Dr. Purachiyar Tv

  • Home
  • Dr. Purachiyar Tv

Dr. Purachiyar Tv உண்மையை உண்மையாய் சொல்லுவோம்

01/11/2023
சேலம் மாவட்ட நீலப்புலிகளுக்கு வாழ்த்துக்கள் .... 💙💙💙அரசியல் அதிகாரம் நோக்கிய பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்ஜெய் பீம் 💙💙
28/09/2023

சேலம் மாவட்ட நீலப்புலிகளுக்கு வாழ்த்துக்கள் .... 💙💙💙

அரசியல் அதிகாரம் நோக்கிய பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்

ஜெய் பீம் 💙💙

13/09/2023
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுக்கா வீரடிப்பட்டி கிராமத்தில் பட்டினத்தை சேர்ந்த பறையர் மக்களை ஊர் பொதுக் கோவி...
13/09/2023

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுக்கா வீரடிப்பட்டி கிராமத்தில் பட்டினத்தை சேர்ந்த பறையர் மக்களை ஊர் பொதுக் கோவிலுக்குள் வரக்கூடாது சாமி கும்பிட கூடாது என்று சாதி வெறியர்கள் தீண்டாமையை சுமத்திய போது அதற்கான உரிமை குரல் எழுப்பிய #பறையர்கள் குடியிருப்பு மீது கற்கள்
கொண்டு சாதி வெறியர்கள் தாக்கி உள்ளார்கள். சம்பவம் நடந்து 20 நாட்களை கடந்தும் கந்தர்வக்கோட்டை காவல் நிலையம் வழக்கு பதிவு செய்யாத நிலையில் இன்று #நீலப்புலிகள்_இயக்கத்தின் இயக்க தோழர்களுடன் கிராமத்திற்கு சென்றோம்..
கோவிலை #இந்து_அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு தொலைபேசி வாயிலாக கோரிக்கை வைத்தோம்.
காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு கற்கள் எரிந்த நபர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்க வில்லை என்று கேட்டோம். அவர்கள் இன்று வழக்கு பதிவு செய்து விட்டோம் அதற்கான ஆவணம் நாளை பெற்று கொள்ளலாம் ஏற்று உறுதி அளித்தார்.
உடன் களப்பணியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் #சேரி_தமிழன்_நா_ஆனந்த் மற்றும் கந்தர்வக்கோட்டை பொறுப்பாளர் பொறியாளர்கள் பாரதி
பொறியாளர் யுவராஜ்,
விக்கி, விஜய், குமார் தலைமையில் 10 க்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள்...

தருமபுரம் ஆதீனத்தை கண்டித்து மாபெரும் மக்கள் போராட்டம்..நாள்:14.09.23 வியாழக்கிழமை காலை 10 மணி.இடம்: திருப்பனந்தாள் அருண...
08/09/2023

தருமபுரம் ஆதீனத்தை கண்டித்து மாபெரும் மக்கள் போராட்டம்..

நாள்:14.09.23 வியாழக்கிழமை காலை 10 மணி.
இடம்: திருப்பனந்தாள் அருண ஜடேஸ்வரர் கோயில் வாசல்..

அன்பார்ந்த பொதுமக்களே ஜனநாயக சக்திகளே..

திருப்பனந்தாளில் தலித் மக்கள் வசிக்கிற வடக்கு ஆதிதிராவிடர் தெருவிற்கு அருகே சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் விதமாக, வட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தை உடன்படிக்கையை மீறி அடாவடித்தனமாக தருமபுரம் ஆதீனம் கோசாலை அமைத்து வருகிறது.

நூற்றுக்கணக்கான மாடுகள் பராமரிக்கப்படுவதற்காக கோ சாலை அமைக்கப்படுகிற அந்த இடம் பறையர் சமூக மக்கள் வசிக்கும் இடத்திற்கு 100 மீட்டருக்கு அருகே உள்ள பகுதியாகும்.. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு அருகே வசிக்கும் மக்களுக்கு ஏற்படும்..

மேலும் தருமபுரம் ஆதீனத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இந்த பகுதிகளில் இருந்த போதிலும், பறையர் சமூக மக்கள் வசிக்கிற குடியிருப்புக்கு அருகே இந்த கோசாலையை அமைக்க வேண்டிய நோக்கம்- பறையர் சமூக மக்களை சாணி அள்ளுவதற்கும் துப்புரவு பணிக்கும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் தான்..

