Kadaladi Taluk

Kadaladi Taluk Daily updates our taluk

28/06/2022
புதிய மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம்
18/06/2022

புதிய மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம்

12/06/2022

உலக அளவில் நேபாளத்தில் நடைபெற்ற யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஸ்மித்ரன் 8 வயதுக்கு உட்பட்டோருக்கு நடைபெற்ற யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நேற்று தாயகம் திரும்பி சொந்த கிராமமான மேலச்செல்வனூருக்கு வருகை தந்தார். அவருக்கு கிராமத்தின் சார்பில் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

வாழ்த்துக்கள் #ஸ்மித்ரன்
வாழ்த்துக்கள்

27/05/2022

*சாயல்குடி பேருந்து நிலைய செல்போன் கடையில் திருட்டு;*

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் செல்போன் கடை நடத்தி வரும் முனீஸ்வரன் என்பவருடைய கடையில்,

இரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் ரொக்கம், செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவத்தை சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

06/05/2022

சாயல்குடியில் இயங்கிவரும் அரசு பொது மருத்துவமனை தற்போது அதிக கவன குறைவு நடந்து வருகிறது..

ஆபரேஷன் செய்து குழந்தை பெரும் தாய்மார்களுக்கு தங்கள் வயற்றில் ஆபரேஷன் செய்த பின் நரம்பு வைத்து தைக்க படுகிறது.
அதை கொஞ்சம் காலம் கழித்து அதனை எடுக்கவேண்டும்...ஆனால் இவர்கள் வயிற்று பகுதில் உள்ள நரம்பை சரியாக எடுப்பது இல்லை....

உள்ளே இருக்கிறதா இல்லையா என்று கூட சரி பார்ப்பது இல்லை .இதனால் வயிற்று பகுதில் உள்ள புண் ஆறாமல் இருக்கும்...புண் பகுதிக்கு இருந்து ஜாலம் வைத்துகொண்டே இருக்கும் .ஒரு ..இந்த மாதிரி ஒரு சம்பவம் எங்கள் வீட்டில் நடந்துள்ளது....

நேற்று இரவு வயிற்று வலி அதிகமானதால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றோம்.அவர் கூறியது உள்ளே நரம்பு இருக்கிறது அதனால் தான் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.உடனே மேல் பகுதியில் உள்ள நரம்பை எடுத்தனர்.கீழ் பகுதி உள்ள நரம்பை இன்னும் எடுக்கவில்லை....அடுத்த வாரம் எடுக்கலாம் என்று கூறினார்.....இவர்களுக்கு 9 மாதம் ஆகிவிட்டது... இப்போது தான் தீர்வு கிடைத்துள்ளது. இப்போது வலி இல்லாமல் இருக்கிறார்...

Complaint by: karthick

28/04/2022

சாயல்குடி சாலையை 90 கோடி ரூபாய் செலவில் இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் 4 வழிச்சாலையாக அமைத்துத் தரப்படும்

அரசு வேலைஆட்கள் தேவை💯 % CONFORM JOB  LOCATION- TamilNadu             QUALIFICATIONS: அணில் பிடிக்க தெரிந்தால் போதும்AGE:...
22/04/2022

அரசு வேலை
ஆட்கள் தேவை
💯 % CONFORM JOB
LOCATION- TamilNadu QUALIFICATIONS: அணில் பிடிக்க தெரிந்தால் போதும்
AGE: 18 TO 45
SALARY: 18000 to 35000 above
CONTACT: Tamilnadu EB
PART TIME
FULL TIME
Experience : fresher

முக்கிய அறிவிப்பு :

நன்கு அணில் பிடிக்க தெரிந்திருக்க வேண்டும்

தமிழக மக்களுக்கு ஓர் அன்பார்ந்த வேண்டுகோள்!!!தமிழகத்தில் இயங்கிவரும் அமுத சுரபி தற்போது பல இடங்களில் வாழும் மக்களிடம் இர...
13/04/2022

தமிழக மக்களுக்கு ஓர் அன்பார்ந்த வேண்டுகோள்!!!

தமிழகத்தில் இயங்கிவரும் அமுத சுரபி தற்போது பல இடங்களில் வாழும் மக்களிடம் இருந்து பணம் வசூல் செய்து தற்போது அவர்களின் அலுவலகளை முடிவிட்டு சென்றுள்ளார்கள்....மக்கள் யாரும் இவர்களை நம்பி பணம் செலுத்த வேண்டாம்...அதில் நானும் பதிக்கபட்டுளேன்....

