Tiger Media

Tiger Media Tiger Media (Let's speak the truth)

கம்பத்தில் புதிய பாலம் கட்டுவதற்காக மண் உறுதி தன்மை ஆய்வு
07/06/2024

கம்பத்தில் புதிய பாலம் கட்டுவதற்காக மண் உறுதி தன்மை ஆய்வு

தேனி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.
04/06/2024

தேனி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் 2,79201 வாக்குகள்...
04/06/2024

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் 2,79201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேனி  மக்களவைத் தொகுதி 19வது சுற்று முடிவு திமுக - தங்க தமிழ்செல்வன் - 500083அதிமுக - நாராயணசாமி- 138633அமமுக - டிடிவி த...
04/06/2024

தேனி மக்களவைத் தொகுதி

19வது சுற்று முடிவு

திமுக - தங்க தமிழ்செல்வன் - 500083

அதிமுக - நாராயணசாமி- 138633

அமமுக - டிடிவி தினகரன் - 252500

நாதக மதன் ஜெயபாலன்- 66219

நோட்டா - 9813

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 19 வது சுற்று முடிவில் 247583 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து வெற்றி வாய்ப்பை தக்க வைத்துள்ளார்.

01/06/2024

கம்பம் வின்னர் ஸ்போர்ட்ஸ் சார்பில் கோடைகால இறகு பந்து போட்டி|| வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு.

31/05/2024

தேனிகாரன்..

30/05/2024

அரசு பேருந்தில் பெண்ணுக்கு பிறந்த குழந்தை..
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து தொட்டில்பாலம் செல்லும் அரசு பேருந்தில் லிஜீஷ் என்பவரது மனைவி செரீனா (37) என்பவர் பயணம் செய்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான செரீனா திருநாவாயா சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், பேருந்து பெரமங்கலம் வந்தபோது செரீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பஸ் உடனடியாக மருத்துவமனைக்கு திருப்பி விடப்பட்டது. மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டு மருத்துவர்கள் வேகமாக வந்து பேருந்தின் உள்ளே வைத்து அவருக்கு பிரசவம் பார்த்தனர். இந்நிலையில் செரீனாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

29/05/2024

வேலூரில் TTV தினகரன் செய்தியாளர் சந்திப்பு.

லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டத்தை தொடங்கினர்.
29/05/2024

லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டத்தை தொடங்கினர்.

முல்லைப்பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் ஆய்வு! முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு ...
29/05/2024

முல்லைப்பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் ஆய்வு!
முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது என தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவித்துள்ளது. கடந்த 18-ம் தேதி நடக்கவிருந்த ஆய்வு தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய நீர்வள தலைமை பொறியாளர் தலைமையிலான கண்காணிப்புக் குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது. புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் அடுத்த மாதம் ஆய்வு குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா க.புதுப்பட்டியை சேர்ந்த சக்தி யுகம் என்ற சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன...
29/05/2024

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா க.புதுப்பட்டியை சேர்ந்த சக்தி யுகம் என்ற சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனார், இதனை தொடர்ந்து அவர் சேலத்தில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் க.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விரைந்து சென்று சிறுவனை மீட்டு அழைத்து வந்துள்ளனர். சிறுவனை மீட்க உறுதுணையாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியினை குடும்பத்தார் சார்பில் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கோம்பை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 541 மதிப்பெண...
29/05/2024

தேனி மாவட்டம் கோம்பை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 541 மதிப்பெண்கள் பெற்ற பார்வையற்ற மாணவி சுகன்யா தேவிக்கு நமது நன்செய் தன்னார்வ அமைப்பு சார்பாக 3வருடத்திற்கான் கல்லூரி செலவுகளை ஏற்றுகொண்டு பரிசு பொருட்கள் வழங்கியும் முதல் வருடத்திற்கான கல்லூரி கட்டணத்தை செலுத்தியும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தேனியில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்
28/05/2024

தேனியில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

28/05/2024

கம்பம் நெல்லுகுத்தி புளியமரம் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் இருசக்கர வாகனம் திருட்டு, வாகன உரிமையாளர் கொடுத்த புகாரின் கம்பம் தெற்கு போலீசார் விசாரணை.
வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் CCTV காட்சி

28/05/2024

கார் மோதியதில் சாக்கடையில் கவிழ்ந்த இருவர்
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள இட்டேரி சாலையில் முதியவர் ஒருவர் தனது பேரனுடன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையின் திருப்பத்தில் அவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது கார் ஒன்று மோதியது. இதனால், முதியவரும், பேரனும் ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தனர். இதனால் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

28/05/2024

துரத்திய படையப்பா யானை.! தலைதெறிக்க ஓடிய பயணிகள்.!
மூணாறிலிருந்து கல்லாறு சென்று கொண்டிருந்த பயணிகளை படையப்பா யானை துரத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. படையப்பா யானை பொதுவாக வாகனங்களைப் பார்த்தால் அமைதியாக சென்று விடும். அந்த நம்பிக்கையில் இரண்டு கார்கள் முன்னோக்கி சென்றனர். அப்போது படையப்பா யானை தொடர்ந்து முன்னேறி வந்தது. இதையடுத்து பயணிகள் காரை விட்டு இறங்கி ஓடத் தொடங்கினர். சில நாட்களாக வனப்பகுதிக்குள் இருந்த படையப்பா யானை, மீண்டும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வலம் வரத் தொடங்கியுள்ளது.

