NEEM Tv

NEEM Tv Nonstop Enriching Edutainment Media

தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம்...பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம் தூத்த...
29/01/2023

தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம்...

பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் நீம் பவுண்டேசன் சார்பில் பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களின் அறிவுசார் திறன் வளர்ச்சிக்கான ஒரு நாள் பயிலரங்கம் திரேஸ்புரத்தில் நடைபெற்றது...

உருவாகுவோம் ; உருவாக்குவோம் என்னும் உயரிய எண்ணத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் பணி செய்யும் நீம் பவுண்டேசன் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தந்து உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கத்தினை நீம் திட்ட இயக்குநர் துவங்கி வைத்து பயிலரங்கம் குறித்த நோக்கம் மற்றும் தேவை குறித்து விளக்கினார். தொடர்ந்து பள்ளிக் கல்வி துறையின் பள்ளி செல்லாக் குழந்தைகளை மீட்டெடுக்கும் பணிக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் பேசுகையில் ஏன் பள்ளி இடை நிற்றல் மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று விவரித்தார்.

அதன் பிறகு சமூக நலத்துறையின் ஒன்றுங்கினைந்த சேவை மையத்தின் களப் பணியாளர் ஹெப்சிபா பேசுகையில் பல்வேறுபட்ட காரணங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பாக, வழிநடத்துதலாக ஒருங்கிணைந்த சேவை மையம் எவ்வாறு இயங்குகிறது என்றும் விளக்கினார்.

பின்னர் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு கல்விப் பணி செய்து வருகிறோம் என்று பிரையன்ட் நகர் நல்ல சமாரியன் செவித் திறன் குறைபாடுள்ளோர் மேல் நிலைப் பள்ளி சிறப்பு ஆசிரியர்கள் சுபா மற்றும் மிஸ்டிக்கா உதாரணங்களுடன் எடுத்துரைத்தனர்.

பின்னர் கடந்த 6 மாதங்களாக நீம் பவுண்டேசன் தன்னார்வ ஆசிரியர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எவ்விதங்களில் சிறப்புப் பயிற்சி தந்து வருகிறது என்பதனை நீம் தன்னார்வ ஆசிரியர்கள் பெனன்சிர் அமினா மற்றும் மரிய நான்சி விளக்கினர். தொடர்ந்து நீம் பவுண்டேசன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமார் பேசினார்.

தன்னார்வ ஆசிரியர்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்னவென்று நீம் திட்ட இயக்குநர் நிமிஷா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் விவரிக்க பயிலரங்கம் நிறைவுற்றது.

தன்னார்வ ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சியை நீம் தன்னார்வ ஆசிரியர்கள் ரிசிவந்த் சந்திப், மணிகண்டன், அந்தோணி உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம்...பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம் தூத்த...
28/01/2023

தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம்...

பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் நீம் பவுண்டேசன் சார்பில் பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களின் அறிவுசார் திறன் வளர்ச்சிக்கான ஒரு நாள் பயிலரங்கம் திரேஸ்புரத்தில் நடைபெற்றது...

உருவாகுவோம் ; உருவாக்குவோம் என்னும் உயரிய எண்ணத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் பணி செய்யும் நீம் பவுண்டேசன் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தந்து உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கத்தினை நீம் திட்ட இயக்குநர் நிமிஷா துவங்கி வைத்து பயிலரங்கம் குறித்த நோக்கம் மற்றும் தேவை குறித்து விளக்கினார். தொடர்ந்து பள்ளிக் கல்வி துறையின் பள்ளி செல்லாக் குழந்தைகளை மீட்டெடுக்கும் பணிக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் பேசுகையில் ஏன் பள்ளி இடை நிற்றல் மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று விவரித்தார்.

அதன் பிறகு சமூக நலத்துறையின் ஒருங்கினைந்த சேவை மையத்தின் களப் பணியாளர் ஹெப்சிபா பேசுகையில் பல்வேறுபட்ட காரணங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பாக, வழிநடத்துதலாக ஒருங்கிணைந்த சேவை மையம் எவ்வாறு இயங்குகிறது என்றும் விளக்கினார்.