அனைவருக்கும் வணக்கம்இந்த படத்தில் இருக்கும் கேக் -ல் காலாவதியாகும் தேதி இல்லை.. இந்த மாதிரி இருக்கும் பொருட்களை மக்கள் ய...
10/04/2022

அனைவருக்கும் வணக்கம்

இந்த படத்தில் இருக்கும் கேக் -ல் காலாவதியாகும் தேதி இல்லை..
இந்த மாதிரி இருக்கும் பொருட்களை மக்கள் யாருக்கும் வாங்காதீங்ககள்...இந்த மாதிரி பொருட்கள்

உங்கள் குழந்தைகளின் உடலை பாதிக்கும் 🙏🙏🙏

07/04/2022

ஒரு முக்கிய அறிவிப்பு சென்ற ஆண்டு 2021 நவம்பர் மாதம் அனைத்து விவசாய மக்களும் பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தது போதிய விளைச்சல் இல்லாத காரணத்தினால் நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த வறட்சி நிவாரணம் பதிவுகள் நாளை நமது கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற இருக்கின்றது அதில் தவறாமல் அனைத்து விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தங்களின் பட்டா மற்றும் 2021 ஆண்டு பதிவு செய்த இன்சுரன்ஸ் காப்பி ஜெராக்ஸ் மற்றும் அந்த ஆண்டு நீங்கள் பதிவு செய்த பட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஜெராக்ஸ் மற்றும் ஆதார் அட்டை ஜெராக்ஸ் இவை அனைத்தையும் நாளை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது நன்றி

10 ஆண்டுகளாக மாற்றம் இல்லாத ஒரே இடம்.....
03/04/2022

10 ஆண்டுகளாக மாற்றம் இல்லாத ஒரே இடம்.....

30/03/2022

*மின்தடை அறிவிப்பு*

*30.03.2022 புதன்கிழமை 110/33-11 KV கடலாடி துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் *33 KV சாயல்குடி* மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சுற்று வட்டாரங்களான சாயல்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்
*சாயல்குடி நகர்* பகுதிகள்
*மூக்கையூர்*
*பூப்பாண்டியபரம்*
*மலட்டாறு*
*கடுகுசந்தை சத்திரம்*
*பெரிய குளம்*
*ஒப்பிலான்*
*மாரியூர்*
*முந்தல்*
*நரிப்பையூர்*
*கன்னிராஐபுரம்* மற்றும் *33கே.வி.பெருநாழி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பெருநாழி , கொக்காடி, குருவாடி* உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை தடை செய்யபடும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது

Er.மு.மாலதி
உதவி செயற்பொறியாளர் விநியோகம்
முதுகுளத்தூர்.

24/03/2022

#மகளிர்_குழு_என்னும்_பெயரில்_கந்து #வட்டி_கும்பலிடம்_சிக்கி_தடம்_மாறும் #குடும்ப_பெண்கள்.....

(நமது ஊரில் நடந்து கொண்டுள்ள....
உண்மை நிகழ்வு 5 நிமிடம் பொறுமையாக படிக்கவும்)
சுற்று வட்டார பகுதியில்
வசிக்கும் கூலி தொழிலில் ஈடுபடும் பெண்களை குறிவைத்து...

தனியார் நிதி நிறுவனம் என்னும்,
(கிராம வெளிச்சம்,
அஜ்ஜீவன் மற்றும் பல)
கந்து சாசிர்வாத்,உதயம் வட்டி கும்பல்கள்...

மகளிர் குழு என
10 பெண்களை ஒருங்கிணைத்து
முதலில் தலா 20,000 ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது...

அந்த தொகை
52 வாரத்திற்க்கு
அசலும் வட்டியும் சேர்த்து வாரம்
ரூ625 கட்ட வைக்கிறார்கள்...
(52×625=32,500)
(அசல் 20,000+12,500
வட்டி)

10 பேரில் யாரவது ஒருவர் வீட்டில்
சாவு விழுந்து
இருந்தால் கூட அவர் பணம் கட்ட வேண்டும்.
இல்லையெனில்
மீதம் உள்ள 9 பேரும் அந்த ஒருவர் பணத்தை சேர்த்து கட்ட வேண்டும்,
இது துவக்கம்.

20,000 கட்டி முடித்த உடன் 40,000 என
கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது....
40,000 த்திற்க்கு அசலும் வட்டியும் சேர்த்து 2 வருடங்களுக்கு
வாரம் 490 வீதம்
கட்ட வேண்டும்....

ஒரு நாளைக்கு 100,150 ரூபாய்க்கு கூலிக்கு வேலை செய்யும பெண் வாரம் 600 ரூபாய்
கடன் கட்ட
நிர்பந்திக்கப்படுகிறார்...

கணவன் மனைவி 2 பேரும் வேலைக்கு
செல்லும் குடும்பத்தில் இது பெரிய பாரம் இல்லை...