27/05/2024

முல்லைப்பெரியாற்றில் புதிய அணைகட்ட திட்டம். கேரளாவை கண்டித்து விவசாயிகள் பேரணி. லோயர்கேம்பில் போராட்டம்.

முல்லைப்பெரியாற்றில் புதிய அணைகட்ட திட்டமிடும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் லோயர்கேம்ப் பஸ்நிலையத்தில் இருந்து பென்னிக...
27/05/2024

முல்லைப்பெரியாற்றில் புதிய அணைகட்ட திட்டமிடும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் லோயர்கேம்ப் பஸ்நிலையத்தில் இருந்து பென்னிகுக் மணிமண்டபம் வரை பேரணியாக சென்றனர். தமிழக எல்லை குமுளிவரை விவசாயிகள் செல்ல போலீசார்கள் அனுமதி வழங்காததால், பென்னிகுக் மணிமண்டபம் அருகே கேரளாவை கண்டித்து போராட்டம் செய்தனர்.

வருகிறது இந்தியன் 2
26/05/2024

வருகிறது இந்தியன் 2

குமுளியில் முற்றுகைப் போராட்டம்
26/05/2024

குமுளியில் முற்றுகைப் போராட்டம்

25/05/2024

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

பிரச்சனையை முடித்துக்கொண்ட காவலர் - நடத்துனர்நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணம் செய்த காவலர் டிக்கெட் ...
25/05/2024

பிரச்சனையை முடித்துக்கொண்ட காவலர் - நடத்துனர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணம் செய்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்ததாக கூறப்பட்டு வீடியோ ஒன்று வைரலான நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து அரசு பேருந்துகளை ஆங்காங்கே மடக்கிய காவலர்கள் பல காரணங்களை சொல்லி அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில் அந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ள காவலர் ஆறுமுகபாண்டி மற்றும் நடத்துனர் ஆகியோர் நேரில் சந்தித்து கை குலுக்கி கட்டிப்பிடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் வருத்தம் தெரிவித்துக்கொண்டு சமாதானம் ஆகியுள்ளனர்.

23/05/2024

21 ஆண்டுகளுக்குப் பிறகு கோம்பை அருள்மிகு திருமலைராயப்
பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம்.

23/05/2024

போக்குவரத்து துறைக்கு எதிராக காவல்துறை தனது சட்ட கடமையை நிறைவேற்ற ஆரம்பித்து விட்டது.

உத்தமபாளையம் அருகே 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோம்பை அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவினை ...
23/05/2024

உத்தமபாளையம் அருகே 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோம்பை அருள்மிகு திருமலைராயப்
பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு மிக விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

ஒரு நாள் மட்டும் 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம்தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறியதாக இன்று ஒரு நாள் மட்டும் 22 அரசு ப...
23/05/2024

ஒரு நாள் மட்டும் 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம்

தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறியதாக இன்று ஒரு நாள் மட்டும் 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம்
விதித்தது போக்குவரத்து போலீசார்

அரசு பேருந்துகளுக்கு அடுத்தடுத்து அபராதம் விதித்து வருகிறது

போக்குவரத்து போலீசார்

22/05/2024

கூடைப்பந்து போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி..

21/05/2024

சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளவான 126.28 அடி எட்டி நிறைந்ததால் வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உபரி நீர் வெளியேற்றம்.

RTE- கல்வி உரிமை சட்டம்..! || பள்ளிகளின் நடக்கும் முறைகேடுகள் || துணைபோகும் அதிகாரிகள்.? || அகில இந்திய பார்வர்ட் பிளாக்...
21/05/2024

RTE- கல்வி உரிமை சட்டம்..! || பள்ளிகளின் நடக்கும் முறைகேடுகள் || துணைபோகும் அதிகாரிகள்.? || அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி MPS - முருகன் காரசார நேர்காணல்
🛑 Tiger Media Tiger Media Tiger Media

21/05/2024

சவுக்கு சங்கர் இரண்டு நாள் விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் தேனிக்கு அழைத்து வரப்பட்டார்.

Address

Theni

Alerts

Be the first to know and let us send you an email when Tiger Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tiger Media:

Videos

Share