எஸ்எஸ்டி மக்கள் குடியிருப்புக்கு அருகே சுகாதார சீர்கேடுகளை விளைவிப்பது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி பெரும் குற்றமாகும். அந்த அடிப்படையில் தர்மபுரம் ஆதீனத்தின் மீது நீலப்புலிகள் இயக்கத்தால் புகார் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கால்நடைத்துறை, சுற்றுச்சூழல் துறை,பல்வேறு அரசு அனுமதி உள்ளிட்ட எந்தவிதமான அனுமதியும் பெறாமல் கட்டப்படும் இந்த கோசாலையை, வருவாய் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் மெத்தன போக்கோடு நடந்து கொள்கிறார்கள்..

எனவே தருமபுரம் ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு அருகே கோசாலை கட்டக்கூடாது.. எந்தவித அனுமதியும் இன்றி கட்டப்படும் கோசாலை பிரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மக்கள் நல கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்..

மாடாய் உழைக்கும் மனிதன் வசிப்பதற்கு இடம் தராத தருமபுரம் ஆதீனம், மாடுகள் வசிப்பதற்கு மட்டும் பல ஏக்கர் நிலத்தை குடியிருப்புக்கு அருகே ஒதுக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது..

பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும், சமூக நீதியின் பால் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளும் தவறாமல் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்..

இவன்
பேராசிரியர் டாக்டர் TM.புரட்சிமணி, தலைவர், நீலப்புலிகள் இயக்கம்.

நீதி கேட்டு திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் வாயிலில் காத்திருப்பு போராட்டம்..நாள்:14.09.2023 வியாழக்கிழமை காலை 10 மண...
05/09/2023

நீதி கேட்டு திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் வாயிலில் காத்திருப்பு போராட்டம்..

நாள்:14.09.2023 வியாழக்கிழமை காலை 10 மணி..
இடம்: அருணஜடேஸ்வரர் கோயில் வாசல்..

மாவட்ட ஆட்சியரே.. வருவாய்த்துறையே..
காவல்துறையே...
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!

தலித் மக்கள் குடியிருக்கும் குடியிருப்புக்கு அருகே எந்த விதமான அனுமதியையும் பெறாமல், அடாவடித்தனமாக தருமபுரம் ஆதினத்தால் கட்டப்படும் கோ சாலையை தடுத்து நிறுத்து...

தலித் மக்களின் குடியிருப்புக்கு, சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் நோக்கோடு கோசாலையை வட்டாட்சியர் அமைதி பேச்சுவார்த்தையை மீறிகட்டும் தருமபுரம் ஆதீனத்தின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்..

அரசே நேரடி பேச்சு வார்த்தையின் மூலம் நில எடுப்பு செய்து, அந்த இடத்தை வீட்டு மனையற்ற குடிமக்கள் அனைவருக்கும் பட்டாவுடன் வழங்கு..

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்ட அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய தமிழ்த் தேசிய இயக்கங்களின் தலைமைகள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டத்திற்கு வாரீர்.. வாரீர்..

இவன்
நீலப்புலிகள் இயக்கம் தமிழ்நாடு

09/12/2022

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஆவணம் பெரியநாயகிபுரம் வடக்கு தெரு பேருந்து நிலையத்தில் #புரட்சியாளர்_அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிடிட்டு.
#நீலப்புலிகள்_இயக்கத்தின் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
அந்த சுவரொட்டிகள் மறு தினம் கிழித்து கிடந்தன.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகாரை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வீடியோ கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது அதே பகுதியை சார்ந்த வெள்ளைச்சாமி அவர்களின் மகன் முத்து என்பவர் சாதிய வன்மதோடு சுவரொட்டியை கிழித்தது பதிவாகி உள்ளது..
தொடர்ந்து அந்த பகுதியில் புரட்சியாளர் படங்கள் அவமதிக்க படுகிறது.
எனவே காவல் துறை இந்த சாதி வெறியன் மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்

நா. ஆனந்த்
மாவட்ட செயலாளர்
தஞ்சை தெற்கு
நீலப்புலிகள் இயக்கம்

29/08/2022
24/07/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Purachiyar Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share