ஆனால்,
கணவனை இழந்த, (கணவன் இருந்தும் இல்லாத) குழந்தைகளை வளர்த்து வரும் பெண்களால் வாரம் ரூ 600 எப்படி கட்ட முடியும்...???

வேலை இல்லாத வாரங்களிலும்,
பண்டிகை, விடுமுறை
வாரங்களிலும் கூட கட்டாயம் பணம் கட்டியே ஆக வேண்டும்.
(கந்து வட்டிக்காரன் கூட வேலையில்லை அடுத்த வாரம் தருகிறேன்
என்றால் போய் விடுவான்)

இதனால் குழுவுக்கு பணம் கட்ட வேண்டும்,
என்று அக்கம் பக்கம்
உள்ளவர்களிடமும்,
தெரிந்தவர்களிடமும்
கடன் வாங்குகிறார்கள்.

ஏற்கனவே வாங்கிய கடனுடன் இந்த கடனும் சேர்வதால்,
வேறு 10 பெண்களுடன்
சேர்ந்து வேறு நிதி நிறுவனத்தில் குழு கடன் பெறுகிறார்.

எனக்கு தெரிந்த வரையில் 2,3 நிதி நிறுவனங்களில்
20,000
40,000
என 1 லட்சம் வரை
ஒரு பெண் கடன் பெறுகிறாள்.

வாங்கிய கடனுக்கு..
1வாரத்திற்க்கு,
1 குழுவிற்க்கு ரூ 600 வீதம்...
3 குழுவிற்க்கு
1,800 முதல்
2,000 ரூபாய் வரை
ஒரு பெண் கடன் கட்ட வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளக்கப்
பட்டுள்ளார்கள்.....

விசைத்தறி கூலி வேலை செய்யும் ஒரு பெண் வாரம் ரூ 2,000
எப்படி கட்ட முடியும்....???

குழு பணம் கட்ட வேண்டும் என்று பெண்கள் வீடு வீடாக சென்று பிச்சை எடுக்காத குறையாகவும்...
பிச்சை எடுத்தும்
பணம் கட்டுகிறார்கள்...

பணம் கட்டவில்லை என்றால் மற்ற 9 பெண்களும் சேர்ந்து
அந்த பெண்ணின் வீட்டிற்க்கு சென்று
கண்டபடி திட்டுகிறார்கள்...

(மேலே கூறியுள்ளவை அனைத்தும் நம் அக்கம் பக்கத்து வீடுகளில் அன்றாடம் நடைபெறும்
சம்பவங்கள்....)

எத்தனை நாளைக்கு
இப்படி அடுத்தவர்களிடம் பிச்சை எடுப்பது,
திட்டுவாங்குவது என
நினைத்து விரக்தியில் இருக்கும் பெண்கள்,
எடுக்கும் முடிவு
விபரீதமாக மாறுகிறது...

அந்த பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு கடன் கட்ட ரூ500 தேவைப்படுகிறது
(சில பெண்கள் தற்கொலை செய்ய துணிகிறார்கள்,சிலர்
குழந்தைகளுக்காக
தடம் மாற துணிகிறார்கள்...)
அந்த குழுவில் உள்ள
10 பெண்களில் ஒருவர்,
அல்லது வேறு யாராவது ஒருபெண் அவளுக்கு தவறான வழி காட்டுகிறார்கள்..

ஆம் அவள் பணத்திற்க்காக தன்னையே விற்க்க துணிகிறாள்...

தவறான வழியில் பணம் சம்பாதிக்க தன்னை தயார் படுத்தி கொண்டு....
தடம் மாறுகிறாள்...

நான் மேலே கூறியுள்ளவைகள் அனைத்தும் நம்மை சுற்றி தினமும்
நடக்கும் உண்மையே....
யாரையும் தவறாக
சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை....

நம் ஊரில்,
நம் கண்முன்னேலேயே
பல பெண்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டுள்ளார்கள்...
இந்த அவலம் நாள் தோறும் அதிகரித்துக்கொண்டே உள்ளது...

பெரியோர்கள் இந்த விசயத்தை முன்னெடுத்து,
நமது பெண்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தி நம் பெண்கள் காப்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்...

மேலே கூறியுள்ள தகவல்களை.... (மன)சாட்சியுடன்
நிருபிக்க தயாராக உள்ளேன்.

22/03/2022

பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்ட விரோதமான செயல்கள், மற்றும் பிற இரகசிய தகவல்கள், குறைபாடுகள், வேறு ஏதேனும் புகார்கள் இருப்பின் 8778247265 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் இரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் எனவும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Address

Sayalkudi
Sayalgudi

Telephone

+919988776655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kadaladi Taluk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Sayalgudi media companies

Show All