிவிக்க பட்டுள்ளது.

நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் , பலன்களும் , இருக்கின்றன. மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப்பதில் பலவிதமான பலன்கள் மனிதனுக்கு கிடைக்க வேண்டும் மென்பதுதான் நோக்கம் அவை அனைத்தும் கொஞ்சம் பசித்திற்கும் பொழுதான் கிடைக்க பெறுகின்றன.

அவற்றில் மிக பெரிய பலனாகிய மனோ இச்சயை முறியடித்தல் என்பது சிறிது நேரம் பசித்திருப்பதினால் அடங்கியிருக்கிறது .சைத்தான் மனிதனின் உடலில் ரத்தம் போன்று ஊடுருவி சென்று கொண்டிருக்கிறான் நோன்பினால் மற்றொரு பலன் என்ன வென்றால் ஏழைகள் போல் பசித்திருந்து அவர்களுடைய நிலைகளை உணர்வதாகும்.

இந்த நோக்கம் மாலை வரை பசி தெரியாமல் இருக்க ஸஹர் நேரத்தில் பால் இனிப்பு வகைகள் ஆகாரங்கள் ஆகியவற்றை கொண்டு குடலை நிரப்பாமல் இருப்பதில் தான் உண்டாக முடியும் ஏழைகளுக்கு ஒப்பாக இருத்தல் என்பது கொஞ்சம் நேரம் பசித்திருப்பதின் மூலம் தான் சாத்தியமாகும்.

ஆகவே . இந்த புனிதமான ரமலான் மாதத்தில் மார்க்கத்தை கொண்டு நாம் நோற்ற இந்த நோன்பினையும் ஜக்காத்தினையும் செய்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பில் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

ஆத்தா மகமாயி 🔥🔥திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது...
18/04/2023

ஆத்தா மகமாயி 🔥🔥

திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது...

02/04/2023

திருச்சி தெப்பக்குளம் மழையில்...

சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா ? காயல் அப்பாஸ் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி !மக்கள் எழுச்ச...
11/02/2023

சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா ? காயல் அப்பாஸ் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மத்திய சிறையில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அபுதாஹீர்
பரோலில் வெளியில் வந்து இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்கிற செய்தி வேதனை குறியது.

அபுதாஹீரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம் . 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக சிறைகளில் இருக்கும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை கருணையின் அடிப்படை விடுதலை செய்ய கோரி அரசுகளுக்கு தொடர்ந்து பல முறை கோரிக்கைகளை முன் வைத்து வருகிறோம் ஆனால் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை சம்பந்தமான கோரிக்கைகளுக்கு ஆளும் அரசுகள் செவி சாய்ப்பதை இல்லை ?

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான நோயால் பாதிக்க பட்டு வரும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறு வாழ்வு கொடுத்து விடுதலை செய்ய தமிழக அரசு முன் வராமல் மெளனம் காப்பது ஏன் சிறைவாசிகள் இஸ்லாமியர்கள் என்பதற்க்காகவா ?

தமிழக சிறைகளில் வாடும் இஸ்லாமிய சிறை வாசிகளின் விடுதலை மட்டும் தொடர்ந்து கேள்வி குறியாகவே இருந்து வருகிறது. ஆகவே இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு கருணையின் அடிப்படையில் அரசியல் சாசன பிரிவு 161ன் படியும் விடுதலை செய்ய காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் .

திருச்சி உறையூர் ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர் ஆலயம் ஸ்ரீ குங்குமவல்லிக்கு 73ஆம் ஆண்டு வளையல் காப்பு திர...
28/01/2023

திருச்சி உறையூர் ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர் ஆலயம் ஸ்ரீ குங்குமவல்லிக்கு 73ஆம் ஆண்டு வளையல் காப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

  | தனது பிறந்தநாளில் தற்கொலை செய்துக் கொண்ட பிரபல நடன கலைஞர் ரமேஷ்!Tik Tok மற்றும் Reels புகழ் டான்ஸர் ரமேஷ் தற்கொலை செ...
27/01/2023

| தனது பிறந்தநாளில் தற்கொலை செய்துக் கொண்ட பிரபல நடன கலைஞர் ரமேஷ்!

Tik Tok மற்றும் Reels புகழ் டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டார்..

சென்னை கேபி பார்க் குடியிருப்பு பகுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் டான்சர் ரமேஷ்

டான்சர் ரமேஷ் சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்..

| |

  | நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாய் சரோஜினி (87) உடல்நலக்குறைவால் காலமானார்;மதுரை விரகனூரில் உள்ள அவரது வீட்டில் உயிர்...
19/01/2023

| நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாய் சரோஜினி (87) உடல்நலக்குறைவால் காலமானார்;

மதுரை விரகனூரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது

ஈஷாவில் கோலாகலமாக நடந்த மாட்டு பொங்கல் விழா..ஈஷா சார்பில் பல்வேறு மாநில நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் பாரம்பரிய கலை...
16/01/2023

ஈஷாவில் கோலாகலமாக நடந்த மாட்டு பொங்கல் விழா..

ஈஷா சார்பில் பல்வேறு மாநில நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜனவரி 16) கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் கலாச்சாரத்தின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகவும், உழவர் திருநாளாகவும் விளங்கும் பொங்கல் விழா ஈஷாவில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை கோலகலமாக நடைபெற்றது.

இதில் மலைவாழ் பழங்குடி மக்கள், கிராமப்புற மக்கள், விவசாயிகள், ஈஷா தன்னார்வலர்கள், வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மண் பானைகளில் பொங்கல் வைத்தனர். பின்னர், ஈஷாவில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, நவதானியங்கள் போன்றவை அர்ப்பணிக்கப்பட்டன.

விழாவின் முக்கிய அம்சமாக, அழிந்து வரும் நம் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக, நாட்டு மாடுகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் காங்கேயம், காங்கிரிஜ், கிர், ஓங்கோல், தார்பார்க்கர், தொண்டை மாடு, வெச்சூர், உம்பளாச்சேரி உள்ளிட்ட 23 வகையான பாரம்பரிய நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும், அந்த மாட்டு இனங்களின் பூர்வீகம், சிறப்பு பற்றிய குறிப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.

உலகில் மிக குட்டையான நாட்டு மாட்டு இனத்தில் இருந்து, மிக உயரமான நாட்டு மாட்டு இனமும் பார்வைக்கு வைக்கப்பட்டது. பாரம்பரிய நாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராட்ஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை ஈஷா பல ஆண்டுகளாக பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மாடுகள் கண்காட்சி நாளையும் (ஜனவரி 17) நடைபெறும். அனுமதி இலவசம்.

16/01/2023

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த்(25) என்ற இளைஞர் காளை முட்டி பலி.

காளை முட்டி படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி புத்தூர் அக்ரஹாரம்அருள்மிகு புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் | மாசி மாதம் 10-ம் நாள் (22.02.2023) புதன்கிழமை ஆரம...
16/01/2023

திருச்சி புத்தூர் அக்ரஹாரம்
அருள்மிகு புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் |

மாசி மாதம் 10-ம் நாள் (22.02.2023) புதன்கிழமை ஆரம்பித்து மாசி மாதம் 22-ம் நாள் (06.03.2023) அருள்மிகு புத்தூர் ஸ்ரீ குழுமாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெரும்.

Address

Tiruchirappalli
620001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+19843422552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trichy Today:

Videos

Share