பின்னர் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு கல்விப் பணி செய்து வருகிறோம் என்று பிரையன்ட் நகர் நல்ல சமாரியன் செவித் திறன் குறைபாடுள்ளோர் மேல் நிலைப் பள்ளி சிறப்பு ஆசிரியர்கள் சுபா மற்றும் மிஸ்டிக்கா உதாரணங்களுடன் எடுத்துரைத்தனர்.

பின்னர் கடந்த 6 மாதங்களாக நீம் பவுண்டேசன் தன்னார்வ ஆசிரியர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எவ்விதங்களில் சிறப்புப் பயிற்சி தந்து வருகிறது என்பதனை நீம் தன்னார்வ ஆசிரியர்கள் பெனன்சிர் அமினா மற்றும் மரிய நான்சி விளக்கினர்.

தொடர்ந்து நீம் பவுண்டேசன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமார் பேசினார்.

தன்னார்வ ஆசிரியர்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்னவென்று நீம் திட்ட இயக்குநர் நிமிஷா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் விவரிக்க பயிலரங்கம் நிறைவுற்றது.

தன்னார்வ ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சியை நீம் தன்னார்வ ஆசிரியர்கள் ரிசிவந்த் சந்திப், மணிகண்டன், அந்தோணி உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

22/01/2023
*தன்னார்வ ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி* நீம் பவுண்டேசன் சார்பில் தன்னார்வ ஆசிரியர்களின் கற்கும் திறனை மேம்ப...
01/01/2023

*தன்னார்வ ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி*

நீம் பவுண்டேசன் சார்பில் தன்னார்வ ஆசிரியர்களின் கற்கும் திறனை மேம்படுத்த பயிற்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உருவாகுவோம் - உருவாக்குவோம் என்னும் விருதுவாக்குடன் குழந்தைகளின் எழுத்தறிவு மேம்பாட்டுக்காக செயல்பட்டு வரும் நீம் பவுண்டேசன் சார்பில் தன்னார்வ ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டுக்கான 05 நாட்கள் பயிற்சியானது ஓட்டப்பிடாரம் கீழ முடிமன் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பார்த்தல் - கேட்டல் - செய்தல் உள்ளிட்ட யுக்திகளை கையாள, நீம் தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் சார்ந்து பயிற்றுவிக்கப்பட்டது.

சேவை அமைப்பின் பெருமாள் தமிழ் எழுத்துக்களை உணர வைத்து, குழந்தைகளை எழுதவும் - வாசிக்கவும் வைப்பது என்றும், திருச்சி ஊற்றுக்கண் ஆசிரியர் - மாணவர் படைப்பிதழின் ஆசிரியர் எரோனிமஸ் ஆங்கிலம் எளிமையாக பேசுவதற்கான யுக்திகளையும், திருச்சி பேராசியர் தங்கபாண்டியன் கணிதத்தை எவ்வாறு எளிமையாக குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பது, கணிதம் மீதான பயத்தினை எப்படி போக்குவது என்றும் பயிற்றுவித்து வழிநடத்தினர்.

கீழ முடிமன் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் விக்டர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார் தொடர்ந்து நீம் திட்ட இயக்குநர் நிமிஷா பயிற்சிக்கான தேவை குறித்தும் பயிற்சிக்கு பின்னர் எதிர்நோக்கும் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

ஐந்து நாட்கள் பயிற்சியின் நிறைவில் கல்வித் துறையில் குழந்தைகள் இடைநிற்றலை தடுக்கும் பணிக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் பயிற்சி பெற்ற தன்னார்வ ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்க, பயிற்சியாளர்கள் பயிற்சி குறித்த மதிப்பாய்வு நடத்தினார்கள்.

நிறைவாக கீழ முடிமன் புனித வளனார் மேல் நிலைப்பள்ளி தாளாளர் அன்புநாதன் பேசுகையில், பயிற்சியில் பங்கேற்ற தன்னார்வ ஆசிரியர்கள், எல்லா சூழலிலும் தங்களது அறிவாலும், திறமையாலும் தனித்து நின்று வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இறுதியாக நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமார் நன்றியுரை கூற தன்னார்வ ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவுற்றது.

நீம் பவுண்டேசனது தொடர் செயல்பாடுகளில் ஒன்றான தன்னார்வ ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஏற்பாடுகளை நீம் திட்ட இயக்குநர் நிமிசா, ஒருங்கிணைப்பாளர்கள் பொன் இந்திரா, சரண்யா, மணி ஐஸ்வர்யா மற்றும் சிந்தியா சிறப்பாக செய்திருந்தனர்.

