Commemorating Former Prime Minister of India, #LalBahadurSastri on his Birth Anniversary
இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் சிறு வயதிலேயே படிப்பு தாகத்துடன் பாடசாலை செல்ல, பாடப்புத்தகங்களை நனைய விடாமல், தலையில் சுமந்து நதி கடந்த மகானாகத் திகழ்ந்தார்!
முதன்முதலில் பெண் நடத்துனர்கள் பணி அமர்த்தப்பட்டது இவருடைய ஆட்சிக் காலத்தில் தான்.
இன்று வரை இறப்பின் புதிர் விடுபடாத நிலை
சாஸ்திரி அவர்களது PM report இன்றுவரை வெளியிடப்படவில்லை. அரசு சொல்லும் காரணம் வெளியுறவு பிரச்சனை வரும் என்பதே. இவருடைய புதல்வர் பல முறை பிரேதப் பரிசோதனை அறிக்கையை கேட்டும் இதுதான் நிலை.
வெளிநாட்டில் இறந்த இந்தியப் பிரதமர் இவர். தாஸ்கண்ட் ஒப்பந்தம் என்றாலே இவரின் இறப்பு நிழலாடும்.
லால் பகதூர் சாஸ்திரி ரயில்வே அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தமிழ்நாட்டில் அரியலூரில் மருதை ஆற்றில் வந்த திடீர் வெள்ளம் காரணமாக ரயில் தடம் புரண
இளஞ்சிவப்பு மாதம்
Breast Cancer Awareness Month
Pink + October = Pinktober
Breast Cancer Awareness Month Pink + October = Pinktober
விழித்திடு பெண்ணே
மார்பகப் புற்றுநோய்
.....................................
உயிரணு வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பிறழ்வால் மார்பகங்களில் செல்கள் கட்டுப்பாடற்ற முறையில் பெருகி கட்டியாக உருவாவது.
காரணங்கள்
.........................
*. உடல்நலம் பேணாமல் அலட்சியம் காட்டுதல்
*. வழக்கமான மாதவிடாய் சுழற்சி இல்லாமை.
*. கருத்தடை மாத்திரையின் அதிகமான பயன்பாடுகள்.
*. அதிகப்படியான ஹார்மோன் மருந்து பயன்பாடு.
*. அதிக உடல் எடை
*. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்.
அறிகுறிகள்
........................
*. மார்பகத்தின் சில பகுதிகளில் வீக்கம்.
*. முலைக்காம்புகளிலிருந்து இரத்தப்போக்கு.
*. மார்பகத்தோலில் மாற்றங்கள்.
*. கைகளில் கட்டிகள்.
*. மார்பகத்தின் வடிவம் அல்லது அளவில் திடீர் மாற்றம்.
*. மார்பகத்தில் தோல் உரிதல்.
*. மார்பக நிறம் சிவப்பாக மாறுதல்.
*. தாய்ப்பாலைத் தவிர வேறுசில உடல் திரவம் வெளியேறுவது.
சுயபரிசோதனை
அகிலத்தைக் காப்பவனே ஆனைமுகத்தோனே இயற்கையில் வாழ்பவனே ஈடற்ற இறைவனே உட்பொருள் கண்டோனே ஊர்வலங்கள் காண்போனேஎல்லோரையும் வாழ்விப்பவனே ஏற்றங்கள் தருபவனே ஐந்து கரத்தோனே ஒப்பற்ற நாயகனே ஓங்குபுகழ் தருபவனே ஓளடதம் ஆனவனே ஃ போல் தனித்திருப்போனே இனிய விநாயகர் சதுர்த்தி நாள் வாழ்த்துகள்! #bio5 #VJRamya
Commemorating #ArignarAnna 53rd Death Anniversary Arignar Anna 53rd Death Anniversary
பேரறிவுப் பெட்டகமே! அனபின் ஊற்றே!
பெறற்கரிய பெரும்பேறே! இந்த நாட்டை
வேரறுந்த மரமாக விட்டு விட்டு
வேறெங்கு சென்றீரோ! அறியோம்; உங்கள்
கூரறிவின் பேராற்றல் கண்டு அந்தக்
கூற்றுவனே அழுக்காறால் கவர்ந்தான் கொல்லோ!!
யாரறிவார் அண்ணாவுன் அறிவின் ஆற்றல்
அன்பரசே! எமைவிட்டு எங்கு சென்றீர்!!
கண்ணற்ற எங்களுக்கு விழியாய் நின்று
காரிருளில் பேரொளியைக் காட்டிச் சென்ற
தென்னாட்டுப் பெருமகனே! தமிழ வேந்தே!!
திக்கெட்டும் புகழ்ந்தேற்ற வாழ்ந்த மன்னா!!
இந்நாட்டு மக்களுன்னை எண்ணி இன்று
ஏங்கியழும் அழுகுரலுக் கிரங்கா யோநீ!!
எண்ணற்ற ஏழைகளின் இதயக் கூட்டில்
இடம்பெற்றாய் அண்ணாநீ இறக்கவில்லை
இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றாய்;
ஏற்றிடுவோம் அறிவொளியை என்று சொன்னாய்;
பொறுப்புள்ள தம்பிகளை வளர்த்து விட்டாய்;
பொறையுடைமை உள்ளவனாய் வாழ்ந்து சென்றாய்;
கறுப்பிருக்கு