31/12/2022

Live from St Jude's Shrine Parish, Tuticorin

தமிழக அரசின் அறிவுத்தலின்படியும், திருநெல்வேலி வான்முகில் மற்றும் தூத்துக்குடி நீம் பவுண்டேசன் வழிகாட்டுதலின்படியும் இன்...
25/11/2022

தமிழக அரசின் அறிவுத்தலின்படியும், திருநெல்வேலி வான்முகில் மற்றும் தூத்துக்குடி நீம் பவுண்டேசன் வழிகாட்டுதலின்படியும் இன்று (25-11-2022) நீம் பவுண்டேசன் தன்னார்வ பணி செய்யும் பள்ளிகளில், நவம்பர் 26 இந்திய அரசமைப்பு நாளினை முன்னிட்டு அரசமைப்பு முகப்புரையினை உரக்க வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர். நீம் தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தொண்டு நிறுவன தன்னார்வ ஆசிரியர்களின் மதிப்பாய்வு கூட்டம்...தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னார்...
06/11/2022

தொண்டு நிறுவன தன்னார்வ ஆசிரியர்களின் மதிப்பாய்வு கூட்டம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னார்வ பணி செய்யும் ஆசிரியர்களின் பணி குறித்த மதிப்பாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

உருவாகுவோம் ; உருவாக்குவோம் என்னும் விருதுவாக்குடன் இயங்கிவரும் நீம் பவுண்டேசன், தலைமைப் பண்புள்ள பள்ளி மாணாக்கர்களிடையே குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்து இந்திய அரசமைப்பு கல்வியை பயிற்றுவித்து வருகிறது.

தொடர்ச்சியாக கடந்த மூன்று மாதங்களாக மெல்லக் கற்கும் மாணாக்கர் மீது சிறப்புக் கவனம் செலுத்தி அவர்களை சரளமாக எழுதவும் வாசிக்கவும் வைத்திட பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தி பணி செய்து வருகிறது.
அத்தன்னார்வ ஆசிரியர்களுக்கு, அவர்கள் செய்த பணி மீதான மதிப்பாய்வு கூட்டம் இன்று (05-11-2022) இஞ்ஞாசியார் புரத்தில் உள்ள நீம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தினை கீழ முடிமன் புனித வளனார் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விக்டர் அவர்கள் தலையேற்று வழிநடத்தினார். தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பின் அமைப்பாளர் பாட்டாளி பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கி, போதைக்கு அடிமையாகும் மாணவர் சமூகத்தினை குறித்தும் பேசினார். மேலும் அப்சர்வராக கலந்துகொண்ட அந்தோணி ராஜ் அவர்கள் மேற்பார்வையில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தன்னார்வ ஆசிரியர்கள் தங்களது மூன்று மாதகால பணி குறித்தும், பணியில் ஏற்பட்ட சவால்கள் மற்றும் நேர்மறை நிகழ்வுகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும் தூத்துக்குடி ரெங்கநாத புரம் சி எம் பள்ளி தாளளருடன் தலைமையாசிரியையும் கலந்து கொண்டு நீம் பவுண்டேசன் பணிகளை வாழ்த்தினார்.
மேலும் ஓட்டப்பிடாரம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பவ நந்திஸ்வரன் மற்றும் சரஸ்வதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மதிப்பாய்வு செய்தனர்.
எழுத வாசிக்கத் தெரியாத காரணத்தினால் இனி எந்த மாணவரும் மாணவியரும் பள்ளியிலிருந்து வெளியேற கூடாது என்றொரு உயரிய எண்ணத்துடன் பணி செய்துவரும் நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமார் தன்னார்வலர்களை வாழ்த்தி நன்றியுரை கூற கூட்டம் இனிதே நடைபெற்றது ..

கூட்ட ஏற்பாடுகளை நீம் தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

30/10/2022

கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர் புனித யூதா ததேயு பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். - NEEM TV

05/05/2022

Streaming

Address


Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Telephone

+918903156847

Alerts

Be the first to know and let us send you an email when NEEM Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NEEM Tv:

  • Want your business to be the top-listed Media Company?

Share